வாழ்த்துப்பா..

 

அன்பு விதை விளைந்து ஆலம் விருட்சமாக

இன்பமது பெருகி இரண்டு தணையதாக

துன்பமது இருந்தால் தூரமாகி தீர்ந்து போக

கன்னி மனம் காணாத காதலெல்லாம் கனிந்துவர

கல்யாண நாயகன் பெண்ணிவள் மீது பெருங்காதல் கொள்ள

நாயகன் நாயகி

நாள்தோறும் இகம் போற்ற வாழ

ஈரேழு உலகமும்

இனிய இல்லறம் இவர் உதாரணம் என்றிங்கு இயம்ப

நான் காண்கின்ற நல்லதனைத்தும்

நாயகன் கை செயல்

என்றுணர பெண்மனம்

படைத்தவன் பேரன்பு என்மீது

இவளைத் தந்தானே என்னோடு

நினைத்திருக்க மணமகன் தினம் தினம்

சுகம் தரும் சொந்தமிது

ஜீவகால சொர்க்கமிது

என்பதாய் ஒரு பெருஞ்சுகவாழ்வு

வந்துதிக்கட்டும் மணவாழ்வு

வளமும் நலமும் சுகமும் தொடரட்டும் உம்மோடு

இது இறைவன் இணைத்திட்ட இணைவு

இரண்டற கலந்திட்ட உறவு

வாழ்க நீவீர் பல்லாண்டு!!!