ஆடுகளம் 13 (5)

அர்ஜூன் தன் அருகிலிருந்த வினோத்திடம், “சைக்கிள் கேப்புல பய நம்மள ஸோம்பினுட்டான் பார்ரா…” என்றான்.

 

அவன் சொல்வதைக் கவனிக்கும் ஆர்வம் இன்றி வினோத் ஒப்புக்காய் ஒரு ‘ம்..’ போட்டான். அந்த அளவிற்கு அற்புதமாய் இருந்தது கதிரின் உடல் மொழி… எனில் அதிதியின் கதி?!

 

கதிர், “அதிதி, உன் கண்ண பாத்த அந்த ஒரு செகண்ட்ல, திடீர்னு ஒரு மின்னல் வெட்டுன மாதிரி என் உடம்புல ஷாக் அடிச்சது. சொல்லவும் முடியாம மெல்லவும் முடியாமனு சொல்லுவாங்களே அப்டி ஒரு சூழ்நிலைய அன்னிக்குத்தான் நான் உணர்ந்தேன்….” என்று சொல்லிக் கொண்டே அதிதியின் முன் மண்டியிட்டான்.

 

முதன் முதலாக ஒரு ஆண்பிள்ளை கண்களில் காதல் வழிய தன் முன் மண்டியிட்டு நிற்கக் கண்டவளுக்கு, இத்தனை நாட்களாய் உறங்கிக் கிடந்த காதல் உணர்வு ஊற்றெடுக்க தொடங்கியது. அவன் விழிகள் காட்டிய வினோத நயனங்களில், அவள் கொஞ்சம் கொஞ்சமாய் தன்னை மறந்து வீழத் தொடங்கினாள். அவள் மனமும் உடலும் அனிச்சை செயலாய் தன் போக்கில், அவன் வார்த்தைகளின் வழி செல்லத் தொடங்கிற்று.

 

கதிர், “உன் கூட நான் இருக்குற இந்த பதினஞ்சு நாளும், எனக்கு கிடைச்ச மிகப்பெரிய பொக்கிஷம். நீ பேசுற வார்த்தையெல்லாம் என் வாழ்நாள் முழுக்க என் கூட வரப்போற வரப்பிரசாதம். நீ சரினு ஒரு வார்த்தை சொன்னா இந்த நிமிஷமே என் உயிரையும் விட்ருவேன். இதுக்கு மேல எனக்கு என் நிலமைய எப்டி புரிய வைக்கிறதுன்னு தெரியல அதிதி…”

 

என்று சொல்லிக் கொண்டே, கதிர் தன் முதுகுப் பக்கம் மறைத்து வைத்திருந்த பூங்கொத்தினை அதிதியை நோக்கி நீட்டிப் பிடித்து, “லவ் யூ அதிதி…” என்றான்.

 

அவன் கண்கள் காட்டிய போதை கண்டு, பேதையவள் பேச்சிழந்து போய் பூக்களை வாங்கிட நினைத்து கை நீட்டினாள். அவளின் கை பூக்களை தொட்ட அடுத்த நொடியே, கதிர் அந்த பூங்கொத்தினை தூர வீசி எறிந்தான். அந்த நிமிடத்தில் தனது கையிலிருந்த பொம்மையை பறிகொடுத்த குழந்தையைப் போல முகம் வாடிப்போனாள் அதிதி.

 

கதிர், “எப்டி என்னோட ஆக்டிங்? எவனோ எனக்கு ரொமான்டிக்கா பேச வராதுன்னு சொன்னானே, அவன் எங்க?” என்றான்.

 

வினோத், “சாரி பாஸ்… நீ எப்பவும் உர்ருனே இருக்குறத பாத்து, அது மட்டும் தான் உனக்கும் வரும்னு நான் ஃபிக்ஸ் ஆயிட்டேன். ஆனா செம ஹாண்ட்சமா இருந்ததுப்பா உன்னோட ப்ரொபோஸல், நீ ஏன் எப்பவும் இப்படியே இருக்க கூடாது?”

Advertisements

கதிர், “ம்.. உன் போதைக்கு நான் ஊறுகாயா? போய் வேற வேலை இருந்தா பாருடா…”

 

பேச்சு வேறு திசையில் மாறுவதை கவனித்த நகுல், “சரி.. சரி… ஆட்டத்த கவனி, அடுத்த யாரு சீட்டை எடுக்க வர்ரீங்க?” என்றான்.

 

இம்முறை வினோத் கை உயர்த்தவும் நகுல், “சரி வாடா….” என்றான்.

 

வினோத் இல்லாத மீசையை முறுக்கியபடி முன்னால் வந்து ஒரு சீட்டினை எடுத்தான். எடுத்தவன் அசைய மறந்து அப்படியே சிலையாய் நின்றுவிட்டான்.

 

அர்ஜூன், “டேய், தம்பி என்னடா ஆச்சு? எவனோ புள்ளைக்கு சூனியம் வச்சுட்டான் போலயே… அப்டி என்னதான்டா இருக்கு அந்த சீட்டுல?” என்றான்.

 

வினோத், “நீயே பாருண்ணா…” என்றவன், தன்னுடைய சீட்டை அர்ஜுன் கையில் கொடுத்தான்.

 

அர்ஜூன் அனைவருக்கும் கேட்கும்படி சத்தமாக, “உங்களின் கணவன்/ மனைவி உங்கள் வீட்டிற்கு வெளியே நின்று, கதவை திறக்கும்படி உங்களிடம் கெஞ்சுகிறார்…” என்று வாசித்து முடிக்கையில் அத்தனை பேரும் சிரிக்கத் தொடங்கி விட்டனர்.

 

நகுல், “ஏம்ப்பா அர்ஜூன் வாலன்ட்டியரா நடிக்க வாய்ப்பு கேட்டேல, இந்த டிராமால பண்றியா?”

 

அர்ஜூன், “ஐயயோ… வேணாம் சார்…நான் என் தகுதிக்கேத்த கேரக்டர் வர்ற வரைக்கும் வெயிட் பண்றேன்.”

 

வெங்கட், “அதெல்லாம் முடியாது, நீ இந்த ரோல்ல ஆக்ட் பண்ணியே ஆகணும். என்ன மட்டும் மாட்டி விட்டேல, வா ராசா… வா…”

 

அர்ஜூன், “சார்… நேரம் பார்த்து பழி வாங்காதீங்க சார்…”

 

வெங்கட், “இங்க பாரு, நீ மட்டும் நல்லா நடிச்சனு வை, நான் நிஜமாவே நீ சொன்ன ப்ரைஸ் அமவுண்ட்ட தரேன்டா…”

 

அர்ஜூன், “விதி யார விட்டது… பாருங்க.. பாத்துட்டு அப்டியே வரிசையா மயக்கம் போட்டு கீழ விழுங்க…”

 

நகுல், “ஆமா, உங்க ரெண்டு பேர்ல யாரு புருஷன், யாரு பொண்டாட்டி?”

 

வினோத் தன் வாயைத் திறக்கும் முன்பே அர்ஜூன் முந்திக்கொண்டு, “நான்தான் புருஷன் கேரக்டர்…” என்று கூறிவிட்டான்.

 

வினோத் முகத்தை பாவமாய் வைத்துக் கொண்டு, “ஏண்ணா?…” என்றான்.

 

அர்ஜூன், “சாரி தம்பி, கடமைனு வந்துட்டா நான் கண்ணு மண்ணு தெரியாம ஓட ஆரம்பிச்சிருவேன்” என்றான் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு.

 

மற்றவர்கள், “சீக்கிரமா ஆரம்பிங்க…” என்று கூச்சலிடத் தொடங்கினார்கள்.

 

அர்ஜூன், “ஆங்…. இத மட்டும் நல்லா கேளுங்க, கொஞ்ச நேரம் முன்னால அதிதிக்கு ப்ரொபோஸ் பண்ண சான்ஸ் கேட்டேனே, அப்போ யாராவது வாயத் தொறந்தீங்களா?”

 

அவனின் புலம்பல் மொழிகளைக் கேட்டு அனைவரும் வாய்விட்டு சிரிக்க, அதை இரு மடங்காக்கிடும் வகையில் நாடகம் துவங்கியது.

 

அர்ஜூன், “வினோதா…. வினோதா.. கதவத்திறடி…”

 

வினோத், “வினோதாவா… படுபாவி புருஷா… கதவ திறக்க முடியாது போடா…”

அடுத்த பக்கம்

 

 

Advertisements