மை வரை உலகம்

மை வரை உலகம்

என்னதிது மை வரை உலகம்?

(பார்வையில் படும்) மேகம் வரையிலான உலகம்…
அப்படின்னு இதற்கு அர்த்தம்ங்க.

மலையும், அதில் நின்று பார்க்கும் போது காணக்கிடைக்கும் மேகமும் வரையிலான எல்லை கொண்ட நிலமே குறிஞ்சி எனக் கூற தொல்காப்பியர் பயன்படுத்திய சொற்றொடர் இது.

சரி அதை ஏன் இங்க சொல்லிட்டு இருக்கேனா?
இதை தலைப்பா வச்சு, என் கண்பார்வைக்கு கிடைத்த விஷயங்கள், அது எனக்கு உண்டு செய்த உலகம்/ வாழ்க்கை என்ற வகையில் ஒரு சிறு தொடர் எழுதலாம் என்றிருக்கிறேன்..

அந்த பார்வைக்கு கிடைத்த விஷயங்கள் என்பது சமீபத்தில் என் தம்பியோடு போன கார்பயணமாக இருக்கலாம், அல்லது இரண்டு தலைமுறைக்கு முன் உலக்கையும் திருவையும் எங்கள் வீடுகளில் எப்படி கையாளப்பட்டது என்பதாக இருக்கலாம், அல்லது இரு நூறு ஆண்டுகளுக்கு முன் எங்கள் ஊர்கள் உண்டான காரணங்களாகவும் இருக்கலாம்.

என்னது 200 வருஷத்துக்கு முன்ன உள்ளது பார்வையில் பட்டுதா? அப்ப நீ என்ன முன்னூறு வயசு பாட்டியா? அப்படின்னு நம்ம மைன்ட் வாய்ஸ் சவ்ண்ட் விடுது.

அதை நான் நேரடியாக பார்க்கவில்லை. ஆனால் அதை கேட்கிறேன், அதன் பின்விளைவுகள் என் வாழ்க்கையை நிர்ணயிக்கின்றன எனும்போது, அந்த தூர நிகழ்வுகளை மேகங்களாக்கி பதிவிட எண்ணுகிறேன்.

இது ஏன் பெண்கள் தினத்தில் துவங்குகிறேன் என்றால் பெண்கள் வாழ்க்கையை தொட்டே இந்தத் தொடர் சுழலும்.

அந்த வகையில் இது MY வரை உலகமும், கண் மை வரை உலகமும் கூடத்தான்

பெண்கள் தினம் என இரண்டு நாளிற்கு முன்னே ஞாபகம் வரத் துவங்கிவிட்டது. ஆனால் எந்த வருடமும் இல்லாமல் இந்த வருடம் இது நியாபகம் வரும் போதெல்லாம் மனம் பொங்கிப் பொங்கிப் போனது.

ரொம்ப பொங்குறப்ப செய்றதுக்கு ரெண்டு விஷயம் இருக்கும். ஒன்னு மௌனமாகிடுறது.

ஹான்?

ஆமா அப்படி ஒரு பாலிசி இருக்கு.
நம்ம முன்னால பயங்கரமான கடல். நம்மட்ட பயணப் பொருளா கால் தவிர எதுவும் இல்ல. பின்னால ஒரு மெகா சைஸ் எதிரி ராணுவம் துரத்திகிட்டே வந்து நம்ம சூழ்ந்துட்டு. அப்படின்ற நிலையில், அதாவது நாம தப்பிக்க வழியே இலைன்ற நிலையில் பைபிள்ல ஒரு வார்த்தை வரும். Donot fear, Be silentஅப்படின்னு கடவுள் சொல்வார். அடுத்து என்ன நடக்கும்னா, நாம கடல்ல நடந்து அடுத்த பக்கம் போய்டுவோம், ஆனா துரத்தின ஆர்மி கடல்ல முங்கி போய்டும்.

மாரல் என்னதுன்னா, நம்ம கைல இல்லாத விஷயங்கள்ல, வெள்ளம் தலைக்கு மேல போகுதுன்னா, அது அநியாய படைகளை அழிச்சு போடுறதுக்குத்தானே தவிர, நமக்கு கடல்லயும் வழி இருக்கும். நாம செய்ய வேண்டியதெல்லாம் மௌனமா இருக்கிறதுதான் எனபது.

நம்ம நாட்ல எனக்கு பெண்கள் நிலை இப்போதெல்லாம் அப்படி ஒரு பேனிக் வேவ் உண்டு செய்துதான்.

எந்த காலத்திலும் இல்லாத அளவு உலகில் வன்புணர்வில் இந்தியா முதல் நிலை. சானிடரி நாப்கின் பயன்படுத்த பள்ளிகளில் தடை, சதியை (உடன்கட்டை ஏறுதல்) பெருமை படுத்தி மெகா பட்ஜெட் திரைப்படம், குழந்தை திருமணத்தை சட்டப் பூர்வமாக்குவோம் என்ற வாக்குறுதி,
தனிக் குடித்தனம் போக வேண்டும் என பெண் கேட்டால் அவளுக்கு விவாகரத்து, ஆனால் ஆணும் ஆணும் திருமணம் செய்து கொள்ளலாம் என்ற அனுமதி, இப்படி பலவும் முன்னால கடலும் பின்னால ராணுவமுமாகவே உணர்வைத் தருகின்றன.

இதில் செய்ய இன்னொன்று இருக்கிறது. கடந்த காலங்களில் இது போன்ற எதிரிடை நிலைகளில் என்னவெல்லாம் நடந்து நிலை மாறியது என சிந்தித்துப் பார்ப்பது. அது பாசிடிவிடியை தரும். அப்ப மாறிச்சு, இப்பவும் மாறும் என்ற நம்பிக்கை அது.

இதில் ஒரு உள்காரணமும் இருக்குது. அப்ப நாம என்ன செயலை செய்தோமோ அதை இப்போதும் விட்டுவிடக் கூடாது என்ற புரிதலும், விட்டுவிட்டால் நமது நிலை என்னாகும் என்ற அறிதலும் கூடக் கிடைக்கும்.

இவைகளும் கூடத்தான் இந்த மை வரை உலகம்.

இதெல்லாம் பார்த்து ஏதோ பெரிய அட்வைஸ் தொடர் ஆரம்பிக்கிறேன்னு நினச்சுடாதீங்க… சின்ன சின்ன ஹிஸ்டாரிகல் பேக்டர்ஸோட சேர்ந்த நிஜ நிகழ்வுகள மட்டும் பதிஞ்சுட்டு போவேன்,

அதில் எதையாவது கத்துக்க நினைச்சா அது உங்க choice.

Advertisements

3 comments

Leave a Reply