மன்னவன் பேரைச் சொல்லி மல்லிகை சூடிக் கொண்டேன் 3

ப்படி இருக்கிறதாம் இவளுக்கு? வெட்கம் ஒரு புறம் பிடுங்கித் தின்கிறது என்றால் அவமானமோ அடவு கட்டி ஆடுகிறது…..  மார்ச் ஃபார்ஸ்ட் போட வேண்டிய மானமோ மர்கயா…..

எந்த காரணத்தைக் கொண்டும் கண்ணை திறந்து அந்த அபித்தை எதிர்க் கொண்டு விட முடியாது என தோன்றுகிறது இவளுக்கு….

அதன் பின்தான் மெல்ல உறைக்கிறது இவளுக்கு…..

‘அட அறிவுக் கொழுந்தே!!! இப்ப எதுக்கு கண்ணை மூடி முகத்தில் கை வச்ச? அது மட்டும் செய்யாம…..அபித் வந்து அவன் அண்ணாவப் பத்தி பேசவும் கேஷுவலா ‘இப்ப ஏன் உன் அண்ணன பத்தி என்ட்ட சொல்றன்’னு கேட்டுட்டு போயிருக்கலாமே நீ…?’

‘இதென்ன இந்த இவன் விஷயத்தில்  இப்படி லேட்டாவே பல்ப் எரியுதே இவளுக்கு?’

இன்னுமே கண்ணை திறக்காமல் இப்படி தத்தக்கா பித்தக்கா என இவள் தத்தளித்துக் கொண்டிருக்கும் போது காதில் விழுகிறது அந்த அதட்டல்…..

“டேய்….அங்க என்னடா செய்துகிட்டு இருக்க…? இங்க வா…” என அந்த பிஜுதான் அபித்தை அதட்டி கூப்பிட்டான்….

அவனுக்கு அபித் இவளுடன் பேசுவது பிடிக்கவில்லை என தெளிவாக புரிகிறது….. இவள் கண் திறந்து பார்க்கும்போது அபித்தும் அங்கு இல்லை அந்த பிஜுவும்தான்…

மனதிற்குள் வலித்தது இவளுக்கு…..

‘இவ கூட அபித்த சேரக் கூடாதுன்றான் அவனோட அண்ணன்…அப்படின்னா என்ன அர்த்தம்? இவளால அந்த பிஜு ரொம்ப ஹர்ட் ஆகி இருக்கான்தானே….

அப்பார்ட்மென்ட் நிகழ்ச்சியில் இவளை குறை சொல்வதற்கு எதுவும் இல்லை…..ஆனா இங்க இப்படி ‘டா’ ல்லாம் போட்டு பேசி இருந்திருக்க கூடாதுதான இவ….? ஆனா நான் அப்படி மீனிங்லயும் சொல்லலையே……’

இந்த மன உழற்ச்சி அன்று மட்டுமல்ல அதன் பின் வந்த காலத்திலும் அவ்வப் போது தொடரும் வகையிலேயே அமைந்தது இவளுக்கு.

ஆம்  அதன் பின் அந்த பிஜு அடிக்கடி என்றில்லாவிட்டாலும் அவ்வப்போது அபித்தைப் பார்க்கவென கல்லூரிக்கு வருவான்….. கவனித்துப் பார்த்தால் மாதத்தின் மூன்றாம் வாரம் வெள்ளிக் கிழமைகளில் என சொல்லிவிடலாம்……

அந்த நாட்களில்  இவள் ஹாஸ்பிட்டல் டூட்டி முடிந்து வரும்போதோ….அல்லது நைட் டூட்டிக்கென கிளம்பும் போதோ அபித் மட்டுமல்ல இவள் வகுப்பு பட்டாளம் முழுதுமே….ஏன் சில ஜூனியர் சீனியர் என யார் யாரெல்லாமோ அந்த பிஜுவுடன் நின்று அரட்டை அடித்துக் கொண்டிருப்பதை இவள் பார்க்க நேரிடும்….

அபித்தே வகுப்பில் ஃப்ரெண்ட்ஷிப் விஷயத்தில் ப்ரபலம்தான்…… எல்லோரிடமும் நல்லவிதமாக பழகுபவன்…..

அந்த வகையிலேயே அவனது அண்ணன் என்ற ஒரு காரணத்திற்காகவே மக்கள் இந்த பிஜுவுடனும் எளிதாக சேர்ந்து கொள்ள முடியும்தான்…..

அதில் அந்த மெஸ் சாப்பாடு பிரச்சனைக்குப் பின் பிஜு இங்கு ரொம்பவும் நெருக்கமான பேர் ஆகிப் போயிற்று போலும்…..

இவள் வகுப்பு பெண்கள் கூட நின்று பேசி கடந்து போவதுண்டு….

ஆனால் இவள் புறம் மட்டும் அந்த பிஜு மருந்துக்கு கூட திரும்பிவிட மாட்டான்…..

அதுவும் ஆராதனா அபித் என அல்ஃபபட்டிக் வரிசையில் இவர்களது பெயர்கள் அருகருகே இருப்பதால்….இவளும் அபித்தும் ஒரே பேட்ச் மேட். ஆக ஹாஸ்பிட்டலில் இருந்து டூட்டி முடிந்து வரும்போதும் நைட் டூட்டிக்கு கிளம்பும் போதும்…..இவள் அந்த அபித்துடன்தான்   வந்து கொண்டிருப்பாள்…..

அப்போது கூட கவனமாக இவளை தவிர்த்துவிட்டு அபித்துடனும்  மற்றவர்களிடம் மட்டுமாக பேசுவான் அந்த பிஜு…

‘போடா நான் என்ன வேணும்னா உன்ன திருடன்னு நினச்சேன்….. இல்ல வேணும்னு பைக்கில் இருந்து தள்ளிவிட்டனா?… நீதான் வேணும்னு என்ன உப்மா சாப்டவச்ச….. நீதான் வில்லன்…..நான்லாம் குட் கேர்ள்தான்…’ என எத்தனைதான் இவள் தனக்குள் புலம்பிக் கொண்டாலும்…..

ஏனோ ஆரதனாவால் அந்த பிஜுவை அப்படியே அசட்டையும் பண்ணிவிட முடியவில்லை….

அவஸ்தைப் பட்டாள்.

ஆனாலும் அந்த அண்ணன்காரனுடன்தான் உறவு இப்படி கடுப்படிக்கிறதே தவிர, அபித்துடன் அந்த உப்மா நாளுக்குப் பின் நட்பு இன்னும் நல்லவிதமாகவே  நடந்தேறுகிறது…..

பொதுவாக பையன்களிடம் ஃப்ரெண்ட்லியாக பேசுபவள்தான் ஆராதனா….ஆனால் ஃப்ரெண்ட் எனக் கூறிக் கொள்ளும் அளவு  எந்த ஆணிடமும் நெருங்கிவிட அவளுக்கு முடிந்தது இல்லை….. விலக்கித்தான் வைத்திருப்பாள்.

அபித்துடனும் முன்பு அப்படித்தான்….. ஆனால் யோசிக்கும் போது இப்போது அது சற்று வித்யாசமாக படர துவங்கி இருக்கிறதோ என தோன்றுகிறது….

எல்லா நேரமும் அபித் இவளிடம் வந்து வந்து பேசினான் என்றெல்லாம் இல்லை….. ஆனால் முன்பைவிட  மாற்றம்…..

ஒரே பேட்ச் என்பதால் இரவு நேரங்களில் மருத்துவமனைக்கு போகவோ வரவோ என்றால் பொதுவாகவே இவர்கள் பேட்ச் பெண்கள் கிளம்பிவிட்டார்களா என பார்க்காமல் அபித்தும் சரி இவளது பேச்சை சேர்ந்த மத்த ஆண்களும் செல்வதில்லைதான்….

இப்போதோ அப்படி க்ரூப்பா இவ மத்த பொண்ணுங்க கூட கிளம்பினாலும் காத்திருந்து இவளோடே சேர்ந்தே வருவான் அபித்…..

கிடைக்க கஷ்டமான  நோட்ஸ்……புக்….‌  ஸ்டடி மெட்டீரியல்ஸ்னு எது கிடச்சாலும் கண்டிப்பா இவளுக்கும் ஒரு காபி இருக்கும் அவனிடம்….

இதுக்கெல்லாம் ‘உன் அண்ணான்ற குட்டிப் பாப்பா அந்த பொண்ணுட்ட சேராத அப்ப நான் உன் கூட டூன்னு அழமாட்டானா’ என கேட்க தோன்றும் இவளுக்கு….

ஆனாலும்  எதையாவது பேசி அபித்திடம் இருக்கும் இந்த கசப்பற்ற நிலையை ஏன் கெடுத்துக் கொள்ள வேண்டும் என வாய்திறக்காமல் இருந்து வந்தாள் இவள்.

இந்த நிலையில்தான் செமஸ்டர் விடுமுறை வந்தது…..  பரீட்சை முடிந்த மறுநாளே சென்னை கிளம்பிவிட்டாள் இவள்… அங்குதான் இவளது  அத்தை வீடு….

அடுத்த பக்கம்

Advertisements

11 comments

  1. Hi mam

    ஆராதனா பிஜுத்திற்கு முறைப்பெண்ணா,அம்மணி தனக்குள்ளேயே பேசிக்கொண்டு திரிகின்றார் ,பிஜு மேல் ஈர்ப்பு வந்துவிட்டது போல,ஆனா ஐயா முகம்கொடுத்து பேசமட்டேன்கிறாரே.

    நன்றி

Leave a Reply