மன்னவன் பேரைச் சொல்லி மல்லிகை சூடிக் கொண்டேன் 4

ங்கண்ணா வந்திருக்காங்களா? என வாய்விட்டு விசாரிக்காவிட்டாலும்….அபித் பேசிய வகையை வைத்து பிஜு நிச்சயம் வந்திருக்கிறான் என்ற புரிவிலேயே வீட்டிற்குள் நுழைந்த ஆராதனாவுக்கு….

அன்றில் மற்றும் விழாவுக்காக வந்திருந்த ஆதிக்கின் பெற்றோர் தபி அக்கா குடும்பம் என இவர்கள் மாத்திரமே தெரிந்த முகங்களாக அங்கு கண்ணில் பட….. ரொம்பவுமே ஒளி மங்கிப் போனது  உலகம்…

ஆனாலும் இவர்களையே எவ்வளவு நாளுக்குப் பின் பார்க்கிறாள்?  முடிந்த வரை அவர்களிடம் கலகலத்துவிட்டு…. மதியம் நடைபெற இருக்கும் விழாவுக்கென தயாராகி வர  மாடியில் இவளுக்காக ஒதுக்கப்பட்டிருந்த அறைக்குச் சென்றாள்.

இதில் அவள் அப்பாவுக்கு வேறு ஏதோ அவசர வேலை வந்துவிட்டதாம்….

அதனால் அவருடைய விடுமுறை சில நாள்கள் தள்ளிப் போயிருப்பதாகவும் ஆக இன்று வர முடியாது என்றும் தகவல் வர…..

எல்லா கதவும் அடைபட்ட இருட்டு அறைக்குள் இருப்பது போல் ஒரு உணர்வு இவளுக்கு…

அதில்  வெகு நேரம் வரை தனக்கான அறையில் சோம்பிப் போய் விழுந்து கிடந்தவள்  ஒரு வழியாய்

“இன்னைக்கு இந்த ட்ரெஸ் போடேன்….. உனக்கு ரொம்ப நல்லா இருக்கும்னு நினைக்கிறேன் “ என்ற வார்த்தைகளோடு அன்றிலினால் கொடுக்கப்பட்ட அந்த ப்ளூவும் பிங்குமாய் வேலைப்பாடு செய்யப்பட்டிருந்த தங்க நிற காக்ராவில் இவள் தயாராகி இறங்கி வந்த போது…..

விழாவுக்கென பல விருந்தினர் இதற்குள் வந்திருந்தனர்…

இதில் முழுக் காட்சி  கண்ணில் படவும் பட் பட்டென  அடித்துக் கொண்டு சில்லென செட்டை விரிக்கிறது ஒரு சிலீர் வகை அனுபவம் இவளுக்குள்….. திறந்து கொண்டு செல்கிறது திக்கெட்டும் பலவண்ண கதவுகளை….

பளீர் என்கிறது பார்க்கும் காட்சி எங்கும்….

ஏனெனில் விழா நடைபெற இருக்கும் வரவேற்பறைக்குள் இவள் நுழையவும்  கண்ணில் படுகிறான் பிஜு….

அதுவும் இவளைப் பார்க்கவும் வெகு உரிமையாய் பக்கா உற்சாகமாய்  இவளிடம் வந்து…. “ஹேய் ராதி எப்ப வந்த? கொஞ்சமாவது ரெஸ்ட் எடுக்க முடிஞ்சுதா?” என உண்மை அக்கறையாய் விசாரித்தான்.

அடுத்து “இந்த கலர் காம்பினேஷன் உனக்கு பிடிக்கும்னு நினச்சேன்…. ஆனா இவ்ளவு அழகா இருக்கும்னு தெரியாது…. உனக்கு ரொம்ப சூட் ஆகுது…..” என்றான்  வெகு வெகு இயல்பாய்.

ஹான்ன்ன்ன்ன்ன்!!!!  என்னது ராதியா?  என்னது எனக்கு பிடிக்கும்னு நினச்சியா…? என்னது அழகா? இப்டில்லாம் பேசுவியா நீ? இவள் எதெற்கெல்லாம்தான் என்னது போட? மூச்சின்றி முழி விரிய ‘ஆ’  என  இவள் அடைத்து நிற்க…..

அவனோ அடுத்தும் “இன்னும் பூ வைக்கலையா நீ….. இந்த பூவ வை….” என்றபடி விழாவுக்கு வருகின்ற பெண்களுக்கு வரவேற்பாக கொடுக்கப்பட்டுக் கொண்டிருந்த  மல்லிகை சரங்களிலிருந்து ஒரு நீள சரத்தை எடுத்து இவளிடம் நீட்டினான்.

எப்படி இருக்கிறதாம் இவளுக்கு?

ஆயிரம் வோல்ட்ஸ் மின்சாரம் அவ்வப்போது அவளுள் பாய….. அதோடு சேர்ந்து வலுத்து வலுத்துப் பெய்த சுக மழையில்  சுருள துவள நனைந்து கொண்டிருக்கிறாள்தான் இவள்…..

ஆனால் கனவா கற்பனையா நிஜமா நிழலா என எதுவும் புரியா மிதப்பு உலகில் அவள்…. அதற்குள் அருகில் வந்த எதோ ஒரு பாட்டி….

“ ஏம்மா வீட்டுக்காரன் பூ கொடுத்தா வாங்கி தலையில வைக்க வேண்டியதான?” என்றுவிட்டு போக….

‘வீட்டுக்காரனா????????’

டமால் என தரை உலகிற்கு வந்து விழுந்தாள் ஆராதனா…..

“என்ன பாட்டி என்ன தெரியலியா..?” என அந்த பிஜு  அந்த பாட்டிக்கு பதில் கொடுக்க  துவங்க அதற்குள்  அங்கிருந்து அப்படியே மறைந்து போனாள் இவள்….

இத்தனை அதிர்ச்சியை யோசித்து தாங்க அவளுக்கும்தான் அவகாசம் வேண்டுமே… தப்பித்தால் போதுமென ஓடி வந்திருந்தாள்…

அடுத்த பக்கம்

Advertisements

13 comments

  1. Hi mam

    பிஜு என்ன இப்படி ஆராதனாவுக்கு அதிற்சி மேல் அதிற்சி கொடுக்கின்றார்,அதுவும் செல்லப்பெயர் வேறு வைத்து.

    நன்றி

Leave a Reply