மன்னவன் பேரைச் சொல்லி மல்லிகை சூடிக் கொண்டேன் 2

ய் ரவ்டி…..டுபாக்கூர்….எழும்பி தொலடி..…. நேரமாகிட்டே போகுது……” பொற்கொடி ஆராதனாவை எழுப்பிக் கொண்டிருந்தாள் ஹஸ்டலில்.

“ப்ச்….. இன்னும்  டைம் இருக்கு பொடி….” பிரண்டு படுத்தது அந்த ரவ்டி @ டுபாக்கூர் @ ஆராதனா. பொடி பொற்கொடிக்கான ஷார்ட் ஃபார்ம்…அன்புப் பெயர்….. நட்பு விளித்தல்….

“என்ன விளையாடுறியா…… இப்பவே 8.45டி…..அங்க மெஸ்ல  வேற பசங்கல்லாம் வெளிய நிக்காங்களாம்….” பொற்கொடி இப்போது எகிற….

“ பொடி உனக்கு டைம் சென்சே இல்ல…..வழக்கமா என் கனவு முடிஞ்ச பிறகுதானே கிளம்புவோம்….” இன்னும் கண்ணை திறக்க கூட செய்யாத ஆராதனா உளறலாய் சொல்ல…

பொற்கொடி நச்சென்று வைத்தாள் ஒன்று அவள் முதுகில்….

“அறிவே அப்பவே ஒரு கனவு கண்டு அலறி எந்திரிச்சுட்ட….இது அடுத்த ஒன்னு….”

அவளைவிடவும் அலறிக் கொண்டு எழுந்தாள் ஆராதனா இப்போது…

“ஐயோ ஆமால….. அது என்ன ஒரு கொடூரமான கனவு…..” துள்ளி இறங்கினாள் படுக்கையில் இருந்து…

“அத ஏன்டி நியாபக படுத்தின…..? நான் உப்மா சாப்டுற மாதிரி…. இறைவா நினைக்கவே தாங்கலையே….”

“ஐயோ இன்னைக்கு போடுற ப்ரிஞ்சி மட்டும்தான்டி வாய்ல வைக்கிற மாதிரி இருக்கும்….அது மட்டும் இல்லையோ… “ புலம்பிக் கொண்டே அடுத்த இரண்டாம் நிமிடம் ப்ரெஷ் பண்ணி முகம் கழுவி என  ரவ்டிப் பொண்ணு ரெடி…

“சீக்கிரம் வா……” மூன்றாம் நிமிடம் இழுக்காத குறையாக  பொற்கொடியை இழுத்துக் கொண்டு நடந்து கொண்டிருந்தாள்  ஆராதனா.

அந்த மருத்துவக் கல்லூரியில் ஆண்களுக்கும் பெண்களுக்குமான விடுதிகள் வெகு தூரமாய் அங்கும் இங்குமாய் பிரிந்து கிடந்தாலும்…..

இருபாலருக்குமான சாப்பாட்டு பகுதி ஓரளவு  அருகருகே  இருக்க….. அதைப் பார்த்துதான் நடந்து கொண்டிருந்தது ஆராதனா கேங்….

தூரத்தில் அங்கும் இங்குமாய் இவர்கள் கல்லூரி மாணவர்கள் சிறு சிறு குழுக்களாக நின்று கொண்டிருந்தனர்.

“என்னமோ தெரில இதெல்லாம் பார்த்தா என் உப்மா கனவு பலிச்சுடுமோன்னு திக் திக்னு இருக்கு….. உப்மாவத் தவிர வேற எதுக்காவது இந்த பசங்க பயப்படுவாங்கன்னு நினைக்க….? வழக்கமா இந்நேரம் வெட்டு வெட்டுன்னு வெட்டிட்டுல்லடி இருப்பாங்க….. இப்ப ஏன் வெளிய வந்து நிக்காங்க….? சொல்லாம கொள்ளாம கூட இப்படி மெனுவ மாத்துவாங்களா….” புலம்பிக் கொண்டே நடப்பது யார் என இங்கு சொல்ல தேவையில்லை….

“இன்னைக்கு  சிட்டில ஏதோ பந்த் மக்களே….. அதுக்காக வெளிய போக யோசிச்சுகிட்டு இங்க சுத்திட்டு இருப்பாங்க இவனுங்க…” பரி தனக்கு தெரிந்த காரணத்தை சொல்ல…

“ஹேய் பந்த்னா உப்மா செய்ய ஜாமான் திடீர்னு கிடச்சுருக்காதுல்ல…… வாவ் அப்ப இன்னைக்கு கண்டிப்பா உப்மா கிடையாது….. மீ க்ரேட் எஸ்கேப்” ஆராதனா அதை இப்படியாக பார்த்தாள்.

தலையில் அடித்துக் கொண்டாள் பொற்கொடி “ஏன்டி காலைல இருந்து உப்மா உப்மானு உயிர எடுக்க…?”

“ம்….ஏன் சொல்ல மாட்ட? கனவுல வேற ஒரு டைம் சாப்டாச்சு…..இதுல நிஜதுல வேற திரும்பவுமா…?  உப்மா சாப்டுறதுன்றது எவ்ளவு கொடுமையான விஷயம்…? அதை எத்தன தடவ அனுபவிக்க….? I hate upma…..you hate upma….. It’s true the entire world hates upma….” உணர்ச்சிப் பூர்வமாக சொல்லிக் கொண்டு வந்தவள்….தான் வந்து கொண்டிருந்த பாதையில் ஒரு காலை ஓங்கி ஒரு மிதி மிதிக்க….

“டட்ட டட டம்…..” பின்னால ஒரு சத்தம்…

என்னங்கடா அது  நம்ம மிதிக்கு இவ்ளவு பவரா……? என்னது அது விழுந்து வைக்குது…? என்றபடி இவள் கெத்தாக திரும்பிப் பார்க்க…. கண்ணில் கிடைத்தான் அவன்.

பைக்கை கீழே போட்டுவிட்டு…..அதன் பக்கத்தில்  உர் என நின்று கொண்டிருந்தான்..… அந்த அப்பார்ட்மென்ட்காரன்…

பாதையின் இடப் பக்கத்தில் ஓரமாக நடந்து கொண்டிருந்த இவள் கோஷம் போடும் ஜோரில் உணர்ச்சிவசப்பட்டு சடக்கென நடு ரோட்டிற்கு வந்திருந்ததும்,

அதை சற்றும் எதிர்பாராமல் பின்னால் பைக்கில் வந்து கொண்டிருந்த அவன், இவள் மீது இடித்துவிடக் கூடாதென இவளை தவிர்க்க முயன்று,

அரை நொடிக்கும் குறைவான வேகத்தில் நடந்துவிட்ட இந்த செயலில்,  பேலன்ஸ் இழந்து, மணல் சாலையில் வண்டி டயர் சறுக்கி, பைக்கை தவறவிட்டுவிட்டு நிற்கிறான் என்பதும் பார்க்கவுமே இவளுக்கு புரிகிறது.

வழக்கமாக எதற்கெடுத்தாலும் முதலில் சாரி கேட்கும் ஆரதனாவுக்கு…. ஏனோ இப்போது அப்படி கேட்கப் பிடிக்கவில்லை.

ஏதோ அவனிடம் இவளை விட்டுக் கொடுப்பது போல் ஒரு உணர்வு.

அதைத் தவிர்க்க முறைக்கத்தான் பிடிக்கிறது. அப்பார்ட்மென்டில் அவனால் வாங்கிய பல்ப் காரணமாக இருக்கும் என நினைத்துக் கொண்டாள்.

அந்த அப்பார்ட்மென்ட் இன்சிடென்டுக்கு பிறகு இவ கிளம்பி வர்றப்ப ஏதேச்சையா பார்த்தா அவன் வீட்டு பால்கனில இருந்து இவளைப்  பார்த்துக் கொண்டிருந்தவன் இவள் பார்வை பட்டதும் சட்டென மறைந்தானே  அதுவும் காரணமாக இருக்கலாம்.

ஆக முகத்தில் சின்ன இளக்கம் கூட காண்பிக்காமல் சுள் எனவே பார்த்தவள் ஒன்றுமே சொல்லாமல் திரும்பி நடந்துவிட்டாள்.

ஆராதனாவின் இந்த செயல் அவளது நட்புக் குழாமுக்குமே புதிது என்பதால் ஒன்றும் புரியாமல் அந்த பைக்காரனை ஓரிரு முறை  திரும்பிப் பார்த்தபடி இவளுக்கு பின்னாக அவர்களும் வந்துவிட்டனர்.

சற்று நேர மௌன நடைக்குப் பின் இப்போது சாப்பாட்டு ஹாலில் நுழைந்த பொழுதுதான்  “ஏய் ரவ்டி என்னடி ஆச்சு? யார்டி அவன்? தெரிஞ்சவனா? எதுவும் ப்ராப்ளமா?” என விசாரித்தாள் பொற்கொடி…..

“சொன்னனே….அந்த அப்பர்ட்மென்ட் திருடன் இவன்தான்….” என பதில் கொடுத்தாள் ஆராதனாவும்….

இப்போது இடையிட்டது அந்த குரல்…. “இப்படித்தான் சொல்லிட்டு அலையுறியா….? நான் உனக்கு திருடனா?” இவர்களுக்கு ஜஸ்ட் பின்னால் நின்றிருந்தான் அவன்…

‘அடப்பாவி இங்கயுமா நீ ….???!!!!’ தூக்கி வாரிப் போட்டது ஆராதனாவுக்கு….

சாப்பாட்டு ஹாலுக்குள் மாணவிகள் தவிர பொதுவாக யாரும் வருவதற்கில்லை என்பதால் அவனை சற்றும் இங்கு எதிர்பார்த்திருக்கவில்லை பெண்கள் இருவருமே…..

“அ..து…..” முதலில் ஆராதனா திக்கினாலும்….அதான் எப்படியும் கேட்டுடானே…இனிமே என்ன…? என்ற போதிமர சமாசாரத்தில்

“ஹேய் பொடி…..இவர் தான் அந்த மகா கணம் பொருந்திய திருடர்…….. “ என இப்போது அவனை மிக தன்மையாக அறிமுக படுத்தினாள்…

பொற்கொடி பிடிக்க வந்தவன்ட்ட மாட்டின கோழி மாதிரி ஒரு லுக் விடுறான்னா…அவன் உர்ர்ர்ர்ர் முகத்தை எதிர் பார்த்து ஆராதனா கெத்தும் கிண்டலுமாய்ப் பார்க்க….

‘பின்ன இது என்ன அவன் அபார்ட்மென்ட்டா…..இவ காலேஜாங்கும்…அதுவும் கேர்ள்ஸ் மெஸ்….இவன் உள்ள வந்ததுக்கே இருக்கு ஆப்பு….இதுல இவன் என்ன செஞ்சுட முடியும்?’ என ஒரு நினைப்பு….

“எங்க இருந்து பிடிச்சாங்களோ இந்த பெருச்சாளிய….?” என்ற படி திரும்பிப் போய்க் கொண்டிருந்தான் அவன்….

“ஈஈஈஈச்ச்ச்ச்……..சை… உவக்.!!!” வாய்விட்டு ஓங்கரித்த ஆராதனா  துள்ளிக் குதிக்காத குறைதான்….உலகத்திலேயே அவளுக்கு பிடிக்காத ஒரு உயிரினம் இருக்குதுன்னா அது இந்த பெருச்சாளிதான்…. அருவருப்பின் உச்சம்…. கரெக்ட்டா அத சொல்லிட்டுப் போறானே….. அதுவும் சாப்டப் போறப்ப….. டேய்ய்ய்ய்!!!

இவ மனசுக்குள்ள கத்தி என்ன ப்ரயோஜனம்….அவன் விடுவிடுவென உள்ளே போயிருந்தான்…

அப்போதுதான்  கூடத்தின் உள்ளே பார்க்கிறாள் இவள்….. உண்மையில் இவர்களைத் தவிர  மாணவிகள் தலை ஒன்றிரெண்டு கூட தென்படவில்லை….. ஆண்கள்தான் அங்கு ஒரு கூட்டமாய் தீவிர  ஆலோசனையில் இருந்தனர்…. ஏன்??

பக்கத்தில் போனதுமே விஷயம் புரிந்துவிட்டது…..இவங்க மெஸ்ஸை நடத்திக் கொண்டிருந்த க்ரூப் நைட்டோட நைட்டா  சொல்லாம கொள்ளாம ஓடிப் போய்ட்டுதாம்…..

ஏற்கனவே ஏதோ சம்பளப் பாக்கி… கான்ட்ராக்ட் பணம் ஒழுங்கா அவங்களுக்கு வந்து சேரலைனு அங்கு ப்ரச்சனை ஓடிக் கொண்டு இருந்தது தெரியும்….அதுக்காக இப்படி செய்வாங்கன்னு இவங்க யாருமே எதிர்பார்க்கலையே…

அதுவும் பந்த் அன்னைக்கு…. வெளிய போனா கூட சாப்ட எதுவும் கிடைக்காதே….. இத்தனை பேர்  சாப்ட ஒரு  பெரிய ஹோட்டலே பத்தாதே!!

ஆராதனா மிரண்ட நேரம் காதில் விழுகிறது….இவளோட க்ளாஸ்மேட் அபித் சொல்லிக் கொண்டிருப்பது…..

“சரி மாப்பு…ப்ரச்சனை ஒன்னும் இல்ல….ப்ரிஞ்சிக்கு தேவையான எல்லாம் இருக்கு….. மெஸ் குக் எப்படி ஷிஃப்ட் ஷிப்ட்டா சமைப்பாங்களோ அப்டியே நாமளே வச்சு இறக்கிருவோம்…..  ஏற்கனவே ஆனியன் வெட்டி முடிச்சாச்சு…. மீதி வேலைய கவனிப்போம்…. நம்ம சாந்தி மேமும் அகல்யா மேமும் கிட்சன்ல தான் நின்னுட்டு இருக்காங்க…. நாமளும் இவ்ளவு பேர் இருக்கமே…சமாளிச்சுடலாம்….”

‘டேய் அபித் நீ கொஞ்சம் நல்லவன்னு தெரியும்….ஆனா இவ்ளவு நல்லவன்னு தெரியாதேடா….’ மனதிற்குள் அவனுக்கு ஒரு ஐசி அப்ரிஷியேஷனை ஆராதனா பார்சல் செய்துவிட்டு…

அகல்யா மேமும் சாந்திமேமும் இவளது ஹாஸ்டல் இன்சார்ஜ்…… அதோடு ஃப்ரெண்ட்லி பீபுளும் வேற….ஒரு வகையில் செம்ம சின்சியர் மக்களும் கூட… ஆக ‘அவங்க சின்சியரா சமச்சா ப்ரிஞ்சி இன்னும் கூட டேஃஸ்ட்டா வரும்…ஐ இஞ்சி போட்ட ப்ரிஞ்சி’ என இவள் மனதுக்குள் சப்புகொட்டிய நேரம்….

நோ நோ அதே அந்த நொடி வந்து நின்றான் அங்கு அந்த அப்பார்ட்மென்ட்காரன்…

“டேய் அபி….அங்க கிட்சன்ல பார்த்துட்டேன்….இவ்ளவு ஆனியன்லாம் பத்தாதுடா…அதோட இவ்ளவு பேருக்கு என்னைக்கு வெஜிடபுள்ஸ் எல்லாம் வெட்டி…இஞ்சி பூண்டு ரெடி பண்ணி ப்ரிஞ்சி வச்சு முடிக்க….? அப்றம் அதுக்கு சைட் டிஷ் வேற….வேலைக்காகாது….. ரவை தேவையான அளவு இருக்கு…..வெட்டின வெங்காயத்தை வச்சு தாழிச்சு ஒழுங்கா உப்மா கிண்ட வழியப் பார்போம்” என்றானே பார்க்கலாம் அவன்…. சொல்லிவிட்டு இவளை வேறு ஒரு நொடி பார்த்துக் கொண்டான்…..

காதில் இருந்து இரண்டு புறமும் புகை பீறிட்டு வர…..பல்லைக் கடித்துக் கொண்டு முறைத்தாள் ஆராதனா….

இவளுக்கு தெரியலையாமா..? இவளைப் பழிவாங்கத்தான் இந்த உப்மா ப்ளான் என…

“யார்டா இது ? எங்க ஹாஸ்டல்ல வந்து…?” இருந்த எரிச்சலில் இவள் முனங்கத்தான் செய்தாள்.

ஆனால் எல்லோரும் இந்த உப்மா ப்ளானில் சட்டென அமைதியாகி இருந்தாலோ என்னமோ…. இவள் முனங்கல் கூட தெளிவாக வெளியே கேட்டு வைக்கிறது.

எதிர்பாரா வகையில் நடந்து போன இதில் இவளே அதிர்ந்துதான் போனாள். இத்தனை கூட்டத்தில் யாரை இப்படி பேசுவதும் தப்பு என இவளுக்குமே தெரியுமே!

அடுத்த பக்கம்

Advertisements

12 comments

  1. ha.. ha.. inime yaru I hate upma sonnalum .. avanga annaikku Upma sappithuthan aganum polave… sema bulb…
    adutha bulb enna endru parklam Sweety sis

  2. Hi mam

    வேலை செய்கிறேன் என்று பாவனை காட்டிக்கொண்டு அவரைப்பார்த்துக்கொண்டு நின்றால் எல்லாரும் கவனிக்கத்தான் செய்வார்கள்.

    நன்றி

Leave a Reply