மன்னவன் பேரைச் சொல்லி மல்லிகை சூடிக் கொண்டேன் 6

முதலில் அவளுக்கு புரிந்த விஷயம் இந்த பிஜு சொன்னதுதான்….. அன்றில் ஆதிக்கிற்காக செய்வது போல் இவள் அவனுக்காக செய்றான்னா வேற என்ன அர்த்தம் இருந்துவிட முடியுமாம் இவனது பேச்சுக்கு….

இவளுக்கு அவன் மேல் விருப்பம் இருப்பதை அவன் தெரிந்து வைத்திருக்கிறான் அதை அவன் ஆமோதிக்கவும் செய்கிறான்…அப்படித்தானே அர்த்தம்…..

இதே கோணத்தில் யோசித்தால் வீட்ல பெரியவங்க கேள்வி பலதும் இவர்கள் திருமணத்தை மனதில் வைத்தே கேட்க பட்டது போல் இப்போது தோன்றுகிறது….

ஒரு புறம் சடசடெவன சந்தோஷப் பறவைகள் அவள் எல்லை எங்கும் இறக்கை அடித்தாலும்….. சுகானந்தம் ஒன்று எங்கிருந்தோ வந்து கொட்டித் தீர்த்தாலும்… ஏதோ ஒன்று அவளை ஆர்பரிக்கவெல்லாம் அனுமதிக்கவே இல்லை….

‘பிஜு உட்பட யாருமே எதையும் இவட்ட நேரடியாக சொல்லவே இல்லை….. கல்யாணம் செய்ய விரும்பினா ஒருத்தன் இப்படித்தான் சுத்தி வளச்சு  சொல்வானா?

காலேஜ்ல வச்சு கன்னாபின்னானு கழுத்து சுளுக்குற அளவு வெட்டிகிட்டு அலஞ்சவன் டபக்குன்னு இப்ப பேசிட்டா அதுக்கு பேரு காதலா?

எதையோ எதையோவா கற்பனை செய்துக்க இவ தயாரா இல்ல…எதுனாலும் முதல்ல அவன் ஓபனா பேசட்டும்…’ விஷயத்தை அப்படியே ஆறப் போட்டாள்..

இல்லை போட நினைத்தாள்…. ஆனால் மனம் என்ன நாம் வெட்டி எடுக்கும் துண்டு காகிதமா நாம் விரும்பும் அதே வகை வடிவில் அமைந்து வர…?

கடுமையான பரபரப்பும்…கடலளவு நிலையற்ற நினைவுகளும் அவளை கடுகாக்கி தாழித்தன…. அலையையாய் அலைக்கழிக்கப்பட்டவள்….

“இந்த அணில் என்ன படுத்ற பாடுக்கு அவ உங்களுக்கு அரராட்சியா….முழுசுன்னு சொல்ல மனசு வரல என்ன….?”  என ஆதிக்கிடம் கேட்டுக் கொண்டிருந்த பிஜுவை தாண்டி

தன் அண்ணனிடம் “நான் நம்ம வீட்டுக்கு கிளம்புறனே” என கேட்டாள் இவள்….

இவள் வார்த்தையில் சட்டென அங்கு ஒரு அமைதி வந்து நின்றது.. இவளைத் தவிர மற்ற மூவருமே சற்று அதிர்ச்சியும் கொஞ்சம் ஒவ்வாமையுடனும் பார்த்தனர்…. கரிசனையும் கவலையும் கூடவே…

இங்கிருப்பது இவளுக்கு இலகுவாக இல்லை என்பதால் இப்படி சட்டென கிளம்புகிறாள் என அவர்கள் நினைப்பது இவளுக்கு புரிகிறதே…

“சீக்கிரமா தூங்கினா கொஞ்சம் பெட்டரா இருக்கும்….நேத்து வரை சரியான தூக்கமே இல்லை….”  என காரணம் சொல்லி சூழ்நிலை சமாதானத்தை நிலை நிறுத்த முயன்றாள் இவள்…

இதுவும் உண்மைதானே… நேத்து வரை பரீட்சைக்கென தூக்கம் தொலைத்திருந்தவள்தானே இவள்…

ஆதிக் இப்போது ஏதோ சொல்ல வர…. அதற்குள்

“நானே உன்ன ட்ராப் பண்றேன்….. ஆனா  அதுக்குள்ள எங்க வீட்டுக்கு ஒரு டைம் போய்ட்டு வந்துடலாம் ராதி” என சொல்லியபடி பிஜு இப்போது இவளுக்கு முன்பாக நடக்க துவங்கிவிட்டான்…

ஆதிக்கைப் பார்த்து அனுமதியும் சம்மதமுமாய் தலையை ஆட்டிவிட்டு கிளம்பிவிட்டான் அவன்…

இவளுக்கோ ஒரு புறம் மறுப்பு சொல்ல மனம் வருகிறதென்றால்…இன்னொரு புறம் அதற்கு நேர் எதிராயும் ஒரு உணர்வு….

அன்றிலை முகம் வாடவைத்து இங்கிருந்து கிளம்ப இவளுக்கு சுத்தமாய் இஷ்டம் இல்லை….. அதோடு இவளது அண்ணாவையும் அவனது மாமனார் வீட்டில் விட்டுக் கொடுத்தது போல் இருக்குமோ……?

ஆக  இப்போது பிஜுவை பின் தொடர்ந்தாள் இவள்..

கூடவே எங்கோ ஒரு ஆழத்தில் மனம் திறந்து இந்த பிஜு எதுவும் சொல்வானோ என்றும் ஒரு எதிர்பார்ப்பு இவளுள்ளே…

அடுத்த பக்கம்

Advertisements

10 comments

 1. Kandipa misunderstand panipa nu nenaikren. Adhavadhu, Biju ava studies apo disturb panradhu kudadhunra nalla ennathula apdi anril kita pesirukalam. Udane ponnu enavo avan ivala pidikama nirpandhathula ipdi kekranu nenaipalo???? Waitinggggg for the next dishyum dishyum

 2. Sema interestingana update mam. Super suspensela niruthi irukenga mam. Why all of a sudden Biju proposed to Aradhana in this way ? And why he was talking to Andril like that? Did Aradhana mistook anything? Waiting for your next post eagerly mam.

 3. Kadavule biju ena mean panni sonano
  Kandipa radhi thappa dhan eduthupa
  Innum ena sandai vara pogutho.. ..
  Nice update sis.

 4. Interesting update Sweety sis.. Aara enna feel pandraa… ? Ippo Biju edhukku Andril kitte kobapadraan? Idha Aara thappa eduthuppala… waiting to know more sis.. & unga narration style . ppa… sema sis…

 5. Hi mam

  தூங்கி எழுந்து வரும் பெண்ணிடம் நல்ல கேள்வி கேட்டார் பிஜு,சும்மாவே எதையும் எக்குத்தப்பாய் புரிந்துக்கொள்ளும் ஆராதனா இப்போ என்னத்தை செய்வாரோ பேசுவாரோ தெரியவில்லை.

  நன்றி

Leave a Reply