மல்லிகை 10 (2)

விஷயம் இதுதான்.

இவர்களது மருத்துவமனையை ஒட்டி பெரிய டாக்சி ஸ்டாண்ட் ஒன்று இருக்கிறது. இந்த மருத்துவமனையில் யாராவது இறந்துவிட்டால் பெரும்பாலும் அந்த ஸ்டாண்டிலிருந்து டாக்சி எடுத்துதான் சடலத்தை தங்கள் ஊருக்கு கொண்டு செல்வார்கள் இறந்தவரின் உறவினர்கள்.

ஆக டாக்சி ஸ்டாண்டில் உள்ள ட்ரைவர்களில் சிலர் தங்களுக்கு இன்று சவாரி வேண்டுமென்றால் கூட்டத்தோடு கூட்டமாக மருத்துவமனைக்குள் வந்து, அங்கு உயிருக்கு போரடிக் கொண்டிருக்கும் நோயாளிகளை நோட்டமிட்டு வைத்துக் கொண்டு, யாரும் கவனிக்காத நேரம், அப்படி போராடும் நோயாளி ஒருவரின் ஆக்சிஜன் சப்ளை போன்ற அத்யாவசிய விஷயங்களை உருவிவிட்டுவிடுவார்களாம்.

அடுத்து அந்த நபர் இறக்கவும், அந்த குடும்ப உறுப்பினர்களிடம் இயல்பாய் இரக்கமாய் பேசுவது போல பேசி, அவர்களது காரிலேயே சடலத்தை எடுத்துப் போக வழி செய்து கொள்வார்களாம்.

அந்த மருத்துவமனை மாவட்ட தலை நகரில் இருக்கும் மருத்துவமனை. பெரும் தனியார் மருத்துவமனைகளிவிடவும் கூட நவீன மருத்துவ உபகரணங்கள் கொண்டதும் கூட.

ஆக எப்போதும் படு கூட்டமும் வெளியாட்கள் நடமாட்டமுமாய் இருப்பதல் கண்காணிப்பற்ற இந்த நிலையைப் பயன்படுத்தி இப்படி கொடூர வகையில் நடந்து கொண்டிருக்கிறதாம் ஒரு கூட்டம்.

அப்படி யாரோதான் சந்திரனின் உயிர்காற்றையும் நிறுத்தி இருக்க வேண்டும் என கேள்வியுற்றதால்தான் முழு மொத்தமாய் நிலைகுலைந்து போனாள் ஆராதனா.

அந்த உயிரைக் காப்பாற்ற எத்தனை எத்தனையாய் போராடினாள் இவள்? சரி அத்தனைக்கும் பின் சிகிச்சை பயனின்றி அவன் இறந்திருந்தால் கூட ஏதோ ஒரு வகையில் இவள் தன் மனதை தேற்றி இருப்பாளாக இருக்கும். மரணம் காணா குடும்பம் என ஒன்று இருக்கிறதா என்ன?

ஆனால் இது என்ன வகை கொடூரம்? வெறும் அல்ப தொகைக்காக இன்னும் எத்தனையோ வாழ வேண்டிய ஒருவனை, தன் குழந்தை முகம் கூட காணாத ஒரு தகப்பனை, சின்னப் பெண் ஒருவளின் வாழ்க்கை துணையை சக மனிதன் கொன்று தீர்க்கிறான் என்றால்,

எதோ வகையில் எதையுமே தாங்க முடியவில்லை இவளுக்கு.

இடம் பொருள் காணாமல் துடித்துக் கதறினாள் பெண்.

அங்குதானே இருந்தான் அபித், அவன் அவசர அவசரமாய் திரும்பவுமாய் பிஜுவை வரச் சொல்ல,

வெடித்துக் கொண்டிருப்பவள் வேண்டியவனைப் பார்த்தால் என்ன செய்வாள்? எதைப் பத்தியும் யோசிக்காமல் தன்னவனை கட்டிக் கொண்டு கதற,

பிஜு அவளோடு வீடு வந்து சேரும் போது கடும் ஜுரத்தில் இருந்தாள் அவள்.

நடந்துவிட்ட நிகழ்வை துளி கூட ஏற்க முடியாத அவள் மனநிலை, அவ்வளவாய் அவள் உடலை பாதித்திருந்தது.

அன்று அவளுக்கு தூக்க மாத்திரை கொடுத்துதான் அனுப்பி இருந்தனர் மருத்துவமனையிலிருந்து.

தன்னவன் மடியில் படுத்து அவனை இடுப்போடு இருகைகளாலும் கட்டிக் கொண்டுதான் தூங்கியவளுக்கு, தூக்கத்தில் ஆழ்ந்த பின்னும் கூட அழுகையின் விசும்பல் நின்றபாடில்லை.

இதெல்லாம் பிஜுவுக்கு எப்படி இருக்கிறதாம்?

அதில் அன்றுதான் என்று இல்லை, அடுத்து மூன்று நாட்களாயிற்று ஆராதனா அந்தவகை மனநிலையிலிருந்து ஓரளவு இயல்புக்கு திரும்பி வரவும், அவளது ஜுரம் விடவும்.

இயற்கையிலேயே சற்று  மென்மையான மனம் கொண்டவன் பிஜு. அதோடு காதல் உறவல்லவா இது? எப்போதுமே கலகலவென கலகலத்துக் கொண்டிருப்பவளாகவே பார்த்திருந்த தன்னவளை இப்படி வேரற்ற மரமாய் விழுந்து கிடப்பதாக காணவும் ரொம்பவுமே வாதிக்கப்பட்டுப் போனான் அவன்.

“நீ கண்டிப்பா டாக்டராகனுமா ராதிமா? ப்ளீஸ் வேண்டாமே” என இவளிடம் கேட்டான் அவன்.

மன அதிர்ச்சியிலிருந்து அப்போதுதான் ஓரளவு வெளிவந்திருந்த ராதிக்கு கணவனின் இந்த வார்த்தைகள் உண்மையில் அப்போது மகிழ்ச்சியையே தந்தன.

பின்னே இவள் பட்ட பாடைப் பார்த்துவிட்டு இவள் மீதுள்ள அக்கறையில் அல்லவா கேட்கிறான்?!

கடந்த மூன்று நாட்களும் சிறு குழந்தை போல அவன் மடியில் மட்டுமே சுருண்டிருந்து, அவன் கட்டாயப் படுத்தி ஊட்டினால் மட்டுமே சாப்பிட்டென அவனை அங்கும் இங்கும் அசையக் கூட விடாமல் அப்பி இருந்தவளுக்கு, அவனின் இந்த வார்த்தைகள் முழுக் காதலாக மட்டுமே பட்டது.

இதே வார்த்தைகளுக்காக இன்னொரு நாள் அவனை எத்தனையாய் வெறுக்கப் போகிறோம் எனத் தெரியாமல், உரிமையாய் தன்னவனை அணைத்து சலுகையாய் அவன் தோளில் புதைந்து கொண்டாள் ஆராதனா

தொடரும்…

Please share your valuable comments here. I’m waiting. Thanks

18 comments

  1. Iyo ena vagaiyana kodooram ithu sis padikave kastma irukuthu nijamalume ipdyelam nadakutha sis. Ithai epad aara thanguvaal avalai samathanapadutha piju seithathu enna wtng 4 nxt epi

  2. எத்தனை அழகாக எழுதிருறீங்க.

    ஒர் ஒர் இன்ச்சா சுவாரஸ்யமா கதைய நகர்த்தி கொண்டு போறீங்க… ஆவ்சம் . படிக்க படிக்க ஆவல் கூடுகிறது

Leave a Reply