மன்னவன் பேரைச் சொல்லி மல்லிகை சூடிக் கொண்டேன் 8

அன்று இரவு வெகு நேரம் வரை தூங்காது இருந்தாள் ராதி.

இவளை வீட்டில் விட்டுவிட்டு கிளம்பிச் சென்ற பிஜு… தன் வீட்டை அடைந்ததும் இவளிடம் திரும்பவுமாக சிறிது நேரம் மொபைலில் பேசினான்தான். ஆனால்

“நீயே சரியா தூக்கமில்லாம வந்துருக்க… தூங்கி ரெஸ்ட் எடு… நான் இன்னும் ரெண்டு நாள் இங்கதான்… முழுக்கவும் ஃப்ரீ… அப்றமும் நீ திருநெல்வேலிதான வருவ… நிறைய நிறைய பேசிக்கலாம்” என்று தூங்க சொல்லிவிட்டான்.

படுத்துவிட்டாலும் தூக்கம் எங்கு வருகிறதாம் இவளுக்கு? இன்று நடந்த ஒன்றொன்றும் மனதில் ஓடிக் கொண்டே இருக்கிறதே…

கூடவே எண்ணி ஆச்சர்யபடவும் தடையின்றி ஆசை கொள்ளவும் ஆயிரம் விஷயங்கள்.

பிஜு இவளை வீட்டில் விட்டு கிளம்பும் முன்னமே ஆதிக் அண்ணா இவளிடம் பேசிவிட்டான்.

ஆரம்பத்துல இருந்து பிஜுக்கும் இவளுக்கும் திருமணம் என்றால் நன்றாய் இருக்கும் என அவனும் அன்றிலும் நினைத்தார்களாம்..

நேரம் வரும் போது  இவர்கள் இருவருக்கும் வேறு யார் மீதும் விருப்பம் என எதுவும் இல்லை எனில் பேசலாம் என எண்ணி இருந்தார்களாம்…

இதில் சில வாரம் முன்பு இவளது அப்பா

“நல்ல வரன் எதாவது நம்ம பக்கத்தில் நம்ம ஆருக்கு வந்தா பாரு ஆதிக்” என சொல்ல…

அடுத்து ஆதிக் ஆராதனாவிடம் அவள் மனதில் ஏதும் வேறு விருப்பம் இருக்கிறதா என பொதுவாய் விசாரிக்க..

இவளோ “ஐய கல்யாணம் செய்றதே வெட்டி.. இதுல லவ் மேரேஜா… நோவே… அதான் அண்ணானு நீ இருக்கியே… ஒழுங்கா பொறுப்பா மாப்ள பாரு…ஒரு 40 வருஷம் கழிச்சு கல்யாணம் செய்யலாம்” என கிண்டலடிக்க…

அப்பதான் மேடம்க்கு தன் மனசயே தனக்கு சரியா தெரியாதே…

ஆக இவளது அப்பாவிடம் ஆதிக் பிஜு பத்தி சின்னதாய் சொல்லி வைக்க…

அப்பாவுக்கும் இந்த ப்ரபோசல் ரொம்பவும் பிடித்துப் போக…

“ஆருட்ட பேசிட்டு ப்ரொசீட் பண்ணிடலாம்”னு சொல்லி இருக்காங்களாம்.

அங்கு பிஜு வீட்டில் அன்றில் இந்தப் பேச்சை துவங்க… அங்கும் பிஜு விருப்பத்தை பொறுத்து முழு சம்மதம் என்ற நிலை பெரியவர்களிடம்.

இதில் நேற்று பிஜு வரவும் முதல் வேலையாக அன்றில் இந்த விஷயத்தை அவனிடம் கூற… அவனும் ஆன் த ஸ்பாட் சரி என்று விட்டானாம்… அதுவும்

“ராதிட்ட நான்தான் முதல்ல இதப் பத்தி பேசுனும்னு ஆசப்படுறேன் மச்சான்” என ப்ரோப்போஸ் செய்ற ரைட்ட வேற லீகலா கேட்டு வாங்கிக் கொண்டானாம்.

அடுத்துதான் இன்று இவள் இங்கு சென்னை வந்து சேர்ந்ததே…

ஆதிக் சொன்ன இதையெல்லாம் இவளுக்கு ஏதோ மந்திரவாதம் போல் இருக்கிறது.

பின்னே பிஜு அங்க இவட்ட சரியா பேசலைன்றதுக்கே இவள் நொந்து கொண்டிருக்க… இங்க இவங்களுக்கு மேரேஜே பேசி முடிவாகி இருக்கே…

இவள் வாழ்க்கை திட்டத்தில் திருமணம் என்ற வார்த்தைக்கே இன்னும் சில வருடங்களுக்கு இடம் இருப்பதாக இவள் நினைத்ததில்லை.

இப்போது இவளது ஹவுஸ் சர்ஜன் பீரியட் ஆரம்பிக்கிறது… அடுத்த வருடம் படிப்பு முடியவும் எங்காவது ஒரு ஹாஸ்பிட்டலில் ப்ராக்டிஸ் செய்து கொண்டே பி.ஜி என்ட்ரென்ஸ் தயாராகி எழுத வேண்டும்.

அடுத்தும் பிஜி முடிக்க வேண்டும்… ஆக இன்னும் குறைந்தது இதுதான் இவளது திட்டம் எண்ணம் எல்லாம்.

இதில் காதல் எங்கிருந்தோ வந்து நிற்கிறது… அதுவும் முழு மொத்த குடும்ப சம்மதத்துடன்… இது அடுத்த மிரகிள்.

இவளது அப்பா இந்த நேரத்தில் திருமண பேச்செடுத்தது இவளுக்கு படு ஆச்சர்யமாய் இருக்கிறது..

அதே நேரம் இந்த பிஜுவை முன்பே இவளுக்கு தெரியாமல் மட்டும் இருந்திருந்தால் இந்நேரம் இவள் ருத்ர தாண்டவம் ஆடி இருப்பாளாக இருக்கும்…

இப்போதோ இவளே பிஜுவிடம் சரி என சொல்லி வைத்துவிட்டு வந்திருக்கிறாளே..

என்னதெல்லாம் நடக்கிறது இவளது வாழ்வில்??

எது எப்படியோ இது இவளுக்கு வெகுவாக பிடித்தே இருக்கிறது… கண் மூடினாலும் திறந்திருந்தாலும் காட்சி தரும் தன்னவன் முகம் செய்து வைக்கும் ஓர் வகை உவகையில் லயித்திருந்தவள்

இன்னும் ஒரு வருடத்தில் இவள் படிப்பு முடியும் போது திருமணம் இருக்கும் என்ற நினைவில் எப்போது தூங்கினாளோ…

அடுத்த பக்கம்

Advertisements

6 comments

  1. yen. .Biju indha kolaveri.. unga pappa ve oru varusham podhum nu tu irukka.. neenga moonu varusham plan podureenga.. ? indha plan workout aguma… sis… indha updatele sentence ellam summa tharumaara.. varudhu.. superb sis

  2. Hi mam

    அரதனாவிடம் கலந்தாலோசிக்கமல் முடிவெடுத்ததிற்கு ஐயாவுக்கு இன்னும் சற்று நேரத்தில் அடி நிச்சயம்.

    நன்றி

Leave a Reply