ஆடுகளம் 13 (3)

“சின்ன பொய் தான சார், சொல்லப்போனா பதினஞ்சாவது நாள் இத பத்தி எல்லாரும் மறந்துகூட போயிருப்பாங்க, கவலைப்படாம வாங்க சார்…” என்று மிக சாதாரணம் போல் சொல்லிவிட்டு சென்றான்.

 

நகுல் விளையாட்டிற்கு வேண்டியதையெல்லாம் செய்து முடித்ததும், “டிராமா சீன்ஸ் ரெடி, யாராவது வந்து சீட்டு எடுங்க…” என்றான்.

 

லக்ஷிதா எழுந்து சென்று ஒரு சீட்டினை எடுத்தாள்.

 

நகுல், “என்ன சீன் நடிக்கணும்?”

 

லக்ஷிதா, “என் காதலனை வீட்டுக்கு கூட்டிட்டு வந்து, அப்பாவுக்கு இன்ட்ரோ குடுக்கணும்….”

 

நகுல், “சூப்பரு… ஏம்மா, உனக்கு நிஜத்துல பாய் ப்ரெண்ட் இருக்கா?”

 

“என்ன கேள்வி சார் இது? பாய் ப்ரெண்ட் இல்லாம ஒரு பொண்ணு இருப்பாளா?”

 

நகுல், “இது இன்னும் சூப்பரு… இந்த பவுல்ல நம்ம எல்லாரோட பேரும் இருக்குது, உங்கூட அப்பாவா ஆக்ட் பண்றதுக்கு ஒரு ஆள செலக்ட் பண்ணுமா…” என்றதும் அவள் ஒரு சீட்டினை எடுத்தாள்.

 

லக்ஷிதா பொங்கி வந்த சிரிப்பினை கட்டுப்படுத்திக் கொண்டு, “வெங்கட் சார்…” என்றாள்.

 

வெங்கட், “டேய்… எவன்டா என்னோட பேரையும் சேர்த்து எழுதி போட்டது? எனக்கு நடிக்கவெல்லாம் தெரியாது… ஆள விடுங்கடாப்பா…” என்று எழுந்து வீட்டினுள் செல்ல முயன்றான்.

 

அர்ஜுன் வெங்கட்டின் கைகளை பிடித்துக் கொண்டு ரகசிய குரலில், “சார்… உங்க பணத்த காப்பாத்துறதுக்கு சூப்பர் சான்ஸ் கிடைச்சிருக்கு. சும்மா ஒரு நாலு டயலாக் பேசுங்க, போட்டியில நீங்களே ஜெயிச்சதா சொல்லிடுவோம். ஜஸ்ட் சிம்பிள் பாலிடிக்ஸ்…”

 

வெங்கட், “நல்ல ஐடியாதான், ஆனா எனக்கு நெசமாவே நடிக்க வராதுடா…”

 

அர்ஜூன், “எங்களுக்கு மட்டும் ஸ்பெஷல் ட்ரெயினிங் கொடுத்து அனுப்பி இருக்காங்களா என்ன? சின்னப்புள்ள மாதிரி அடம்புடிக்காம, சும்மா பேசுங்க சார்…” என்று வெங்கட்டை இழுத்து கொண்டு வந்து, அனைவருக்கும் நடுவில் விட்டான்.

 

‘என்ன இருந்தாலும் இவனுங்க நம்ம பயலுக தானே… நாமளும் நடிச்சுத்தான் பாப்போமே….’ என்று நினைத்த வெங்கட் இறுதியில், “சரி…” என்றுவிட்டான்.

 

நகுல், “ஓகே… கேம் ஸாட்ர்ட்…”

 

லக்ஷிதா, “அப்பா… அப்பா… நான் உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லனும்….”

 

வெங்கட், “நானும் உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்ல போறேன் லக்ஷிதா…”

Advertisements

லக்ஷிதா, “அப்டியா? நீங்க முதல்ல சொல்லுங்கப்பா….”

 

வெங்கட், “உன்ன பொண்ணு கேட்டு ஒரு சம்பந்தம் வந்திருக்கு, எங்க முதலாளியோட பையன்… பெரிய பணக்கார குடும்பம், அவங்க வீடு மட்டுமே பல கோடி தேரும்…”

 

லக்ஷிதா, “அப்பா… முடியாது, டிவி சேனல்ல வேலை பாக்க ஆரம்பிச்சதும், உங்க புத்தியும் டிவி சீரியல் மாதிரியே யோசிக்க ஆரம்பிச்சிடுச்சு பாருங்க… உங்க சீரியல்ல வர்ற ஹூரோயின் மாதிரி பணக்காரன கல்யாணம் பண்ணிட்டு, தாலி கட்டுன புருஷன சின்னையா பெரியய்யானு கூப்பிட்டுக்கிட்டு, என்னால காலம் தள்ள முடியாது. எனக்கு நல்ல ரொமான்டிக்கான புருஷன் வேணும்பா, அப்படி ஒருத்தன நானே செலக்ட் பண்ணிட்டேன்…”

 

வினோத் சற்று சத்தமாய், “இது நம்ம லிஸ்ட்டுலேயே இல்லையே, அடேங்கப்பா…” என்றதும் அத்தனை பேரும் வாய்விட்டு சிரித்து விட்டனர்.

 

வெங்கட், “லக்ஷிதா, அப்பா சொல்ற பையன மட்டும் நீ கல்யாணம் பண்ணிக்காம போனா, இந்த நிமிஷமே உன்னை தலை முழுகிடுவேன்.”

 

“தாராளமா, ஆனா இந்த வீடு உங்க தாத்தா சொத்துன்றதையும் கொஞ்சம் ஞாபகம் வச்சுக்கோங்க…”

 

வெங்கட் நெஞ்சை பிடித்துக்கொண்டு, “உன்ன பெத்து வளர்த்த இந்த அப்பாக்கிட்ட, எப்படிம்மா உன்னால இப்படி எல்லாம் பேச முடியுது?” என்றான்.

 

அர்ஜூன், “செம… செம… அந்த கேரக்டராவே மாறிட்டீங்க சார்…”

 

லக்ஷிதா, “அப்பா… நீங்க பெத்தீங்க, வளத்தீங்க ஓகே, அதுக்காக உங்க கால்ல வேணாலும் விழுறேன். நீங்க வேண்டாம்னு சொன்னாலும் கடைசி காலத்துல நிச்சயமா உங்கள என் வீட்டுல வச்சு பாசமா பாத்துக்குவேன். ஆனா கல்யாணங்கிறது என்னோட வாழ்க்கை சம்பந்தப்பட்டது. அதுல தயவு செஞ்சு உங்களோட ஆசையெல்லாம் திணிக்காதீங்க அப்பா….”

 

தனது தாடையில் கை வைத்து யோசித்த வெங்கட், “சரிம்மா… நீ சொல்றதும் சரிதான். நீ விரும்புற பையனோட வீட்டு ஆளுங்கள வரச்சொல்லு, நான் அவங்களோட பேசிப் பாத்துட்டு என் முடிவ சொல்றேன்…”

 

“ஓகே டாடி…” என்றவள் நகுலிடம் ஓடிச் சென்று மூன்று சீட்டுக்களை எடுத்தாள்.

 

அடுத்த கட்ட நடிப்பிற்காக தேர்வாகியவர்கள் சந்துரு, கோமல், ஜேம்ஸ். லக்ஷிதா தன் அப்பாவாகிய வெங்கட்டிடம் அவர்கள் மூவரையும் அழைத்து வந்தாள்.

 

வெங்கட், “இவங்கதான் மாப்பிள்ள வீட்டுக்காரங்களா? பரவாயில்ல, மாப்பிள்ளை நல்லா ஹேண்ட்சமா இருக்காரு. ஏன் தம்பி, நீங்க என்ன வேலை பாக்குறீங்க?” என்றான் சந்துருவிடம்.

அடுத்த பக்கம்

Advertisements