வாசகர் 2020 – முடிவுகள்

நட்பினர் அனைவருக்கும் வணக்கம்!!!

புதினம் 2020 யின் ஆட்டநாயகராக யார்  இருவர் சிறப்பாக களமாடியிருக்கிறார்கள் என அறிவிக்கும் நேரம் இது!!

வாசகர் 2020ல் கலந்து கொண்டு  தங்கள் கருத்துக்களால் எழுத்தாளர்களை உற்சாகப்படுத்திய அனைவருக்கும் முதற்கண் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்!! நீங்கள் அனைவருமே புதினம் 2020 போட்டியின் முதுகெலும்பாய் செயலாற்றினீர்கள் எனில் அது மிகையாகாது.

இதில் போட்டித் துவக்கம் முதல் இறுதி வரை போட்டியோடு பயணித்து உற்சாகப்படுத்தி தனது வாக்களிப்பிலும் அன்பெனும் ஊஞ்சலிலே மற்றும் ஆடுகளத்துக்கு முதலிரு இடங்களை அளித்து  புதினம் 2020 நடுவர்களின் தீர்ப்போடு மிகவும் ஒத்துப் போன சகோதரி சுதா.R (Sudha Rajendran) அவர்களையும்,

கதையின் எந்த சஸ்பென்ஸையும் உடைக்காமல், இந்தக் கதையை நான் வாசிக்க வேண்டுமே என வாசிப்போரைத் தூண்டும் வகையில் மனம் கவரும் ரிவ்யூக்களை  அளித்து, அதோடு வாக்களிப்பிலும் ஆடுகளம் மற்றும் அன்பெனும் ஊஞ்சலிலேவுக்கு முதலிரு இடங்களை அளித்து புதினம் 2020 நடுவர்களின் தீர்ப்போடு மிகவும் ஒத்துப்போன  சகோதரி ஷர்மி மோகன்ராஜ் (Sharmi Mohanraj) அவர்களையும்,

வாசகர் 2020 யின் வெற்றியாளர்களாயும், புதினம் 2020யின் ஆட்டநாயகிகளாகவும் அறிவிக்கிறோம்!!

 இருவருக்கும் பரிசுத் தொகை தலா ரூ 5000 மற்றும் செங்கோபுரம் பதிப்பகத்திலிருந்து வெளியாகும் ஒரு வருட புத்தகங்களும் பரிசாக வழங்கப்படும்.

வாழ்த்துக்கள் சுதா.R !!

வாழ்த்துக்கள் ஷர்மி மோகன்ராஜ்!!

– புதினம் 2020 – குழு

 

வாழ்த்துக்களை இங்கு பகிரலாமே!

வாசகர் 2020 – ரிசல்ட்