அன்பெனும் ஊஞ்சலிலே – Teaser

விரன் மணிவாசகம் இஸ் ட்ராவலிங் டூ இந்தியா. சற்று நேரத்திற்கு முன்பு தன் முகநூல் பக்கத்தில் தான் போட்ட பதிவிற்கு, விருப்பக் குறிகளும், இதய குறிகளும் குவிந்த வண்ணம் இருக்க,

அமெரிக்க ஐக்கிய நாடுகளின் கலிஃபோர்னியா மாநிலத்தில், சான்பிரான்சிஸ்கோ நகரத்தின் சர்வதேச விமான நிலையத்தில் இரவு நேரம் 8 மணியாகியிருக்க, விமானம் ஏறுவதற்காக காத்திருந்த நேரத்தில் தான், அந்த பதிவையும் போட்டுவிட்டு, அதற்கு வந்த பதில்களையும் நவிரன் பார்வையிட்டுக் கொண்டிருந்தான்.

 

முகநூலில் பழகியவர், பழக்கமில்லாதவர் என எத்தனையோ நபர்களின் பதில்கள் வந்தப்படி இருந்தாலும், அவன் எதிர்பார்த்த ஒரு நபரிடம் இருந்து பதிலோ, இல்லை குறுஞ்செய்தியோ, இல்லை அவன் பதிவிற்கு பிரத்யேகமான பதில் பதிவோ வராதது தான் அவனுக்கு வருத்தமாக இருந்தது. அவன் விமானம் ஏறுவதற்குள் அவன் மின்மினியிடம் இருந்து அவனுக்கான பதில் வந்துவிடுமா? என காத்திருந்தான்.

 

ஏனெனில் அவன் இப்போது இந்தியா செல்வதே அவளை காணத்தானே, ஆனால் மின்மினி என்ற பேரைத் தவிர அவளைப் பற்றி அவனுக்கு ஒன்றும் தெரியாது. அது கூட அவளின் உண்மை பெயர் தானா? அதுவும் தெரியாது. அவள் முகம் எப்படி இருக்கும்? என்று கூட அவன் அறியான்.

 

 

Advertisements