மன்னவன் பேரைச் சொல்லி மல்லிகை சூடிக் கொண்டேன் 7

ராதனா அப்பொழுதுதான் தூக்கத்தில் இருந்து எழுந்து நிற்பவள்….அதுவும் பதைக்க பதைக்க…..

அதோடு இவளுக்கு பிஜு மீது சில மாதமாகவே ஈர்ப்பென்பது என்னவோ உண்மைதான்…..

ஆனால் இன்றுதானே இவளிடம் பேச ஆரம்பித்தவன் அவன்…..

‘இவள் மீது அவனுக்கு விருப்பமோ… காதல் சொல்வானோ?’ என்றெல்லாம் அறிவின் சில உறுத்தல்கள் இன்றைய நாளில் இவளுக்கு வந்து போயிருந்தாலும்……அதற்கு கூட முக்கிய காரணம் பெரியவர்களின் பேச்சு என்றுதான் சொல்ல வேண்டும்…..

இன்னும் அவன் அந்த உப்மா சண்டை பத்தி கூட பேசி சாரி கேட்டுகல…. இதில் இப்படி போட்டு உடைப்பது போல் காதல் சொன்னால்….கேட்டிருக்கும் இவளுக்கு எப்படி இருக்கிறதாம்?

அவள் முழித்த முழியிலும் விஷயத்தை உள்வாங்க அவள் முகம் காட்டிய பே பே பாவத்திலும்தான் பிஜுவுக்கு தன் செயலின் ஆழமே புரிகிறது போலும்….

“சாரி….வெரி சாரி…” அவனும் இப்போது சற்றாய் திணற…

அதே நேரம் “டேய்ய்ய்!!!” என்றபடி இவனின் தோளைத் தட்டினாள் அன்றில்…..

பொங்கி வரும் பூரிப்பும் அதோடு போட்டியிடும் வெட்கம் கலந்த தர்மசங்கடமுமான அவள் முக பாவமே இவன் சொன்னது அச்சு பிசகாமல் அவள் காதிலும் விழுந்திருக்கிறது என தெளிவாக காட்டிக் கொடுத்தது….

“அப்பப்ப கொஞ்சம் எமோஷனாகிடுவான்…”

அவன் செயலை எப்படி நியாப்படுத்த என தெரியாமல்….குறையாக சொல்லவும் இஷ்டபடாமல் இப்படியாய் சூழ்நிலையை சமரசப் படுத்த முயன்ற அன்றில்

இப்போது ஆராதனாவின் முகத்தை பார்த்த பார்வையில்  சற்றாய் தாய்மை கலந்த பாசமும் ஒரு வகை அன்யோன்ய சிநேகமும் கூடவே

‘உனக்கு இது பிடிக்குதுன்னா உங்களுக்கு ப்ரைவசி கொடுத்து வெளிய போறேன்….இல்ல இது பிடிக்கலைன்னா உனக்கு இஷ்டம் இல்லாத எதுவும் இங்க நடக்காம பார்த்துகிறது என் பொறுப்பு’ என்ற செய்தியும் இருந்தது….

இது மட்டுமல்லாமல்  மறைக்கப்பட்டாலும்  அன்றிலிடம் தலைகாட்டிய உள்ளுறை பரிதவிப்புமே பிடிபட்டது ஆராதனாவுக்கு….

இவளின் அண்ணியாய் சக பெண்ணாய் இவள் உணர்வுக்கு முக்கியத்துவம் கொடுத்தாலும்,

எங்க பிஜுவ இவளுக்கு பிடிக்கலைனு சொல்லிடுவாளோ என அன்றில் பதறுவதும்  ஆராதனாவுக்கு புரிய…

சட்டென தன் முகத்தில் சின்ன புன்னகையை அணிந்து கொண்டு…..

“லைஃப் டைம்க்கும் என் சமையல சாப்டவே ஒருத்தங்களுக்கு தைரியம் இருக்கப்ப…. அவங்கட்ட நின்னு பேச கூடவா எனக்கு தைரியம் இருக்காது…? உங்க பஜ்ஜி பையன்ட்ட பேசிட்டே வர்றேன் அண்ணி” என குறும்பு கொப்பளிக்க அறிவித்தாள் இவள்….

அவ்வளவுதான் அப்படி ஒரு வெளிச்ச ப்ராவகம்  வந்து பாய்கிறது இப்போது அன்றிலின் முகத்தில்….

அதோடு “வாலு” என்றபடி இவள் காதை நோக்கி கை நீட்டியவள்….. பாதியில் முடிவை மாற்றி இவள் கன்னத்தைப் பற்றி மென்மையாய் முத்தம் வைத்தாள்….

“இதுதான் உன்ட்ட எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயம்…..உன் கூட யார் இருந்தாலும் எப்பவும் சந்தோஷமா மட்டும்தான் இருப்பாங்க…”ஆசையும் நிறைவுமாய் ஒரு பரவசத்தோடு இவளை ரசித்து சொன்ன அன்றில்…

“அவன கொஞ்சம் பார்த்துக்கோ” என இருவரையுமே கிண்டலடிக்கும் விதமாக சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பிப் போனாள்….

தன் பின்புறமாய் இரண்டு கைகளையும் கட்டிக் கொண்டு சற்றாய் தலைசாய்த்து தன் முன் நிற்கும் தன்னவன் முகத்தைப் சீண்டலாய் பார்த்துக் கொண்டு….

“அதெல்லாம் நல்லாவே பார்த்துப்போம்” என வெளியேறிக் கொண்டிருந்த அன்றிலுக்கு பதில் கொடுத்தாள் ராதி…..

எதிரில் நிற்கும் பிஜு இதற்கு மேலும் தவிப்பானாமா அல்லது திணறத்தான் செய்வானாமா?

முழு உரிமையோடு முகம் பார்த்து நிற்பவளை “ரௌடி” என்றான் அவன் ரசிகனாய்..

“அஹம்…அஹம்…இப்டில்லாம் பேச ஒருத்தர்க்கு எந்த ரைட்டும் கிடையாதாம்…” என்றாள் பார்வையை எங்கோ வைத்துக் கொண்டு  போலி விட்டேத்தி பாவனையில்…

“சாரி சொல்லி விஷயத்தை வாபஸ் வாங்கிட்டீங்க” என காரணமும் கொடுத்தாள்….

“ஹேய் நான் சாரி சொன்னது சொன்ன விதம் தப்புன்றதால….. சொன்ன விஷயம் தப்புன்னு நான் மீன் பண்ணவே இல்ல….” என விளக்கம் சொன்னவன்

ஒரு ஆழ்ந்த பார்வை பார்த்தான் இவளை…

“எனக்கு ஐ லவ் யூன்னு சொல்றது ரொம்ப ஆர்டிஃபீஷியலா என்னமோ போல இருக்கு….. அதனால உன்ன ரொம்ப பிடிச்சுருக்குன்றத எப்படி சொல்லன்னு தெரியல” என்றான் அடுத்து…

இதற்கு மேலும் அவன் முகத்தை எப்படி பார்த்துக் கொண்டிருப்பாளாம் இவள்…. மெல்லியதாய் ஒரு வெட்கம்….அவன் கண்களைக் காண ஒரு தயக்கம்….. அரை நொடி அவன் பார்வை தவிர்த்தவள்…..

அவனிடம் வெட்கத்தை வெளியிடவும் வெட்கம் உண்டாக…. ஒருவழியாய் தன்னை சமாளித்து மீண்டுமாய் அவன் கண்களைப் சந்தித்தாள்.

அவள் தடுமாற்றம் அவனுக்கு மட்டும் புரியாதாமா என்ன?

அதற்கு மேல் அவளை அவஸ்தை படுத்த மனமற்றவனாய்…. அவளை சிவக்க வைக்கும் கெஞ்சலோ கொஞ்சலோ எதுவுமின்றி

“கொஞ்ச நேரம் என் கூட வெளிய வந்துட்டு வர முடியுமா ராதி?…உன்ட்ட கொஞ்சம் பேசனும்” என இயல்பாக அழைத்தான்…

டுத்தென்ன  ஆதிக்கிடம்  சொல்லி அனுமதி வாங்கி கிளம்பினர் இருவரும்…..

அதோடு அன்றிலுக்கு அன்று உடல்வேறு சற்று படுத்துவதாக தோன்ற ஆதிக் அவளுடன் இங்கு தங்குவதாக முடிவாகிட….

ஆராதனாவை ஆதிக்கின் வீட்டில் விட்டு வரும் பொறுப்பும் பிஜுவைச் சார்ந்தது…

பிஜு இவளை அழைத்துப் போனது ஈசிஆரில் இருந்த ஒரு வீட்டிற்கு…..

ஒரு ஏக்கர் அளவிற்கான இடத்தை வளைத்தபடி நின்ற அதன் சுற்றுசுவரில் இருந்த கேட்டை இவர்களுக்கு திறந்துவிட்டது அபித்….

“வாங்க அண்ணியாரே” என ஒரு வகையாய் வரவேற்றான் அவன்…

அத்தனை கிண்டல் அத்தனை நக்கல்  என சில நிமிடங்கள் இவர்கள் இருவரையும் கலகலக்க செய்த அவன் அப்படியே அங்கிருந்து கழன்டு கொள்ள…

இப்பொழுதுதான் கவனிக்கிறாள் இவர்கள் பேசியபடியே அந்த வீட்டின் பின் புறம் இருந்த கடலடிக்கு வந்திருக்கிறார்கள் என…

அடுத்த பக்கம்

Advertisements

12 comments

  1. Hi mam

    ஆராதனா இன்று காதல் சொல்வாரோ என்று காத்திருக்க பிஜு நேராக திருமணம் வரை போய்விட்டார்.

    நன்றி

Leave a Reply