ஹாப்பி பெர்த் டே டூ யூ

ரிதா ரிது ரி என்றெல்லாம் இஷ்டபடி அழைக்கப்படும் மனுரிதாவுக்கு விழிப்பு வந்த போது அறைக்கு வெளியே கட முசா சத்தம். ஆமா பெரிசாவும் இல்லாம சிறுசாவும் இல்லமா…..என்னதுன்னு முடிவு செய்ய முடியாம ஒரு மார்க்கமா இருந்துச்சு சவ்ண்ட்….

கழட்டாம கைல போட்டுட்டே தூங்கிட்ட வாட்சை திருப்பி டைம் பார்த்தாள் ரிதா. இரவு 12 ஐ நெருங்கிக் கொண்டு இருந்தது…. என்னமோ டயர்டா இருக்குதுன்னு இன்னைக்கு உலக அதிசயாமா சீக்கிரம் தூங்கினா யாரோ ஒரு எலி எழுப்பி விட்டுடே…

ஹாஸ்டலில் தன் அறையைவிட்டு வெளியில் வந்து பார்த்தாள் அவள். ஓ மை காட்.!!!!! அந்த பெரிய ஹாலில் HAPPY BIRTH DAY TO YOU என  ஏற்றப்பட்ட  லேவண்டர் நிற மெழுகு வர்த்திகளால் எழுதப்பட்டிருந்தது…. அருகில் ஒரு பெரிய பூங்கொத்து….. கூடவே மூன்றடி நீளம் இரண்டடி அகலத்தில் ஒரு பெர்த் டே கார்ட்…

இவளுக்குத்தான் நாளை பிறந்த நாள்…அதாவது இன்னும் சில நிமிடங்களில்….. இவளுக்காக யார் இதை செய்ய முடியும்??? வெளியே கேட் திறக்கும் சத்தம் கேட்க….அவசர அவசரமாக பால்கனி வழியாய் எட்டிப் பார்த்தாள்….போய்க்கொண்டிருக்கும் ஒருவனது பின் உருவம்தான் தெரிகிறது….

ஹாஸ்டல் வாசலில் நின்றிருந்த  காரில் ஏறும் போது சிதறிய சின்ன வெளிச்சத்தில் அவன் பக்கவாட்டு முகம் பார்வையில் படுகிறது…..யார் இவன்???

யாரா இருந்தா என்ன? பொறுக்கி!!! கேர்ள்ஸ் ஹாஸ்டலுக்குள்ள திருட்டுத்தனமா வந்துட்டு போகனும்னா கண்டிப்பா பொறுக்கி தான்…. அதுவும் இத்தனை மணிக்குன்னா மகாபொறுக்கி!!!

ஆனா கிளம்பி போயேவிட்டவனை என்ன செய்யவாம்….? அவன் பூவையும் கார்டையும் திரும்பிக் கூட பாராமல் போனாள் அவள். ஏதோ அவளால முடிஞ்சது…

மறுநாள் அதிகாலையில் எழும்பும் போது இந்த நிகழ்ச்சியை அவள் நினைக்க கூட விரும்பவில்லை….பிறந்தநாள் அல்லவா…மகா உற்சாகமாய் ஆரம்பித்தாள் நாளை….. காலையில் முதல் வேலையாக பக்கத்திலிருந்த சர்ச்சுக்கு போனாள்….

அங்கிருந்த ப்ரேயர் ஹாலில் போய் கண் மூடி ஜெபித்து விட்டு எழும் போது பார்த்தால் அவளுக்கு அடுத்திருந்த சேரில் ஒரு வைட் அன்ட் ரெட் கலர் பிறந்தநாள் கிஃப்ட் ரேப்பரால் அழகாய் சுற்றப்பட்டிருந்த ஒரு பார்சல்….

சுர் சுர் என ஏற திரும்பிப் பார்த்தால்….அவன் தான்…..அந்த சேருக்கு அடுத்து தரையில் முழந்தாளிட்டு கண் மூடி ஆழ்ந்த ஜெபத்தில் இருந்தான்…..அது ஜெபமா நடிப்பா கடவுளுக்குத்தான் வெளிச்சம்…..

ஆனால் ஜெபிக்கும் ஒருவனை இழுத்துப் பிடித்து நாலு அறை வைக்க இவளுக்குத்தான் மனம் வரவில்லை….. பிறந்த நாள் அதுவுமா செய்ற முத வேலை இதாவா இருக்கனும்…? எழுந்த கோபம் எரிச்சல் எல்லாவற்றையும் அடக்கிக் கொண்டு விடு விடுவென வேகமாக வந்துவிட்டாள்….

அன்று ஆஃபீஸ் போய் அத்தனை பேரையும் பார்க்கவும் இந்த கடுப்பெல்லாம் மறைய மதியம் லன்சுக்கு ஃப்ரெண்ட்ஸுடன் அந்த ஹோட்டலுக்கு போன போது அவள் முழு மகிழ்ச்சியில் தான் இருந்தாள். ஆனால் அங்கும் அவனைக் காணும் வரைதான்.

முதல்ல எல்லாம் நல்லாதான் போச்சு….இவங்க கேங் எல்லோருமா அங்க இவங்களை ரிசீவ் செய்த வெய்ட்டர் காமிச்ச டேபிள்ள செட் ஆகி….ஆர்டர் குடுத்து அரட்டை அடிச்சுன்னு……எல்லாமே எஞ்சாய்மென்ட்தான்….

ஆனால் கடைசியில் பில்லை கேட்கும்போது …”இங்க இருக்கிற 5 டேபிள்ஸும் பெர்த்டே செலிப்ரேஷனுக்காக புக் செய்த டேபிள் மேம்… புக் செய்தவங்களே பில் பே செய்துடுவாங்க… “ என்ற பதில் கிடைக்கவும் பத்திக் கொண்டு வந்தது எரிச்சல் இவளுக்கு….

யாராய் இருக்கும் என பார்க்கும் முன்னமே யூகிக்க முடிந்தது….. அந்த அவன் தான் சற்று தள்ளி இருந்த டேபிளில் இருந்து எழுந்து நின்றான்…..

“இது எங்க பில்….” என இவர்களுக்கு எவ்ளவு பில் வரும் என யூகம் இருந்ததோ அந்த அளவு பணத்தை அங்கே எடுத்து வைத்துவிட்டு வெளியே வந்துவிட்டாள் ரிதா…. பப்ளிக் ப்ளேஸ்ல எதுக்கு சீன்….. ஆனா இருக்கு இவனுக்கு…..  அக்கா வீட்ல சொல்லி எதுக்கும் இவன கொஞ்சம் மிரட்டி வைக்கிறது நல்லது…. எவ்ளவு தூரம் இவளை ஃபாலோ பண்றான்…என்ன செய்யமாட்டான்னு என்ன நிச்சயம்???

மாலை ஆஃபீஸில் பெர்மிஷன் எடுத்து சற்று சீக்கிரமாகவே அந்த குழந்தைகள் காப்பகத்திற்கு போய் சேர்ந்தாள்…. வழக்கமா வீக் என்ட்ஸில் இங்க அவ குழந்தைகளுக்கு படிப்பில் ஹெல்ப் செய்ய வர்றது வழக்கம். இன்னைக்கு ஸ்வீட் கொடுக்க வந்திருக்கிறாள்….

குட்டீஸ் எல்லாம் இவளைப் பார்க்கவும் ஏக குஷி….. ஸ்வீட் கொடுத்து, கொஞ்சி, கதை பேசி, கம்ளெயிண்ட் கேட்டு என எல்லாம் முடிந்து கிளம்ப நினைக்கையில் வழக்கம் போல் மனம் நிறைந்து இருந்தது…

அந்த காப்பகத்தை நடத்தும் ஜோதி அக்கா இவளிடமாக வந்தவர் “ரிதா இன்னைக்கு  டின்னர் வரையும் இருந்துட்டு போயேன்மா…. சரோஜா அக்க இன்னைக்கு லீவு…..யாரோ புதுசா ஒருத்தர் பெர்த் டே செலிப்ரேஷனுக்காக இன்னைக்கு நைட் பிள்ளைங்களுக்கு சாப்பாடு கொண்டு வர்றதா சொல்லியிருக்கார்மா…. பரிமாற நீயும் இருந்த ஹெல்ப்ஃபுல்லா இருக்கும்….பிள்ளைங்களும் சந்தோஷப் படுவாங்க….”

அத்யாவசிய தேவை என்றாலொழிய அக்கா இப்படி வாய்விட்டு கேட்டுவிடமாட்டார்கள் என இவளுக்குத் தெரியும்…..அதனால் மறுக்க முடியாமல் சம்மதித்தாலும்…..பிள்ளைகளோட சாப்பாடாச்சே…..சரி என்றுவிட்டாலும்….வருவது யாராக இருக்கும் என இப்போதே இவளுக்கு தெரிந்துவிட்டது…..

‘அந்த பொறுக்கியாதான் இருக்கும்…. வரட்டும் எதாவது இவட்ட அவன் பேச ட்ரை பண்ணட்டும் அவன் பல்ல பேத்து கைல கொடுக்கேன்….’

‘சே அவசரத்துக்கு பக்கத்துல ஒரு மெடிகல் ஷாப் கூட இல்லாம போச்சே …அவன் சாப்ட்ல நாலு பேதி மாத்ரை வாங்கி போட்டா என்ன….? ஹே அவன் பல்லுதான உனக்கு உடையனும் பேசாம சாப்பாட்ல ஒரு குத்து மணல கலந்துடலாம்……. முதல் வாய் வாய்ல வச்சா போதுமே பல்லை செமயா பதம் பார்க்குமே…..மனம் கன்னா பின்ன என கொதிக்க…….ப்ச் அவன் எவ்ளவு கேடு கெட்டவனாவும் இருந்துட்டு போட்டும்……..நான்  சாப்பாட்ல மண்ணை போடுற ஆளா…. அது சரி கிடையாது….. வேற எதாவது வச்சு செய்யனும்…. அக்கா வீட்ல சொல்லி கவனிக்க சொல்றப்ப நல்லாவே கவனிக்க சொல்லனும்….இவள் எரிந்து கொண்டிருக்க……

இப்போது வந்த அவனோ வந்ததும் இவள் முகம் பார்த்ததோடு சரி….. சின்சியர் சிகாமணியாய் சேர்ந்து சாப்பாடு பரிமாறினான்….சாப்பிட்டான்…..சென்றுவிட்டான்….

அதுக்கு முன்னால எல்லோருக்கும் பரிமாறியதும் “நீங்களும் சாப்டுங்க…ப்ளீஸ்..” என்று இவளை கடுப்பேத்த மட்டும் செய்தான். அத்தனை குட்டீஸ் முன்னால அவன் சொல்லாவிட்டாலும் கூட இவள் சாப்பிட்டுத்தான் ஆக வேண்டும்…. இல்லைனா அத்தனை குட்டீஸ்கும் இவ காரணம் சொல்ல வேண்டி இருக்குமே….

அவன் இவளை சாப்பிட சொல்லவும்….இவளால் முடிந்த அளவு முறைத்தாள்…..அவன் அவசரமாய் அடுத்த பக்கம் போய்விட்டான். அதன் பின் இவள் இருந்த திசைக்கு கூட வரவில்லை…. அது…அந்த பயம் இருக்கட்டும்…!!! கொஞ்சம் திருப்தியாய் இருந்தது ரிதாவிற்கு..

ஆனால் அடுத்த கேள்வி ஆட்டமெட்டிகாய் இவளுக்குள்….இதுக்கு எதுக்கு இவன் இவளை இப்டி துரத்தனுமாம்?…..

சாப்பாடு முடிந்து இவள் தன் ஸ்கூட்டியில் கிளம்ப அந்த ஆளற்ற சாலையில் இவள் பின்னால் ஒரு கார்….அவனோட கார்தான்…. அப்பவே கிளம்பிப் போனானே….இவ்ளவு நேரம் இங்க இவளுக்காக வெயிட் செய்துறுக்கான் …..

இவள் வேகம் குறைத்தால் அவனும் குறைத்தான்….இவள் கூட்டினால் அவனும் கூட்டினான்….சர்வ நிச்சயமா இவளை ஃபாலோ பண்றான்….

கட கடவென யோசித்தாள் ரிதா….இந்த தெருவில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஆள் நடமாட்டம் மருந்துக்கு கூட இருக்காது…அந்த இத்தில் இவன் இவளை என்ன வேண்டுமானாலும் செய்யலாமே…. இப்ப வர்ற நியூசெல்லாம் பார்க்கிறப்ப…..இது ரிஸ்க்….

வேக வேகமாக தன் ஆஃபீஸ் ஃப்ரெண்ட் அண்ட் கொலீக்‌ சஞ்சயை அழைத்தாள்….. இடத்தை சொல்லி…”வர்றப்ப நாலஞ்சு பேரா வாங்க…” என முடித்தாள். அடுத்த பத்தாம் நிமிடம் இவளுக்கு எதிர் கொண்டு சஞ்சய் அண்ட் கோ வந்து சேர்ந்து விட்டது….. மூன்று பைக்கில் ஆறு பேர்….

வந்தவர்கள் இவளுக்கு முன்னும் பின்னுமாய் பைக்கில் யூ டர்ன் எடுத்து இவள் ஸ்கூட்டியை ஒட்டியே நகர…. இப்போது சட்டென வேகமெடுத்த அவன் கார் இவர்களுக்கு முன்னாக சென்று சட்டென ரோட்டின் குறுக்காக திரும்பி யாரும் நகர முடியா வண்ணம் வழி அடைத்து நின்றது…. இவளோடு சேர்ந்து எல்லோரும் வண்டியை நிறுத்த…..

அதற்குள் கதவை திறந்து இறங்கி ஓடி வந்தான் அவன்…. அதுவும் மிக உரிமையாய் இவளுக்கு வெகு அருகில் வந்து நின்று கொண்டு “எனி ப்ராப்ளம் ரிதா?” என்றவன் கண்கள் ஆறு பேரையும் அடிச்சு துவைக்கப் போகும் ஆக்க்ஷன் ஹீரோ ரேஞ்சில் அளவிட்டுக் கொண்டிருந்தது….

இவள் பேர் ஹோம்ல வச்சு அவனுக்கு தெரிஞ்சிருக்குமா இருக்கும்.

‘டேய் என்னடா இது சீன மாத்றியே….’ என இவள் நினைத்து முடிக்கும் முன் அதை கேட்டு வைத்தான் டேனி…. அவன் கராத்தேல ப்ளாக் பெல்ட்…

இவள் அடுத்து என்ன என நிதானிக்கும் முன் அந்த பெர்த்டே விஷ் ப்ராந்து  முகத்தில் வைத்தான் ஓங்கி ஒரு குத்து இவளது ஆஃபீஸ் ப்ரவீண்…

இவளுக்கே கொஞ்சம் ஒரு மாதிரி ஆகிட்டு….. என்ன இருந்தாலும் இப்ப வரை அவன் அடி வாங்குற அளவுக்கு என்னமும் செய்துடலையே என்ற ஒரு பதற்றம்….ஆனால் அவனோ அதற்குள் சுதாரித்தவன் தன் முகத்திற்கு நேராக வந்த ப்ரவீண் கையை கண்ணிமைக்கும் நேரத்திற்குள் பிடித்து ஒரு சுழற்று…..

ப்ரவீண் கை அவனது முதுகோடு சுருண்டு ப்ராந்து கைக்குள் அடங்கி இருக்க….

அடுத்த கணம் எப்படி எடுத்தான்  என புரியவில்லை….ப்ரவீன் நெற்றியில் உட்கார்ந்திருந்தது ஒரு பிஸ்டல்…  “ரிதா நீ என் பின்னால வா…” என கர்ஜித்துக் கொண்டிருந்தான் அவன்….

அச்சோ…நிலைமை சீரியஸாகும் விதம் புரிய….அதோட அந்த ப்ராந்துவின் இன்டென்ஷனும் தெரிய…

“சார் சார்….அவன் என் ஃப்ரெண்ட் சார்….எனக்கு ஹெல்ப் பண்ணதான் வந்திருக்காங்க…” என ரிதா அத்தனை ஐஸி சாரோடு சரண்டர்….

பின்ன ப்ராந்து கைல பிஸ்டல் இருக்கே…. ஒருவேளை போலீஸோ?

இப்போது திரும்பி இவள் முகம் பார்த்தான்… நிஜம் தானா என்ற வகை பார்வை அது….

“எல்லோரும் என் கொலீக்ஸ்….இந்த ரோட்ல இத்தனை மணிக்கு தனியா வரவும்…. நான் தான் கூப்டேன்…” உனக்கு பயந்துதான் என சொல்லவா வேண்டாமா என யோசித்து அதனால் தயங்கி தயங்கி கடைசியில் அதை டெலிட் செய்து விம்மாய் விளக்கினாள்….

“ஓ..சாரி….வெரி சாரி….” ப்ராந்து முகத்தில் சின்னதாய் புன்னகை…. ப்ரவீண் கை விடுதலை ஆகி இருக்க…. பிஸ்டல் புறப்பட்ட இடத்திற்கே திரும்பி இருந்தது…

“ஹாய்….ஐ’ம் ரூபன்” சற்று குனிந்து ஒரு வகையில் பவ்யமாய் மறுவகையில் நட்பாய் இன்னொரு ஆங்கிளில் கம்பீரமாய் கை குலுக்கினான்….

“ இங்க இருக்கிற அந்த ஹோம்க்கு சாப்பாடு கொண்டு வந்தேன்…தப்பு என் பேர்லதான்…. யோசிக்காம செர்வ் செய்ய யாரையும் கூப்டாம வந்துட்டேன்…..உங்க ரிதா மேடம் தான் ஹெல்ப் பண்ணாங்க…. என்னால தான் அவங்க லேட்டா கிளம்ப வேண்டியதாகிட்டா…. இந்த ரோட்ல அவங்க தனியா போக வேண்டி இருக்குமேன்னு கூட வந்தேன்….சாரி உங்களை தப்பா நினச்சுட்டேன்….” வரிசையாய் எல்லாரோடும் கை குலுக்கி முடிக்கும் போது சொல்லி முடித்திருந்தான்….

ரிதாவுக்கு மட்டும் நோ ஹேண்ட் ஷேக்….. நல்லது… என நினைத்துக் கொண்டாள் இவள்.

“சாரி நாங்களும் தப்பா நினச்சுகிட்டோம் ரூபன் சார்…” ரிதா டீம் இப்போ ஈஈஈஈஈஈஈஈஈ

அடுத்து இவர்கள் கிளம்பி வந்துவிட்டார்கள்.

ரவு ரிதாவுக்கு ஃபோன்…. AK  என்றது ஸ்க்ரீன்….அவளது அக்கா அனுக்ரகா….

“Happy Birth Day  டி பெரிய மனுஷி……வீட்டுக்கு வான்னா வந்துடாத….ஃபோன் செய்தா எடுத்துடாத…” என ஆரம்பித்தாள் அவள்….அக்கா காலை காலையிலிருந்து இவள் மிஸ்ஸிங்…..இவ திருப்பி கூப்டுறப்பல்லாம் அவ நம்பர் பிஸி…..

“சாரி சின்ன பொண்ணு…. என் செல்ல துப்பாக்கி காலை வேணும்னே மிஃஸ் செய்வனா….நான் கூப்டப்பல்லாம் அத்தான்ட்ட நீ அராசிஸ்  அவிச்சு வறுத்துட்டு இருந்தியா…” இவள் தொடர

“ஏய் வாலு….உங்க அத்தான் என்ட்ட கடலை போடுற ஆளாடி…. அவருக்கு அதுக்குத்தான் நேரமிருக்காமா….வர வர உன் வாய் நீண்டுகிட்டே போகுது…..யார என்ன பேசனும்னு இல்ல…” என ரிதா எதிர் பார்த்தமாதிரியே அக்கா கூலாகிநாலும்

“சரி பேச்சை மாத்தாத…..நாளைக்கு நைட் டின்னர் பார்பிக்யூ நேஷன்ல.. வந்து சேர்ந்திடு “ என மீண்டுமாய் ஒரு அதட்டல் தொனிக்கு வந்திருந்தாள்…

அதாவது ரிதா வரமாட்டேன்னு சொல்லிடுவாளோ என அக்காவுக்கு பயம்… அதனால் இவள் மறுக்க வாய்ப்பு தராமல் மிரட்டினாள்.

இன்றைய அலைச்சலுக்கு இவளுக்கு நாளை நன்றாக படுத்து தூங்க வேண்டும் போல் இருக்கிறதுதான்….ஆனால் பாவம் அக்கா என்றுமிருக்கிறது……

சென்னையிலதான் அனுக்ரகா வீடும்…. அதுவும் மாமனார் மாமியார் என கூட்டு குடும்பம் கூட இல்லை….அக்கா அத்தான் ஆதவ் அண்ட் ரெண்டு குட்டீஸ் அவ்வளவே…. அந்த அத்தான் இவளுக்கு சொந்த அண்ணா மாதிரிதான்…அப்டித்தான் இப்ப வரை இவள உணர வச்சுறுக்காங்க……ஆனாலும் ஏனோ இவளுக்கு அங்கு தங்கி இருக்க விருப்பம் இல்லை…

சென்னையில் வேலை என்றானதும்….ஹாஸ்டல்தான் என மொட்டை பிடிவாதமாய் முடித்துவிட்டாள் ரிதா…. அதை அவள் அக்கா அப்பப்ப சொல்லி புலம்புவாள்….

அதோட இன்னைக்கு  அக்கா வீட்டிலிருந்து ஆஃபீஸ் கிளம்பி வர கஷ்டம் என அங்கு போகவில்லை இவள்….நாளை சனிக் கிழமை….ஆஃப்…. இப்பவும் வரலைனு சொல்ல இவளுக்கு மனமில்லை….

“சரி வர்றேன் துப்பாக்கி…. ” சம்மதம் சொன்னாள் ரிதா…

மறு நாள் இரவு ஹோட்டலில் ஆரம்பித்த  சில நிமிடங்களிலிலேயே டாபிக் இவளுக்கு பிடிக்காத இடத்துக்கு வந்திருந்தது……மேரேஜ்….

“நீ ஏன் ரிதா கல்யாணம்னா இவ்ளவு கடி ஆகுற……நியாப்படி பையன் தான பதறனும்….. பாரு பன்னென்டு மணிக்கு வந்தாலும் பையனுக்கும் பதி நாதருக்கும் பானிப்பட் போர் வெடிச்சுடக் கூடாதுன்ற பயத்துல பம்மி வந்து கதவ திறக்கிற மம்மிய விட்டுட்டு… ஒன்போதரைக்கு வீட்டுக்கு வந்தாலும் ஒரு மணி நேரம் மூஞ்ச தூக்கி வச்சு காயப்போட்டு…எந்த டிசைன்ல எப்டி கால்ல விழுந்தாலும் கவுர மாட்டேன்னு கம்ளய்ண்ட ஓபன் ஸ்டேடஸ்லயே வச்சுறுக்கப் போற ஒய்ஃப்ட்ட வந்து அவந்தான மாட்றான்….” அத்தான் ஆதவ் டாபிக்கை கிண்டலாகவே நகர்த்த

அக்காவோ முறைத்தாள்.

“அதோட பசி வந்தா சாப்டனும்ன்ற நிலமை போய் பசி வந்தா சமைக்கனும்ன்ற நிலமை வேற….” ஆதவ் தொடர அக்கா இப்போது பாய்ந்தாள்…

“என்னது சண்டே ஒரு நாள் சமைக்கிறதுக்கு இப்டி ஒரு அர்த்தமா…..அப்ப மீதி ஆறு நாள் நான் சமைக்கனே….…”

“ஏன்டி அப்போ நேத்து நைட் சண்டேவா…? தெரியாத்தனமா நாளைக்கு தான் சண்டேன்னு நினச்சு ஆஃபீஸ்க்கு வேற லீவ் விட்றுக்கேன்டி”

“அது….”  அக்கா சற்று திக்கினாள்….”நேத்து பிள்ளைங்களுக்கு எக்‌ஸாமுக்கு படிக்க வேண்டி இருந்துச்சு….நான் அவங்கள படிக்க வச்சுட்டு இருந்தேன்ல…” அக்கா தாழ்வாய் ஆரம்பித்து கெத்தாவே முடித்தாள்.

“இப்பல்லாம் வரவர தினமும் பரிச்சைனு சொல்றமா நீ…”

“ஆமா….நான் என்னபா செய்றது…. ஃபார்மேட்டிவ் ஒன் டூவ கூட குமுலேடிவ்னு சொல்லி மூனு டைம்மா பிரிச்சு வைக்காங்க….இப்பலாம் தினமுமே எக்ஸாம்தான்….பாவம் பிள்ளைங்க….” அக்கா இப்படித்தன் பிள்ளைங்க படிப்பை பத்தி பேச தொடங்கிவிட்டால் புலம்பலுக்கு போய் சேம் சைட் கோல் ஷேமமா போடுவா…. இத்தனைக்கும் ட்வின்ஸ் ரெண்டும் படிப்பது எல்கேஜி…

அத்தான் இப்போது ரிதாவிடம் பாரு என்பது போல் தலை அசைக்க…ரிதா சிரித்துக் கொண்டிருந்தாள்…அத்தானும் தான்….

அக்காதான் சிரிப்பதாய் இல்லை…” ஏன்பா நானாபா உங்கள சமைக்க சொல்றேன்….?” அவள் முகம் விழுந்து போய் இருந்தது…

“ நீ கிட்சனுக்கு வந்துட்டா அவன் ரெண்டு பேரும் விளையாட ஆரம்பிச்சுறுதான்….மொத்ததுல படுக்க லேட் ஆகிடுது….நீ அவனுங்கள பாருன்னு நீங்க தான சொல்லிட்டு டிஃபன் ரெடி செய்ய  போனீங்க…” அக்காதான்.

“ஏய் லூசு எல்லாத்தையும் சீரியஸாதான் எடுப்பியா…?” அக்கா தலையில் கை வைத்து சின்னதாய் ஒரு ஆட்டு அத்தான் வேலை.

“உனக்கு அவங்க பிள்ளைங்கன்னா எனக்கு இல்லையா….அவங்க நேரத்துக்கு தூங்கனும்னு எனக்கும் இருக்கும்ல…” என்ற வார்த்தையில் அக்காவை முழு சமாதானத்துக்கு கூட்டிப் போய்விட்டு

இப்போது சீரியஃஸாகவே ரிதாவை பார்த்துக் கேட்டான் ஆதவ்

“ஏன் ரிதா நான் உன் அக்காவ நல்லா ட்ரீட் பண்ணலைனு நினைக்கியோ…?”

இந்த கேள்வியை இவள் எதிர் பார்த்திருக்கவில்லை… சற்று அதிர்ந்து போய் பார்த்தாள்….

“இல்ல கல்யாண பேச்சை எடுத்தாலே காயுறியே அதான் கேட்டேன்… அக்கா மாட்டின மாதிரி  நாமளும் மாட்டிப்பமோன்னு நினச்சுட்டியோ….?”

அவளது அத்தானை மாதிரி அக்காவைப் பார்த்துக்கொள்ள ஆண்டவனால் தான் முடியுமாய் இருக்கலாம்… தன் குடும்பத்தை அச்சாக கொண்டு சுழலும் குணம் அத்தானுடையது…

என்னவென சொல்வதென்று தெரியாமல் ரிதா திருக்க திருக்க முழித்துக் கொண்டிருக்கும்போது

“ஹாய்டா ஹாய் அண்ணி “ என்றபடி தரிசனம் கொடுத்தது சாத்சாத் அந்த பிஸ்டல் ப்ராந்து ரூபனேதான்…

இங்கயுமா….? என இவள் முறைக்க…. அவனும் ஒரு அம்சமாய் இவளை லுக்விட்டான்… இவர்கள் டேபிளில் காலியாய் இருந்த அடுத்த சேரில் வந்து அமர்ந்தான்.

“என்னடா தனியா வந்திறுக்க ரஞ்சி எங்க….?” ஆதவ் கேட்டான்.

“மாப்ள அவளுக்கு மன்டே ட்யூஸ்டே எக்‌ஸாம் இருக்குடா….நேத்து கூட ஒன்னு…. சின்ன கழுத எங்கயும் வரமாட்டேன்டு…. உனக்குதான் அவளப் பத்தி தெரியுமே ….நேத்து மதியம் மட்டும் அவ ஃப்ரெண்ட்ஸுக்கும் சேர்த்து லன்ச் அரேஞ்ச் செய்தால ஹோட்டல்க்கு வந்தா…. மிட்நைட் விஷ் சர்ப்ரைஸா அவ ஹாஸ்டல்ல போய் செய்துட்டு வந்தேன்….பெர்மிஷன் வாங்குறதுக்குள்ள பெரிய பாடா போச்சு…. அவ என் தங்ச்சிங்கதுக்கு ஏகப்பட்ட எவிடென்ஸ் காமிச்சு உள்ள போனேன்… புது ஹாஸ்டல்ல அவங்களுக்கு என்னை தெரியலை….ஆனா அவ்ளவு எஃபெர்ட் எடுத்து செய்துறுக்கேன்…கழுத ஒரு தேங்க்ஸ் சொன்னதோட சரி…. நைட் போனை வச்சுட்டு….படிக்கிற டைம் வேஸ்ட்டாகுதாம்…காலைல சர்ச்சுக்கு கூப்டேன் அங்க கூட வரலை… நைட் அவ ஹாஸ்டல் பக்கம் இருக்ற ஹோம்ல தான் டின்னர் அரேஞ்ச் செய்திறுந்தேன் அதுக்கும் வரலை….” புலம்பலாய் பொறிந்தான் அவன்.

‘அடப் பாவி அந்த அடுத்த ரூம் நியூகம்மர் உன் தங்கச்சியா…சொல்லவே இல்லையே’ ரிதா பல்ப்பை பதமாய் பக்குவமாய் பார்த்து வாங்கினாள். ‘செஞ்சது எல்லாம் உன் தங்கச்சிக்காக தானா…’ இவள் ஏகமாய் இஞ்சி சாப்ட பாவனையில் முழிக்க

“ரியா இது ப்ரியன்” இப்போது அறிமுக படலம். ஆக தன் முகத்தை கெத்தாக வைத்துக் கொண்டவள் இந்த ப்ரியனில் முறைத்தாள். இவட்ட ரூபன்னு தானே சொன்னான்.

“சொன்னேன்ல…என் க்ளோஸ் ஃப்ரெண்ட்… சின்னதுல இருந்தே எங்க வீட்டுக்கு பக்கத்து வீடு….இப்ப யூஎஸ்ல இருக்கான்னு…. நேத்து தான் வந்தான்….. “ ஆதவ் தொடர

ரூபனோ இவள் பார்வை அறிந்து இடையிட்டான்…. “க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸுக்கு மட்டும் நான் ப்ரியன்….மத்தவங்களுக்கு ரூபன்…” என விளக்கம் சொன்னான். “என் நேம் ப்ரியரூபன்.”

இப்போதும் இவள் முறைத்தாள்…

அத்தனையும் பார்த்துக் கொண்டிருந்த ஆதவ்க்கு ஏதோ புரிந்தும் புரியாமலுமாய்….

“எங்கயும் அஃபீஷியலா மீட் பண்ணிகிட்டீங்களாடா…? எங்க வெட்டிங் அப்ப கூட நீ அவட்ட பேசுனது இல்லைனு சொன்னியே…”

என்று ஆரம்பித்த ஆதவ்… என்ன நினைத்தானோ

“ரிதா ப்ரியனை நீ மீட் பண்ணனும்னுதான் இன்னைக்கு இங்க டின்னர்….” என ஆரம்பிக்க

அதன் மொத்த அர்த்தமும் அந்த நொடியே இவளுக்குப் புரிய….

இப்பொழுது மொத்தமாய் அந்த ப்ரிய ரூபனைப் பார்த்து முறைத்தாள் இவள்.

இவளையே பார்த்திருந்த ப்ரியன் “இது எதுக்கு?” என்ற பாவத்தில் பார்க்க….

“பின்னே க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ் ப்ரியன்னு கூப்டுவாங்க….மத்தவங்க ரூபன்….நான் என்னனு கூப்டவாம்…? வைஃப் கூப்டன்னு ஒரு நேமை சேஃபா சேவ் பண்ணி வச்சிறுக்கனும்ல நீங்க…”

என ஒன் ஷாட்டில் அத்தனை பேரையும் ஆ சொல்ல வைத்துவிட்டு பொண்ணு அப்ஸ்காண்ட்…

அதுக்கப்புறம் அவன் முகத்தைப் பார்க்க வெட்க வெட்கமாய் இருக்கே…எழுந்து வந்துவிட்டாள் ரியா.

அன்று இரவு ப்ரியனும் ரிதாவும் தேவையான அளவு அராசிஸ் வறுத்து அவிச்ச பிறகு…. “என்ன ரிது இப்டி ஒன் ஷாட்ல ஒத்துகிட்ட….நீ பயங்கரமா இழுத்தடிப்பன்னு ஆதவ் சொன்னான்….” ப்ரியன் கேட்க…

“அது…. உங்க தங்கசிக்காக இவ்ளவு பார்க்கிறவங்க….. நாளைக்கு என் அக்காகாக நீங்க பார்ப்பீங்களோ இல்லையோ…. ஆனா நான் எதுவும் பார்த்தா அதைப் புரிஞ்சுப்பீங்கன்னு தோணிச்சு….அதான்….எனக்கு ஃபேமிலி முக்கியம்….நீங்களும் என்னை மாதிரியேன்னு தோணிச்சா….”

அடுத்த வருடம்

அதே ஜூன் 23 நைட் 12 மணி…

“ஹேப்பி பெர்த் டே ரிது….” தன் கை அணைப்பில் சுருண்டிருந்த மனைவியின் காதில் முனங்கினான் ப்ரியன்….

6 comments

  1. Wow Ritha one sentencelaye marriageku ok sonnathu semaya irunthathu mam. That too wife kupida oru name vennumnu sonnathu double ok. On the other side Ritha mathiriye naagalum Ruben Rithakuvu route Vida thaan try pannaratha nanchi bulb vangitom ha ha ha 😁 sema story mam.

  2. ரொம்ப நல்லா இருக்கு அன்னா.அருமையான கதை.

Leave a Reply