ஆடுகளம் 8(2)

அவன் அடித்த அடியில் அதிர்ந்து அடங்கியிருந்த அதிதி, “என்னடா இவன் பழி வாங்கப் போறேன்னு சத்தியம் எல்லாம் பண்றான்?…” என்றாள்.

 

துருவ், “அட நீ வேற பேபி, அவன பார்த்தாலே தெரியுது, அவன் ஒரு ப்ளே பாய்னு, அவனாவது பழி வாங்குறதாவது. நீ லைட்டா சிரிச்சாலே போதும், செஞ்ச சத்தியத்த கைகழுவிடுவான், விடு பேபி…”

 

“எதுக்குடா வம்பு? நாம அவனவிட்ட கொஞ்சம் ஒதுங்கியே இருக்கலாம் துருவ்.”

 

“பயப்படாத பேபி, நான்தான் உங்கூடவே இருக்க போறேன்ல. என்னை மீறி எவனும் உன் பக்கத்துல வரமுடியாது, ஆனா அந்த சிகப்பு சட்டை போட்டவனிட்ட மட்டும் நீ கொஞ்சம் ஜாக்கிரதையா நடந்துக்கோ…” என்றான்.

 

அதிதி துருவ் காட்டிய திசையில் திரும்பிப் பார்த்தாள், அங்கே கதிர் தான் இருக்கும் இடத்தை மறந்து நிச்சலனமாய் உறங்கிக்கொண்டு இருந்தான்.

 

அதிதி, “எங்க மாமாவும் இதையேதான்டா சொன்னாரு. அவன் என்ன தப்பு செஞ்சான் துருவ்? எதுக்காக அவனுக்கு ஆயுள் தண்டனை தந்திருக்காங்க?…”

 

“என்? அவன் ஜெயில் கைதியா பேபி?”

 

“அதுவே உனக்கு தெரியாதா? அப்புறம் எப்படிடா அவன விட்டு தள்ளி இருக்க சொன்ன?”

 

“அவன் கண்ணு… அது ரொம்ப பயங்கரமா இருக்கு பேபி, எக்காரணம் கொண்டும் என்ன யாரும் நெருங்காதீங்கன்னு சொல்ற மாதிரி இருக்கு…”

 

அதிதி, “ஏன்டா என்ன பயமுறுத்துற?”

 

“நீ கேட்ட, நான் சொன்னேன். லீவ் இட் பேபி…. வா, நாம சும்மா ஒரு வாக் போயிட்டு வரலாம்…” என்று எழுந்து நின்றான்.

 

“டேய்… டேய்… இந்த நேரத்துல எங்கடா போறது? அதுவும் போக இங்க நம்மள காணும்னா, விளையாட பயந்து ஓடி போயிட்டோம்னு நெனச்சு நம்ம பேர லிஸ்ட்ல இருந்து தூக்கிடப்போறாங்க…” என்றாள் சுற்றும் முற்றும் பார்த்தபடி.

Advertisements

“அதெல்லாம் வெங்கட் சார்ட்ட நான் போன்ல சொல்லிக்கிறேன். நீ ரொம்ப நெர்வஸ்ஸா இருக்கிற மாதிரி எனக்கு தோணுது. வா, கேன்டீன் வரைக்கும் போயிட்டு வரலாம், இங்க பர்கர் சூப்பரா இருந்தது…” என்று அவள் கைகளை பிடித்து அந்தக் கட்டிடத்தின் கீழ் தளத்திற்கு அழைத்துச் சென்றான்.

 

‘அச்சத்தில் பதறிடும் தன் மனதை சமன் செய்யத்தான் அவன் அழைத்துச் செல்கின்றான்’ எனப் புரிந்ததும் அதிதி அமைதியாக அவன் இழுத்த இழுப்பிற்கு உடன் சென்றாள்.

 

இருவரும் ஆளுக்கொரு ஐஸ்கிரீமையும், சிக்கன் பர்கரையும் தேர்வு செய்ததும் துருவ் அசால்ட்டாக தன் கார்டை எடுத்து நீட்டினான். பதினாறு வயதுப் பாலகனுக்கு இவ்வளவு வசதிகளும், இத்தனை அறிவும், இப்படிப்பட்ட தைரியமும் அதிகப்படி என்று அதிதிக்கு தோன்றிற்று.

 

அவனைப் பற்றி தெரிந்துகொள்ளும் ஆர்வம் அவளின் உள்ளத்தினுள் அதிகமாகிட, அதிதி தயங்கித் தயங்கி, “துருவ், நான் ஒண்ணு கேட்டா தப்பா நினைச்சிக்க மாட்டியே…” என்று பேச்சிலேயே தூண்டில் போட்டாள்.

 

அவன் ஒரு ஸ்பூன் ஐஸ்கிரீமை எடுத்து தன் ரோஜா வண்ண இதழ்களுக்குள் நுழைத்துவிட்டு, “என்னோட பெர்சனல் லைப் தவிர எது வேணும்னாலும் கேளு பேபி, பதில் சொல்றேன்…” என்று அவள் கேட்கும் முன்பாகவே பதிலைச் சொல்லி விட்டான். அதற்குமேல் எதையும் கேட்கத் தோன்றாமல் அவளும் அதோடு பேச்சை நிறுத்திக் கொண்டாள்.

 

சரியாய் ஒருமணி நேரம் கழித்து பதினைந்து பேரும் விளையாடி முடிக்க, அதில் தேர்வான பத்து பேர் மட்டும் அந்த அறையில் அமர்ந்திருந்தனர். இதற்கு முன்னால் ஒருவரை ஒருவர் பார்த்து பழக்கம் இல்லை என்றாலும், தற்சமயம் தங்களது விளையாட்டு அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் பொருட்டு ஒருசிலர் நட்பாக பேசத் துவங்கி இருந்தனர்.

 

கதிர் மட்டும் விளையாடி முடித்ததுமே தன் இடத்திற்கு வந்து மீண்டும் உறங்கத் தொடங்கியிருந்தான். ஆதித்யாவும் வெங்கட்டும் உள் நுழைந்ததும் அத்தனை பேரும் எழுந்து நின்றனர். அந்த சத்தத்தில் கண்விழித்துப் பார்த்த கதிர் கைகளை முறுக்கி, முதுகுத் தண்டில் நெளிசல் எடுத்துக்கொண்டு நேராக அமர்ந்தான்.

 

ஆதித்யா தொண்டையை செருமிக் கொண்டு, “வெல்கம் டூ ராஜவாழ்க்கை கேம், இந்த ஷோவுல பார்டிசிபேட் பண்ற உங்க பத்து பேருக்கும் அக்ரிமென்ட் சைன் பண்ற நிமிஷத்துல இருந்து ராஜ வாழ்க்கை ஆரம்பிக்க போகுது. கங்க்ராஜுலேஷன் ப்ளேயர்ஸ்…” என்றதும் அறை முழுவதும் மெல்லிய கரகோஷம் தோன்றி மறைந்தது.

 

“இன்னில இருந்து மூணாவது நாள் ராஜவாழ்க்கை ஷோ ஆரம்பிக்கும். அதிலிருந்து அடுத்த பத்து நாள் தினம் ஒரு லெவல், தினம் ஒரு எலிமினேஷன். எலிமினேட் ஆகுற பிளேயர்ஸும் பத்தாவது லெவல் முடியிற வரைக்கும் எங்க இடத்தை விட்டு வெளியில போகக்கூடாது. முதல் அஞ்சு லெவலுக்கு தினம் ஒரு லட்சம், அடுத்து தினம் ரெண்டு லட்சம். வின்னருக்கு ஒரு கோடி, ரன்னருக்கு ஒரு வீடு…”

 

இப்போது முன்பைவிட சத்தமான கரகோஷம் எழுப்பி அனைவரும் தங்களது மகிழ்ச்சியை தெரிவித்தனர்.

 

“சரியா இன்னிக்கி நைட் பத்து மணிக்கு ஆதித்யா பொட்டிக்(boutique )க்கு உங்க எல்லாரையும் மிஸ்டர் வெங்கட் கூட்டிட்டு போவாரு. ஷாப்பிங் முடிஞ்சதும் உங்களுக்காக நாங்க ஏற்பாடு செஞ்சிருக்கிற பங்களாவுக்கு நேரா போகப் போறீங்க. கெட் ரெடி பார் யுவர் அட்வென்சர், ஆல் த பெஸ்ட் எவ்ரி ஒன், சீ யு சூன்…” என்பதோடு விடைபெற்று சென்று விட்டான்.

அடுத்த பக்கம்

Advertisements