மன்னவன் பேரைச் சொல்லி மல்லிகை சூடிக் கொண்டேன் 16 pg(2)

“வெறும் ஸ்டிச்சஸ் போட்ருக்கா, இல்ல சர்ஜரி செய்துருக்கா?” பரிதவிப்பை கட்டுப்படுத்திய குரலில் விசாரித்துக் கொண்டிருந்தாள் அவள்.

“க்ளாஸ் பீசஸ் கொஞ்சம் உள்ள மாட்டிட்டாம், அதைக் க்ளீன் செய்துருக்காங்க” பார்த்து பார்த்துப் பதில் சொன்னான் இவன்.

“வெயின் பத்தி எதுவும்…” அவள் அடுத்தும் ஆரம்பிக்க,

“ப்ளீஸ் ராதி எதுக்கும் நீ அங்க டாக்டர்ட்டயே கேட்டுக்கோயேன், சின்ன வயசுல கீழ விழுந்தெந்திருச்சு வீட்டுக்குப் போறப்ப, அம்மா அடிப்பாங்களோன்னு ஒரு திகில் வரும் பாரு அதை விட பயமா இருக்கு இப்ப உன்ட்ட பேச” என சீரியஸ் பாவத்தில் அவன் சொல்ல,

“ஆமா ரொம்பவும்தான் பயம்” என்று சொன்னாலும் ராதிக்கு அவன் சொன்ன வகையில்,

ஏதோ டீச்சர் போல் நீள கம்புடன் இவள் நின்றிருப்பது போலவும், அவன் பயந்து பயந்து வீட்டுக்குள் வந்து இவள் முன் தோப்புக்கரணம் போடுவது போலவும் காட்சி தோன்ற, சின்னதாய் சிரிப்பு வந்துவிட்டது.

அவள் முகத்தை கண்ணாடியில் பார்த்திருந்தவன், அவளது புன்னகைக்கு இரு நொடிகள் கொடுத்து பின்,

“என்ன டீச்சரம்மா? பெஞ்சில ஏத்திட்டீங்க போல உங்கட்ட மாட்டின அப்பாவிய? என்ன ஒரு சந்தோஷம் பாரேன்” என கிண்டலடித்தான்.

“சே சே வீட்ல எங்க இருக்கு பெஞ்ச், ஒன்லி தோப்புக் கரணம்” இவள் சொல்ல,

“ப்ச் ப்ச் ரொம்ப ஓல்ட் ஃபேஷனா இருக்கே, டாக்டர்னா அதுக்குன்னு ஒரு ரேஞ்ச் வேணாமா?” என அவன் விளையாட,

“அதுக்கென்ன நிஜத்துல கொடுக்கிறப்ப ஒரு வெட்டு ரெண்டு ஸ்டிச்னு வச்சுப்போம்” அவள் எகிறலாய் வார,

“என்னதிது? ஒரு பேச்சுக்கு சொன்னா? அதுதான் சாக்குன்னு நம்மள தச்சு சல்வாரா போட்ருவா போல! அம்மா தாயே நீ டாக்டர், டெய்லர் இல்ல” அவன் பம்ம,

“நீங்கதான டாக்டர்க்குன்னு எதோ ரேஞ்ச் வேணும்னு ஆசைப்பட்டீங்க மாப்ஸ்” அவள் முழு ஃபார்முக்கு வந்திருந்தாள்.

“ஒரு இஞ்செக்க்ஷன், அடுத்து வர்ற மாலிஷ்னு என் ரேஞ்சுக்கு எதையோ நினச்சு சொல்லிட்டேங்க ” ஒரு அழுகைத் தொனியில் அவன் சொல்ல,

“அப்போ இஞ்செக்க்ஷனா வேணும்ன்றீங்க கொடுத்துட்டா போச்சு, நான் கிள்றதே அப்படித்தான் இருக்குதுன்னு ஃப்ரெண்ட்ஸ் சொல்வாங்க” அவள் முடிக்க,

“வெரிகுட், இது இதுதான் எனக்கு வேணும், பேச்சு மாறக் கூடாது” என்றபடி ஒற்றைக் கண்சிமிட்டிய அவன் முகத்தில் இப்போது இருந்தது முழு மொத்தக் குறும்பு.

‘வாயக் கொடுத்து வம்புல மாட்டிட்டோம் போலயே’ என இவள் பே என இப்போது லுக்விட,

அவள் முகபாவத்தை கண்ணாடியில் கவனித்தபடியே வந்த அவனோ, இப்போது அவள் காதோரம் கலைந்திருந்த சிறு முடிகளில் அவன் இதழ்கள் தொட்டும் விட்டுமாய் எழும்பும் படி

“ரொம்பவும் மிரண்டுடாத, உன் ஹஸ்பண்ட் கொஞ்சம் நல்ல பையன்தான்” என வெகு சிறுகுரலில் ஒரு மார்க்கமாய் வேறு சொல்லி வைக்க,

அதில் இவள் காது கழுத்து முதுகெலும்பு மொத்த தேகம் என அதில் ஒரு மின்னல் பிறந்து பயணிக்கிறது.

ஆனால் அடுத்து அவள் எதையும் யோசிக்கும் முன்,

”சாரி கொஞ்சம் ஓவரா கோபப் பட்டுடேன்” என கெஞ்சல் என்று எதுவும் இல்லையென்றாலும் உணர்ந்து சொன்னான் இப்போது.

வலியில் இருப்பதால்தானே பேச்சை பாதியில் முறித்துக் கொண்டு வந்து ஆட்டோ ஏறினான். அவனிடம் இப்போது ப்ரச்சனை பேசுவது எப்படி சரியாய் வரும் என்ற அளவு இப்போது ராதியுமே நிதானத்துக்கு வந்திருந்தாள்.

கூடவே இத்தனை நேரப் பேச்சில், அவன் அருகாமையில் மனதிலுமே ஒரு இலகுநிலை. அபவ் ஆல் அவன் இவள அவாய்ட் செய்யன்னு எப்பவுமே நினைக்கல, பாவம் வலியில பையன் கையதட்டி விட்ருக்கான் என்றப் புரிதல்.

ஆக அவளது அடிப்படை சுபாவத்தின்படி,

“ஆனாலும் கோபப் படுறப்ப நிதானம் வேணும்னு என்னை சொல்லிட்டு, உங்க நிதானத்தைப் பார்க்கணுமே, அப்படியே பூரிச்சு போச்சு சாரே, சர்ஜரி செய்த கையை இப்படித்தான் அடிப்பாங்களாமா?” என கிண்டல் தொனியில் திருப்பிக் கேட்டாள்.

பேச்சை இலகுவாக நகர்த்தவே விரும்பினாள்.

“ஹேய் அதெல்லாம் நிதானமான கோபம்தான், பேசிகிட்டு இருக்றது நம்ம வீட்டு எஜமானியம்மாட்டன்ற நிதானம் இருக்கப் போய்தான அடி ஹேண்டில்க்கு கிடச்சுது, கண்டிப்பா அது நிதானமான கோபமேதான்” விளையாட்டு தொனியிலேதான் அவனும் பதில் சொன்னான்.

“அப்படின்னா அது எனக்கான அடிதான் இல்லையா?” சாதரணம் போலக் கேட்டாலும் சட்டென நீர் ஏறுகிறது மனைவியின் கண்ணில்.

“லூசு” என்ற அவனின் வார்த்தையும், இடையில் இருந்த அவன் கைப் பிடி இறுகிய விதமும், லாஜிக்கே இல்லாமல் ஆறுதல் படுத்துகிறது இவளை.

“அது ஜஸ்ட் வென்ட் அவ்ட் செய்றதுடா, மத்தபடி உன்ன கை நீட்ற மாதிரி என்னால கற்பனை செய்துக்க கூட முடியாது” என் உண்மை துலங்க சொன்னவன்,

“உன்ன அடிக்கிறதுக்கு…” என்றுவிட்டு அவன் உணர்வை என்னவென்று சொல்ல எனத் தெரியாமல் வார்த்தை தேடி “நான்… நான் என்னையவே அடிச்சுப்பேன்” என முடித்த வகையில்,

பெண்ணுக்குள் எல்லாமே நேராகிப் போனது போல் உணர்வு.

அவள் இடையில் இருந்த அவனது கையின் மீது ஒரு கணம் கை வைத்துக் கொண்டாள்.

“நீதான அத்தைக்கு ஸ்டிச் போடுறத பார்த்துட்டு மயங்கி விழுந்தேன்னு சொன்ன, அதான் கொஞ்சம் பார்க்ற அளவுக்கு காயம் வாடவும் ஒன் ஆர் டூ டேஸ் கழிச்சு காமிக்கலாம்னு நினச்சேன்” நடந்த நிகழ்வின் விளக்கத்துக்கு நேரடியாகப் போனான் இவன்.

சரியாய் இப்பொழுதுதான் மருத்துவமனை பார்க்கிங்கை அடைந்திருந்த ராதி முழு மொத்த கோபத்துடன் சட்டென வண்டியை நிறுத்திவிட்டாள்.

இதில் இறங்கி நின்ற அவன் புறமாய் திரும்பி,

“என்ன விளையாடுறீங்களா? கஷ்டமா இருக்கும்னு சொன்னா அதுக்கு இது என்ன சின்ன பிள்ளத்தனமான பிஹேவியர்? உங்களுக்கு ஒரு ப்ரச்சனைனா நான் பார்க்காம யார் பார்ப்பா? எங்கம்மாவுக்கு ஸ்டிச் போட்டப்ப மயங்கி விழுந்தேன்னா, அதுக்கு பிறகு எந்திரிச்சு நான்தானே எங்கம்மாவப் பார்த்தேன்?” இவள் பொரிந்து கொண்டு போக,

இந்தக் கோபம் அவன் மீதான காதலே அல்லவா?

“ஹேய் முட்டக்கண்ணி ரொம்ப பேசினனா வெளியிடம்னு பார்க்காம எதாவது செய்து வச்சுடப் போறேன்” என உதடு பிரியாமல் பதில் கொடுத்தான் அவன்.

அதைச் சொல்லும் போது அவன் முகத்தில் ஆழ்ந்து கிடந்த அந்த மகிழ்வும், அவள் முகத்தை மொய்த்த அவன் கண்களும், அதில் குவிந்திருந்த ரசனையும், கரும்புச் சாறில் கலந்த இஞ்சி பதமாய் ஒரு குறும்பும் ஒரு கணம் இவளை திக்கச் செய்ய,

“ப்ளீஸ் பிஜு” என்றாள் இவள் கண்டனமாய்.

அவளுக்கு அவள் சொல்ல வருவதன் தீவிரம் அவனுக்கு புரிந்தாக வேண்டுமே என்று துடிப்பு. ஆனால் அவன் செய்து கொண்டிருக்கும் வேலையில் இவளுக்கே இவள் சொல்ல வருவது மறந்துவிடும் போல.

“சரி சரி முறச்சே எரிச்சுடாதே, நான் அன்னைக்கே இதுல திருந்திட்டேன், இன்னொரு டைம் இப்படி ஆகாது” என சரணடைந்தவன்,

“ஆக்சுவலி அடிபட்ட அன்னைக்கு மறுநாள், சுசி அக்காவுக்கு கல்யாணம் பேசி முடிச்சோம்” எனத் தொடங்க,

திரும்பவும் பே என்று முழிக்கும் நிலை ராதிக்கு.

தொடரும்..

Advertisements

12 comments

Leave a Reply