அன்பின் ராகம் 11

மாற்றி மாற்றி பேசற குடும்பத்தில் நமக்கு  சம்மந்தம் வேணாம்பா.. என ஆணித்தரமாக  கூறிய சுமித்ராவை எப்படி  சமாளிப்பது என விழித்து  கொண்டு  இருந்தனர் இருவரும்..

அப்படி எதுவும்  இருக்காது சுமி நீ தெரியாம பேசற… நாம மறுபடியும்  அவங்க  கிட்ட பேசலாம்.  யாரோ சொன்னத வச்சு முடிவு செய்ய கூடாது.  அவங்கள பற்றி  நிறைய பேர் கிட்ட விசாரிச்சுட்டேன். குறைவாக எதுவுமே இல்லை.  பையன் ரொம்ப நல்ல  பையன் அதிர்ந்து பேச தெரியாது.  அவர் கூட நீ சேர்த்து நின்றாள் பார்க்கவே அவ்வளவு  அழகாக இருக்கு… அந்த  அளவுக்கு ரெண்டு  பேருக்கும் பொருத்தம் நல்லா  இருக்கு …

அப்பா   பேச்சை மாத்தாதிங்க… நான் என்ன சொல்லிட்டு இருக்கறேன் நீங்க எத பேசறிங்க…வந்தவர் என்ன  சொன்னார்  நகை அதிகமாக கேட்கறாங்க… இப்ப  இத கேட்பாங்க…. அடுத்த முறை அப்படியே  மகனுக்கு வண்டி வாங்கி தந்திடுங்கன்னு சொல்வாங்க… அப்படியே டிவி, ப்ரிஜ்,வாசிங்மெஷின்னு பட்டியல் போயிட்டே இருக்கும்…இப்ப ஆளை விட்டு கேட்பாங்க அப்புறம் நேரடியா கேட்பாங்க… நல்லவேளை இப்பவே இவங்களோட  குணம் தெரிஞ்சுதே…போதும்பா.. இந்த  இடம் நமக்கு  ஒத்து வராது.  வேற மாப்பிள்ளை  பாருங்க.

பைத்தியம்  மாதிரி  உளர கூடாது  சுமித்ரா அவங்க  நிச்சயத்துக்கு தேவையானதை வாங்கிட்டதா சொல்லி  இருக்கறாங்க…தாய் மல்லிகாவின் எந்த சமாதானமும் அவளிடம்  எடுபடவில்லை.

ஓ… அந்த  தைரியம் தான்  இப்படி  கேட்க ஆள் அனுப்ப சொல்லிச்சா…அம்மாவை பார்க்காமல் அப்பாவிடம் திரும்பியவள்… அப்பா சும்மா சும்மா என்ன  சொன்னாலும் தலையாட்ட கூடாது . தெளிவாக  பேசிடுங்க… நகை அன்றைக்கு பேசினது தான்.  அதுக்கு மேல எதுவும்  கொடுக்க கூடாது.  கல்யாணத்துக்கு செலவு கூட ஆளுக்கு  பாதின்னு பேசுங்கள்… தாரளமாக கொடுக்கலாம்

ஏன் அவங்க பக்கத்தில்  இருந்தும் உறவுக்காரங்க வருவாங்க தானே.. சமையலுக்குன்னு நாம மட்டும் கொடுக்க வேண்டாம்..அவர்களையும் கொடுக்க சொல்லுங்க… இப்போது  யாரு தனியாபொண்ணு வீட்டுக்காரங்க மட்டும்  செலவை ஏற்றுக்கராங்க…நிறைய கல்யாணம்  இப்போது  இப்படி தான்  நடக்குது…

அது மாதிரியே  அப்பாவை பேச சொல்லுங்க.. இவ்வளவு ஆன பிறகு எல்லா செலவிலேயும் ரெண்டு பேருக்கும் சமமா பிரிச்சுக்கறதா இருந்தா மேற்கொண்டு பேசலாம்ன்னு சொல்லுங்க…இதுக்கு  சம்மதம்ன்னா பார்க்கலாம்.

சுமி… நீயா முடிவு பண்ணாத… என்ன நடந்ததுன்னு ஒரு முறை அவங்க கிட்ட ஒரு  வார்த்தை  கேட்டிருக்கலாம் நாமலே முடிவு எடுக்க வேண்டாம்  என்ன …சொல்லறது புரியுதா…கொஞ்சம்  அமைதியாக இரு.. எங்களுக்கு  இருக்கிறது நீ ஓரே பொண்ணு ஏதா இருந்தாலும்  உனக்கு  செய்யாமல் யாருக்கு செய்யாமல் போறோம். கடன் வேணும்னாலும் வாங்கிக்கலாம்…

Advertisements

எப்படிபா… கடன் வாங்கிட்டு எப்படி  அடைப்பிங்க… உங்களுக்கு  வயது ஏறத்தான் செய்யுது… இறங்கல… நம்ம தகுதிக்கு ஏற்ற மாதிரி  பார்த்தா போதும்…இதற்கு  மேல் மகளிடம் தர்க்கம் பண்ண விரும்பாத ராகவேந்தர் வெளியில்  புறப்பட்டார்..

அப்படி பேசாதடா..கேட்கறவங்க வளர்த்தது சரி இல்லைன்னு சொல்ல போறாங்க ஓரே பொண்ணுன்னு யாராவது செல்லம் கொடுத்து  கெடுத்து வச்சி இருக்கறாங்கன்னு  பேச போறாங்க…தாயார்  மல்லிகா இப்படி  சொல்லவும் இன்னும்  கோபமாக பேச ஆரம்பித்தாள் சுமி.

இதை தான்மா தப்புன்னு சொல்லறேன். சில விஷயங்களை  என்னால எற்றுக்கொள்ள முடியாது  அதுல இதுவும் ஓன்று.  குடுத்தா என்னன்னு நீங்க யோசித்தா அவங்க வாங்கினா என்னன்னு யோசிக்க தானே செய்வாங்க…நீங்க எதுவுமே செய்ய வேண்டாம்  நானே பார்த்துக்கறேன்.

அந்த  மாப்பிள்ளை  எப்படி  திரும்ப இந்த  வீட்டு படியை மிதிக்கறான்னு… டெளரி வேண்டுமா டெளரி… மகனே கேட்க வாயே இருக்காது…நீங்க போங்கம்மா உங்க வேலையை பாருங்க இதுக்கு மேல நடக்க போறத வேடிக்கை  மட்டும்  பாருங்க… துண்டை காணோம் துணியை காணோம்ன்னு  ஓட வைக்க போறேன் அந்த மாப்பிள்ளையை எப்படி  அப்படி  ஒரு  அப்பாவி  மாதிரி  முகத்தை  வச்சிட்டு இப்படி  கேட்க தோணுது…முகம் சிவக்க கோபமாக கத்தியவள் வேகமாக தனது அறைக்குள்  நுழைந்து  கதவை அடைத்து  இருந்தாள்.

ரூம்பிற்குல் போன பிறகும் கோபம் அடங்கவில்லை சுமித்ராவிற்கு.. பேர் மட்டும் ராம்ன்னு வச்சா போதுமா நடந்துக்கறது அப்படியே ஆப்போசிட் நல்ல  வேளை இப்பவாவது இவங்களோட சுயரூபம் தெரிஞ்சுதே…சில நிமிடம்  தான்  அமைதியாக கட்டிலில் அமர்ந்து  யோசித்தவள் சற்றும் தாமதிக்காமல் பார்க்க வரும் போது தந்து சென்றிருந்த  ராமின் நம்பருக்கு  தனது செல் பேசியில் அழைத்திருந்தாள்.முதல் ரிங் முழுவதும் அடித்து  நின்றிருக்க மறுபடியும், மறுபடியும் முயற்சி செய்து  கொண்டிருந்தாள் . ரெண்டு  நேரம் மெசேஜ் செஞ்சா இவங்க என்ன  கேட்டாலும் ஓகே  சொல்லணுமா..அந்த  அளவுக்கு  முட்டாள்  மாதிரியா தெரியறோம். எவ்வளவு  நேரம்  ஆனாலும்  சரி பேசாமல் போனை வைக்கப் போறது இல்லை..

நான்கு முறை முயற்சி செய்து ஐந்தாவது முறை முயற்சி  செய்யும்செய்யும் போது போனை அட்டென் செய்தான் ராம்…

ஹலோ என இவனது குரல் கேட்டது தான்  தெரியும்  பொறிய ஆரம்பித்து  இருந்தாள்.

போன் எடுக்க இவ்வளவு  நேரமா… ஐந்தாவது தடவை கூப்பிடறேன். அப்படி  என்ன  வேலை செஞ்சிங்க…

சுமி தானே… இப்ப தான்  வேலை விட்டு  வந்தேன். பாத்ரூமில் முகம் கழுக போய் இருந்தேன் அது தான்  போன் அடிச்சது தெரியலை… ஆமாம்  ஏன் கோபமாக பேசற மாதிரி  இருக்கு… என்ன  ஆச்சு…
அடுத்த பக்கம்

Advertisements