அச்சுதன் அந்திகை 4 (3)

அதிலிருந்து உன் டீட்டெய்ல்ஸ் இங்க லேப் அக்சஸ்கு லோட் செஞ்சிருக்கு டா” என்றார்.

 

“அப்போ நான் வந்தப்புறமே இங்கயே லோட் செஞ்சிருக்கலாமே மாமா? நான் இல்லாதப்போ அப்படி செய்ய என்ன அவசியம்?” என கேட்டாள்.

 

அவளை பொறுத்த வரை சொந்த குடும்பத்தினராக இருந்தாலும், அவளது உடற்கூறு சான்றுகளை அவள் அனுமதி இல்லாமல் பயன்படுத்தியது தவறு என்றே தோன்றியது.

 

அவளை ஒரு கணம் உற்று நோக்கியவர்.. “உன் அனுமதி இல்லாம உன் தகவல்களை பயன்படுத்தினது தவறு தான் மா.. ஆனா நீ வர்றதுக்குள்ள எனக்கு எதாவது ஆகிட்டா? அப்றம் இந்த லேப்ப யாராலயும் திறக்க முடியாமலே போய்டும்.. என் ஆராய்ச்சிகள், உள்ள இருக்கற விலங்குகள் எல்லாம் யோசிச்சி பாரு..!! இந்த அழகான அரண்மனை ஒரு ப்ரம்மாண்ட சவப்பெட்டியா மாறிடும்.. அதனால தான்.. உன்னுடைய பையோ தகவல்களை லோட் செஞ்சி வச்சோம்” என்றார்.

 

அவர் கூற்றில் அதிர்ந்து போனாள் லயா.. ‘அன்று அவளது பெற்றோரிடம் கூட இதுபோலத்தானே ஏதோ பேசியபடி இருந்தார்.. இவர் தான் மிக விரைவிலேயே இறந்து விடப் போவதாக ஏன் சொல்கிறார்?’ திக்கித் தினறி தான் கேட்டாள்..

 

“மா.. மாமா.. மா நீங்க என்ன சொல்றீங்க? நல்லா தானே இருக்கீங்க? எதாவது ஹெல்த் இஸ்யூஸ் இருக்கா மாமா? அப்டியே இருந்தாலும் இப்போ எல்லா வியாதிக்கும் ட்ரீட்மென்ட் வந்துடுச்சே.. பின்ன ஏன் இப்படி பேசறீங்க” என பொறிந்தவளின் கண்களில் கண்ணீர் எட்டிப் பார்த்தது..

 

என்ன தான் உடன் வாழ வில்லை.. நிறைய பழகவில்லை, தோளில் தூக்கி வளர்க்கவில்லை என்றாலும் வீட்டின் ஒரு அங்கமல்லவா அவர்? எந்த பேச்சிலும் அவர் இடம்பெறத் தானே செய்கிறார் அவர்களது வீட்டில்..!!

 

அதுவும் சில ஆண்டுகளாக அவளது ஆதர்ச வழிகாட்டியாக மனதளவில் ஏற்றுக் கொண்ட ஒரு மனிதரின் மரணம் பற்றிய பேச்சு அவளுக்கு வலிக்காமல் இருக்குமா என்ன?

 

“லயா, ரிலாக்ஸ் டா பேபி.., எல்லாத்தயும் உன் கிட்ட சொல்லத் தான் போறேன்.. அமைதியா இரு.. இப்படி உணர்ச்சி வசப்பட்டா நான் எப்படி தகவல்களை தர முடியும்?” என மிக மென்மையாக கேட்டார்.

 

தனக்காக கண்ணீர் விடவும் ஒரு ஜீவன் இருப்பதை எண்ணி அவரது உள்ளம் கனிந்தது.. அது அவரது குரலில், வார்த்தைகளில் வெளிப்பட்டது..

 

 

பேசிக் கொண்டே ஆய்வகத்தின் பாதியை கடந்திருந்தனர்..

 

அங்கு இருந்த ஓர் கலப்பின உயிரியை காட்டினார் கணேஷ்ராம்.. “லயா, இது x125 .. நான் உருவாக்கின ஒரு ஸ்பெசிமன்.. வௌவாலோட ஜீன கொரில்லாவோட  ஜீனோட கலப்படம் செஞ்சி இந்த உயிரினத்த உருவாக்கினேன்..” என்றார்.

 

மீண்டும் அதை பார்த்தாள்.. பார்க்க கொரில்லா போலத்தான் இருந்தது.. எந்த கலப்பு உயிரியும் எந்த உயிரினத்தின் கருவில் வளர்கிறதோ அதன் தோற்றத்தையே பெறும்..!! ஆனால் அதன் உடலுக்குள் கலப்பு செய்த உயிரினத்தின் மூலக்கூறுகளும், குணமும் இருக்கும்.. உற்றுப் பார்த்தாள் அதன் கால் பாதங்கள் வித்யாசமாய் விரல்களுக்குள் ஜவ்வுகளுடன் இருந்தன.. கண்கள் அகலமாய் வௌவாலின் கண்களை போல உருண்டையாக கொரில்லாவின் கண்களை விட பெரிதாய் இருந்தன..

 

அதை வியந்து பார்த்துக் கொண்டிருந்தவள் திரும்பி அவரை பார்த்தாள்..

 

“இந்த ஸ்பெசிமன் ரொம்ப சேலஞ்சிங்கா இருந்தது.. நிறைய முயற்சிகள் தோல்வி அடைஞ்சதுக்கு அப்புறம் தான் இது வெற்றிகரமா பிறந்தது.. இதை உருவாக்க காரணம், MHD ஐ கட்டுப்படுத்துற ஆற்றல் இதோட டி.என்.ஏக்கு இருக்கும்னு நான் நம்பினேன்.” என்றார்..

 

“மாமா..” என்றாள் வியப்புடன்..

“என்னம்மா அப்புறம் இந்த ஹைப்ரிட் விலங்குகள்லாம் எதுக்காக உருவாக்குறோம்னு நினைக்கிற..?? எதாவது ஒரு புது முயற்சியை விஞ்ஞானிகள் செய்துட்டே இருக்க காரணம்.. புது புது கண்டுபிடிப்புகள் மேலானா தீரா ஆர்வம் தான்.. அதுவும் மருத்துவத் துறை இப்போ போய்கிட்டிருக்கும் பாதை ரொம்ப நெடியது..

 

நோயற்ற வாழ்வை தான் ஒவ்வொரு மனிதனும் விரும்புறான்.. அதுக்காக என்ன செய்யவும் தயாரா இருக்காங்க.. ஆக இப்படி விதவிதமான ஆராய்ச்சிகள் முக்கியமான இடத்தில் இருக்கு..

 

யோசிச்சு பாரு.. ஒரு வேளை இந்த உயிரினத்தால MHD வைரஸ கட்டுப்படுத்த முடிஞ்சா..? நம்ம பார்மாச்சூட்டிகள் கம்பெனி தான் உலகத்துக்கே ராஜா..!! இந்தியால நம்பர் ஒன்னா இருக்குற உங்க அப்பா உலகத்திலயே முதல் கோடிஸ்வரனா உயர்ந்துடுவாரு.. ஹ ஹா ஹ ஹா” என்றார்.

 

மேலும் வியப்புடன் இப்போது லயாவிற்கு இன்னுன் கொஞ்சம் புரிந்தது.. வெறும் ஆராய்ச்சி என பொழுது போக்கினால் இவளது அப்பா எப்போதோ மாமாவை கைகழுவியிருப்பார்..

 

இந்த அரண்மனையும், இவ்வளவு பந்தோபஸ்தும், பாதுகாப்பும் மாமாவின் ஆராய்ச்சியால் கிடைக்கும் பலன்களுக்காக.. தங்களது மருந்து தயாரிக்கும் கம்பெனி எப்படி உலகிலேயே முதலிடத்தில் இருக்கிறது என்பதும்.., பல அரிய வியாதிகளுக்கான மருந்துகளும், அவற்றிர்கான காப்புரிமையும் எப்படி தங்கள் கம்பெனி வசமே உள்ளது என்பதும் புரிந்தது..

 

அலோபதி மருந்துகள் மட்டுமல்லாது தங்களது ஆயுர்வேத மருந்துகளும் உலகளவில் பெரும் சிறப்புடன் இருப்பதற்கும் என்ன காரணம் என்பதையும் புரிந்து கொண்டாள்.

அடுத்த பக்கம்

Advertisements