மன்னவன் பேரைச் சொல்லி மல்லிகை சூடிக் கொண்டேன் 1

திரில் நின்ற அப்பார்ட்மென்ட் கட்டிடத்தை ஒரு முறை நிமிர்ந்து பார்த்துக்கொண்டாள் ஆராதனா.

சாந்தி நிகேதன் என்ற பெயர் வெண்கலத்தில் மினுங்கியது. புத்தம் புது பில்டிங்.

இந்த அப்பார்ட்மென்ட்டின் மூன்றாவது தளத்தின் ஒரு ப்ளாட்டைத்தான் பார்த்துவிட்டு வர சொல்லி இருந்தாள் இவள்  ஃப்ரெண்ட் பொற்கொடி.

ப்ளாட் நம்பர் 3F. அந்த வீடு இவளுக்கு பிடிச்சுட்டுனா, வாடகைக்கு எடுத்து  எல்லோரும் ஒரு க்ரூப்பா இங்க குடி வந்திரலாம்னு இவ ஃப்ரெண்ட்ஸ் ப்ளான் செய்துருக்காங்க.

ஆக இவள் இவங்க கோஷ்டி சார்பா வீடு பார்க்க வந்திருக்கா.

செக்யூரிட்டியிடம் டீடெய்ல்ஸ் சொல்லி சாவி வாங்கிக் கொண்டு லிஃப்ட் வழியாய் அந்த குறிப்பிட்ட  மூன்றாம் தளத்தை அடைய,

மூச்சடைத்துப் போனது இவளுக்கு!!!

அந்த தளத்தில் மொத்தம் 8 வீடுகள் இருந்தன. அதில்  இடது ஓர வீட்டில் கதவுக்கு அருகில் இருக்கும் ஜன்னல் கம்பியை கழற்றி எடுத்துக் கொண்டு அந்த வீட்டுக்குள் நுழைந்து கொண்டிருந்தான் ஒருவன்.

மூக்கு வரை மறைத்து கர்சீஃப் கட்டி, அங்கிருந்த கேமிராவில் கூட அடையாளம் பதிவாகாத கவனத்துடன் அவன்.

திருடன்!!!!!

இந்த பகல்ல இப்படி ஒரு திருட்டா????!!!

திக் திக் இதயத்துடன் சுற்று முற்றும் பார்த்தாள். தளத்தின் மத்த வீட்டில் ஆள் இருக்கிறார்களோ இல்லையோ, ஆனால் அத்தனை கதவுகளும் பூட்டி இருந்தன.

இப்ப இவ என்ன செய்யனும்? அவன் கைல மாட்டினா அவ்ளவுதான். கட கடவென திரும்பி படிகட்டைப் பார்த்து ஓட ஆரம்பித்தாள் ஆராதனா. லிஃப்ட் எப்ப வர?

“ஐயோ திருடன் திருடன்! செக்யூரிட்டி! திருடன் திருடன்!!” இவள் கத்திக் கொண்டு ஓட,

“ஹேய் நில்லு, நில்லுன்னு சொல்றேன்!” சத்தம் கேட்ட அந்த திருடன் இவளை துரத்திக் கொண்டு வந்தான்.

தட தட தட தட… கிரானைட் ஃப்ளோரில் வழுக்கலும் சறுக்கலுமாய் இவள் ஓட, அவனும் விடாமல் துரத்த, இதோ இப்போது இவளை பிடித்தே விட்டான் அவன்.

ஆனால் அதற்குள்  செக்யூரிடியும். இன்னும் கொஞ்சம்  ஆட்களும் கையில் கடப்பாரை  கம்பு இன்ன பிறவோடு ஆஜர்.

புது பில்டிங்க் இல்லையா இன்னும் ஒரு தளத்தில் வேலை முடியவில்லை போல…அங்கு வேலை செய்யும் லேபர்ஸாம் அவங்க.

அவர்களைப் பார்க்கவும் அவன் இவளை பிடித்திருந்த பிடியை  அவசர அவசரமாக விடுவித்தவன், தன் முகத்திலிருந்த கர்சீபையும் கழற்றிக் கொண்டான்.

அதற்குள் அத்தனை பேர் முழித்த முழியே இவளுக்கு விஷயத்தை புரிய வைத்துவிட்டது.

அது அவன் வீடாம். இன்னும் பில்டிங்க்ல சிமெண்ட் வேலை நடக்குதுல்ல, அவனுக்கு டஸ்ட் அலர்ஜியாம். அதான் அந்த மூக்கு கவர் முகமுடியாம். ஆட்டோமெடிக் லாக்கோட கீய உள்ள வச்சுட்டு வந்துடானாம்.

அப்புறம் என்ன?? இவளோட கேங்கே இவள மொத்திச்சு. இப்படி எவ்ளவோ ப்ரச்சனை வரலாம். அதுக்குதான் வெளிய வீடு எடுக்க வேண்டாம்னு சொல்றது, இந்த ஹாஸ்டல்லயே சமாளின்னுட்டாங்களே இவ வீட்ல.

தொடரும்…

மன்னவன் பேரை சொல்லி….மல்லிகை சூடிக் கொண்டேன்… 2

 

Advertisements

20 comments

  1. Ha ha ha semma ma interesting ….bravery award vaanga vendiyava ippadi bulb vaangitaley…..waiting ma unga adutha epiku 😊😊

  2. Hi mam

    திருட்டை பிடிக்கப்போய் தோழிகளிடம் இப்படி மொத்தம் வாங்கும்படியாச்சே.

    நன்றி

Leave a Reply to K. NITHIYA Cancel reply