மன்னவன் பேரைச் சொல்லி மல்லிகை சூடிக் கொண்டேன் 14 pg (3)

சட்டென அவளை சூழ்ந்து கொள்கிறது ஒரு அடி முடியற்ற வெறுமை.

இங்கு இப்போது நின்று சண்டையிடுவதால் மட்டும் என்ன மாறிவிடப் போகிறது?

எல்லையற்ற விரக்தி ஒன்று இவள் மீது வந்து சுழிந்து சுழிந்து ஆர்ப்பரிக்க, எதுவும் சொல்லாமல் அப்படியே வீட்டுக்கு திரும்பிவிட்டாள் பெண்.

முதல் முதலாக அந்த அப்பர்ட்மென்ட் நிகழ்வின் முடிவில், இவள் கிளம்பி வரும் போது மாடியில் இருந்து பிஜு பார்த்துக் கொண்டு நின்றானே, அப்போது கூட இவள் மீது அவனுக்கு ஒரு ஈர்ப்பு இருந்தது என்று எடுத்துக் கொள்ளலாம்.

இவளை மருத்துவ கல்லூரியில் காணவும்தானே சிடுசிடுத்தான். அடுத்துதானே ப்ரச்சனை இவர்களுக்குள்.

இரவு வேலைக்குச் செல்லும் பெண்கள் மீது அவனுக்கு இருக்கும் தரக் குறைவான எண்ணம்தான்  இப்படி அவனுக்கு வெளியானது போலும்.

இன்று வரை அன்றில் என்ன சொன்னதால் இவன் திருமணத்திற்கு ஒத்துக் கொண்டான் என சொல்லாமல் தவிர்த்துக் கொண்டுதானே இருக்கிறான்.

கர்ப்ப காலத்தில் பயந்து போய் எனக்கடுத்து  நீதான் குழந்தையப் பார்க்கணும்னு எல்லாம் பேசினாங்களே அன்றில் அண்ணி, அதுக்கு சொந்தக்காரப் பொண்ணுதான் சரியா வருவான்னு யோசிச்சு, என்னை கல்யாணம் செய்ய சொல்லிட்டாங்களோ அண்ணி? அவங்க இருந்த இமோஷனல் லெவலுக்கு சொல்லி இருக்க மாட்டாங்கன்னு சொல்ல முடியாது.

அண்ணி அழுததையும், எனக்கு இஷ்டமே இல்லை, ஆனாலும் உனக்காக செய்றேன்னு  பிஜு சொல்லிகிட்டே வந்ததையும் இவள் பார்த்தாள்தானே!

அப்படியே அந்த நிமிஷம்தானே இவள்ட்ட என்னை கல்யாணம் செய்துக்கிறியான்னு கேட்டான்.

ஆதிக் அண்ணா இவளோட அப்பாவுக்காக யோசிச்சுருப்பாங்க, அன்றில் அண்ணி அவங்க இருந்த இமோஷனல் இம்பேலன்சுக்கு தக்க அவங்க குழந்தைக்கு, அவங்களுக்கு, ஆதிக் அண்ணாவுக்குன்னு யோசிச்சுருப்பாங்க.

பிஜு அவனோட அனிக்காக யோசிச்சு இந்த கல்யாணத்த செய்தாச்சு. ஆனா யாரும் இவளுக்காக யோசிக்கவே இல்லை.

இவளுக்குன்னு யாருமே இல்லை!!!

ரணப்பட்ட மனதை நினைவுகள் வண்டாய் குடைய, வீட்டிற்குச் சென்றவள் அப்படியே படுக்கையில் போய் விழுந்தாள்.

வெகுவாக இவள் மனம் தாய் மடியை நாடியது. கூடவே தன்னைக் காயப் படுத்திய தன்னவனையும் சம்பந்தமே இல்லாமல் நாடியது.

பிஜுவைப் போல் இவளது ஃப்ரெண்ட் யாராவது நடந்து கொண்டால் இவளுக்கு அதன் பின் அந்த ஃப்ரெண்டை திரும்பிப் பார்க்கவாவது தோன்றுமா?

இது என்ன இவன் மீது மட்டும் இப்படியெல்லாம்?

ஃப்ரெண்ட்ஸ் யாரும் அவனளவுக்கு இவளை கவனித்துக் கொண்டது உண்டாமா?

பிடிக்காம கல்யாணம் செய்தாலும் பிஜு இவள்ட்ட நல்லாதான இருக்கான்?

தலையைக் கூட தூக்காமல் மூன்று நாள் விழுந்து கிடந்தபொழுது தண்ணீர் வரைக்கும் வாயில் கொண்டு வந்து தந்தான் அவன்.

அவன் என்ன இவள்ட்ட மட்டுமா நல்லா இருக்கான்? எல்லார்ட்டயும் அக்கறையாதானே இருக்கான்? அக்கறைப் படுறது அவனது சுபாவம். ஆக பக்கதுல இருக்க இவள்ட்டயும் அக்கறையா இருக்கான்.

மத்தபடி இவள்ட்ட எப்பயாவது அதிகப்படியா ஈடுபாடு காமிச்சுருக்கானா?

இல்லையே இவள் கூட இருக்க அவனுக்கு ஆசை இருக்குன்னு இவளுக்கு நல்லாவே தெரியும்.

அதோட மேரேஜ் அன்னைக்கு நைட்டே எல்லாத்துக்கும் ஆசைப் பட்டான்.

அப்படின்னா இந்த படிப்பை மட்டும்தான் அவனுக்கு பிடிக்கலை ஆனா இவளை பிடிச்சுருக்குன்னு அர்த்தமா?

நைட் டூட்டி பத்தி எடுத்துச் சொன்னா புரிஞ்சுப்பானோ?

அதென்ன இப்படி ஒரு குதர்க்க புத்தி? இவ்ளவு நாளுமா இவனுக்கு இதெல்லாம் தெரியாது?

இல்லியே அப்படி மோசமா நினச்சுருந்தா, நைட் ஸ்டே பண்ணிட்டு வர்ற உன்ட்ட இப்படியா பொன்னே பூவேன்னு பழகிகிட்டு இருப்பான்?

இந்தா இந்த ரவி போல லூசுங்கல்லாம் பேசி மனசுல ஒரு நெருடலோ, இவளுக்கு பாதுகாப்பு இல்லைனு பயமோ இருக்குமா இருக்கும்.

மத்தபடி என் பிஜுவுக்கு என்னைப் பிடிக்கும்.

ஆனாலும் அந்த ரவி பேசுறதைக் கேட்டுட்டு வேடிக்கைப் பார்த்துட்டு நின்னது மகா தாப்பு.

சரி வரவும் பேசிப்போம்.

என்னதெல்லாமோ குழப்பியடிக்க இவள் விழுந்து கிடக்க,

வழக்கமாய் வீடு திரும்பும் நேரத்துக்கெல்லாம் இன்று திரும்பவில்லை பிஜு.

வெகு தாமதமாக வீடு வந்து சேர்ந்த அவன், தன் கைச் சாவியால் கதவை திறந்து கொண்டு உள்ளே வரும் வரையும் ஆராதனா படுக்கையைவிட்டு எழும்பவில்லை.

ஆனால் அவன் இவர்கள் அறைக்கு வந்து சேரும் வரை இவளால் விழுந்தும் கிடக்க முடியவில்லை. எழுந்து விளக்கைப் போட்டுக் கொண்டு மெத்தை மேல் உட்கார்ந்து கொண்டாள்.

இப்போது அறைக்குள் நுழைந்த அவன் இவளை இந்த நிலையில் எதிர் பார்க்கவில்லை போலும்.

மல்லிகை மஞ்சத்தில் புடவையும் அலங்காரமுமாக அல்லவா அமர்ந்திருக்கிறாள். அதோடு இவளது கோபக் கதை அவனுக்கு இன்னும் தெரியாதே!

அவனோ இவளை முதல் கணம் ஆசையும் சுவாரஸ்யமாய்ப் பார்த்தவன், அடுத்த நொடி முகம் சுருங்க, சட்டென திரும்பி வெளியே போகத் துவங்கினான்.

அதுவும் “நான் அடுத்த ரூம்ல தூங்கிக்கிறேன்” என்ற அறிவிப்போடு.

சர்வ நிச்சயமாய் ஒன்றும் புரியவில்லை ராதிக்கு. இதை இவள் சொன்னாலாவது அர்த்தம் இருக்கும் அவன் ஏன்?

எழுந்த வேகத்தில் சட சடவென அவனிடம் போன ராதி, அவன் கையப் பற்றி “என்ன?” எனத் துவங்கும் போதே,

“ப்ச் தொடாத ராதி” என பட்டென கையை உருவிக் கொண்டான்.

செத்தே போனாள் ஆராதனா.

அவன் முகத்தில் வந்த அந்த பாவம் என்ன?

இவளது தொடுகை அருவருப்பாக இருக்கிறதாமா அவனுக்கு?

இவள் அவனைத் தொடத் தகாதவளா?

இதற்குள் அறையை விட்டு வெளியே சென்றிருந்தவன் பின்னால் சென்றவள் இருந்த கோபத்தோடு அவன் தோளைத் தொட்டு எதோ சொல்ல வர, அதே வேகத்தில் அவள் கையை தட்டிவிட்டவன்,

“ஒழுங்கு மரியாதையா போய் தூங்கு” என்றபடி நிற்காமல் போய் அடுத்த அறைக்குள் நுழைந்து கதவைப் பூட்டியும் கொண்டான்.

இதற்கெல்லாம் என்ன அர்த்தம்?

முதலிரவு என வந்தால் அவனுக்கு ஒரு கணம் விருப்பம் வந்தாலும் கூட இவளை இத்தனையாய் தவிர்த்துவிட்டுப் போகிறான்.

இவள் அவனைத் தொடக் கூடாது என்கிறான்

அந்த ரவி சொல்லிக் கொண்டு இருந்தானே அதைப் போலவேதான் இவனும் நினைக்கிறானோ?

அன்று ஆவுடையனூர் சென்று திரும்பும் போது பொது இடம் என தன்னவன் தயங்குகிறான் என எண்ணினாளே, அது அப்படி இல்லையோ? இவளைப் போய் தொடுவதா என தடுமாறினானோ?

திருமண இரவின் போது ஏதோ கொஞ்சம் ஆசையாக கேட்டான். அடுத்து அதைக் கூட இவளிடம்  நாடவில்லைதானே?!

இவள் ஒழுக்கத்தை அவனால் நம்ப இயலவில்லையா?

ராதியைப் பொறுத்தவரை அவர்களது திருமணம் முடிவு பெற்றது இந்தப் புள்ளியில்.

தொடரும்…

Advertisements

8 comments

 1. Ayyagooo!!!! Enada idhu pudhu kolapama iruku? Elam nalla thane poitu irundhudhu?
  Indha Raadhi ponnuku yaravadhu veppilai adicha thaan sitham theliyum polaye.
  Biju apdi thapana ennathoda irundhurundha ipdi asaiya irupanama? Avankita neradiya ketu visayatha therinjukama posukunu make or break decision edutha Bajji payan pavam la?
  Epdi samarasam aaga pogudho?!
  Times have changed, but the society still frowns upon women working amidst men at odd hours. Manushanga thaangalaa awareness vandhu marunale oliya indha madhiri opinions pogadhu pola.

 2. Ayyyooo ennathu mam? Last update superaga romantica koduthitu intha update appadiye ethir parkatha puyalai kilepitieengale mam. Ennadhu pa Bijuku vantha sodhanai? Waiting eagerly for your next update mam

 3. Contraceptive பற்றிய தகவல் ரொம்ப அருமை…
  போன எபி செம்மைய இருந்தது அதனால் அடுத்த பதிவு இன்னும் தூளாக இருக்கும் என்றால் complete upside down effect…

  Bujji paiya unnakku ennada pirachanai.,, Raadhi ya ippadi kastapaduthite😢😢

 4. yen ippadi oru kuzhappam Radhi kku? Biju voda unmaiyana reason enna? karuth thadai sadhanam patriya info s. niraya perukku theriyaradhu illai thaan. . waiting for next ud

Leave a Reply