புதினம் 2020 – The Contest

சுடச் சுட ஒரு சூப்பரான அறிவிப்போட வந்துட்டேன் நட்புகளே!

புதினம் 2020!!!

அது என்னங்க 2020?

20 20னா போட்டி, சும்மா சூடு பறக்க அடிச்சு ஆடுற போட்டிங்கோ!

2020 வருஷத்தின் ஆகச் சிறந்த பொழுது போக்கு நாவலையும், மிகத் தேர்ந்த வாசகரையும் தேடிப் பிடிக்கத்தான் இந்தப் போட்டி!

Yes, you are right!!

The best of bestest entertainer நாவலையும், ப்பா !! செம்ம என்னங்க இவங்கன்னு நாம அசர்ற மாதிரியான வாசகரையும் தெரிந்தெடுக்கப் போறோம்.

அத எப்படி செய்யப் போறோம்னு இங்க சொல்றேன்.

புதினம் என்ற தமிழ் வார்த்தைக்கும் Novel என்ற ஆங்கிலப் பதத்துக்கும் எப்போதும் இருப்பதுபோல் இல்லாமல் புதிதாய், புதுவிதமாய், இலக்கியவாதிகள் என்று இல்லாமல் எல்லா வித மக்களாலும் வாசித்து அனுபவிக்கக் கூடியதாய் இருக்கும் கதை எனப் பொருள்.

அப்படி புத்தம் புதிய கதையமைப்பில், வாசிக்க கையில் எடுத்தால் மக்கள் முடிக்காமல் கீழே வைக்க கூடாது அப்படி சுவாரஸ்யமாய், ஒரு சுக முடிவுக் கதையை,  நாவல் ஆசிரிய பெருந்தகைகள் தொடர் கதையாய் எழுதி எங்களுக்கு அனுப்புங்கள். annaasweetynovels.comல் அவை வெளியாகும். ஜூலை 20ல் துவங்கும் இது  நவம்பர் 20ல் முடிவு பெறும்.

நீங்கள் எழுத எழுதவே பதியலாம். முழுக் கதையோடுதான் துவங்க வேண்டும் என எதுவுமில்லை.

Word documentல் லதா ஃபான்டில் 9 புள்ளி அளவில் line space ஒன்றென வைத்து 150 பக்கத்திற்கு குறையாமல்  170 பக்கத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும் கதை.

தளத்தில் கதைகள் வந்து கொண்டிருக்கும்போதே  நடுவர் குழு ஒன்று அவைகளை வாசித்து மதிப்பிட்டுக் கொண்டு வரும். நவம்பர் இறுதியில் போட்டி முடியவும், அக் குழு அசத்தலான கதைகளை அடுத்தச் சுற்றுக்கு தேர்ந்தெடுக்கும். தேர்வாகும் கதைகளில் ஆகச் சிறந்த பொழுதுபோக்கு  கதையை செங்கோபுரம் பதிப்பகத்தின் அடுத்த நடுவர் குழு முடிவு செய்யும். நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.

அவைகள் 2020 தமிழர் திருநாளின் போதோ அல்லது புத்தக கண்காட்சியின் போதோ, எது முந்துகிறதோ அதில் செங்கோபுரம் பதிப்பகத்தாரால் புத்தகமாக வெளியாகும்.

இத்தனை தாண்டி இடம் பிடித்த நாவலுக்கு பரிசு இருக்க வேண்டுமே!

முதலிடம் பெறும் நாவலுக்கு ரூ20,000 பரிசுத் தொகை வழங்கப்படும்.

இரண்டாம் இடம் பெறும் நாவலுக்கு ரூ10,000 பரிசு.

களமாடிக் கனிந்த அனுபவமுள்ள எழுத்தாளர்கள் முதல் புத்தம் புதிதாய் இப்போதுதான் எழுதப் போகிறேன் என எண்ணுகிற இளங்கன்றுகள் வரை எல்லோரையும் வருக, வருக என வரவேற்கிறோம்.

எழுத்தாளர்கள் இன்னும் அறிந்துகொள்ள விரும்பும் தகவலுக்கும், போட்டியில் தங்கள் பெயரை பதிந்துகொள்வதற்கும் pinktowerpublications@gmail.com என்ற ஐடிக்கு புதினம்2020 எனத் தலைப்பிட்டு ஒரு மெயிலை தட்டிவிடுங்கள்.

வந்து விளையாடுங்க புதினம் 2020!!!

வாசகர் இல்லாமல் வாசிப்பா? அவர்கள் இல்லாமல் கதைகள்தான் உண்டா? ஆகச் சிறந்த கதைகள் இருக்குமிடத்தில் மிகத்தேர்ந்த  வாசகரும் இருந்துதானே ஆக வேண்டும். ஆக வாசகருக்கும் இருக்குது 20 20.

புதினம் 2020 ஆட்ட நாயகி/நாயகன் விருது

இங்கும் பரிசுத் தொகை ரூ20,000

அது மிகத் தேர்ந்த வாசகராக தெரிவாகும் இருவருக்கு தலா ரூ5,000 தொகை + ரூ 5000 மதிப்புள்ள செங்கோபுரம் பதிப்பகத்தின் ஒரு வருட சந்தாதாரர் நிலை வழங்கப்படும். (அதாவது 2020 வருடம் செங்கோபுரம் பதிப்பகத்திலிருந்து வெளியாகும் நாவல்கள் ஒவ்வொன்றும் உங்களுக்கு பரிசாக அனுப்பி வைக்கப்படும்.)

அந்த வாசகர் 20 20யில் கலந்து கொள்ள நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ரொம்பவும் சிம்பிள். annasweetynovels.com தளத்தில் பதிந்து கொள்ள வேண்டியது. அங்கு ஜூலை20 முதல் வரும் போட்டிக் கதைகள் அனைத்தையும் ஜாலியாய் படிக்க வேண்டியது.

முடிந்த வரை ஒவ்வொரு எப்பிக்கும் அங்கு கமென்ட் கொடுக்க வேண்டியது. (இதற்கு க்ஷ்பெஷல் பாய்ண்ட்ஸ் உண்டு)

கதை முடியும் போது கதைக்கான ஒரு ரிவ்யூ, அதாவது கதையில் உங்களுக்கு எது பிடித்தது, எதை இன்னும் நன்றாக செய்திருக்கலாம் என ஒரு க்யூட் விமர்சனம் கொடுக்க வேண்டியது. (எல்லா கதைக்கும் கொடுக்க வேண்டியது அவசியம்)

போட்டி முடிந்து வரும் வாக்கெடுப்பில் உங்களைப் பொறுத்த வரை எது முதல்  பரிசுக்கான கதை, எது இரண்டாம் பரிசுக்கான கதை ஏன்? என எங்களுக்குத் தெரிவிப்பது.

இவ்வளவுதாங்க.

ஒவ்வொரு கதையை பற்றிய, போட்டி முடிவு பற்றிய நடுவர் குழுவின் பார்வையோடு உங்கள் பார்வை ஒத்துப் போனாலும், அப்படி ஒத்துப் போகவில்லை, ஆனாலும் உங்கள் பார்வை மற்றும் ரசனை தனித்துவமாய் மனதை இழுப்பதாய் இருக்கிறதென நடுவர் குழு ரசித்தாலும் நீங்கதாங்க மிகத் தேர்ந்த வாசகர்.

நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.

செய்றத பெஸ்ட்டா செய்ங்க, அடிச்சு ஆடுங்க, நீங்கதான் புதினம் 20 20 யின் ஆட்ட நாயகராக இருக்கக் கூடும்.

Lets Play

Advertisements

8 comments

 1. போட்டியே அருமையாக உள்ளது. வாசகர்களுக்கும் பரிசு என்பது புதுமையான ஒன்று. நானும் கலந்துக் கொள்ள முயற்சி செய்கிறேன். 👌👌👌

  1. மிக்க நன்றி! மகிழ்வுடன் உங்களை போட்டிக்கு வரவேற்கிறோம்

 2. மிக்க நன்றி. வாசகர் போட்டியில் கலந்துக் கொண்டோர் பட்டியலையும் வெளியிடுங்கள். தெரிந்துக்கொள்ளத்தான். நன்றி

 3. புதினம் 2020 போட்டிக்கான கதைகளில் ஒருசிலவற்றை பார்க்கவும் படிக்கவும் இயலவில்லை. அனைத்து கதைகளையும் படிக்க வெளியிடவும். நன்றி

  1. தொடங்கப்பட்ட கதைகள் எல்லாமே வாசிக்க கொடுக்கப்பட்டிருக்கிறது….சில கதைகள் தலைப்பு பதிவாகி இருக்கிறது, கதைகள் இன்னும் வந்து சேரவில்லை என்பதால் அறிவிப்போடு மட்டுமாய் இருக்கிறது. நன்றி

 4. புதினம் 20 20 போட்டிக்கான கதைகளை படிக்கும் வாசகர்களில் நானும் ஒருவன் . வாசகர் 20 20 ல் என் கருத்துக்களை பதிவுட்டுக் கொண்டிருக்கிறேன் .

  எனக்கும் புதினம் 2020 போட்டியில் கலந்துக் கொள்ள விருப்பம். பதிவு செய்வதற்கான நாட்கள் முடிந்து விட்டனவா. தெரிவிக்கவும்

  நான் ஏற்கனவே எழுதிய சிறுகதையை புதினமாக மாற்றி எழுதி வருகிறேன். அனுமதிப்பீர்கள் என்றால் நானும் பதிவு செய்ய தயாராக உள்ளேன். நன்றி

Leave a Reply