அன்பெனும் ஊஞ்சலிலே – சித்ரா .V

புனர்வி இப்படி செய்வாள் என எதிர்பார்க்காத ராகமயா, அவளது செயலில் அதிர்ச்சியாகி, “ஹே புவி என்னோட மொபைலை கொடு..” என்று எழுந்து சென்று வாங்க முற்பட்டாள்.

 

“அப்படி என்னத்தான் இந்த மொபைலை பார்த்து யோசிச்சிட்டு இருக்க.. நானும் கொஞ்ச நாளா பார்க்கிறேன், நீ சரியே இல்ல.. அப்பப்போ மொபைலை வச்சிக்கிட்டு இப்படி ஏதாவது யோசனைக்கு போயிட்ற.. அப்படி என்னத்தான் இருக்கு மொபைலில்..” என்று சொல்லி அலைபேசியை உயிர்ப்பிக்க போக,

 

அதற்குள் அவள் கையில் இருந்த அலைபேசியை ராகமயா பிடுங்கி, “இந்த காலத்தில் அதுவும் காலேஜ் கேர்ள் அப்படி என்ன மொபைலை பார்க்கிறன்னு கேக்கறது அதிசயம் தான், இப்படி வெளிய போய் கேட்டு வைக்காத சிரிப்பாங்க.. நான் தான் ஃபேஸ்புக்ல ஒரு கவிதை க்ரூப்ல சேர்ந்திருக்கேன்.. அங்க கவிதை பதிவிடுவேன்னு உனக்கு தெரியாதா?

 

காலையில் அங்க ஒருத்தரோட பதிவை பார்த்தேன், அதுக்கு பதிலுக்கு நான் ஒரு கவிதையை பதிவிட்டேன். அந்த கவிதையை பத்தி யோசிச்சிட்டு இருந்தேன்..” என்றாள்.

Advertisements