அச்சுதன் அந்திகை 4 (4)

தங்களது வளர்ச்சிக்கு மிகப்பெரிய காரணம் இந்த காஞ்சி மாளிகைக்குள் வாழும் மனிதர்..!! என்ற எண்ணம் அவளுக்குள் மீண்டும் அவர் மீதான ப்ரம்மிப்பை பலமடங்கு உயர்த்த.. அவரை மேலும் வியப்புடன் பார்த்தாள்..

 

வாஞ்சையாய் அவள் தலை வருடியவர்.. ” நோ பேபி.. எனக்கு உங்க அப்பாவோட முழு ஒத்துழைப்பு இல்லைன்னா நான் எதுவுமே செஞ்சிருக்க முடியாது.. அதுமட்டுமில்ல .. சரக்கு இருந்தாலும் சந்தைல விக்க திறமை வேணும்.. உங்க அப்பாவோட தொழில் திறமையால தான் அவர் முன்னேறியிருக்கார்…” என்றார்.

 

தன் உள்ளத்தின் உள்ளே ஓடும் எண்ணங்களை கணித்து அதற்கு பதிலும் சொல்லும் அவர் மேல் மேன்மேலும் மதிப்பு கூடியது..

 

“அந்த ஆராய்ச்சி என்ன ஆச்சி மாமா?” என கேட்டாள்..

 

“லயா எந்த வைரஸா இருந்தாலும் அது எந்த உயிரிக்குள்ளே செலுத்தப்படுதோ.. அதை பொறுத்து தான் அதன் செயல்பாடுகள் மாறும்.. இப்போ டெங்கு, மலேரியா எல்லாம் ஏன் கொசு மூலம் பரவுது?” என கேட்டார்.

 

“ஏன்னா அது நோய் தொற்று உள்ளவங்கள கடிக்கும் போது அதுக்கும் வைரஸ் பாதிப்பு ஏற்படுது.. அதே கொசு இன்னொரு நபரை கடிக்கும் போது அவருக்கும் பாதிப்பு வருது…” என்றாள்..

 

“இது சாதாரண மனிதர்களோட புரிதல்.. ஒரு ஆராய்ச்சியாளரா உன்னுடைய பதில்கள் இன்னும் உன்னிப்பா இருக்கனும்.. இன்னும் கொஞ்சம் தெளிவான பதில் சொல்லு..” – கணேஷ்ராம்

 

“கொசு நோய் தாக்கின ஒருத்தருடைய இரத்தத்தை உரிஞ்சதும் அதனோட உடலிலும் மிக வேகமாக அந்த நோய் தொற்று பரவுது.. அதனுடைய ரத்தம் மட்டுமில்லாம உமிழ்நீரிலும் அந்த வைரஸ் கலக்குது..

 

பொதுவா கொசு இரண்டு செயல்களை செய்யும்.. ஒன்னு ஒரு குழல் வழியா உமிழ்நீரை மனித உடலில் செலுத்தி அதோட கழிவுகளை மனிதனுக்குள் இறக்கிட்டு இன்னொரு உறிஞ்சுகுழல் வழியா மனித ரத்தத்தை உறிஞ்சும்..

 

ஒரு மனிதனிடமிருந்து உறிஞ்சுற ரத்தத்தில இருக்குற வைரஸ் அதனுடைய உடலில் செயல்பட ஆரம்பிச்சு அதன் உமிழ்நீர்லயும் கலந்துட்டா அது அடுத்து கடிக்கிற மனிதனுக்கு சுலபமா பரவிடும்..” என்றாள்.

 

“சரியா சொன்ன டா.. அப்போ இதுக்கு பதில் சொல்லு, HIV வைரஸ் ஏன் கொசு மூலமா பரவுரதில்லை..?” என கேட்டார்.

 

“HIV வைரஸ் தாக்கினது அதோட வீரியம் தாங்காம அந்த கொசு இறந்துடுமா? மாமா..” என கேட்டாள்.

 

“இல்ல டா, அந்த வைரஸை கொசு கொண்ணுடும்..” என்றவரின் பதிலில் ஆச்சர்யம் தான் வந்தது.

 

“ரத்தம் உறிஞ்சினதும் அது நேரடியா கொசுவோட குடலுக்கு தான் போகும்.. அதோட குடல்ல இருக்குற ஒரு திரவம் அந்த வைரஸ அழிச்சிடும்.. அப்டியே அது அழியலைன்னாலும் அந்த வைரஸ் இருக்குற ரத்தமும், கொசுவோட உமிழ்நீர் சுரப்பிக்கும் எந்த சம்மந்தமும் இல்லை.. அதனால கொசுவோட உமிழ்நீர் வரைக்கும் அந்த வைரஸால போக முடியாது.. அதனால தான் கொசு மூலமா வைரஸ் பரவுரதில்லை.. அது போலத்தான் மனித உமிழ்நீர் மூலமாகவும் இந்த நோய் பரவுரதில்லை” என்றார்.

 

“அப்போ கொசு மூலமாவே அந்த வைரஸ அழிக்க மருந்து தயாரிக்க முயற்சிக்கலாமே மாமா?” என கேட்டாள்.

 

“அந்த முயற்சியும் நடந்துகிட்டே தான் டா இருக்கு.. ஏன் அந்த மருந்த நீயே கூட தயாரிக்கலாம்.. டா.. வருங்காலத்துல என்ன நடக்கும்னு யாராலயும் கணிக்க முடியாதே?” என்றார்.

 

“இந்த ஸ்பெசிமன் பத்தி சொல்லுங்க மாமா..” என்றாள்

 

“இது மனிதனால உருவாக்கப்பட்ட ஒரு கலப்பின உயிரினம்.. ரெண்டு வெவ்வேறு உயிரினங்களோட கலவை.. அதனால இதோட உடல் மூலக்கூறுகள் வித்தியாசமா தான் இருக்கும்.. இந்த ஸ்பெசிமன்ல MHD வைரஸ் எப்படி வேலை செய்யுதுன்னு பார்த்தேன். !!”

என்றார்.

 

“MHD வைரஸ் பத்தி கொஞ்சம் தெளிவா சொல்லுங்க மாமா?” என்றாள்.

 

“MHD நு சொல்லப்படுற mamburg hemorahagic disease ஆனது எபோலா குடும்பத்தை சேர்ந்த ஒரு வைரஸ்.. இதோட தோற்றமும், நோய் உருவாக்குற முறையும் எபோலாவில் இருந்து கொஞ்சமே கொஞ்சம் மாறுபடும்.. ஆனா இது ஒரு உயிர்க்கொல்லி நோய்… மாம்பெர்க் அப்டிங்கற ஊர்ல முதன்முதலா கண்டுபிடிக்கப்பட்டதால அதுவே இதுக்கு பேராகிடுச்சி, பழந்தின்னி வெளவால்கள் மூலமா தான் முக்கியமா பரவும்…” என்றார்.

 

“இது எப்படி தாக்கும் மாமா?” என்றாள்

 

“இதுவும் எபோலா போல கடுமையான காய்ச்சலை வரவழைக்கும்.. இரத்தக்கசிவை உடல் உறுப்புகளில் உருவாக்கும்.. ரொம்ப வேகமா பாதிக்கப்பட்ட உயிரினத்தோட உடல் திரவங்கள் வழியாக பரவும்.. நோய் ஒருத்தரை தாக்கிட்டா அது பேரழிவு தான்.. அவ்வளவு வேகமா பரவக்கூடியது” என்றார்..

 

கேட்கும் போதே திக் திக் என்றது லயாவிற்கு…

 

“அப்போ இதுக்கு மருந்து இல்லயா?” மாமா..

 

“அதை கண்டுபிடிக்கத்தானே இந்த ஆராய்ச்சி.. பொதுவா இந்த வைரஸ் பழந்தின்னி வெளவால்களில் சாதாரணமா வாழும்.. ஆனா வெளவால்களுக்கு எந்த பிரச்சினையும் ஏற்படுவதில்லை.. அதனால தான் இதை மனிதனுக்கு மிக நெருக்கமான உயிரினமான கொரில்லா கூட வௌவாலை கலப்பின உயிரினமா இணைச்சி அதன் DNA மூலமா ஆராய்ச்சி செய்ய முடிவு செஞ்சேன்” என்றார்..

“ஆராய்ச்சி முடிவு என்ன மாமா?” என்றாள்..

 

“லயா எந்த அறிவியல் கண்டுபிடிப்பும் தவறான நோக்கத்தை கொண்டது அல்ல… இந்த உயிரினத்துல அந்த வைரஸை செலுத்தினா அது கட்டுப்படுத்தப்படும்னு நான் நினைச்சேன்…

 

அதுவும் வைரஸை கட்டுப்படுத்திச்சு.. ஆனா, அந்த வைரஸ் தன்னயே இந்த ஸ்பெசிமனோட உடலுக்கு ஏத்த மாதிரி சீக்கிரமே தகவமைச்சிக்கிட்டது… அதாவது அந்த வைரஸோட பரிணாம வளர்ச்சி ரொம்ப வேகமா நிகழ்ந்துடுச்சி…” – கணேஷ்ராம்..

 

 

“ஓஹ் அப்போ வைரஸ இந்த உயிரோட நோய் எதிர்ப்பு சக்தி அழிக்கலயா மாமா? வைரஸோட இப்போதைய நிலை என்ன?” என கேட்டாள்.

 

“அந்த வைரஸ் தன்னையே மாத்திக்கிட்டு இந்த உயிரினத்துல வாழ்ந்துகிட்டு தான் இருக்கு… ஆனா அந்த வைரஸால இந்த உயிரினத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை… ஆனா… ” என்றவர் குரல் உடைந்தது..

 

 

“ஆனா.. என்னாச்சு?” – லயா

 

 

“ஹ ஹா.. அங்க தான் மா என் விதி விளையாடிச்சு..

இந்த உயிரினத்தில் MHD வைரஸோட இயக்கம் மற்ற உயிர்களில் இருப்பதை விட குறைவா இருக்கு.. ஆனால் அந்த வைரஸ் அழிந்து போகலை.. இன்னொரு முக்கியமான விசயம்.. வைரஸ் செலுத்தி அது புதிய பரிணாம வளச்சியை அடைஞ்ச பின்னாடி நான் இந்த ஸ்பெசிமனை செக் செய்ய போகும் போது இது என்னை நகத்தால தாக்கிடுச்சி… அந்த போராட்டத்தில வைரஸ் எனக்குள்ள பரவிடுச்சு…” என்றார்..

 

அவர் என்னவோ சாதாரணம் என்பதைப் போல தான் சொன்னார்..  ஆனால் அதன் அர்த்தம்..?? அந்த உயிரினத்தில் உலவும் வைரஸ் இவர் உடலில் செலுத்தப்பட்டு விட்டது என்பதல்லவா??

 

“அதோட தாக்கம் என்ன?” என கேட்டாள் மெல்லியதாகிவிட்ட குரலில்..

 

“இப்போ இந்த புதிய வைரஸோட பேர் gr2ன்னு வச்சிருக்கேன்.. ஹஹா என்ன இருந்தாலும் புரிய பரிணாம வளர்ச்சி அடைஞ்ச மார்பெர்க் வைரஸ் முதலில் தாக்கியதும், அழிக்கப்போவதும் என்னை தானே?” என்றவர் நிதானமாய் அவளுக்கு பதில் சொன்னார்..

 

“இந்த வைரஸால இப்போ என் உடல் உள்ளுறுப்புகளில் இரத்தக்கசிவு ஏற்படுது.. ஆனா இந்த புதிய வைரஸ் எனக்கு காய்ச்சலை உருவாக்கலை.. அதோட இது பரவுர நோயாகவும் இல்லை.. என் ரத்தம் நேரடியாக செலுத்தப்பட்டால் தவிர இது வேற யாருக்கும் என் எச்சில், வியர்வை, நான் சுவாசிக்கிற காத்து மூலமாகல்லாம் பரவாது டா.. நல்லவேளை நான் இந்திய ஜனத்தொகைல பாதிபேரோட இறப்புக்கு காரணமாகாம தப்பிச்சிட்டேன்…” என்றார்.

 

 

“மாமா..” என்றபடி சரிந்து விழுந்தாள்.. அவர் கூறிய செய்தி என்ன சாதாரணமானதா? உண்மையில் வைரஸ் மார்பெர்க் பரவ ஆரம்பித்திருந்தால் இந்தியாவில் இன்னேரம் பாதி அழிந்து போயிருக்கும்… யோசிக்கவே உடல் நடுங்கியது…  அடுத்தடுத்த அதிர்ச்சிகளால் அவளது உடல் அயர்ந்து போனது போலும்.

மயங்கிச் சரிந்தாள்..!!

பார்க்கலாம்…

தொடரைப் பற்றிய கருத்துக்களை  கீழுள்ள திரியில் பதிவிடுங்கள் ஃப்ரென்ட்ஸ்

அச்சுதன் அந்திகை – Comments Thread

கமென்ட்ஸ் பதிவிடவும் வாசகருக்கான வாசகர் 2020 போட்டியில் கலந்து கொள்ளவும்  தளத்தில் பதிவது அவசியம்.

வாசகர்  20 20 போட்டி பற்றி மற்றும் பரிசுகள் பற்றி அறிந்து கொள்ள கீழுள்ள இணைப்பை காணவும்

வாசகர் 2020 – போட்டி

 

 

 

Advertisements