அச்சுதன் அந்திகை 4 (2)

அந்த பழங்கால அலங்கார வேலைப்பாடு மிகுந்த கதவின் அழகிய தந்த வேலைப்பாடமைந்த பிடியை திருகி திறந்தவள் பாதாளம் செல்லும் படிகளின் வழியே இறங்கினாள்..!!

 

ஆனால்..,, இவள் முன்பு பார்த்த அறை இது அல்ல போலவே!! அங்கே எடுத்ததுமே ஆயாய்ச்சிகூடம் ஆரம்பித்திருந்தது.. விலங்குகள் அதன் ரக வாரியாக அடைக்கப்பட்டிருந்தன.. ஆனால் இங்கு படி முடிந்ததும் ஓர் நெடும் சுவர் தான் இருந்தது..!!

 

அந்த படிகளில் இருந்து இறங்கி அதன் பின் முட்டுச்சந்தில் முட்டிக் கொண்டாற் போல நகர வழியில்லாமல் நின்றாள். ஒன்றுமே இல்லாத இடத்திற்கு ஏன் படிக்கட்டுகள்!! எதனால் இவ்வளவு ரகசியமாய் ஒரு வழி!!

 

ஒரு வேளை அந்த ஆராய்ச்சிகளையெல்லாம் விட்டுவிட்டாரோ? ஆனால்.. அப்படியே விட்டிருந்தாலும் பாதையை அடைக்க வேண்டிய அவசியம் இல்லையே..? மேலும் அவர் தம் ஆராய்ச்சியை தொடர்ந்துகொண்டே இருப்பதால் தானே இவர்களுடன் நேரம் செலவளிக்காமல் எங்கோ சென்றுவிடுகிறார்..

 

எனில், இந்த படிக்கட்டுகளும், சுவரும் எதற்காக!! மண்டை சூடேறி, காதுகள் வழியே சூடு இறங்கும் அளவுக்கு அவளது மனநிலை மோசமானது..

 

சிறிது அங்கேயே அந்த படிகளில் அமர்ந்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டவள், மெதுவாய் மேலேறினாள்.. மீண்டும் ஓர் சுற்று வர அதே போன்றதொரு மற்றொரு கதவை வேறொரு பக்கத்தில் கண்டாள்..

 

அந்த கதவையும் நம்பிக்கையின்றியே திறந்து உள்ளே சென்றவள்.., அது தான் அவள் தேடி வந்த ஆய்வுக்கூடம் என அறிந்து ஆசுவாசமானாள். முன்பு பார்த்தது போலவே நிறைய மாறுபாடுகள் இன்றி இருந்தது அந்த ஆய்வுக்கூடம்..

 

தங்கு தடையின்றி ஆய்வகத்திற்குள் நுழைந்தவள்.. ஒரு கட்டத்திற்கு மேலான பகுதிக்கு செல்லும் முன் இவளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது..

 

ஆய்வகத்தில் சில சாதாரண பகுதிகளை கடந்து அடுத்த பகுதிக்குள் செல்லும் நுழைவாயில் இவளது அடையாளம் கேட்டு தடுத்து நிறுத்தியது.

 

இவளென்ன அங்கு வேலை செய்கிறாளா? இல்லை பதிவு செய்திருக்கிறாளா? இவள் கைரேகை பதிந்தால் கதவு திறக்குமா என்ன? விழித்தபடி நின்றாள்.. அதற்குள் அவள் மாமாவே வந்து விட்டார்..

 

“போச்சுடா ஒரு அக்சஸ் கூட ட்ரை செய்யல.. ஆனா உடனே போட்டுக்குடுத்துடுச்சி பக்கி சென்சார்” என மனதுக்குள் அர்ச்சித்தபடி கொஞ்சம் குற்றவுணர்வுடனே நின்றாள்..

 

பின்னே, நாளை அவரே சொல்கிறேன் என சொல்லியிருந்தும் இப்படி அவர் அறியாமல் தான் ஆய்வகத்தை தேடி வந்தது தவறு தானே! என அவள் மனமே இடித்துரைக்க..  அவர் முகம் பார்க்கக்கூட வெட்கம் கொண்டு இவள் நிற்க..,

 

“லயா டேய், ஏன் இங்கயே நிக்கிற? உள்ளே போக வேண்டியது தானே?” என்றார் அவர்.

 

“இவரு என்ன லூசா? இல்ல நம்மள அப்டி நினைக்கிறாரா? செக்யூரிட்டி அக்சஸ் லாக் போட்டு வச்சிருக்காரு கதவுல.. நாம எப்படி உள்ள போறதாம்??” என மனதிற்குள்ளேயே மேலும் புலம்பிக் கொண்டிருந்தாள்..

 

இவள் குழப்பம் எதுவும் அவசியம் இல்லை என்பது போல.. அவளது கையை எடுத்து சென்சார் மேல் பொருத்தினார் கணேஷ்ராம்.

 

இவள் விழியகல பார்க்க.., இவள் கண்ணெதிரே கதவு திறந்து வழி விட்டது..!!

 

“மாமா.. என் பையோ டீட்டெய்ல்ஸ் எப்படி இங்க லோட் ஆகிருக்கு? இதென்ன ஆதார் டீட்டெய்ல்ஸா?” என கேட்டாள்.

 

“இல்ல டா ம்மா.. நம்ம பேமிலில எல்லாரோட பையோ டீடெய்ல்ஸ்சும் உங்க அப்பாவோட பர்சனல் லேப்டாப்ல அப்லோட் பண்ணி வச்சிருக்குல்ல?

அடுத்த பக்கம்

Advertisements