துளி தீ நீயாவாய் 19

முன் கதை சுருக்கம்

பவித்ராவும் போலீஸ் அதிகாரி ப்ரவியும் புதுமணத் தம்பதியராய் தனிக் குடித்தனம் வருகின்றனர்.  பவிக்கு ப்ரவியின் மீது கடும் கோபம் இருக்கிறது. அவன் சொல்வதெல்லாவற்றிற்கும் எதிரிடையாக மட்டுமே நடந்து கொள்கிறாள். அதனாலேயே பிடிவாதம் பிடித்து முன் பின் தெரியாத வேணி எனும் 12ம் வகுப்பு மாணவியை தன் வீட்டில் சேர்த்துக் கொள்கிறாள்.

அந்த வேணியை பெண் கேட்டு மறுநாளே வந்து நிற்கிறான்  பால்கனி என்பவன்.  பவி அவனை மறுக்க, வேணி அவனை வெறுக்க என தொடரும் நிகழ்வில்,  எப்படி திருடுகிறான் என சற்றும் யூகிக்க முடியாத ஒரு திருடன் வேறு ப்ரவியை திட்டமிட்டு  பின் தொடர்கிறான்.

இதில் ப்ரவியை சாருமதி என்ற பெண்ணுடன் இணைத்து தவறான புகைப்படம் ஒன்று வேணிக்கு வந்து சேர்கிறது. ப்ரவியை நம்பும் வேணி, இந்த புகைப்படம்  அவளது ஆதர்ஷ தம்பதியான பவி ப்ரவிக்குள் எதுவும் பிரச்சனையை கொண்டு வந்து விடக் கூடாதே என்று கவலை கொள்ளும் நேரத்தில், எதேச்சையாய் அவள் சாருமதியைக் காண நேரிட, அதே நேரம் அங்கு வரும் பால்கனியுடன் சேர்ந்து  சாருமதியின் மகள் மதுவைப் பற்றி அறிய நேரிடுகிறது வேணிக்கு.

சாருமதி மதுவை தவறான வகையில் பயன்படுத்திக் கொண்டிருப்பதை அறியும் வேணியும் பால்கனியும் மதுவை அதிலிருந்து விடுவிக்க திட்டமிட்டு களமிறங்க, சம்பந்தமே இல்லாமல் இப்போது அந்த திருடன் பால்கனியை  தனக்குப் பதிலாக போலீஸிடம் சரணடைய வைக்கப் போவதாக மிரட்டுகிறான்.

பால்கனியும் அந்த திருடனை வைத்தேதான் ப்ரவியை வேணியை இவனுக்கு மணம் முடித்து தர சம்மதிக்க வைக்க திட்டமிட்டிருக்கிறான் என்பதுதான் இந்த ஆடு புலி ஆட்டத்தின் முக்கிய புள்ளி.

யார் அந்த திருடன்? யார் அந்த பால்கனி? ப்ரவிக்கு எதிரான இவர்கள் காய் நகர்த்தல்கள் எவை மற்றும் ஏன்? இதெல்லாம் அறியும் முன் பவிக்கும் ப்ரவிக்கும் திருமணம் நடந்த விதம் இந்த அத்தியாயத்தில் பகிரப்படுகிறது.

துளி தீ நீயாவாய் 19

 

 

 

Advertisements