மன்னவன் பேரைச் சொல்லி மல்லிகை சூடிக் கொண்டேன் 12 pg(2)

இதில் அடுத்து விழா முடியவும்,

“செல்வியக்காவுக்கு அப்போ உடம்புக்கு முடியல, அதான் அவளால உங்க கல்யாணத்துக்கு  வர முடியல, ஒரு எட்டு போய் பார்த்துட்டு வந்துடுயா, அவளுக்கும் நல்லா இருக்கும்” என இவர்களது பாட்டி சொல்ல,

“அம்மா அப்பால்லாம் வர்றப்ப இன்னொரு நாள் போய்கிறனே பாட்டி” என மறுத்தான் பிஜு.

“இல்லையா, வயசான கட்டைல, எப்ப என்னாகும்னு சொல்ல முடியாது, மரியாதைக்கு போய் ஒரு தடவை பார்த்துட்டு வந்துடு” என இப்போது பாட்டி அதிகமாக அழுத்தம் கொடுக்க,

“ஒரு பத்து பதினஞ்சு நிமிஷத்துல வந்துடுவேன் ராதிமா, அதுவரைக்கும் இங்க பாட்டி கூட இருந்துப்பியா?” என இப்போது இவளிடம் கேட்டான் இவள் கணவன்.

ஏற்கனவே தாமரை இலை தண்ணீர் போல் நின்று கொண்டிருந்த இவள் இப்போது இன்னும் பேக்க பேக்க முழிக்க,

பாட்டியோ “ஏய்யா பிள்ளைய இவ்ளவு தூரம் கூட்டிட்டு வந்துட்டு கண்ல காமிக்காம கூட்டிட்டுப் போன என்னல்லாம் பேசுவா செல்வி, கூட கூட்டிட்டுப் போயா” என இதற்கும் மறுப்பாய் சொல்ல,

இவளை அழைத்துக் கொண்டு கிளம்பிவிட்டான் பிஜு.

அடுத்து அந்த ஏதோ பாட்டி வீட்டுக்கு அவன் அழைத்துப் போவான் என ராதி நினைத்திருக்க,

அவனோ அவனை விட சற்று மூத்தவளாக இருக்கக் கூடும் அப்படி ஒரு பெண்ணின்  வீட்டுக்கு அழைத்துப் போனான்.

அதே தெருவில் அடுத்து மூன்று வீடு தள்ளி இருந்த அந்த வீட்டில் இவர்கள் நுழையும் போது,

அங்கிருந்த அந்தப் பெண் ஒரு வட்ட வகை முறம் போல இருந்த ஒன்றை மடியில் வைத்துக் கொண்டு, செவ்வகம் போன்ற வடிவில் வெட்டி வைக்கப்பட்டிருந்த இலை எதையோ வேக வேகமாக சுருட்டிக் கொண்டிருந்தாள்.

“என்ன சுசி அக்கா, நல்லா இருக்கீங்களா?” என்றபடி உள்ளே நுழைந்த பிஜு,

இவளிடம் “இது எங்க சுசி அக்கா” என வெகு தெளிவாக ?! அறிமுகப் படுத்தியவன்,

“என்னக்கா நீங்க அவ்ளவு சொல்லியும் பீடி சுத்றத விடலை போலயே?” என அந்த அக்காவை விசாரித்தான்.

அப்போதுதான் அந்தப் பெண் பீடி சுற்றிக் கொண்டிருக்கிறாள் என்பதே ராதிக்குப் புரிகிறது.

இவர்களைப் பார்க்கவும் பரவசத்தோடு தட புடவென எழுந்த அந்த சுசி அக்கா “வா தம்பி, வாம்மா புதுப் பொண்ணு”  என வாய் நிறைய வரவேற்றவள்,

அவசரமாய் அங்கே இருந்த பாய் ஒன்றை விரித்து இவர்களை உட்கார சொல்லிவிட்டு  அந்த ஒற்றை அறையை ஒட்டி இருந்த சமையலறைக்குள் சென்று குடிக்க நீர் எடுத்து வர,

ராதியோ அப்போதுதான் அந்த வீட்டின் எளிமையை பார்வையால் படித்தாள்.

“பின் பக்கத்த மறிச்சு இன்னொரு வீடா வாடகைக்கு விட்ருக்கேன்மா” என இவள் பார்வையை கவனித்தவளாக விளக்கம் சொன்னாள் அந்த சுசி.

‘அச்சோ இங்க ஒவ்வொரு பார்வைக்கும் கூட ஒவ்வொரு விதமா அர்த்தம் எடுப்பாங்க போலயே’ என ராதி திடுக்கிட்டுக் கொண்டிருந்த நேரம்,

“அவர் இருக்க வரைக்கும் ஓரளவு நல்லாதான்மா இருந்தோம், அவர் போன பிறகு நான் ஒருத்தியா ரெண்டு பிள்ளைங்க படிப்பு செலவையும் பார்த்துகிட்டு என்னத்த சமாளிக்க? இந்த வாடகைலாம் பத்து நாளைக்கு கூட பத்த மாட்டேங்குது,

இப்பல்லாம் கூலி வேலைக்கெல்லாம் அவ்ளவா ஆள் எடுக்றது இல்லைமா, எல்லாம் மெஷின வச்சே செஞ்சுடுறாங்க, அதோட அவ்ளவு வெயில்ல நின்னு பழக்கம் இல்லையா, அதான் இந்த பீடி சுத்றதுதான் கை கொடுக்கு” என இவளுக்கு விளக்கம் சொல்லிக் கொண்டிருந்தாள் அந்த சுசி.

“அக்கா டெய்லரிங் செய்யலாம்னு சொன்னனேக்கா” என இப்போது பிஜு இடையிட,

“அதுக்கு மெஷின் வாங்கதான் கொஞ்சம் காசு சேர்த்துகிடுவோம்னு பீடி சுத்திகிட்டு இருக்கேன்” என இப்போது அந்த சுசியிடம் இருந்து பதில் வருகிறது.

“நாளைக்கு மெஷின் வந்துடும்கா உங்க வீட்டுக்கு, அந்த சாந்திக்கா இன்னும் டெய்லரிங் க்ளாஸ் எடுக்கத்தான செய்றாங்க? அவங்கட்ட உங்களுக்குன்னு ஃபீஸும் கட்டிட்டுப் போய்டுவேன் இப்பவே, நாளைல இருந்து அங்க போய்டுங்க” என இப்போது ப்ரச்சனைக்கு தீர்வு சொன்ன பிஜு,

“உனக்கு எதுக்கு தம்பி அந்த சிரமமெல்லாம், அதெல்லாம் நான்…” என அந்த சுசி இப்போது மறுத்துக் கொண்டிருக்கும் போதே,

“ராதி டொபாகோ யூஸ் செய்றதால என்ன என்ன ப்ரச்சனை வர முடியும்னு கூகிள்ள இருந்து ஃபோட்டோ எடுத்து அக்காவுக்கு கொஞ்சம் காமி” எனச் சொல்ல,

டாக்ரம்மா அல்லவா இவள்? கொஞ்சம் பீதியாக இதெல்லாம் உண்மையா என அந்த சுசி இவளைப் பார்க்க,

கவனமாகவே ராதி நுரையீரல் புற்று நோயிலிருந்து, தொண்டை மற்றும் வாயில் வரும் புற்று நோய், பரலிடிக் அட்டாக், மாரடைப்பு என ஒவ்வொன்றையும் மொபைலில் ஃபோட்டோ காட்டி விளக்கத் துவங்கினாள்.

இப்படி இவள் பேசிக் கொண்டிருந்த நேரம், “நீங்க பேசிட்டு இருங்க, இப்ப வந்துடுறேன் நான்” என பிஜு வெளியே கிளம்ப,

நானும் உன் கூட வருவேன் என இப்போது வால் பிடிக்கத் தோன்றவில்லை ராதிக்கு.

பேசிக் கொண்டிருக்கும் விஷயம் அப்படியாயிற்றே!

இதைப் பற்றி பேசி முடித்து, அடுத்து அந்த சுசி தன் மகன் மகளுக்கு உள்ள சின்ன சின்ன உடல் நலப் ப்ரச்சனைகள் பற்றியெல்லாம் கூட விசாரித்து முடித்து, அதன் பின் ராதியின் அம்மா அப்பா பற்றியெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த போது மெதுவாக வந்து சேர்ந்தான் பிஜு.

கையில் ஒரு சீப்பு பழத்தோடு வந்தவன், “பிள்ளைங்களுக்கு கொடுங்கக்கா” என அதை கொடுத்துவிட்டு அடுத்து முறையாய் விடை பெற,

அவன் கடைக்குப் போய் வந்தான் என நினைத்துக் கொண்டாள் ராதி.

அடுத்து தாத்தா பாட்டியிடம் சொல்லிக் கொண்டு இப்போது ராதியோடு நெல்லை கிளம்பினான் பிஜு.

பாட்டி கேட்டதற்கு “ஆன் செல்வி பாட்டிய பார்த்தாச்சு” என அவன் முடித்துவிட, எதுவோ கொஞ்சம் சரி இல்லை எனப் புரிந்தது ராதிக்கு.

இதில் இரண்டு தெரு தள்ளி வரவும், அவன் பைக்கை நிறுத்திவிட்டு, வீட்டின் முன்னறையை டெய்லரிங்க் கடையாக்கி இருந்த ஒரு பெண்ணிடம் “நாளைல இருந்து சுசி அக்கா க்ளாஸ்க்கு வருவாங்க” என பணத்தைக் கட்ட,

அந்த நேரம் காதில் விழுகிறது அந்தக் குரல்.

“தெருத் தெருவா புதுப் பொண்டாட்டிய கூட்டிட்டு வர முடியுது, என் வீட்டுக்கு வந்து காமிக்க முடியல என்ன?” என.

‘போச்சு போ’ என்ற வகை பெரு மூச்சு ஒன்று பிஜுவிடம் எழுவதைக் காண முடிகிறது ராதிக்கு.

“இதுதான் உங்க வீட்டு மகராசியா?” என்றபடி இவள் முன் வந்து நின்ற அந்த முதிர்வயதுப் பெண்ணைப் பார்க்கவும் செல்விப் பாட்டி என்பது இவராகத்தான் இருக்க முடியும் என ஆராதனாவுக்கு  புரிந்து போயிற்று.

முகத்தில் ஒரு வித கந்தக அமில பாவத்துடன் இவளை ஏற இறங்கப் பார்த்த அந்த செல்விப் பாட்டி,

“எங்க பாகிய விட என்ன நல்லா இருக்கான்னு இவள கட்டிகிட்ட?” என ஆரம்பிக்கும் போது கந்தக அமிலம் ராதியின் மனதுக்கு இடம் மாறி இருந்தது. பிஜு ஏன் இவளை விட்டுவிட்டு இந்த பாட்டி வீட்டுக்குப் போனான் என்பதும் தெளிவாகவே புரிகிறது.

“பாட்டி” என வருகிறது ஒரு அதட்டல் பிஜுவிடம் இருந்து.

அதே நேரம் அங்கு வந்து சேர்ந்த நடுத்தர வயது ஆண் ஒருவர்,

“எய்யா நேரமாச்சு பாரு, பிள்ளய கூட்டிட்டு தூரமா வேற போக வேண்டி இருக்கு, நீ கிளம்பு” என பிஜுவிடம் சொன்னவர்,

“என்ன அத்த? கல்யாணம் முடிஞ்சு வீட்டுக்கு வந்த பிள்ளைட்ட இப்படித்தான் பேசுறதா? பாகி படிச்சுட்டுதான இருக்கா? படிப்பு முடியவும் நல்ல இடமா பார்த்துட மாட்டமா என்ன?” என அந்த செல்விப் பட்டியையும் சாந்தப் படுத்த முயன்றார்.

ராதிக்குமே இதுக்கு மேல் அங்கு நின்று பேசுவது நல்லது எதையும் செய்யப் போவதில்லை எனத் தோன்ற,

“கிளம்பலாம்பா” என தன்னவன்  காதில் முனங்கியவள், அவன் கையைப் பற்றிக் கொண்டு, பைக்கில் போய் ஏறப் போகிறவள் போல் அதன் அருகில் சென்று நின்று கொண்டாள்.

சுர் என்ற முகத்துடன் பைக்கில் ஏறிக் கிளப்பினான் பிஜு, இவள் பின்னால் ஏறிக் கொள்ள,

அங்கு அந்தப் பாட்டியோ,

“உங்க பொண்ணு டாக்டருக்கு படிச்சதால எங்களுக்கு வேண்டாம்னு சொல்லிட்டு, இப்ப டாக்டர் பொண்ணயே கட்டிட்டு வந்தா நியாயம் கேட்க மாட்டமா?” என .கேட்டுக் கொண்டிருந்தார்.

தொடரும்…

இன்று இரவுக்குள் அடுத்த பதிவு வெளியாகும் ஃப்ரெண்ட்ஸ். இந்தப் பதிவுக்கு கமென்ட்ஸை கீழே பதிவிடுங்கள். நன்றி

Advertisements

10 comments

  1. Wowww,enna maayam vachirukeengalo therila.unga ezhuthai padichaale urchaakamaa iruku.romba azhakaana cute epi.mozhi,kaathal scene laam azhaku.bajji dealing superrr.ellaar manasayum ellaa angle layum yosichu,athuku solution nu chumma asaththuraan…😍😍😍😍😍👌👌👌👌👌

  2. வாவ்…. சூப்பர் … சிஸ்…. பிஜு வாழ்க்கையில் நல்ல வெடியை அசறாமல் போட்டு விட்டது செல்வி பாட்டி… இனி அது எப்படியெல்லாம் வெடிக்கப்போகிறதோ…. பிஜு பார்த்து பத்திரமா இருப்பா இல்லாட்டி உன் பெருச்சாளி பிராண்டிட போகுது….

  3. After long time ippodan ud pakkuren happy ah irukku. But hw s ur health now? Take enough rest. Nice updates. Nalla understanding create aagura nerathula patti pugundhu kulappiachu. So enna nadkkapoguthu ini….? Waiting to read ur mesmarizing updates…… update soon pls

  4. Very nice Ud sweety story e maranthiduchu,eno biriyani um kodukapuliyum than mind la vanthute irukanga.thirumba Ella udyum padichitu vanthen.baji payan ena panni vachiruka no,ena prachanai varapoguthonu iruku.

Leave a Reply