மன்னவன் பேரைச் சொல்லி … மல்லிகை சூடிக் கொண்டேன் 10

அந்த கடல் காற்றுக்கும், அவளும் அவனும் என்ற நிலைக்கும் இன்றுதான் இயற்றி இருக்கும் தம்பதி என்ற உரிமை பதத்திற்கும்,

அவனின் தன்னவன் வகை தழுவலை தடம் பதம் மாறாமல் சுகம் என்றே உள்வாங்கினாள்தான். சுத்தமாய் சுகித்தாள்தான்.

ஆனால் ஆராதனாவிற்கு வேறு வகை பதற்றமெழுந்தது.

இப்போது உடனேயே திருமணம் செய்து கொள்ளலாம் என முடிவெடுத்தார்கள்தானே இவளும் பிஜுவும், உண்மையில் அதன் பின் இருவரும் இவ்வளவு நீண்ட நேரம் பேசிக் கொள்வதே இன்றுதான்.

ஆம் அன்றைய இவர்களது பேச்சு முடியும் முன்னம் அன்றில் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருப்பதாக இவளுக்கு அழைத்துவிட்டான் ஆதிக்.

அடுத்து ஒருவாரம் இது அது என பயம்காட்டிவிட்டே பிரசவம் நடந்தேற, முடிவில் தாயும் சேயும் நலம் என்றாகும் வரை, பிஜு ஆதிக்குடன் மருத்துவமனையிலேயே தங்கிவிட்டான்.

இவள் அவ்வப்போது சென்று அவர்களை பார்த்து வந்தாலும் நின்று நெடுநேரமாய் பேசும் சூழல் அமையவில்லை.

அதன் பின் ஜெட் வேகத்தில் நடந்தேற வேண்டி இருந்தது இவர்களது திருமணம்.

திட்டமிடாத ஒரு விழாதானே இது, ஆக பிஜுவுக்கு அவனது பல அலுவல்களை வேக வேகமாக செய்து முடித்தால் மட்டுமே, திருமண நேர்த்தில் ஓரளவாவது விடுமுறை எடுத்துக் கொள்ள முடியும் என்ற நிலை.

அதோடு இவர்கள் குடியேற வேண்டிய அப்பார்ட்மென்டையும் அவசரமாக தயார் படுத்த வேண்டி இருந்ததே! ஆக அவன் திருநெல்வேலிக்கு சென்றுவிட்டான். மேலும் பிஸியோ பிஸி.

சென்னையிலிருந்த இவளும் சட்டென ரசம் வைப்பது எப்படி என்பதிலிருந்து சடாரென புடவைகட்டுவது எவ்வாறு என்பது வரை அம்மாவிடம் அப்டேட் ஆக வேண்டி இருந்ததோடு, கல்யாண ஷாப்பிங்  என்ற பெயரில் கடை கடையாய் அலைய வேண்டியும் இருந்தது.

தூங்காம படிச்சு பரிட்சை எழுதின பிள்ளைய இப்படி சுத்த சுத்த விட்டா பாவம் அது என்ன செய்யுமாம்?

வீட்டுக்கு வந்துவிட்டாலே இந்த பெட்டுக்கு நான் அடிமை, இந்த பில்லோவுக்கு நான் உரிமைனு ஒரே தூக்க ராஜ்யம் வேறு அவளுக்கு.

ஆக அண்ணலும் பிஸி, அவனோட அன்னமும் பிஸியோ பிஸி.

இப்போதும் மூன்று நாள் முன்புதான் சென்னைக்கு வந்து சேர்ந்தான் பிஜு

இன்விடேஷன் கொடுக்கவென வந்து இவளை சில நிமிடங்கள் சைட்டடித்துவிட்டு போனதோடு சரி… ஹி ஹி நாங்க பொண்ணுக்கும் இன்விடேஷன் கொடுப்போம். கல்யாணத்துக்கு பொண்ணு வரலைனா என்னாகிறதாம்?

ஆக மொத்தம் கல்யாண வாழ்க்கையோட  எந்த ரெஃஸ்பான்சிபிலிட்டியையும் நீ எடுக்க வேண்டாம் என்ற பிஜுவின் வார்த்தை வார்த்தையளவாக மட்டுமே நின்றது.

அதன் ப்ராடிகல் சைடை இருவரும் இன்னும் திட்டமிட்டிருக்கவில்லை.

அதன் முதலும் முக்கியமானதுமான கான்ட்ராசெப்ஷன் அதாவது கருத்தடை விஷயங்களைப் பற்றி எதுவுமே இருவரும் பேசி இருக்கவே இல்லை.

அதில் அவன் இப்படியாய் அணைக்கவும் என்ன சொல்வதென்று புரியாமல் தன் கணவனைப் பார்த்தாள் ஆராதனா.

அவளுக்கு இந்த மாத பீரியட்ஸ் தொடங்கிய நாளிலிருந்து இன்று 15வது நாள். பத்தாம் நாள் முதல் 20 ஆம் நாள் வரை தம்பதிகள் எப்போது இணைந்தாலும் கரு உண்டாகும் காலமது.

அதிலும் 13ம் நாள் முதல் 16ம் நாள் வரை கருத்தரிக்கும் வாய்ப்பு 100%. ஒரே ஒரு இணைவு போதும் இவர்களுடைய எல்லா திட்டமும் தவிடு பொடியாக.

மருத்துவ மாணவியான ஆராதனாவுக்கு இது தெள்ளத்தெளிவாக தெரியும் என்பதால்தான் அப்படி ஒரு பார்வை அவளிடமிருந்து.

தன் கைக்குள் நின்றபடி முகம் மட்டும் தூக்கி தன்னவள் பார்த்த வகையில், இன்னுமே அவளை விடாமல், சின்னதாய் நெற்றி முட்டினான் அவன்.

“சொல்லுங்க டாக்டர் மேடம், இன்னைக்கு நமக்கு ரொம்ப ஸ்பெஷல் டே, அத ரொம்ப ரொம்ப ஸ்பெஷலாக்க என்ன செய்யனும் நான்?” என்றான்.

பிஜுவுக்கு ஆராதனா அளவுக்கு விளக்க விபரமாயெல்லாம் இந்த கான்ட்ராசெப்ஷன் விஷயங்கள் தெரியாது என்றாலும் அது அவர்கள் திட்டமிட்டிருக்கும் வாழ்க்கை முறைக்கு அவசியமென தெரியுமே. அதைத்தான் இந்த நிமிடம் இப்படியாய் அவளிடம் விசாரித்தான் அவன்.

அவளுக்கு என்ன வகையில் கருதடை விஷயங்களை கையாள வேண்டும் என தெரிந்திருக்கும், அவள் சொல்கிறபடி பார்த்துக் கொள்ளலாம் என நினைத்திருந்தான்.

ஆனால் அவனது  கேள்வியில் இது வெளியரங்கமாக இல்லையே, ஆக இதைத்தான் கேட்கிறான் என புரியவில்லை அவளுக்கு.

அவன் கூடலுக்கு ஆவலுறுகிறான் அதற்கு அனுமதி கோருகிறான் என்றாய் மாத்திரமே உணர்ந்தாள் அவள்.

எந்த ஒரு விஷயத்தையும் உணர்ச்சி வேகத்தில் இருக்கும் ஒருவர் முன்னிலையில் உடனடியாக மறுக்கும் சுபாவம் அவளுக்கு கிடையாதே! நேரம் பார்த்து நிலமை பார்த்துதானே பேசுவாள் அவள், ஆக அவனுடையே இந்த ஆசையின் அணைப்பில் நின்றவள்

இந்த உங்களோட ஆசைய இன்னைக்கு நிறைவேத்த வழியே கிடையாது என எப்படி சொல்ல என தடுமாறினாள்.

இதற்குள் அவள் கழுத்தில் முகம் புதைத்திருந்த அவனோ “என்ன வேணும்னு சொல்லு” என இன்னுமே இளக,

இப்போது ஆராதனாவின் பார்வை தீக்கோழியாகி, அதில் டிங்க் டிங்க் என மின்னல் வேறு வெட்டியது.

“என்ன வேணுமா? என்ன கிஃப்ட் கேட்கலாம்?” என ஒற்றைவிரலால் கன்னம்தட்டி வாய்விட்டு யோசித்தாள் அவள்.  அதாவது அப்போதைக்கு சூழலை திசை திருப்பினாள்.

ஏதோ விளையாடுகிறாள் என்பது வரை இப்போது பிஜுவுக்கு புரிகிறதுதான்.

இருந்தாலும் விளையாட்டுக்கு கூட அவள் எதையாவது வாய்விட்டால் அதை செய்து கொடுத்திட அத்தனை ஆசை இருக்கிறதே அவனுக்கு.

“என் ராதிப் பொண்ணு என்ன கேட்டாலும் கொடுத்துடலாம்” என்றபடி இன்னுமே அவளை தன்னோடு இறுக்கினான்.

“பொதுவா என்ன மாதிரி கிஃப்ட்ஸ் உனக்குப் பிடிக்கும்?” தன்னவளைப் பற்றி அறிந்து வைத்துக் கொள்ள முனைந்தான்.

“எனக்கு ஃப்ளூட் ம்யூசிக் சிடிதான் ஃபேவ்” தன்னைப் பத்தி சொல்லியும் வைத்தான்.

“எனக்கு எங்கம்மா அனுப்புற எல்லா கிஃப்ட்டுமே பேவ்” அடுத்த நொடி இப்படி வந்தது பதில் பாரியாளிடமிருந்து.

இங்கு கணவனோ கொஞ்சம் உருகிப் போனான். ‘பாவம் ஒற்றைக் குழந்தை, அதிலும் ஹாஸ்டல் வாழ்க்கை வேறு. அம்மாவுக்காக ரொம்ப ஏங்கி இருப்பாளா இருக்கும். இனி அப்படி அவள் ஏங்காம பார்த்துக்கிறது இவன் பொறுப்பு’ இவன் மனம் இப்படி அவளுக்காய் பரிந்து கொண்டிருக்க,

“ஏன்னா அம்மா மட்டும்தான் சின்னதோ பெருசோ எல்லா கிஃப்ட்டையும் பபிள் ரேப்பரால பேக் செய்து அனுப்புவாங்க, எனக்கு பபுள் ரேப்பரால விளையாடுறதுன்னா ரொம்பபபபப  இஷ்ஷ்ஷ்டம்.” என்றாளே பார்க்கலாம்.

இறைவா!!! என்றிருக்கிறது இவனது நிலமை.

இதில் இப்போது இவன் முகத்தைப் பார்த்தவள் “என்ன நீங்க? யார்ட்ட வேணும்னாலும் கேட்டுப் பாருங்க, பபிள் ரேப்பர்ல விளையாடாதவங்களே இருக்கமாட்டாங்க. கிரிகெட்ட விட இதுக்குத்தான் ஃபேன்ஸ் அதிகம் இருப்பாங்க” என பபிள் ரேப்பர் ப்ரேக்கிங்கை நொடியில் இந்தியாவின் தேசிய விளையாட்டாக்கியவள்,

“நான் எல்லாம் எப்பவும் பர்ஸ்ல ஒரு பீஸ் வச்சுருப்பேன்… டைம் கிடைக்கிறப்பல்லாம் விளையாடுவேனே…” என எக்சைட் ஆகினாள்.

“அதோட இதால நம்ம நாட்டயே நான் காப்பாத்தி இருக்கேன். இப்படித்தான் ஒரு டைம்…” என பீடிகையாய் ஆரம்பிக்கவும் செய்தாள்.

நாட்ட காப்பாத்றதா???!!!  அவன் அத்தனை செல்களும் அடித்துப் பிடித்து அட்டென்ஷனுக்கு வர,

“நான் எங்கப்பா கூட அவங்க அஃபீஷியல் பார்ட்டி போய்ருக்கப்ப வழக்கம் போல பர்சுக்குள்ள பபிள் ரேப்பர வச்சு உடச்சு விளையாடிட்டு இருந்தேனா… திடீர்னு ஃபயர் அலர்ட் அதோட பாம் அலர்ட்.  அவ்வளவுதான் மக்கள் எல்லோரும் பின் ட்ராப் சைலண்ட்ல இருக்க…  அங்க இருந்த பாம் ஸ்குவாட் மக்கள் இன்ச் இன்சா தேடுனாங்க.

பார்த்தா அது என் பபிள் ப்ரேக்கிங் சவ்ண்ட். அதுல இருந்து நான் எங்க க்வார்டஸ் முழுக்க பயங்கர ஃபேமஸ் யூ நோ” என சென்றது அவளது கன்ட்ரிய காப்பாத்தின கதை.

பிஜு நிலமை இப்போது எப்படி இருக்கிறதாம்?!

“எல்லோரும் உன்ன மொத்தாமலா விட்டாங்க?” மனதில் இருந்ததை  கேட்பான்தானே அவன்?!

“நோ நோ… இது என்ன சவ்ண்ட்னு தெரியாமதான, ரிதமடிக்கா வர்றதால இந்த புது ஸவ்ண்ட் எதுவும் வெப்பனா அல்லது பாமா இருக்குமோன்னு நாம டென்ஷனானோம், இப்படி அன்ஃபெமிலியர் சவ்ண்டை வச்சு எதிரி நம்மள டிவியேட் செய்துடக் கூடாதுன்னு, அதவச்சு ஆஃபீசெர்ஸெல்லாம் செமினார் போட்டு அத புது ஸ்டடியாவே ஆக்கிடாங்களா… அதனால அத கண்டு பிடிச்ச அடியனே ஆர்மிக்கே பாடம் சொன்ன ஆரான்ற ரேஞ்சுக்கு பெரியாளாக்கிட்டாங்க… ஸீ என்னால இப்படி பட்ட பெரிய ஆபத்துல இருந்துலாம் நம்ம நாடு நிரந்தரமா காப்பாத்த பட்ருக்கு” என்றவள்

“எங்க அப்பா போஸ்ட்டுக்காகவாவது என்னை யாரும் திட்டி இருக்க மாட்டாங்களா இருக்கும்” என முனங்கினாள் பல்ப் பாவ முகத்தோடு.

நிச்சயமாக அவள் சொன்ன நிகழ்ச்சியை நினைத்து சிரிக்கத்தான் வருகிறது பிஜுவிற்கு.

கூடவே அவள் இன்னும் மனதளவில் குழந்தைத்தனத்தை விட்டுவிட்டு முழுமையாக வெளிவராத நிலையில் இருப்பது போலவும் அவனுக்கு தோன்றுகிறது.

பின்ன ஃபர்ஸ்ட் நைட்ட பத்திப் பேசினா பொண்ணு பபிள் உடைக்கிறத பத்தி பதில் சொல்றாளே! முன்பும் அவன் ப்ரபோஸ் செய்ய கூட்டிப் போன அந்த மூன்லைட் டின்னரிலும் அவள் முழுக்க முழுக்க சிரிக்கத்தானே வைத்தாள். சிவந்தாள் கொண்டாள் என எதாவது உண்டா என்ன?

இன்னும் கொஞ்சம் டைம் போனாத்தான் இதிலெல்லாம் அவளுக்கு ஈடுபாடு வருமோ? அதோடு படித்துக் கொண்டிருக்கும் நிலையில் இது அவளுக்கு தேவையற்ற கவன சிதறலாக கூட அமையலாம்.

இப்படியெல்லாம் இவனுக்கு தோன்ற, அவளாக விரும்பி வரும் போது பார்த்துக் கொள்ளலாம் என ஒருவாறு முடிவுக்கு வந்துவிட்டான் அவன்.

இன்ஷாட் பபிள்ஸ் பத்தி பேசி அவன பயம்காட்டிட்டு பொண்ணு.

ஆக அடுத்து அவனே நெருங்காத போது, அவளுமே அதைப் பத்தி பேச அப்போதைக்கு விரும்பாதபோது, அப்படியே முடிந்து போனது அந்த இரவு.

மறுநாளே திருநெல்வேலியில் இவர்களது வீட்டுக்கு கிரஹப் பிரவேசம், தனிக்குடித்தன துவக்கம் என ஜெட் ஃபாஸ்ட்டில் ஆரம்பித்த வாழ்க்கையில்,

உண்மையில் ஸ்டூடண்ட் வாழ்க்கையில் எந்த மாற்றத்தையும் உணரவேயில்லை ஆராதனா.

அவளுக்கு அப்போது கல்லூரியில் துவங்கி இருந்த ஹவுஸ் சர்ஜன் பீரியட் என்பது ஒரு இடைவெளி இல்லாத ஓட்டத்தைப் போன்றது.

ஒரு நாளைக்கு இத்தனை மணி நேரம் இவர்களது பணிநேரம் என காலக் கணக்கீடு இருந்தலும் அதை பெயருக்கு கூட பின் பற்றாத வகை காலமது.

அரசுக் கல்லூரி மருத்துவ மாணவர்கள் அனைவரும் அரசு மருத்துவமனையில் வேலை செய்வர் அந்த காலகட்டத்தில். அரசு மருத்துவமனைகள் என்பது எப்போதும் கூட்டம் பொங்கி வழியும் ஸ்தலம் என்பதால், அதை சமாளிக்க எல்லா நேரமும் இவர்கள் மருத்துவமனையிலேயே கிடப்பது போன்ற ஒரு நிலை உண்டாகும்.

யார் வெகு நேரமாக தூங்கவில்லை, யாருக்கு இப்போதைக்கு வீட்டுக்கோ அல்லது விடுதிக்கோ போக நேரம் கிடைக்கவில்லை என்பதை மாணவர்கள் தங்களுக்குள்ளேயே கவனித்து

“போய் ஒரு மூனு மணி நேரம் தூங்கிட்டு வந்துடு மச்சி”  “நாத்தம் தாங்கல போய் குளிச்சுட்டு வாடி” என அவர்களாகவே தங்களுக்குள் டைம் மேனேஜ்மென்ட் செய்வதுதான் பெரும்பாலும் நடக்கும்.

இரண்டு நாளுக்கு ஒரு முறை வீட்டுக்கு செல்லும் நிலை அங்கு சாதரணம்.

ஆக இந்த நிலைக்கு உட்புகுந்த நம்ம ஆராதனா, அவள் சொன்ன நேரத்தில் மருத்துவமனையில் ட்ராப் செய்து, அவள் அழைத்த நேரத்தில் அடுத்த 5ம் நிமிடம் அவளை பிக்அப் செய்ய சென்று என இருந்த பிஜுவை, அப்போது மட்டும்தான் பார்த்தாள் என சொல்லிவிடலாம்.

மற்றபடி காரில் ஏறவும் தூங்க தொடங்கி விடுபவளை, வீட்டுக்குள் நுழையவும் பாய்ந்து போய் படுக்கையில் விழும் முன் கேட்ச் பிடித்து சாப்பிட வைப்பதே கணவன் தொழிலாக இருக்க, அங்கு இயல்பான பேச்சு வார்த்தைக்கு கூட வழி வாய்ப்பிருக்காதுதானே.

பிறகு எங்கே மற்றவைகளுக்கு இடம்?

குடும்ப நிர்வாகம் என்ற வகையில், தன் வீட்டில் சமையலுக்கு என ஒருவரும் மற்ற வேலைக்கு என ஒருவரும் வேலைக்கு இருக்கிறார்கள் என்பதை மட்டும்தான் ஆராதனா கேள்விப் பட்டிருந்தாள். மத்தபடி வீடு எப்படி நடக்கிறது என்று கூட அவளுக்கு தெரியாது.

குடும்ப ஸ்த்ரீயாய் அவள் தன் கணவனுக்கு செய்த ஒரே வேலை, நேரத்திற்கு ஃபோன் செய்து அவனை சாப்பிடச் சொல்வது மட்டும்தான்.

ஆனாலும் தம்பதியர் இருவரும் இந்த நிலையிலேயே படு திருப்தியாய் உணர்ந்ததால் மன நிறைவுக்கு குறைவில்லாமலே கழிந்தன நாட்கள்.

அப்பொழுதுதான் அந்த ஒரு நாளும் வந்து சேர்ந்தது.

அன்று ஆராதனா கவனித்துக் கொண்டிருந்த நோயாளிகளில் ஒரு விபத்துக்குட்பட்ட நபரும் அடக்கம்.

சந்திரன் என்பது அவனது பெயர். சில நாட்களுக்கு முன்புதான் அந்த சந்திரனின் மனைவிக்கு முதல் குழந்தை பிறந்திருக்கிறதாம். அதைப் பார்க்க வெளியூரிலிருந்து இங்கு வந்திருந்த அவனுக்கு விபத்து ஏற்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தான்.

கண்ணும் கருத்துமாக என்பார்களே அப்படி ஒவ்வொன்றையும் கவனித்து கவனித்து செய்து, இடையில் அவ்வப் போது சீனியர் டாக்டரை வேறு அடிக்கடி இந்த சந்திரனைப் பார்க்க அழைத்து வந்து, அதில் அவரிடம் ஓரிரண்டு முறை திட்டுக்களைக் கூட வாங்கி என அவளால் முடிந்த மட்டும் அந்த சந்திரனை காப்பாற்ற போராடிக் கொண்டிருந்தாள் ஆராதனா.

அன்றோடு அவள் வீட்டுக்குப் போய் இரண்டு நாளாகியிருந்தது. அதிலும் ஏறத்தாழ இருபது மணி நேரம் உட்கார கூட இல்லாமல் இவள் ஓடி அலைந்தபின் அந்த சந்திரன் உடல் நிலையில் ஒரு நிதானம் மற்றும் முன்னேற்றம் வந்திருந்தது.

அபித்தும் இவளது வகுப்புதானே, அவன் எத்தனை பிஸியாக இருந்தாலும் இவள் மீது  ஒரு கவனம் வைத்துக் கொண்டேதான் இருப்பான் அவன்.

அதன்படி இவளது நிலையை கவனித்திருந்த அவன், இப்போது பிஜுவுக்கு அழைத்து “நீ வந்து அண்ணிய கூட்டிட்டுப் போ” என இவள் மறுக்க வழியின்றி பிஜுவையும் வர வைத்துவிட்டு,

“இப்பதான் உன் பேஷண்ட் ஸ்டேபிள் ஆகியாச்சே, நீ போய் ஒரு டூ அவர்ஸாவது தூங்கிட்டு வா, இல்லனா உனக்கும் நல்லதுக்கு இல்ல, உன் பேஷண்டுக்கும் நல்லதுக்கு இல்ல” எனச் சொல்லி அனுப்பி வைத்தான்.

அவன் சொல்வதின் முழு நியாயமும் உணர்ந்தாலும் அரை மனதோடுதான் வீட்டுக்கு கிளம்பினாள் ஆராதனா.

வீட்டிலும் அவள் மனம் அலை கழிந்து கொண்டே இருக்க, சாப்பிட்டேன் என பெயருக்கு சாப்பிட்டு, தூக்கம் என்ற பெயரில் சிறிது நேரம் படுத்து உருண்டுவிட்டு, இதுக்கு மேல எனக்கு முடியாது, என்ன ஹாஸ்பிட்டல்ல ட்ராப் செய்துடுங்க ப்ளீஸ்” என பிஜுவை நச்சரித்து திரும்பவும் மருத்துவமனை வந்துவிட்டாள்.

ஆனால் வந்தவள்தான் நிலை குலைந்து போனாள். முதல் காரணம் அந்த சந்திரன் இறந்து போயிருந்தான்.

அழும் அந்த பிஞ்சுக் குழந்தையுடன் தன்னை அடித்துக் கொண்டு கதறிய சந்திரனின் மனைவியைப் பார்க்கவும் இன்னுமாய் தளர்ந்து போனாள் இவளெனில்

இறுதியில் ராதி கேள்விப்பட்ட செய்தியோ அவளை முழு மொத்தமாய் துவசம் செய்துவிட்டது.

வாய்விட்டு கதறினாள் இவள்.

 

அடுத்த பக்கம்

Advertisements