ஆதன் துங்கவனும் இன்பம் எனும் சொல்லும்…

இன்பம் எனும் சொல் எழுத கதைல வர்ற பெயரைப் பத்தின சின்ன இன்ஃபோ.
 
ஆதன்… இது ஒரு பழைய தமிழ் அரசனின் பெயர், சங்கப் பாடல்கள்ல ஆதன் வாழ்க அவினி வாழ்கன்னு பாட்டு இருக்குதுன்னு எனக்கு சின்ன வயதில் சொன்னது என் அக்கா.
 
நான் 8 அல்லது 9 படிக்கப்ப சொல்லி இருப்பா. பெயர் ரொம்ப பிடிச்சதால மனசில் நின்னு போச்சு.
 
பின்னால தேடினா ‘வாழி ஆதன் வாழி அவினி’ன்னு 10 பாடல் ஐங்குறுநூறுல இருக்குது.
 
‘ஆதன்’ என்பது அப்பா பெயர், ‘அவினி’ என்பது மகன் பெயர். முதல் மனிதனான ஆதம் அவன் மகன் காயின் னை எனக்கு மட்டும்தான் இந்தப் பெயர்கள் நியாபகப் படுத்துதான்னு தெரியல.
 
ஆதன் என்றால் பழந்தமிழில் சுவாசிக்கும் போது உள்ளிழுக்கும் காற்று என்று பொருள்….அது நமது உடலுக்குத் தேவையான காற்று… ஆகும் காற்று ஆக ஆதன் ( உடம்பிலுள்ள குளுகோசை எரிச்சு ATPய கொடுத்து சக்தி தருதுன்னு டீடெய்ல்ஸ் வேண்டாம்)
 
அவினி என்பது சுவாசத்தில் வெளி வரும் காற்று… உணவு மூலக்கூறை எரித்து அவித்துவிட்டு வெளி வரும் ஒன்று… அவித்து வருவதால் அவினியாம்.
ஆக பின் நாட்களில் அதையே பெயராக சூடிக் கொண்டனராம் மக்கள்.
 
ஆதம் கடவுள் தன் சுவாசத்தை கொடுத்து உண்டாக்கிய மனிதன்னு ஒரு குறிப்பு உண்டு…அது வேற நியாபகம் வருது.
 
எது எப்படியோ தமிழ் அரசர்கள்ல பலருக்கு ஆதன்றது முற்பெயரா இருக்கும்… ஆதன் எழினி, ஆதன் ஓரி, ஆதனுங்கன், ஆதன் அழிசி இப்படி பல பெயர்கள் சங்க இலக்கியத்தில் கிடைக்கும்.
 
இதுல இருந்து அவசரமா எடுத்துகிட்டதுதான் ஆதன்.
ஒரு சனிக்கிழமை… அப்போ நான் எழுதிட்டு இருந்த சைட்ல டெக்னிகல் எரர்ல என் எப்பி வராதுன்னு சொல்ல,
 
அதுக்கு முன்ன 100 வாரத்துக்கும் மேல தொடர்ந்து வீக் என்ட்ல எப்பி போட்டு நானும் படிச்சு ப்ரென்ட்ஸும் பழகி இருந்ததால,
 
இந்த கேப் அந்த சனி அன்று எப்படியோ இருக்க, friends கேட்கவும் அந்த spotல எழுத ஆரம்பிச்சு அப்படி அப்படியே Fbல post செய்ததுதான் இந்த இன்பம் எனும் சொல் எழுத குறுந்தொடர்….
 
கதையோட ப்ளாட்ல இருந்து டைட்டில் கேரக்டர் பேர்னு எதையும் ரொம்ப யோசிக்காம மனசுக்கு பட்டதை வச்சு எழுதினது.
 
அதான் வீட்ல பாடுற பாட்ல வர்ற துங்கவன் ஹீரோ பேர் ஆகி இருக்கு. களங்கமற்றவன்னு அர்த்தம்.
 
பொண்ண கிட்நாப் செய்றவனுக்கு இப்படி ஒரு பெயர்… இருந்தும் அவன் காப்பாத்தத்தான் செய்தான்றதால ஓகே ஆகிட்டு. (நோ கம்பு ப்ளீஸ்)
 
அனிச்சா…அதுக்கு முன்ன ரஞ்சனிட்டு பேசிட்டு இருக்கப்ப இப்படி பேர்ல ஹீரோயின் வேணும்னு சொல்லிட்டு இருந்தாங்க. ஆக இங்க ஹீரோயின் பேர் அது.
 
இப்படி ஒரு ஹீரோயின்க்கு என்ன ப்ளாட் செட்டாகும்னு தான் இந்த கதையே…
 
இதுதான் அங்குசம் வாங்கிட்டு யானை வாங்குறதுன்றது.
 
இஷ்பா.. இது என் ஸ்கூல் ஜூனியர். என் பெட்..செல்லப் பொண்ணு.
 
ஊர் மாறிட்டே இருக்கிறதில் டச் விட்டுப் போனாலும், என்னமோ ஸ்கூல் நியாபகம் வர்றப்ப நாங்க பேசிகிட்டே ப்ராக்டிஸ் செய்த எங்க ஸ்போர்ட்ஸ் ஈவன்ட் எல்லாம் மனசுல ஆசை ஆசையாவே ஓடும்.
 
அவள் பேர்தான் நான் ரெண்டாவதா கேள்விப்பட்ட வித்யாசமான பேரா இருக்கும். முதல் பேர் என்னதுன்னு கேட்கீங்களா?
 
வேணி.. ஹ ஹா இது உங்களுக்கு ரொம்ப காமன் பேரா தோணுதுல்ல… 4த்ல முதல் தடவை கேட்டப்ப…வாவ் இப்படில்லாம் பேர் வைப்பாங்களான்னு ரொம்ப ஆச்சர்யப்பட்டேன். ரொம்ப அழகா ஃபீல் ஆச்சு அந்தப் பெயர். இப்பவுமே ரொம்ப பிடிக்கும்.
 
சரி இப்ப இஷ்பாக்கு வருவோம். வித்யாசமான பெயர்ன்ற வகையில் யோசிச்சா சட்டுன்னு இஷ்பா நியாபகம் வரும். அதனால ஆதன்க்கு துணை இஷ்பான்னு ஆக்கியாச்சு…
 
இன்பம் எனும் சொல் எழுத…. இது ஒரு பழைய பாட்ல இடையில் வரும் வரி.. மையல் பாதி உன்னோடு… அப்படி இன்னொரு பாட்டில் இடையில் வரும்.
 
என் மனசுக்கு ரொம்ப அழகா ஃபீல் ஆகிற இந்தப் போல வார்த்தைகள் அங்க அங்க மனசுக்குள்ள படுத்துருக்கும் போல… உருட்டுறப்ப ஓடி வந்து கதை டைட்டிலா ஒட்டிக்கும்.
 
அப்படி சங்க இலக்கியம், சினிமா பாட்டு, மனசுக்கு பிடிச்ச ஃப்ரெண்ட்ஸ்னு நிறைய பேர் கான்ட் ரிபியூஷன்ல வந்ததுதான் இன்பம் எனும் சொல் எழுத…
Advertisements

Leave a Reply