அதில் நாயகன் பேர் எழுது 14

வாசலை நோக்கி ஓடாத குறையாக ஓட்டமும் நடையுமாய் வந்த ப்ரியாவுக்கு காரில் இருந்து இறங்கிக் கொண்டிருந்த விவன் பார்வையில் விழவும்தான் மூச்சுக் காற்றின் வழியாய் முழுதாய் நுழைகிறது முத்திய நிம்மதி.

கண நேரம் கண் மூடி, கட்டுண்டு, தனக்குள் பனிக்காற்றாய் கடந்து கொண்டிருந்த நிம்மதியை தனது அத்தனை செல்களிலும் சுவீகரித்தவள், மெல்ல மீண்டுமாய் கண் திறந்த போது அவளது அடி மன ஆழத்தில் இதமாய் இலகுவாய் தெறித்தோடுகிறது தேன் மின்னல் ஒன்று, இவள் விவனை விரும்புகிறாள் என்று.

விலுக்கென இவள் விழித்துக் கொண்டாலும், ‘இல்ல அப்படில்லாம் இல்ல, இவனையா, இந்த வில்லனையா,’ என எதை எதையோ நினைக்க நினைத்தாலும், அவள் அத்தனை அணுவிலும் அழகாய் பூக்கும் ரோஜாக்களும், ஆம், ஆம், என அடித்து சுழற்றும் சந்தன புயலும், அதோடு சேர்ந்து சதிராடும் பெண்மையும், அழிக்காமல் வதைக்காமல் அழகாய் வலிக்கும் ஆனந்த அவஸ்தையும்,

அவளை மீறி அவளை ஒத்துக் கொள்ளத்தான் செய்கின்றன.

ஆம், இவள் மனம் அவனை விரும்புகிறதென!

அவ்வளவுதான் ஒரு பக்கம் அவள் அஸ்திவாரம் முதல் முழு உலகமும் ஆடிப் போகிறது என்றால் இன்னொரு புறம் அதுசார்ந்த ஆயிரம் கேள்விகள் குத்தி கும்மாளமிடுகிறது.

ஆமாம் அதான் ஏற்கனவே மனதை குழப்பிட்டு இருக்கே, ஒரு சூழல்ல குழந்தை விவனோடதுன்னு நினச்சு மேரேஜ் செய்தாச்சு. இப்ப குழந்தை அவனது இல்லையோன்னு ஒரு குழப்பம், உண்மையில் ரெண்டு வகையான நினைப்புக்கும் ஆதார பூர்வமா இப்பவரை எந்த சாட்சியும் இல்ல. வெறும் சூழ்நிலைய வச்சு யோசிக்கிறவைதான் அவை எல்லாமே.

இதுல குழந்தை அவனோடது இல்லைனா அவன் இவள என்னதா மதிப்பான் என்ற அடுத்த விஷயம், இதில் இவ அவனை எந்த அடிப்படையில் விரும்புறாளாம்?

அவன் ஒன்னும் ரொம்ப நல்லவன் கிடையாதுன்னு ஸ்கூல் மார்க் விஷயத்திலயே இவளுக்கு தெரியும். பொறுப்பில்லாதவன் மற்றும் ஏமாத்துக்காரன். இதுல இப்ப மட்டும் அவன் எப்படி மகா உத்தமனா இவளுக்கு தெரியுறானாம்?

இப்படி என்னதெல்லாமோ அவள் மனதை அந்த நிமிடம் தாக்கினாலும், ப்ரியா ஒரு முடிவுக்கு வந்தாள். அது அவள் அம்மா அப்பா இறந்ததிலிருந்து பழகி வைத்திருக்கும் ஒரு பழக்கம், இந்த நிமிஷத்தில் வாழனும், பிடிக்காத எதையும் நினைக்க கூடாது என்பதுதான் அது.

அதுதான் இவ்வளவு நாளும் அவளுக்கு கை கொடுத்திருக்கும் விஷயம். ஒரு மழை நாளில், அப்போ இவளுக்கு ஆறு வயசு, பூர்விக்கா வீட்டுக்கு பக்கத்து வீடு இவங்களோடது. பூர்விக்காவுக்கு அப்பா மட்டும்தான் உண்டு, அம்மா இல்ல. இவ பூர்விக்கா, அவளோட அப்பா ஆனந்தப்பா ரெண்டு பேருக்கும் செல்லம். அன்னைக்கும் அவங்க வீட்ல விளையாடிட்டு இருந்தவ, அம்மா வீட்டுக்கு கூப்டப்ப விளையாட்டு சுவாரஸ்யத்தில் இங்கயே தூங்கப் போறேன்னு சொல்ல, அது அப்பப்ப நடக்கிறதுதான்றதால அம்மாவும் சம்மதிக்க, அன்னைக்கு நைட் இவ பூர்விக்கா வீட்ல தூங்கிட்டா.

இதில் நைட் வந்த ஏதோ திருட்டு கும்பல், இவ அம்மா அப்பாவ கட்டி வச்சு அடிச்சு போட்டு வீட்ல உள்ளத அள்ளிட்டு போக காலைக்குள்ள அம்மா அப்ப ரெண்டு பேரும் இவளுக்கு இல்லாம போய்ட்டாங்க.

அடுத்தும் வீட்டுக்கு வந்த அவ்வளவு சொந்தக்காரங்களும் பெண் குழந்தைன்னு இவள அப்படியே விட்டுட்டு போக, பூர்விக்கா அப்பாதான் இவள, “என் வீட்டுக்கு வாடா நீ, ஆனந்தப்பா இருக்கேன் உனக்கு” என கூட்டிப் போனது. அதுவரைக்கும் இவ அவங்களை அங்கிள்னுதான் கூப்பிடுவா.

பூர்விக்காவ எப்படி பார்த்துப்பாங்களோ அப்படித்தான் ஆனந்தப்பா இவளையும் பார்த்துப்பாங்க. பூர்விக்கா அதுக்கும் மேல. இவ சின்ன குழந்தைன்னு தலைல தூக்கி வச்சு ஆடாத குறைதான். அவளுக்கும்தான அம்மா இல்ல, இவள செல்லமா வச்சுப்பா.

ஆனாலும் அடுத்து நாலு வருஷம் போனப்ப கூட இவளால இவளோட அம்மா அப்பாவை மறக்க முடியலை, நினச்சு நினச்சு அழுதுட்டு இருப்பா, அப்ப ஆனந்தப்பா சொல்லி கொடுத்ததுதான் இந்த டெக்னிக்.

பிடிக்காதத நினைக்காத, லிவ் இன் யுவர் ப்ரெசென்ட்,

அடுத்த பக்கம்

Advertisements