காதல் வெளியிடை 17

நித்துவை ஒரு அதீத பரபரப்பு செலுத்திக் கொண்டிருந்தது…..அந்த க்ளாடியசை பார்த்தபடி  கடைக்குள் வந்தவள் கட கடவென கடையின் கொள்முதல் பற்றிய பழைய அனைத்து டாக்குமென்ட்கள் பில்கள் பரிவர்த்தனைகள் என எல்லாவற்றையும்  கிடைத்தமட்டும் வாசிக்க துவங்கினாள்…

இவளது யூகம் சரியானால்…. பவன் கம்பனியில் இருந்து வந்த சரக்கு இவளது கடைக்கு கொண்டு வரப் படாமல் இவர்களது கடையைப் பற்றி தெரிந்த யாரோலோ வேறு எங்கோ இறக்கப்பட்டுவிட்டு…. இங்கு போதையில் இருந்த அப்பாவை தூண்டி சரக்கு கிடைக்கபெற்றதாக மெயில் மட்டும் அனுப்பபட்டிருக்கிறது….. அந்த ப்ளாக்க்ஷீப் இந்த க்ளாடியஸ்தானா?

க்ளாடியஸ் இவர்கள் கடையில் அவரது பதினேழு பதினெட்டு வயதில் இருந்து வேலை பார்ப்பவர்….. சாப்பாட்டுக்கே கஷ்டபடுகிற நிலையில் இருந்து வேலைக்கு வந்தவர்….இத்தனை வருடத்தில் ஓரளவு முன்னேறி இருந்தாலும்…..இப்போது அவர் காட்டிக் கொள்ளும் இந்தவகை நிலையெல்லாம் வெகு அதிகமே….

ஆனால் ஒருவர் சட்டனெ  பொருளாதார வகையில்  மேம்பட்டு நிற்கிறார் என்பதற்காகவே இவர்கள் கடையில் திருடியது அவர்தான் என எண்ணுவது எப்படி சரியாகும்? ஆனால்  அவரிடம் தப்பு இருக்கிறது என ஒரு அசைக்க முடியாத எண்ணம் இவளுக்குள் அழுத்தமாய் நிற்கிறது….

அப்படியானால் அதற்கு எதோ ஒரு சாட்சி எங்காவது இருந்தாக வேண்டுமே…. எங்கே எதைத் தேட என தெரியவில்லை அவளுக்கு…… முன்பு இவள் அப்பா நன்றாக இருந்த காலத்தில் கொள்முதல் செய்யும் போது இவள் தந்தை பொதுவாக கடை பிடிக்கும் நடபடிகள் தெரிந்தால்….இப்போது எங்கெல்லாம் அது கடை பிடிக்கபடவில்லை…… எப்படி திருட்டு நடந்திருக்கிறது….. அதை இந்த க்ளாடியஸ் செய்ய வகை இருக்கிறதா என எங்கோ எதோ ஒருவகையில் விஷயம் பிடிபடும் என்ற புரிதலில்  டாகுமென்ட்களை திரும்ப திரும்ப வாசித்துக் கொண்டிருந்தாள்….

இதோ ஒரு நூல்முனை அவளுக்கு கிடைத்துவிட்டது போல படுகிறது……

கடந்த 10 வருடங்களுக்கு மேலாக பவனது கம்பெனியில் இருந்து ஒவ்வொரு கொள்முதலின் போதும் இந்த இந்த வகை டைல்கள் இவ்வளவு எண்ணிக்கையில் இவர்கள் கடைக்கு  அனுப்படுவதாக வந்த விளக்கமான இ மெயில் தவிர…..  இன்று  சரக்கு அனுப்பபடுகிறது என வெறும் குறிப்பு போல ஒற்றை வரியும் கூடவே I, L, D என்ற அடையாளத்தோடு மூன்று எண்களும்  குறிக்கப்பட்டு இன்னொரு மெயிலும் அனுப்பபட்டு வந்திருக்கிறது இவர்களுக்கு….

ஆனால் இந்த 50 லட்சம்  ஆர்டரிலும் அதற்கு முந்தைய சில கொள்முதல்களிலும் அந்த I L D மெயில் மட்டும் வந்திருக்கவில்லை….

இதுதான் அவளுக்கு கிடைத்த நூல் முனை…..

இந்த I L D என்ன என கண்டு பிடிப்பதற்காக பலவற்றை குடைந்தவளுக்கு மெல்ல புரிகிறது அந்த I என்பது அக் குறிப்பிட்ட லோடின் இன்ஷூரன்ஸ் நம்பர்…. L என்பது  அனுப்பபட்ட கண்டெய்னர் லாரி எண்…. D என்பது அந்த லாரியின் ஓட்டுனரின் தொலைபேசி எண்…

இவர்களுக்கான சரக்கை அங்குள்ள லாரி புக்கிங் ஆஃபீஸில் இருந்து அன்றைய தேதியில் கிடைக்கும் எதாவது ஒரு லாரியில் ஏற்றி…… அதன் பின் இன்ஷூரன்ஸ் செய்து அனுப்புவதால்….. இந்த குறிப்புகளை மட்டும் பகிரவென  லாரி சரக்கோடு கிளம்பியபின் அனுப்பபடும் குறிப்பு மெயில் போலும் இது….

ஒரு கணம் துள்ளிக் குதிக்கலாம் போல் இருந்தது நித்துவுக்கு…. முந்தைய சிறிய கொள்முதலுக்கே இன்ஷூரன்ஸ் முதற்கொண்டு இத்தனை பாதுகாப்பு செய்யப் பட்டிருக்கும் போது நிச்சயமாக 50 லட்சம் சரக்கிற்கு  இதெல்லாம் செய்யப்பட்டு இருக்கும்தான்…

அந்த குறிப்புகளை தாங்கிய மெயிலை பவன் கம்பெனியில் இருந்து இவள் அப்பாவிற்கு அனுப்பியும் இருப்பார்கள்தான்….. ஆனால் தொழில் வகையில் கவனமற்று இருக்கும் இவளது அப்பாவோ மற்றவர்களோ மேலோட்டமாக பார்க்கும் போது, அவர்கள்  கண்ணில் அந்த மெயில் பட்டுவிடக் கூடாதென யாரோ இங்கு அப்பாவின் மெயில் அக்கவ்ண்டில் அந்த மின்னஞ்சல் எல்லாவற்றையும் நீக்கி இருக்க வேண்டும்…

ஆனால் அதனால் ஒன்றும் பாதகமில்லை….. இவங்களுக்கு மெயில் செய்த பவன் கம்பெனியில் அந்த மெயில் இன்னும் இருக்கும்தானே…. அவங்கள கூப்ட்டு கேட்டா  இந்த டீடெய்ல்ஸ் கிடச்சுடும்….. சரக்க ரிசீவ் செய்தாச்சுன்னு இவ அப்பா அனுப்பிய மெயில் இருக்றதால திருட்டு போய்ட்டுன்னு இன்ஷூரென்ஸ்  கோர முடியாதுன்னாலும்……. இந்த  சரக்கு வந்த லாரி ட்ரைவர் நம்பர் வச்சு….. அந்த ட்ரைவர கூப்ட்டு கேட்டா லோட எங்க இறக்கினான்னு சொல்லிடுவானே…. அதாவது திருடன பிடிச்சுடலாம்…

இப்படியாய் துள்ளியது இவள் மனம்…

கொல்கதாவில் அமைந்திருக்கும் பவனுடைய கம்பெனியின்  தலைமை அலுவலகத்தை தொடர்பு கொண்டால்  அந்த மெயில்கள் கிடைக்குமாய் இருக்கும் என யோசித்தவள்…. அவசரமாய் அந்த அலுவலக என்கொயரி எண்ணையும் தேடிப் பிடித்துவிட்டாள்.

ஆனால் அடுத்த கணம் ‘என்ன லாங்குவேஜில் பேசனும்?…..இப்டி அஃபீஷியல் கால் எல்லாம் யார்ட்டயாவது பேசி இருக்கனா? எப்படி பேசனும்…..? எதாவது சொதப்பிடுவனா?’ என ஒரு தயக்கம் அவளை தாக்கி தடுக்கிறது….

பொதுவாக வீட்டுக்குள் இயலாய் இருக்கும்படி வளர்க்கப்பட்டிருந்தாலும் உறவினர்கள் தவிர வெளி ஆட்களிடம் பேசிப் பழகும் மனோபாவமின்றி வளர்ந்தவளுக்கு இது  ஏதோ மலை போல தோன்ற… கூடவே ஆங்கிலம் நன்றாகவே புரியும் என்றாலும்…அதில் கல்லூரியில் செமினார் எடுத்திருப்பதை தவிர உரையாடிய அனுபவம் எல்லாம் இல்லை என்பது பேசும் போது திக்குமோ என்ற மிரட்சியை தோற்றுவிக்க…. பின்தலையை ஒரு கையால் பிடித்தபடி உட்கார்ந்துவிட்டாள் அவள்.

‘இந்த பவன் மட்டும் எப்படி இவ்ளவு நல்லா தமிழ் பேசுறான்…?’ மனம் அவனிடமே போய் நிற்கிறது…. அலையடிக்கும் மனதில் இப்போது சட்டென தோன்றி மறைகிறது பவனின் ஒரு கீற்றுப் புன்னகை…. சில விஷயங்கள் பேசும் போது அவன் கண்களில் வந்து போன பாவம்….. ஒன்றிரண்டு வார்த்தைகளை அவன் சற்று மாறுதலாய் உச்சரித்த நயம்…. இதே இந்த இவளுடைய கடையில் வைத்து அவன் ஒவ்வொன்றையும் கையாண்ட விதம்….

இருந்த இந்த நிலையிலும் அக்காட்சிகள் ஏதோ ஒரு மனோரம்யத்தை இவளுக்குள் இழுத்துக் கொட்ட….. ‘என்ன ஒரு கான்ஃபிடென்ஸ்ல அவனுக்கு…?’ என்ற சிலாகிப்பு ஒன்று இவளுக்குள் சிதற….

அடுத்து வந்து போகிறது  ஒரு பெருமூச்சு இவளுக்கு….

‘அவன் முன்னால நிமிர்ந்து நிக்றதுக்கு கூட முதல்ல இவ அவன் கடனை அடைச்சாகனும்…..’ இப்படியாய் தோன்றுகிறதே….

கூடவே ‘அதுக்காக நியாயமான எந்த வேலையையும் செய்யலாம்’ என ஒரு உத்வேகமும் உண்டாகிறது.

மீண்டுமாய் ஃபோனை கையில் எடுத்தாள்….

இதற்குள் ‘ஆனால் அந்த மெயில் மூலம் லாரி ட்ரைவர் நம்பர் கிடைச்சாலுமே அடுத்து என்ன செய்ய? அவன் போய் சரக்கை வேறு யாருக்கோ இறக்கிட்டு போய்ட்டேன்னு ஈசியா ஒத்துக்கிடுவானா என்ன?’  என்று மற்றொரு எதிரிடை கேள்வி நடுமண்டையில் வந்து நச்சென்று தாக்குகிறது இவளை…

அவ்வளவுதான்…… கிடைத்திருந்த நூல்முனை அறுந்து விழுந்தே விட்டது இவள் மனதளவில்….

சட்டென ஒரு பெரும் சோர்வு அவளை பீடித்துக் கொண்டது….. எதிரிலிருந்த டேபிள் மேல் முகம் புதைத்து கவிழ்ந்தே விட்டாள்.

ஆனாலும்  தொலைபேசியை எடுத்திருந்த கை மட்டும் அதை கீழே வைக்கவில்லை…..

பவனுடைய கம்பெனிக்கு பேசலாம் என்ற நினைவு, புயலில் அவன் பாதுகாப்புக்காக அடி மனவெளியில்  பற்றி எரிந்து கொண்டிருந்த இவள் தவிப்பை இதற்குள் கொழுந்துவிட்டு எரிய வைத்திருக்க…..

‘பவனுக்கு எதுவும் பெருசா ப்ரச்சனைனா ஹெட் ஆஃபீஸ்ல எப்படியும் ஒரு பதற்றம் இருக்கும்தானே…. இப்ப நான் பேசுறப்ப அவங்க நார்மலா பேசினாலே பவன்க்கு எதுவும் இல்லைனுதானே அர்த்தம்….’

‘மெயிலைப் பத்தி பேசுறப்ப அப்படியே இயல்பு போல  பவன் சேஃப்டி பத்தியும் எப்படியும் கேட்டுடலாம்’ எனலாம் இவளுக்கு இதற்குள் வந்திருந்த வைராக்கிய வாஞ்சையை கலைக்க முடியவில்லை அவளால்.

ஆக பவனைப் பற்றி விசாரிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் அதற்கு ஒரு சப்பைக்கட்டு காரணமாக இந்த மெயில் பத்தி விசாரிப்பது போல்  கொல்கத்தா அலுவலகத்துக்கு அழைத்தாள் நித்து.

இவள் கொஞ்சம் இலகுவாக உணரும் வண்ணம் அழைப்பை ஏற்றது ஒரு பெண் குரல்தான்…. தொழில்முறை நட்புக் குரலில்தான் பேசினாள் அந்தப் பெண்.  இருந்தும் முதலில் சற்று வார்த்தை வராமல் திக்கத்தான் செய்தாள் நித்து…. சில உச்சரிப்புகள் வேறு பதற்றத்தில் சொதப்பி வைத்தது இவளுக்கு…. ஆனாலும் சற்றுக்கெல்லாம் வந்துவிட்ட ஓரளவு இயல்பான தொனியில் விளக்கமாகவே அந்த மெயில்களைப் பற்றி கேட்டுக் கொண்டாள்….. அதோடு  “அங்க ஒரிசால ஃப்ளட் அலர்ட்னு சொன்னாங்க….. உங்க எல்லோரும் சேஃபா? எப்படி இருக்கு சிச்சுவேஷன்” என்றும் கேட்டுவிட்டாள்…

“இது வழக்கமான சிச்சுவேஷன்தான் மேம்…..ப்ராப்ளம்லாம் எதுவும் இல்ல…. ஈபி ஆஃப் செய்துடுவாங்க மேம்…..டெலிஃபோன்ஸும் வர்க் ஆகாது….  ட்ரான்ஸ்போர்ட்டேஷன் ஈசி கிடையாது….மத்தபடி எல்லோரும் சேஃப்…. தாங்க்ஸ் ஃபார் யுவர் கன்சர்ன்” என பதில் கிடைக்கவும்  இவளுக்குள் எரிந்து கொண்டிருந்த தீ வெகுவாகவே இறங்கிப் போனது…..

‘பவன் ஜஸ்ட் அவனோட வேலைக்கு போய்ருக்கான்…மத்தபடி இதுல கவலப்பட எதுவும் இல்லைதான் போல……’ நிம்மதியாக இருந்தது நித்துவுக்கு…. ‘அந்த அண்ணாவும் இப்படித்தான சொன்னாங்க…. யாருமே பயப்படலைனா அப்ப ப்ரச்சனை இல்லனுதானே அர்த்தம்….’ பவன் பாதுகப்பு வகையில் இப்போது பரிபூரண அமைதியே வந்துவிட்டது இவளுக்கு….

கூடவே குட்டியாய் இப்போது ஒரு குழந்தை வகை உற்சாகம்…. ‘ஹேய் பேச பயந்ததுக்கு நல்லாவே பேசிட்டேன்….’

‘அது மட்டுமா….இன்னைக்கு இவளா கடைக்கு வந்திருக்கா….இவ்ளவு வேலை செய்திருக்கா…. இதெல்லாம் பவன்ட்ட சொன்னா  கண்டிப்பா சந்தோஷப்படுவான்…. ‘ நினைக்கவே குதுகலமாய் இருந்தது…

‘பவன் வர்றதுக்குள்ள இவ மட்டுமா இவங்க  கடைல எப்படி திருட்டு போச்சுன்னு கண்டு பிடிச்சுட்டான்னா எப்படி இருக்கும்?’ இப்படியும் ஒரு எண்ணம் துள்ளி ஓடுகிறது….

‘அ’ போட தெரிந்ததும் அம்மா அப்பா அக்கா என எல்லோரும் அப்ரிஷியேட் செய்ய வேண்டும் என நினைக்கும் குழந்தைவகை உணர்வு இது என நித்துவுக்குமே புரியாமலில்லை….

நடந்த திருட்டை கண்டு பிடிப்பது  கழுத்தை நெரிக்கும் அத்யாவசிய தேவை…..அது ஏதோ அட்வென்சர் இல்லை என தனக்குத் தானே சொல்லிக் கொண்டாலும்….

பவன் வர்றதுக்குள்ள இதுல செய்றதுக்கு என்னதாவது இருக்குதா? எனதான் மீண்டும் யோசித்தாள் அவள்.

‘ஆனா அதுக்குத்தான் வழி இல்லை போலயே…’ அவள் மனம் சலித்துக் கொண்ட அதே நேரம் இன்னொரு கேள்வி வந்து போகிறது இவளுக்கு?

அந்த ட்ரைவர் நம்பர்னால திருடுனவங்க மாட்டிக்க மாட்டாங்கன்னா….எதுக்காக அந்த மெயில்ஸை எல்லாம் டெலிட் செய்திருக்காங்க? இவ அப்பா இப்ப இருக்க மாதிரி லிக்கர்லயே  இருந்தார்னா தேடி பிடிச்சு அந்த மெயில்களை படிக்க மாட்டார்…. இருந்தும் எதேச்சையா கூட அவர் கண்ணில் அந்த மெயில் பட்டா  ப்ரச்சனைனு யோசிக்கப் போய்தான இந்த திருடன் அந்த  நம்பர்களை மறச்சுருக்கான்? ஏன்?

நூல் முனை திரும்பவுமாக இவள் கையில் பிடிபட்டது போல் உணர்வு….

கொள்முதல்  நேரங்களில் லாரிகளுடன் இவள் அப்பா செய்துகொள்ளும் பொதுவான பரிவர்த்தனைகள், அது சம்பந்தப்பட்ட பில்கள், டாகுமென்ட்கள் என எல்லாவற்றையும் இப்போது தீவிரமாய் படிக்க ஆரம்பித்தாள் நித்து…

பொதுவாக  பவன் கம்பெனியில் இருந்து டைல்கள் அனுப்பபடும் கன்டெய்னர் லாரியின் வாடகை மட்டுமே  ஒவ்வொரு முறையும் ஒரு லட்சம் அளவுக்கு வந்திருக்கிறது…… லாரி உரிமையாளருக்கு செலுத்த வேண்டிய அந்த பணத்தை சரக்கை வாங்கிக் கொண்டே இவளது தந்தை செலுத்தி வந்திருக்கிறார்….

பெரிய தொகை என்பதால் இவளது அப்பாவுக்கு மட்டுமல்ல லாரி உரிமையாளருக்கும் வரி  சம்பந்தபட்ட வகையில் ஏறத்தாழ அக்ரிமென்ட் போன்ற பில் தேவைப்பட்டிருக்க…. ஒவ்வொரு முறையும்  சரக்கு இறங்கிய இடத்தில் லாரி ட்ரைவருடன் அப்படி அக்ரிமென்ட் கையெழுத்திட்டிருக்கிறார் அப்பா.

ஆனால் கடைசி முறை பவன் கம்பெனியில் வாங்கிய டைல்களுக்கு இப்படி வகை பில் இவளது அப்பா வைத்திருக்கவில்லை…..

அப்பா குடிபோதையில் அப்படி பில் வாங்காமல் போனார் என வைத்துக் கொண்டாலும் லாரி ட்ரைவர் எப்படி பில் வாங்கமல் போயிருப்பார்?

“இருக்க வேண்டிய பில் ஒன்னு கைல இல்லன்னாலும் ட்ரைவருக்கு ரொம்ப கஷ்டம்..… எப்ப எங்க வேணாலும் ஸ்குவாட் நின்னு  பிடிப்பாங்க….ஒவ்வொரு டைமும் அதுக்கு லஞ்சம் கொடுத்தே ஒரு வழி ஆகிடுவாங்க இந்த ட்ரைவர்ஸ்”ன்னு முன்பு அப்பா சொன்ன நியாபகம் இருக்கு இவளுக்கு….

அப்படின்னா லாரி ட்ரைவர்ட்ட சரக்கு இறங்கின இடத்தை குறிப்பிட்ட பில் இப்பவும் இருக்குதுன்னு அர்த்தமா????

லாரி ட்ரைவரிடம் எப்படி பேச வேண்டும் என புரிந்துவிட்டது இவளுக்கு…

கடகடவென குறிப்பிட்ட அந்த மொபைல் எண்களில் ஒன்றை அழைத்தாள்….. ‘இது எங்க கடைதான்…. நான்தான் ஓனர் என்பது போல் எதையும் காட்டிக் கொள்ளாமல், தன் கடை முகவரியை சொல்லி….சரக்கு வந்த நாளையும் குறிப்பிட்டு….”அன்னைக்கு நீங்கதாண்ணா லோடு இறக்கி இருக்கீங்க…. அதுக்கான எங்க பில்ல காணோம்….. உங்கட்ட இருக்குமே அத ஒரு  ஃபோட்டோ மட்டும் எடுத்து அனுப்ப முடியுமா?” என கேட்டாள்.

பொதுவா ஓனர் கேட்கிறோம்னு தெரிஞ்சாலே அலர்ட் ஆகவோ இல்ல அதனால எனக்கு என்ன லாபம்னு யோசிக்கவோ தோனலாம் அந்த ட்ரைவர்க்கு….. ஆக  சாதாரணமாகவே கேட்டாள்.

“இன்னாமா இம்புட்டு நாள்கப்பால கேட்டுகினு இருக்க…?” என அந்த ட்ரைவர் சலித்துக் கொண்டாலும்….

“அத நீங்க டேக்‌ஸ் டிபார்ட்மென்ட்ல பதிஞ்சு, இங்க நாங்க பதியலைனா ரெண்டு பேருக்கும் ப்ரச்சனை ஆகும்ணா” என்ற இவளது அடுத்த மிரட்டல் அல்லாத மிரட்டலில்…..

“ரெண்டு நிமிட்ல அனுப்புறேன்…” என்ற ட்ரைவரின் பதிலோடு ஒரு நிமிஷத்துக்குள்ளாக இவள் மொபைலுக்கு வந்து சேர்ந்தது அந்த பில்லின் ஃபோட்டோ… ஸ்மார்ட் ஃபோனின் வேகமே வேகம்…

க்ளாடியஸ் என்ற  பெறுநர்  கையெழுத்தோடு அருகில் உள்ள புளியங்குடி ஊரில் ஒரு முகவரியில் சரக்கு இறங்கப் பட்டதாக தெளிவாக காட்டியது அந்த பில்.

“சபாஷ்” என முனங்கியது இவள் வாய்…. குரலிலோ அத்தனை அத்தனை அழுத்தம்.

அடுத்து வேறெதையும் யோசிக்கவில்லை இவள். புளியங்குடியில் உள்ள தன் பள்ளி கால தோழிக்கு அழைத்தாள்…..  பில்லில் குடுக்கப்பட்டிருந்த முகவரியை சொல்லி “அங்க எதுவும் புது டைல்ஸ்க்கடை வந்திருக்காபா?” என விசாரித்து….. ஆம் என உறுதி படுத்திக் கொண்டாள்.

எரியுற வீட்ல பிடுங்குற வரைக்கும் லாபம் என்பது போல்…. அப்பா இப்படி விழுந்து கிடக்கிற நேரத்தில்….. அதை பயன்படுத்தி…. அப்பா பணத்தை வைத்து டைல்ஸ் வாங்க வைத்து….தனக்காக ஒரு கடை ஆரம்பித்திருக்கிறான் அந்த  க்ளாடியஸ் என இவளுக்கு தெளிவாக புரிந்துவிட்டது. யார் கேட்க போறா என்ற தைரியம் போலும் அவனுக்கு….

ஒரு பக்கம் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தாள் நித்து…. அந்த க்ளாடியசை நினைக்க நினைக்க அப்படித்தான் இருந்தது அவளுக்கு….. ஆனால் இந்த நிலையிலும்  தன்னைத்தானே நினைத்து சற்று மகிழ்ச்சியும் நம்பிக்கையுமாய் இருக்கிறது அவளுக்கு..

எனக்கும் கூட சிச்சுவேஷன கொஞ்சம் சமாளிக்க வருதுதான்….. இவ்ளவு தூரம் விஷயத்தை கண்டு பிடித்து அதை கையாண்டிருக்கிறாளே….

ஆக இவள் இந்த நாளை கொஞ்சம் நல்லவிதமாவே ஜெயித்திருக்கிறாள் என எடுத்துக் கொள்ளலாம்தான்.

ஆனா இப்ப எப்படி இவ தன் கடை சரக்கை மீட்க போறா??

உண்மையில் இந்த கடை ப்ரச்சனையில் அரை கிணறு கூட தாண்டி இருக்கவில்லைதான்  அவள். ஆனால் ஏனோ முன்பு போல் மலையில் முட்டும் உணர்வு இல்லை….. இவள் அளவுக்கு இப்போது இவள் செய்து கொண்டிருக்கும் எல்லாமே அதீதம்…. ஆக மீதியுள்ள அதீதத்தையும் சமாளித்துவிடலாம் என உள்மனசுக்கு படுகிறதோ?.

ஆனால் எப்படி????

போலீஸ்ட்ட போறத விட மோசமான முடிவு எதுவும் கிடையாது…….போனா  ரெண்டு பேருக்கும் நியாயம் செய்றேன்…..ப்ரச்சனைய இதோட முடிக்கிறேன்னு சொல்லிட்டு…  சரக்கு மொத்தத்தையும் மூனா பிரிச்சு ஒன்னு இவளுக்கு ஒன்னு அந்த க்ளாடியசுக்கு…. மீதி பங்கு சமாதனம் செய்து வச்சதுக்காக தனக்குன்னு வச்சுப்பான்…..மொத்தத்துல ஆமை வாயில போய்ட்டு வந்த விளாம்பளமாதான் இருக்கும் சரக்கு….மேல உள்ள கூடு இருக்கும் உள்ள பழம் மட்டும் ஸ்வாகா…

அதோட இப்ப நடக்கிற கேசுக்கே ஊர் இவள காரி துப்றது பத்தாது…..இதில் போலீஸ் ஸ்டேஷன்க்கு வேற இவ அலைஞ்சா இன்னும் என்னலாம் ஆகும்…?

ஷ்ருஷ்டிட்ட பேச முடிஞ்சா நல்லா இருக்கும்……

“யார் என்ன சொல்வாங்கன்னு பார்த்து பார்த்துதான் நாம நாசமா போறதே….அடுத்தவங்க பேச்சுக்கு  பயந்து நம்மள எத்தன நாசம் பண்ணாலும் அடங்கிப் போய்டுவோம்ற அவங்க நினைப்ப நாம காலி செய்யாத வரை நானும் நீயும் மட்டுமில்ல எந்த பொண்ணுங்களும் வாழ முடியாது….”ன்னு சொல்லி இப்ப உள்ள கேசையே பிடிவாதமா போட்டது அவதான்…

இப்ப என்ன செய்துகிட்டு இருக்காளோ?

அன்று இரவில் தன் அறை படுக்கையில் படுத்தபடி இவைகளைத்தான் நினைத்துக் கொண்டிருந்தாள் நித்து…

சட்டென ஒரு  மனமின்னல்….‘ஹேய் அந்த  கொழுக்கட்ட அண்ணாவும் கூட ஷிப்ல தான இருக்கதா சொன்னாங்க…… அது ஷ்ருஷ்டி இருக்ற ஷிப்பா இருந்தா நல்லா இருக்கும்ல்ல….’ நினைக்கவே உற்சாகமாகியது நித்துவுக்கு…

கூடவே ‘ஆமா உனக்கு ஆனாலும் வர வர ஓவர் கற்பனை ஆகிப் போச்சு….  உலகத்துல எத்தனை கப்பல் இருக்குது…..அதுல உனக்கு சொந்தகாரங்கன்னதும் ரெண்டு பேரும் போய் ஒரே ஷிப்லதான் இருக்கப்போறங்க….’ என்று  மனது இடித்தும் கொண்டது….

‘திரும்பி வர்ற வரைக்கும் எந்த  காரணத்த கொண்டும் பேச முடியாதுன்னாளே ஷ்ருஷ்டி…… ஆனா அந்த அண்ணா பேசுறாங்க….. அப்ப கண்டிப்பா வேற வேற ஷிப்தான….’ என லாஜிகலாய் அறிவு ரீசனும் சொன்னது……

இப்போது சட்டென புரிகிறது இன்னொன்று….. ‘காசு செலவு செய்ய கூடாதுன்னுதான் ஷ்ருஷ்டி எந்த ஃபோர்ட்லயும் இறங்க மாட்டேன்னு  முடிவு செய்துறுப்பா…. அதனாலதான் அவளால பேச முடியாமலும் இருக்கும்….. மத்தபடி அதெப்படி கப்பல்னா பேசவே முடியாதுன்னு இருக்கும்….?’  உருக்கமும் இரக்கமும் குற்ற மனப்பான்பையுமாய் இவள்….

‘சாப்பாட்டுக்காவது ஒழுங்கா செலவு செய்றாளா….?’ மனம் குத்திய இந்த கேள்வியில் துள்ளி எழுந்து விட்டாள் நித்து……

‘இதக் கூட இவ்ளவு நாளா யோசிக்காம…..அப்படி என்ன சுயநலாவாதியா என்னை பத்தியே நினச்சு அழுதுகிட்டு கிடந்துருக்கேன்….!!!’

‘சும்மாவே வெறும் ஹாஸ்டல் சாப்பாடுல குச்சி பிராணி மாதிரி இருப்பா….’

எதுக்கும் பவன் வரவும் அந்த ஷிப்ல இருக்க அண்ணாட்ட ஷ்ருஷ்டி பத்தி கேட்டு பார்க்கலாமா? அப்படி அவங்க ஷிப்ல அவ இல்லைனா கூட இப்படி கப்பல்ல இருக்ற ஷ்ருஷ்டிட்ட நாமளா பேச எதாவது வழி இருக்கான்னு அந்த அண்ணாட்ட கேட்டுகனும்..

எப்படியும் சீக்கிரம் ஷ்ருஷ்டிட்ட பேசனும்… செலவப் பத்தில்லாம் நீ கவலப்படாத…. நல்லா சாப்ட்டு ஒழுங்கா ஃபோன் பண்ணு….இப்டி போய்ட்டு வர்ற வாய்ப்பெல்லாம் எல்லோருக்கும் கிடைக்காது…   பார்க்க முடிஞ்ச வரை நாலஞ்சு இடத்தை சுத்தி பார்த்துட்டு வான்னு சொல்லனும்….

கடை கண்டிப்பா பிக்கப் செய்துடும்னு நம்பிக்கை இருக்கு….. இவளால என்ன முடியுதோ அதை ஷ்ருஷ்டிக்கு செய்யனும்….’ கட கடவென இவள் மனக் குதிரை இப்படியாய் பாய….

நேரெதிராய் வெகு மெல்லமாய் விரிகின்றது ஒரு வினா இவள் உள்ள இடுக்குகளில்…..’கடை விஷயத்தில் அத்தனை நம்பிக்கையாமா இவளுக்கு?’ என்றது அது.

இதுவரை பரபரத்துக் கொண்டிருந்த மனவெளியில் சத்தமில்லா சாரல் பூவாளிகள்….

பனியாய் பெய்து படிகின்றது ஒரு நிர்மலம்…

காலையில் அவள் செய்து வைத்த ஜெபம் நியாபகம் வருகிறது அவளுக்கு…. பவன் விஷயத்திலும் கடை விஷயத்திலும் நிம்மதி வேணும்னு கேட்டாளே….

இரண்டிலுமே இன்னும் ப்ரச்சனை என எதுவும் தீரவில்லைதான்……. ஆனாலும் இவள் கேட்ட நிம்மதி இவளுக்கு வந்திருக்கிறதுதானே…..

“சோ நான் பேசுறது கேட்கிற அளவு பக்கத்துலதான் இருக்கீங்க?” இப்படியாய் நக்கலாய் வானத்தைப் பார்த்து வாய்விட்டு முனுமுனுத்தாள்….

பின் அவளுக்கே ஏதோ உதவிக்கு வர்றவங்கள ஓங்கி குத்துவது போல ஒரு உணர்வு வர….

“சாரி…” என முனங்கினாள்

ஒரு கையால் தன் முகத்தை அழுத்தமாய் மெல்ல துடைத்துக் கொண்டவள்….. “எனக்கு பழச எல்லாம் புரிஞ்சுக்க முடியல….சரி போகட்டும்னு அத விட்டுடனும்னா விட்டுடலாமான்னு தெரியல….. ஆனா  முன்னால இருக்ற விஷயங்கள அப்டி விடவே முடியாதுன்னு தெரியுதே…. இந்த சரக்க எப்படி திரும்பி வாங்க…..? பவன் விஷயத்தில் நான்…” என்றவள் அதற்கு மேல் எதுவும் நினைக்க கூட முடியாமல் அப்படியே தலையணையில் முகம் புதைத்து படுத்துவிட்டாள்…

பவனிடம் இவள் மனம் சரிவதை கடவுளிடம் நியாயப்படுத்த முடியுமா என்ன? அது அடிப்படையில் எத்தனை பெரிய குற்றமென்றாகும்? ஊர் என்ன சொல்லுது உலகம் என்ன நினைக்கிதுன்றதை  கண்டு கொள்ளாத ஒரு மனம் கூட இவளுக்கு உண்டாகிவிடுமாயிருக்கும்…… இப்பவே அதை அசட்டை செய்துதானே இந்த நாள தாண்டி இருக்கா?

ஆனா அவளோட மனசாட்சிய அவளால தாண்ட முடியாதே….. பவனை இவ விரும்புறது எந்த அடிப்படையிலுமே நியாயம் இல்லாத ஒன்னுதானே…. அதில் அவனுக்கு வேற எதோ வகையில் இது நடக்க கூடிய ஒன்னுன்றது போல தவறான நம்பிக்கையை தந்துட்டு இருக்கா…..

‘கடவுளே பவன் மேல உள்ள என்னோட எல்லா உணர்வுகளையும் இல்லாம போக செய்ங்க…..’ மனதிற்குள் மூர்க்கமாக சொல்லிக் கொண்டவள்

வலுக்கட்டாயமாக மனதை ஷ்ருஷ்டியை பற்றி நினைப்பதில் வைத்துக் கொண்டாள்… பவன் விஷயத்தை இனி இவ நினைக்கவே கூடாது….. அதுதான் சரியா இருக்கும்…. இப்படியாய் ஒரு முடிவுக்கும் வந்தாள்.

அழுதாள் என்றெல்லாம் இல்லை…… தூங்கிப் போனாளா தெரியவில்லை…..  சிறு வயதில் ஷ்ருஷ்டி ஹாஸ்டலில் இருந்து வரும் போது அவளோடு ஃபுட் பால் விளையாடிய காட்சிகள் மனதில் ஓடிக் கொண்டிருந்தன…. எட்டு ஒன்பதாம் வகுப்பு வரும் வரையுமே பாய் கட்தான் ஷ்ருஷ்டிக்கு ஹேர்ஸ்டைல்…..ஹாஸ்டல்ல அவளா தலை சீவிக்க முடியனுமே அதுக்காக….

ஆனா அந்த குட்டை முடிலயும் வீட்டுக்கு வந்தா பூ வைக்கனும்னு கேட்டு பூ வச்சுப்பா……எப்பவும் பட்டு பாவடை சட்டை போடனும்னு பிடிவாதம் பிடிப்பா….  ஹாஸ்ட்ல்ல அதெல்லாம் முடியாதுல்ல…அதனாலயா இருக்கும்…… ஆக பந்து விளையாடவும் பட்டு பாவடை சட்டைதான்….அவ மட்டுமல்ல இவளையும் போட சொல்லி ரெண்டு பேருமா பட்டு பாவடை போட்டு மழை முடிஞ்ச சகதியில் ஒரு தடவை புட்ஃபால் போல விளையாடி…. அதுவும் பெரிய பந்தெல்லாம் கிடையாது….டென்னிஃஸ் பால்  அளவு குட்டி….ரெண்டு பேருமா சேர்ந்து பக்கத்தில் இருந்த எந்த புதர்குள்ள உதச்சு விட்டாங்கன்னு தெரியல…. அடுத்து பந்த காணும்னு  ஷ்ருஷ்டி அந்த பாவடையோடயே உருண்டு புரண்டு அழுது….ப்ளூகலர் பாவடை மண் கலராகின்னு…. ஒரே ரணகளம்….

அப்போ அப்டி பந்துக்கா அழுதுட்டு இருந்தப்ப அந்த பக்கமா வந்த இவங்க மங்களம் மிஸ் விஷயம் என்னதுன்னு கேட்டு….தொலைச்சா தொலைச்ச இடத்துல  தேடனும்…..இப்டியா அழுவீங்கன்னு சொல்ல…… அது ஷ்ருஷ்டிக்கு எப்படி புரிஞ்சுதோ…. வீட்ல போய் இன்னொரு பந்த எடுத்துட்டு வந்து அந்த இடத்துல முன்னால எப்படில்லாம் பந்த உதச்சாளோ அது போல ஒவ்வொரு டைமும் கிக் பண்ணிட்டு பந்து எங்க போய் விழுதோ அங்கல்லாம் போய் முந்தின பந்தையும் தேடிச்சு…..உண்மையில் மூனாவது அட்டெம்ட்லயே பழைய பந்தையும் கண்டு பிடிச்சுட்டா….

அவ்ளவுதான் மங்களம் மிஸ்….ஒரே பெருமைதான் ஷ்ருஷ்டியப் பத்தி…. தொலைச்ச இடத்துல தொலைச்ச சாமான வச்சே தேடனும்னு… எவ்ளவு அழகா தெரிஞ்சிருக்கு இந்த குட்டிக்கு..’

இதற்குள் தூக்கத்திற்குள் நழுவி இருந்தாள் நித்து….. ‘தொலச்ச இடத்துல தொலைச்ச சாமான வச்சே தேடனும்னு…’ மீண்டும் ஒரு முறை வழுவலாய் நழுவியது அவள் மன முகவரியில்…

டிங்க்…..என ஒரு சத்தம்….

தூங்கிக் கொண்டிருந்தவள் சட்டென எழுந்து உட்கார்ந்துவிட்டாள்.

இத இவ செய்தா என்ன இப்போ? அவசர அவசரமாய்  வலக்கை கட்டை விரல் நகம் அவள் வாயில் வாதிக்கப்பட்டாலும்…..  சரக்கை எப்படியாக வெளியே கொண்டு வர என தெள்ளத் தெளிவாக திட்டம் பிறந்து விட்டது நித்துவுக்கு…..

இவளால போலீஸ்ட்ட போக முடியாதுன்னா….அந்த க்ளாடியசாலையும்தான் போக முடியாது….  இவ லஞ்சம் கொடுக்கனும்னா அவனும்தானே கொடுக்கனும்….அவன் மட்டும் அதுக்கு காசுக்கு எங்க போவான்?

நிச்சயமாய் இது மிக நல்லதிட்டம் தான்…..ஆனால் அப்படியெல்லாம் இவள் தனியாளாய் செய்துவிடுவாளாமா? இவள் என்று இல்லை எந்தப் பெண்ணுமே இதை தனியாக நின்று செய்து கொள்வாளா என தெரியவில்லை….

உதவிக்கு ஆள் கிடைக்கும் என்ற வகையில் எடுத்துக் கொள்ளலாம் தவறில்லை….அப்படி உதவிக்கு யாரைக் கேட்க முடியும் இவள்….

பவன் வரவும் கேட்டுப் பார்க்கலாமா? எப்படியும் இது பண வகை உதவி கிடையாதே…. ஒரு விதமாய் முடிவு செய்து கொண்டாள் நித்து.

பின் அந்த டிங்க் சத்தத்திற்கு காரணமான இவளது மொபைலை எடுத்துப் பார்த்தாள்.  அது மெசேஜ் வந்த சத்தம் என அவளுக்கு தெரியுமே.

இந்த நேரத்துல கூடவா ப்ரொமோஷனல் மெசேஜ் எல்லாம் வருது…? என்றபடி அதில் கண்ணோட்ட…..

I miss U என  வந்திருந்தது பவனின் எண்ணிலிருந்து…. அந்த செய்தியின் பொருள் என்ன, அதை அவன் அனுப்புவதின் நோக்கம் என்ன என்பது கூட அவளுக்கு அந்நொடியில் தோன்றவில்லை…..

சிலீரென இவள் மொத்த எல்லையும் சிறு நொடியில் சில்லிட்டு நிற்க…. பர பரவென ஒரு திரவ மின்னல் தேகம் எங்கும் கொட்டிப் போனது…..

அடுத்த பக்கம்