மன்னவன் பேரைச் சொல்லி….மல்லிகை சூடிக் கொண்டேன்…. 5

விழா முடியவும் அன்றில் பக்க உறவினர்கள் எல்லோரும் வெவ்வேறு  வாகனங்களில் கிளம்ப….. ஆதிக்கும் அன்றிலும் அவர்களுடைய காரிலேயே கிளம்புவதாக ஏற்பாடு…. கூட ஆராதனா  மற்றும் பிஜு …

இவர்கள் அனைவரும் கார் அருகில் வர

“மச்சான் நான் வேணா ட்ரைவ் பண்றனே….” என  வேண்டுகோள் வைத்தான் பிஜு….

“டேய் பஜ்ஜி லாஸ்ட் 7 மாசமும் அவங்கதான்டா எனக்கு கார் ட்ரைவ் பண்ணிட்டு இருக்காங்க…” என  இடையிட்டாள் அன்றில்.

அப்போதுதான் அன்றிலுக்காக மெல்ல ட்ரைவ் செய்ய வேண்டும் என பிஜு இப்படி கேட்டிருக்கிறான்  என ஆரதனாவுக்கு புரிந்தது…

அதற்குள்  அன்றில் “ஆரம்பமே 140 லாம் அப்போ…..இப்பல்லாம் எப்பவுமே 100க்கு மேல போகவே மாட்டாங்க…… அதுவும் இப்போ 40தான் லிமிட்” என பிஜுவிற்கு ஒரு விளக்கம் கொடுத்தவள்….கூடவே “என்னப்பா” என சலுகையும் பாராட்டுமாய் கேட்டபடி அருகிலிருந்த ஆதிக்கின் தோளில் கை வைத்து சற்றாய் சாய்ந்து கொண்டாள்…

“மாப்பு நான் கால்ல விழுற கதையெல்லாம் இப்ப எதுக்கு பப்ளிக்ல  இழுக்க….”  என கிண்டலடித்தபடி  ஆதிக் இப்போது காரின் ட்ரைவர் இருக்கையில் சென்று அமர…

“மச்சான் இதெல்லாம் நான் இழுத்துவிட்டுதான் தெரியனுமா…? எப்பவும் உள்ளதுதானே….”  என நக்கலடித்தபடி அன்றிலுக்கு ஆதிக் பக்கம் அமர காரின் கதவை திறந்துவிட்ட பிஜு…

“ஆனாலும் இந்த 100 அ நம்பவே முடியல  மச்சான்….. இந்த அனிக்கு  எப்பவுமே அறிவு கிடையாதே….அப்றம் எப்டி இப்டி….?  வெறும் 140….இதெல்லாம் ஒரு ஸ்பீடான்னு ஏத்திவிடுவாளே?”  என்றபடி அன்றிலுக்கு நேர் பின் இருக்கையில் அமர்ந்தான்…

திரும்பி அவன் தலையில் நச்சென ஒரு குட்டு வைத்தாள் அன்றில்….  “எனக்காடா அறிவு கிடையாது,….. உன் கூட சேர்ந்துதான் இல்லாம போயிருக்கும்….”

“ஆக மொத்தம் எப்டியும் இல்லதானே…” இது பிஜு…..

இப்போது மறுபடியும் பின் புறம் திரும்பி இவன் தலையில் ஒன்று வைத்தாள் அன்றில்….

இதுவரைக்கும் குறும்பும் கேலியுமே முகபாவமாய் இருந்த பிஜுவின் முகம் சட்டென அக்கறையும் அது சார்ந்த கோபமுமாய் மாறுவதை கவனித்தாள் அவனுக்கு அடுத்த இருக்கையில் அமர்ந்திருந்த ஆராதனா… அப்போதுதான் தான் அவன் ஒவ்வொரு அசைவுகளையும் எப்படி கவனித்துக் கொண்டிருக்கிறோம் என்பதே இவளுக்கு புரிகிறது…

“ப்ச்….. இப்டி வெடுக் வெடுக்குனு திரும்பாத கழுத….” அன்றிலை அதட்டிய பிஜு…..ஆராதனாவிடம் திரும்பி “ நீ சொல்லு ராதி இப்டில்லாம் செய்யக் கூடாதுன்னு” என இவளிடம் ரெக்கமென்டேஷனுக்கு வந்தான்…

பிஜுவுடன் பேசத் துவங்கியதிலிருந்து அவனை கவனித்திருந்த ஆராதனாவுக்கு இவளிடம் ஏதோ வெகுவாய் பழகிய உறவு போல் பிஜு  பேசிப் பழகுவதைவிடயும் கூட, அன்றிலிடம் மட்டும்  கிண்டலும் வாரலும் உரிமையும் உள்ளார்ந்த அன்பும் உச்சத்தில் வைத்துப் பேசிப் பழகுவதாய் படுகிறது…..  இந்த காரியம் அவளுக்கு மிக மிகவுமே பிடித்தும் இருக்கிறது….

ஒரு கணம் இவளிடமும் கூட அவன் அப்படி பழகினால் நன்றாக இருக்குமே என ஒரு ஏக்கம் தோன்ற…..மானசீகமாக தன் தலையில் தானே குட்டிக் கொண்டவள்….  பிறந்ததில் இருந்து அவங்க ஃப்ரெண்ட்ஸ் அந்த உறவ ஒரு நாள்  பழக்கத்துல இவ எதிர்பர்த்தா எப்படியாம்…என தனக்குள் தெளிந்து முடிக்கும் போது…

முன்னிருக்கையிலிருந்த அன்றில் அரையும் குறையுமாய் திரும்பி இவள் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாளாகில்…. அடுத்திருந்த பிஜுவோ முழுதாகவே திரும்பி இவள் முகம் பார்த்துக் கொண்டிருந்தான்…

அன்றில் முகத்தில்  ஒருவிதமான புன்னகை இடம் பிடித்திருக்கிறது என்றால்….. பிஜுவோ  ஏத்தி இறக்கிய புருவங்களாலே என்னாச்சு என்றான் கேள்வியாய்…. மெல்ல உறைக்கிறது இவளுக்கு…இவட்ட அவன் எதோ கேட்டான்…..இவளோ கனவு கண்டுட்டு இருந்திருக்கா…

அடுத்த அவளது முழியில் அன்றில் ஒருவித  சிறு சிரிப்புடன் முன் புறமாய் திரும்பிக் கொள்ள….

“கைனக்காலஜி படிக்கலைனா பரவாயில்ல…” என்றான் பிஜுவோ… ‘அதுக்காக இப்டி முழிக்காதன்னு அர்த்தமா?’ அவன் சொல்ல வந்ததின் அர்த்தத்தை இப்படி புரிந்து கொண்டாள் இவள்.

எதோ ஒன்று சிலீரென கொட்டி வைத்தது இவளுக்குள்…. தேன் கொடுக்குகள் மனவெளியில்….. இத்தனை நேர இவளுடனான பிஜுவின் உரையாடலில் அன்யோன்யம், அழகான உரிமை எல்லாம் இருந்தாலும் இது நிச்சயம் வேறு வகை…. இவளோட பார்வைய ஹேண்டில் செய்ய முடியலைனு சொல்றானே….. இதை எப்படி எடுக்கவாம்?

ஆனால் இந்த புரிதலின் அடுத்த நொடியே அளவில்லாத வகையில் சட்டென மிரண்டு போனாள் அவள்…

ஏதோ வகையில் பிஜுவுடன் ஒரு இலகுநிலை உறவிருந்திருக்கலாம் எனதான்  அந்த உப்மா தினத்திலிருந்து இவள் ஏங்கிக் கொள்வது……ஆனால் அதைத் தாண்டி எதையும் இவள் யோசித்ததே இல்லை…. (ஆத்தீ…. அப்படின்னா வெறும் சும்மா ஃப்ரெண்டா இருக்றதுக்காகவா அவன் உப்மா கிண்டுணதெல்லாம் போய் ஆராய்ச்சி செய்துட்டு இருந்த?)

இதில் இப்போது இவள் மனம் அவன் வகையில் எத்தகைய உறவை எதிர்பார்க்கிறது என்பது அவளுக்கு சற்றாய் புரிபடுகிறது (ஓஹோ பல்ப் வாங்குறதுல இருக்ற ஸ்பீடு பொண்ணுக்கு பல்ப் எரியுறதுல கிடையாது போல)….

அரண்டு போனாள் இவள்…. ஆனால் சற்று நேரத்துக்கெல்லாம் ‘இது ஜஸ்ட்ட அட்ராக்க்ஷன்… சரியா போய்டும்’ என்றவிதமாய் தன்னை தேற்றியும் கொண்டாள்… படிச்சுகிட்டு இருக்ற காலத்துல இப்டி வர்ற நினைப்பை மதிக்க இவளுக்கே பிடிக்கவில்லை… ‘இஞ்சினியரிங்கோ மத்ததோ எடுத்து படிச்சிருந்தா இப்ப படிச்சு முடிச்சுருப்பியே….. அப்படின்னா மெடிசின் எடுத்ததால மட்டும் மேரேஜபத்தி யோசிக்க தெரியாத சின்ன பொண்ணா போய்ட்டியோ’ என உள்ளுக்குள் ஒன்று முறுக்கினாலும் இவள் முடிவுதான் இவளுக்கு நியாயமாக பட்டது…. இதில் சற்று கடுகடுப்பும்…. ஒரு சோர்வுமான நிலையிலேயே  அன்றில் வீட்டை அடைந்தாள் இவள்…

விழா வீட்டில் இருந்த பெரும்  கூட்டம் போல இங்கு  இல்லை எனினும்….அன்றிலின் பெற்றோர் அத்தைகள் மாமாக்கள் பெரியம்மா பெரியப்பா என  ஒரு சிறு குழுமம் இங்கும் இருக்க….

முதல் முறை இவள் இங்கு வந்திருப்பதாலயோ என்னமோ….எல்லோரும் ஒரு வித ஆவலாகவே இவளை இழுத்து வைத்துப் பேச… முடிந்தவரை eeeeeeee என்ற நிலையிலேயே  அவர்கள் மத்தியில் இவள்…..

எல்லோரும் பெரியவர்கள்….அவர்களிடம் ரொம்பவும் தன்மையாகவே நடந்துகொள்ள இவளுக்கு வாஞ்சை என்றபோதிலும்…..ஏற்கனவே சற்று சோர்ந்திருந்த மனமல்லவா….  ஓரளவு நேரத்திற்குப் பின் எங்காவது தனிமை கிடைக்காதா என ஒரு தேடல்  இவளுக்குள்  குடையத் துவங்கியது…..

அன்றிலின் வீட்டு டூப்ளக்‌ஸ் வரவேற்பரையில் இவர்கள் எல்லோரும் உட்காந்திருக்க….. மெல்ல மேலே கண்களை சுழற்றினால்….

இந்த பிஜு அன்றில் எல்லோரும் மாடி லாஞ்சில்  கண்ணில் கிடைத்தனர் இவளுக்கு…. அன்றிலை ஏதோ சொல்லிக் கொண்டிருந்த பிஜு இவள் பார்த்த நொடி எதேச்சையாய் இவளை திரும்பிப் பார்த்தான்….

சட்டென  பார்வையை தவிர்த்துக் கொண்டாள் இவள்… முடிந்த வரை அவனை தவிர்க்க முடிவு செய்திருந்தவளுக்கு….இப்போது இப்படி நடந்து கொள்ளத்தான் வருகிறது….

அதோடு அத்தனை பேர் அதுவும் அவனுடைய அம்மா அப்பா வரை இவள் அருகில் இருக்க….இங்கிருந்து அவனைப் பார்ப்பதே இவளது பெண்மையின் இயல்புக்கு  சரியாக படாமல் போக….. அடுத்து அவன் புறம் இவள் திரும்பவே இல்லை….

ஆனால் அடுத்த 60 நொடிகளுக்குள்….. “என்ன பெரிய தலைங்கட்ட ஒரு பெருச்சாளி மாட்டிகிச்சு போல…” என்றபடி இவள் அமர்ந்திருந்த சோஃபாவின் கைப்பிடியில் இவளுக்கு அடுத்து வந்து  இயல்பாய் உட்கார்ந்தான் அவன்.

‘என்னது பெருச்சாளியா???!!!! உவக்….’ என்றெல்லாம் இவளுக்கு இருந்த போதிலும்….. அத்தனை பேர் முன் அவனைப் பார்ப்பதே முந்திய நிமிஷம் சரியாய் படாத போதும்…. அவனை தவிர்த்தாக வேண்டும் என அறிவோடு தீர்மானித்திருந்த போதும்…. இப்படி வந்து அவன் அமர்ந்து கொண்டது  அவளுக்கு மிகவுமே பிடிக்கின்றது…

அடுத்து அவனும் ஜோதியில் ஐக்கியம் போல் அத்தனை பேருடனும் சரிக்கு சரியாய் பேசிக் கொண்டிருந்தான்….இப்போது இவளுக்குமே வெகு இயல்பாக அவர்களிடம் பேச முடிகின்றது…. தனிமைத் தேடல் எல்லாம் சற்றும் இல்லை இவள் எண்ணவரிசையில்….

அவன் செய்கையில் உண்டாகிய குழப்பமற்ற தெளிவும் நிறைவுமான ஒரு மனநிலையே இப்போது இவள் குழம்ப போதுமான காரணமாகிறது…

இவன என்னதா நினைக்கனும் இவ….? எப்படி நடந்துகொள்ளனும் இவன்ட்ட??..

சற்று நேரத்தில் இந்த பேச்சுக்கள் எல்லாம் முடிய…. “வா உனக்கு வீட காமிக்கிறேன்….” என்றபடி இவளை அழைத்துக் கொண்டு  மாடியேற துவங்கினான் அவன்….

பெரியவர்கள் காது கேட்கா தூரம் இவர்கள் வந்த போது….. சின்ன குரலில் “சாரி….“ என்றான் அவன்…

ஒன்றும் புரியாமல் இவள் நிமிர்ந்து அவனைப் பார்க்க….”உன்னை தனியா விட்ருக்க கூடாது நான்…. கூட இருந்துருக்கனும்” என காரணம் சொன்னான்….

“அவங்க கூட இருக்க எனக்கு ஒன்னும் கஷ்டமா இல்லையே” என அவசரமாக பதில்  கொடுத்தாள் இவள்….

“அது தெரியும்..” என ஒருவிதமாக அப்பேச்சுக்கு முற்று வைத்தவன்….

“அனி கால் வீங்கிப் போய் இருக்குது….கேட்டா ரொம்ப நேரம் காலை தொங்க போட்டு உட்கார்ந்தா இப்டி ஆகுதாம்…ப்ரெக்ன்சில அது காமன்னு சொல்றா…. சரி அப்ப ஒழுங்கா கொஞ்ச நேரம் காலை தொங்க போடாம இருன்னு சொன்னா கழுத கேட்க மாட்டேங்குது…. அதான் அவ கூட இருந்தேன்….ஆதிக் மச்சான் ஆஃபீஸ் விஷயமா எதோ கால் பேசிட்டு இருக்காங்க…..அவங்க வரவும் இவ வால சுட்டிருவா…..அதான் அவங்க அனிட்ட வரவும் நான் கீழ உன்ட்ட வரலாம்னு பார்த்தேன்….. லேட்டாகிட்டு” என  அவன் வராமைக்கு விளக்கம் கொடுத்தான்…

இவளுக்கு சிரிப்பு வந்தது இப்போது…..கூடவே இதைக் கேட்கவும் தோன்றியது….

“என் அண்ணா வந்தா அண்ணி பயந்துடுவாங்களாமா?” வந்த சிரிப்போடே கேட்டாள் இவள்…

“அது அப்டி இல்ல…” அவன் முகத்திலும் சிறு சிரிப்பு

.”அனிக்கு மேரேஜ்க்கு முன்ன சில கலர்ல ட்ரெஸ் செய்றது சுத்தமா பிடிக்காது….. ஆனா  அப்றம் அவளும் மச்சானும் ஷாப்பிங் போறப்ப சில டைம் நானும் கூட போயிருக்கேன்….. அப்ப இத கவனிச்சுருக்கேன்….. பார்க்கவும் அவளுக்கு பிடிக்காத கலர் ட்ரெஸ் வழக்கம் போல அவளுக்கு இப்பவும் பிடிக்காது…… ஆனா மச்சானுக்கு அது அவளுக்கு பிடிக்காத கலர்னு தெரியாதுல்ல… கைல எடுத்துப் பார்த்து இது நல்லா இருக்குதுல்லன்னு சொல்லிட்டாங்கன்னா….. இவ அதை இரண்டு முழியா பார்ப்பா…அப்டியே இவளுக்கும் பிடிச்சுடும்…. நான் சொல்றது புரியுதா….. மச்சானுக்காக எடுக்றதுன்னு இல்ல…இவளுக்கே அது நல்லதா தோணிடும்…. பிடிச்சுடும்….. இதே நேச்சர் மச்சான்ட்டயும் உண்டு…. என்னமோ மேஜிகல் wand மாதிரி அவங்க ரெண்டு பேருக்குள்ளயும் அப்படி ஒரு பாண்டிங் இருக்கும்…. அதான் இப்ப மச்சான் வந்தாங்கன்னாலே…. இவ ஒழுங்கா காலை நீட்டி உட்காந்துருப்பான்னு சொல்ல வந்தேன்…”  சிலாகிப்பாய் விளக்கியவன்

சற்று தேனேறப்பட்ட சிறு  குரலில் “ இப்ப  எங்க வீட்டு பெரியவங்கட்ட அரட்டை அடிக்க உனக்கு பிடிக்குதே அது போல“ என முடித்தான்.

“வாட்????” என்றாள் இவள்….. அவன் சொல்வதை சரியாகத்தான் புரிந்து கொள்கிறேனா என ஒன்றுக்கு இரண்டு முறையாய் மனதுக்குள் ஓட்டிப் பார்த்துக் கொண்டாள்…..என்ன சொல்லிவிட்டான் இவன்….? ஏதோ பெரியவங்கட்ட பேச இவளுக்கு பிடிக்காத மாதிரியும்…. இவன் வீட்டு ஆட்கள்னதும் அதும் அனி அண்ணி இவ அண்ணாவுக்காக செய்றது போல இவ இவனுக்காக பேசினாளாம்….

“திருநெல்வேலி பிடிச்சுருக்கா…?   மேரேஜ்க்கு பிறகு அங்கயே செட்டில் ஆகனும்னா இருந்துக்கலாம்ன்ற அளவு பிடிச்சுருக்கா? இது போல கேள்வி வேற யாராவது  கேட்டா உனக்கு அவங்கட்ட பேச பிடிக்குமா என்ன?” இதற்குள் இப்படி குறுக்கு கேள்வி கேட்டான் அவன்…

‘இது அங்கு யாரோ பெரியவங்க கேட்ட கேள்விதான்….  எல்லாமே இந்த வகையில் இல்லை என்றாலும் இப்படியும் ஒன்றிரண்டு பேச்சுக்கள் வரத்தான் செய்தன…. இப்ப தனியா கேட்கப்ப செம கடுப்பாகுதே…. அப்ப இவ தர்மசங்கடப் பட்டாலும்  கோபம் எல்லாம் இல்லமல்தானே பதில் சொல்லி வைத்தாள்….?‘

இவள் யோசித்து முடிக்கும் முன் மாடியை அடைந்திருந்த இவர்கள் கண்ணில் பட்டாள் அன்றில்….அங்கு இருந்த ஒரு சோஃபாவில் கால் நீட்டி சரிந்து  அமர்ந்து ஃபோன் பேசிக் கொண்டிருந்தவள் கால்களை முழுதாய் நீட்டாமல் அரையும் குறையுமாய் தொங்க விட்டிருக்க….  அருகில் போன பஜ்ஜி இயல்பாய் அவள் காலை  சோஃபாவில் தள்ளி நீட்டவாக்கில் வைத்தவன்,  அதை அவள் மீண்டும் தொங்கவிடாதபடி காலருகில் அவசரமாய் அமர்ந்து கொண்டான்…

வழக்கப்படி இப்போதும் பிஜுவுக்கு அன்றில் ஒரு அடி வைத்த போது…..அங்கு வந்து சேர்ந்தான் ஆதிக்…

“மாப்பு உனக்கு இந்த அரை ராட்சசிட்ட இருந்து இப்போதைக்கு விடுதலை….” என்றபடி…

“அரை ராட்சசியா ஆனாலும் உங்களுக்கு அளவு கடந்த காதல் மச்சான்….” பிஜு இப்படி பதில் சொல்லிக் கொண்டிருக்க மெல்ல எனினும் தெள்ளமும் தெளிவுமாய் புரிகிறது ஆராதனாவுக்கு….

இந்த பிஜுகூட இவளுக்கு திருமணம் என எல்லோருக்குமே ஒரு புரிதல் இருக்கிறது…… ஏன்????

8 comments

  1. Achagacho! Ponnu ku theriyama elaruma serndhu scheming panranganu bulb vangura raani ku bulb erinjurichu 😀 Ini iruku aaru oda aatam, waitingggggggg

  2. Hi mam

    என்ன நடக்குது,பெரியவர்கள் பிஜுவுக்கும் ஆராதனாவுக்கும் திருமணம் ஏதாவது பேசி வைத்துள்ளனரா.

    நன்றி

Leave a Reply