மன்னவன் பேரைச் சொல்லி மல்லிகை சூடிக் கொண்டேன் 13

ற்று தூரம் வரை மௌனமாகவே வண்டியை செலுத்திக் கொண்டிருக்கிறான் பிஜு.

ஊர் புறத்தைக் கடந்து, இரு பக்கமும் வயல் வெளியும் சாலை ஓரங்களில் பெரும் பெரும் மரமும் எப்போதாவது இவர்களை கடந்து செல்லும் காரோ அல்லது பேருந்தோ என்ற தனிமையுமான சாலைக்கு இப்போது இவர்கள் வந்து சேர,

இன்னுமே சில நிமிடங்கள் பொறுத்துப் பார்த்த ராதி, தன்னவனை ஒரு கையால் அவன் இடுப்போடு வளைத்துப் பிடித்திருந்தாளே, அந்தக் கையின் பிடியை இன்னுமாய் இறுக்கி அவன் முதுகோடு இன்னுமாய் அண்டினாள்.

“பஜ்ஜி பையனுக்கு என் மேலயா கோபம்?” மறுகை ஆள் காட்டி விரலால் அவன் பின் கழுத்தில் கோடு வரைந்தாள்.

தோள்கள் குறுக்கி அவனுக்குள் வந்து சென்ற சிலீர் சிலிர்ப்பை அவன் வெளியிட்ட போது,

“ஹேய் வாலு” என வந்த அவன் பதிலில் கோபம் வெகுவாகவே காணமல் போயிருந்தது. பின்ன இப்படி கொஞ்சினா அவன் எரிச்சல் எங்க நிக்கவாம்?

“உன் மேல எனக்கென்னபா கோபம்?” அவன் கேட்க,

“அப்ப என்ட்ட ஏன் பேசாம வர்றீங்க? உங்க கூட இருக்கணும்னு எவ்ளவு கஷ்டபட்டு பெர்மிஷன் போட்டு வந்துருக்கேன்?” இவள் சிணுங்க,

“ப்ச், கடுப்பாகுது எங்க…“ அவன் மீண்டும் எரிச்சலுடன் எதையோ சொல்லத் துவங்கினான்.

“அஹம் அஹம் ஒரு ஊரில் ஒரு ப்ரின்ஸ் சார்மிங் என இருந்தால், சுயம்வரத்துக்கு என நிறைய ப்ரின்ஸஸ் வருவதும், அதில் ஜெயித்தவரை தோற்றவர் குறை சொல்வதும் சகஜம்தானே” என இப்போது ராதி அரசர்கள் கால தமிழ் வகையில் தோரணையும் தொனியுமாய் குறுக்கிட,

“ஆனால் அப்படி போட்டியிட்டு என் ப்ரின்ஸ் சார்மிங்கை சைட் அடித்தவர்கள் கதையை நான் கேட்க தயாராய் இல்லாததாலும், அடிப்படையில் நான் கொஞ்சம் அல்ல வெகு அதிகமாகவே பொசசிவ் பெர்சன் என்பதாலும், இந்தக் கதையை இங்கேயே விட்டு விடும் படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்”  அடுத்தும் இவள் தொடர,

இங்கு இவன் எரிச்சல் சிரிப்பாய் சீன் மாறி இருந்தது.

இதன் பின் அவன் எப்படி அந்த பாகி கதையை சொல்ல முடியும்? அதோடு என்னதான் விளையாட்டு போல் சொல்லிக் கொண்டிருந்தாலும் அவன் மனைவி சொல்வதன் அர்த்தம் நீ எனக்கே எனக்கானவன், உன்னுடைய எல்லாமும் எனக்கு மட்டுமே வேண்டும் என்பதல்லவா?

அதில் அவனுக்குள் ஆயிரம் அழகிய ரோஜாக்கள்  மென்னிதழ் விரிக்க, அது புன் முறுவல் சிந்திய அவன் இதழில் காதலையும் இப்போது கலந்து வைக்க,

ராதியோ “பேசணும்னா நம்ம லவ் ஸ்டோரியப் பேசுங்க, அதெப்படிப்பா காலேஜ்ல என்னை கண்டுக்கவே மாட்டீங்க, ஆனா அன்றில் அண்ணி சொல்லவும் எப்படி உங்களுக்கு என்னை மேரேஜ் செய்துக்கலாம்னு தோணிச்சு? அண்ணி அப்படி என்ன சொன்னாங்க? சார் அப்படி எதுல டொபுக்கடீர்னு விழுந்தீங்க?” துள்ளலாய் இன்னுமாய் விசாரித்தாள்.

“ஹேய் என்னதிது?” என அதற்கு அவன் இவளுக்கு பதில் கொடுக்கத் துவங்கும் போதே,

அதுவரைக்கும் மண்வாசனையை சுமந்தபடி சிலீரென வீசிக் கொண்டிருந்த காற்று இப்போது சடசடவென ஒரு பரு மழையை கொண்டு வந்து இவர்கள் மீது கொட்டியது.

கற்கள் விழுவது போல் பெரும் பெரும் தூறலோடு வந்து விழுந்த அந்த மழையில் நொடி நேரத்துக்குள் இருவரும் தொப்பல் தொப்பலாய் நனைந்துவிட்டனர்.

ஆக தன் முழு கவனத்தையும் பிஜு பைக்கை செலுத்துவதில் காண்பிக்க வேண்டியதாயிற்று, இவர்களது இந்தப் பேச்சு இதோடு நின்று போயிற்று.

ராதிக்கு கிராமம் என்பது சற்றும் பரிட்சயமில்லாத விஷயம். அங்கு இப்படி எல்லாவற்றையும் முகத்துக்கு நேரேயே கேட்டு வைப்பார்கள் என்பதெல்லாம் அவள் கேள்வியுற்றிறாத ஒன்று.

அவளைப் பொறுத்தவரை திருமணம் முடிந்த பின், வேறு ஒரு வரனை ஏன் மறுத்தாய் என்று விசாரிப்பதே அநாகரீகம் என்றால், அதை பொதுவிடத்தில் வைத்து, அதுவும் உடன் வந்திருக்கும் இவளை சற்றும் அவருக்கு அறிமுகம் கூட இல்லை என்ற நிலையில், இவ்வாறு மனம் வலிக்கும் வகையாய்  விசாரிப்பதென்பது அநாகரீகத்தின் உச்சம்,

அதோடு சுயநலம், ஒரு வகையில் கோள்மூட்டுதல், சரியாய் சொல்வதென்றால் இவர்கள் ஏன் மகிழ்ச்சியாய் இருக்கிறார்கள் என்ற எரிச்சல், பொறாமை, வில்லத்தனம்.

ஆக அந்த பாட்டியின் வார்த்தைகளை மதிக்கவோ, சட்டை செய்யவோ, அதை கணக்கில் எடுத்து விளக்கம் கேட்கவோ அவசியம் இருப்பதாகவோ கூட அவளுக்கு அப்போதைக்குத் தோன்றவில்லை.

அதோடு இவளுக்கும் இவளவனுக்குமாய் கிடைக்கும் இத்தகைய ப்ரத்யேக நேரங்கள் மிகக் குறைவு. அதை எரிச்சலில் செலவழிப்பதில் அவளுக்கு துளியும் சம்மதம் இல்லை.

ஆக அந்தப் பேச்சைத் தவிர்த்து அவனை இலகு நிலைக்கு கொண்டு வரவே விரும்பினாள். அவனோடு இருக்கவென கிளம்பி வந்த நேரத்திலிருந்து அவள் தித்திக்க தித்திக்க அனுபவித்துக் கொண்டிருக்கும் மனோரம்யமும் காதலும் இதற்குத்தான் அவளை உந்தின.

ராதி இப்போது ஒரு கையால் மட்டுமல்லாமல் முயன்று இரண்டு கையாலுமே தன்னவனை வளைத்துப் பிடித்துக் கொண்டாலும் ஈரப் புடவைக்கும் நனைந்த இருக்கைக்கும் ஒத்துப் போகாமல் சறுக்குப் பிடி விளையாட்டு நடக்கிறதென்றால்,

நேர் எதிர் திசையில் இருந்து பெய்யும் மழை முகத்திலேயே அறைந்து பெய்வதால் பிஜுவால் சாலையை கவனிக்கக் கூட முடியவில்லை.

சற்று நேரம் இருவரும் சமாளித்து பயணம் செய்து பார்த்தவர்கள், அடுத்து சாலை ஓரத்தில் தெரிந்த ஒரு மூடப்பட்ட பெட்டிக் கடை போன்ற மர அமைப்பின் அருகில் நின்றுவிட்டனர்.

இங்கும் கண்ணுக்கு எட்டிய வரை வீடு ஆள் என எதுவும் இல்லை. இருந்தாலும் அப் பெட்டிக்கடைக்குப் பின்னாக ஏதோ கட்டுவதற்காக லாரி அளவு செங்கல் இறக்கப்பட்டு, மழை பெய்யும் திசைக்கு குறுக்காக ஆள் உயரத்திற்கு செவ்வகமாக அடுக்கி வைக்கப் பட்டிருக்கிறது.

அதை ஒட்டி இவர்கள் நின்று கொள்ளும் போது ஓரளவிற்கு இவர்கள் மேல் மழை விழாமல் தடுத்தது அது.

பெட்டிக் கடையோ சாலையில் எதாவது வாகனமோ ஆட்களோ வந்தாலும் இவர்களை காண முடியாதவாறு மறைத்து நின்றது.

கொஞ்சமாய் பாதுகாப்பாய் உணரத் துவங்கினாள் ராதி.

இருக்கும் இருட்டில் ஈரம் காரணமாக காலுக்கடியில் பூச்சி எதாவது வந்தால் அது ஆபத்தாகக் கூடும் என்பதால், செங்கல்கள் சிலவற்றை எடுத்துப் போட்டு தரையிலிருந்து சற்று உயரத்தில் நின்று கொள்ளலாம் என நினைத்து,

பிஜு இப்போது இரண்டு செங்கலை கை நீட்டி எடுக்க,

“ஐயோ அதுல பூச்சி தேள்னு எதுனாலும் இருக்கும்” என்றபடி அவனது கைகளைப் பிடிக்க முயன்றாள் அவன் மனையாள்.

“அதனால என்ன? அதான் சாக்குனு நான் ஜாலியா உன் ஹாஸ்பிட்டல்ல வந்து படுத்துப்பேன், நீ எல்லா நேரமும் பக்கத்துல இருந்து பார்த்துப்ப, ட்யூட்டிக்கு ட்யூட்டியும் ஆச்சு, ரொமன்ஸுக்கு ரொமான்ஸும் ஆச்சு” அவன் அசட்டையாய் துவங்கி ஹஸ்கி வாய்ஸில் முடிக்க,

அவன் சொல்லத் துவங்கியதில் இருந்து இருட்டில் அவன் குரல் வந்த திசை நோக்கி தோராயமாய் கை நீட்டி, அவன் முகம் எங்கும் கையால் துளாவி, அவன் வாயை மூடினாள் பதறிக் கொண்டிருந்த அவனவள்.

“பேச்சுக்கு கூட அப்படி சொல்லாதீங்க, என் பேஷண்ட்சை எல்லாம் பார்த்துடுவேன், ஆனா என்னோடவங்கள…. ம்ஹூம் என்னால தாங்கவே முடியாது. ஒரு டைம் அம்மாவுக்கு ஸ்டிச் போடுறதைப் பார்த்துட்டு நான் மயங்கில்லாம் விழுந்திருக்கேன்” ஏறத்தாழ அழுதுவிடுவாள் போல் வந்தது அவளது குரல்.

அவன் முகத்தின் மீதிருந்த அவளது கையைப் பற்றி எடுத்துக் கொண்டே “அச்சோ வட போச்சே, அப்ப வாழ்க்கைக்கும் எனக்கு கிடச்சது அந்த குண்டு டாக்டர் .கோமதிதானா?”  இவன் இப்போது சோகப் பட,

“ஆன் நீங்க ஏன் லேடி டாக்டர்ட்டலாம் போறீங்க?” .என இவன் எதிர்பார்த்தது போலவே மனையாள் ஆதங்கப் பட,

“லூசு அவர் பேர் கோமதி நாயகம்” இவன் வார,

ஒரு வகையாய் அவள் சிரித்து இலகுவாகி விட்டாலும், அவளது கை இன்னுமே இவனிடம்தான் இருந்தது.

முழுக்கவும் நனைந்திருந்த நிலைக்கும், வீசிக் கொண்டிருந்த சிலீர் காற்றுக்கும் ராதி நடுங்கிக் கொண்டிருந்தாள் எனில், இவனது கையோ அக்குளிரை சமாளிக்க இயல்புக்கும் மீறி சூடாகி இருந்தது.

இயற்கையின் இந்த ரசாயனம் அலாதிதான். அதோடு அது இவர்களை தம்பதியாய் இணைத்தும் வைத்திருக்கிறது.

இருந்த குளிருக்கு, இவனது கையைவிட்டு உருவிக் கொள்ளவெல்லாம் அவளுக்குத் தோன்றவே இல்லை.

இதில் மொபைலில் பிஜு தன் அலுவலகத்துக்கு அழைத்து, காரைக் கொண்டு வரச் சொல்லி முடிக்கும் போது, ஊசி ஊசியாய் குத்தும் குளிர் தாங்காமல் அவன் தோள் மீது சாய்ந்திருந்த அவன் மனைவி,

கண்ணைத் திறந்தாலும் மூடினாலும் ஒன்றாய் தோன்றுமளவு இருந்த அந்த இருட்டு மற்றும் ஆள் நடமாட்டம் என்பது சற்றும் அற்ற அந்த தனிமை தந்த தைரியத்தில், தாங்க முடியா குளிரை சமாளிக்க, அவளை மீறி அவன் மார்பினுள் புதைந்தாள்.

அவள் வெகுவாக நடுங்கிக் கொண்டிருக்கிறாள் எனத் தெரிந்தாலும், என்னதான் மறைப்பு இருந்தாலும், இது திறந்தவெளி என்ற ஒரு விஷயம் அவனுக்குள் உண்டு செய்திருந்த மனத்தடை காரணமாக, அதுவரைக்கும் அவளை அணைத்துக் கொள்ளாமல் நின்றிருந்த பிஜு,

அவளே வந்து அண்டிய பின் மெல்லமாய் அவளை வளைத்துக் கொண்டான்.

இவன் மார் மீது அவள் கன்னம் வைத்திருந்த இடம் இவனது சட்டையின் பட்டன்.

அது ஒரு அலங்கார மெட்டாலிக் பட்டன். சற்றாய் கூம்பு வடிவில் இருந்து சாய்ந்தவளின் கன்னத்தையும், சாயக் கொடுத்தவனின் மார்பையும் இப்போது அது பதம் பார்த்துக் கொண்டிருக்க,

சட்டையின் மேலிரண்டு பட்டன்களை திறந்துவிட்டு, அவளை தன் வெற்று மார்பில் சாய்த்துக் கொண்டான் அவன்.

நிமிடங்கள் கழிய,

“நிஜமா சுட சுட பஜ்ஜி மாதிரி இருக்கீங்க” என ஏதோ அவள் விளையாட்டாய்  சொல்லிக் கொண்டிருக்க,

கணவனானவனுக்கோ அந்த சிறுபிள்ளைத்தனமெல்லாம் சாத்தியப் படவில்லை.

சாக்லேட்டை வாயில் வைத்துக் கொள், ஆனால் ருசி பார்க்காதே என்றால் பாவம் பையன் என்ன செய்வானாம்?

இதற்குள் இரு கைகளாலும் அவளை வளைத்திருந்தவனின் கரங்களில் அவனை மீறிய ஆசையின் தேடல்.

பொது வெளி என ஒரு குணம் தடுக்க, மறு மனமோ அடுத்த அடி எடுக்க என, இரண்டுக்கும் இடையில் அல்லாடிக் கொண்டிருந்தான் அவன்.

மனைவிக்கும் அப்போது அவனது ஆசையும், அதற்கு அவன் போடும் தடையும் புரிய, மனதிற்குள் திட்டமிடத் துவங்கினாள் அவள்.

தொடரும்..

சென்ற எப்பிக்கு கமென்ட் கொடுத்த அனைவருக்கும் ஏராள நன்றிகள். இது ரொம்பவும் சின்ன எப்பிதான்.  நேற்றே போட நினைத்தது. விருந்தினர் சந்திப்பால் தாமதமாகிவிட்டது. அடுத்த எப்பி வியாழனன்று வரும்.

நன்றி

Advertisements

8 comments

  1. Ayyo ipo madam enna plan panranga?bajji payan solama vitathu ellam pin adi avanuku apu vai Kum pola..

  2. Wow superb update mam. Aanalum Bijuku Dr.Komathi thaan treatment kodukanum thalai ezhthu pola. Hmmm when did the car 🚗 reached and what happened next? Waiting eagerly for ur next update mam

  3. Semma romancu.🙈😂nalllla yosikkureenga.intha paiyanukkullayum etho irunthirukku paaren moment.ipdi pesa vidaamaa panniye sandaya mootti vidunga.😐seri pottum.sandai mudinju samaathaanam innum jora irukum😍

  4. Very nice Ji …. innaikku Raadhi than score pannita… enna maturity n analysis the problem really amazing …. possessiveness Irukku analum unnnai intha nodiyai naan spoil panna matten… aduthavar pechai ketkama athukku kodutha vilakkam …. you are awesome Raadhi 😍👌

Leave a Reply