மனம் கொண்டேன் (2)

அப்புறம் தொடர்ந்த நாட்கள்ல வினோவுக்கும் இவளுக்கும் அதுக்கு முன்னவரை ஹாய் பாய் என்ற அளவில் கூட பேச்சு வார்த்தை கிடையாதுன்னு புரிஞ்சுது….அவ இடத்தில இருந்திருந்தா நான் கூட வினோவ ரிலேடிவ்னு சொல்லிகிட்டு இருந்திருக்க மாட்டேந்தான். பேசவோ பழகவோ செய்யாத ஒருத்தங்கள எப்படி சொந்தம்னு சொல்லுவோம்…..?

ஆனா இப்போ கதை மாறிட்டு. பொன்மதி அப்பாட்ட வினோ சொல்லிட்டானாம். “மாமா உள்ள அவளுக்கு ஆள் இருக்குன்னு தெரியனும்…இல்லன அவளுக்கு பாதுகாப்பு இல்ல…”

அதனால தினமும் லன்ச் டைம் அவள தேடி வந்து வினோ பேசுவான். கன்னி மாடம் வாசல்ல நின்னு இவங்க பேசுறத மொத்த காலேஜும் பார்க்கும். அத்தனை பேர் வயித்தெரிச்சலும் சேர்ந்தோ என்னமோ வினோவுக்கும் பொன்மதிக்கும் காதல் நோய் பத்திகிச்சு.

ஏற்கனவே லன்ச் டைம்ல மட்டும்தான் நான் பொன்மதிட்ட பேசமுடியும். அதுவும் இப்போ குறஞ்சுட்டு. மொத்ததுக்கு பொன்மதிக்கு இப்ப பேச இருந்த ஒரே ஆள் வினோதான். ஆனா அவன் ஒருத்தன் போதாதான்னு எனக்குமே  அப்போ தோணிச்சு.

அடுத்து பொன்மதி பேச வந்தப்பல்லாம் எனக்கு எதாவது வேலை இருந்தது.

 

ப்புறம் ஒரு சில மாசம் கழிச்சு நானும் பொன்மதியும்  க்ளாஸ் முடிஞ்சு காரிடார்ல வந்துகிட்டு இருக்கோம்.

விலை மாதுங்கிற வார்த்தையை எங்க ஊர் முறையில சொல்லி அவள கூப்பிட்டான் வினோ. அரண்டது அவள் மட்டுமல்ல. நானும் தான்.

என் இட கையை இறுக்கி பிடிச்சா பொன்மதி. பயத்துல அவ உடம்பு நடுங்குது. அவமானத்தில அவ தலை குனிஞ்சா எப்டி இருக்கும்னு அப்பதான் நான் பார்க்கேன்.  முதல் தடவையா அவ அழுது நான் பார்த்தேன். சூடா விழுந்த கண்ணீர் என் கைய மட்டுமல்ல மனசையும் சுட்டுது.

எதுக்கும் அசையாதவள இப்படி அழவச்சுட்டியேன்னு ஒரு வெறில அந்த வினோவ பார்க்கேன். அவன் என்னை கண்டுக்கவே இல்ல. அவ கைல ஒரு கவரை திணிச்சுட்டு திரும்பி பார்க்காம நடந்துட்டான்.

அவளுக்கு பயத்தில இன்னும் உடம்பு உதறுது. அவள பிடிச்சு பக்கத்தில இருந்த ஹாஸ்டலுக்கு கூட்டிடுட்டு போய்ட்டேன்.

பனிகட்டியா குளிர்ந்திருந்த அவ கையால என் கைய ரொம்ப நேரம் பிடிச்சபடி உட்கார்ந்துட்டே இருந்தா.

எதுக்கும் பயபடாத அவ தைரியம், எதுக்காகவும் கவலபடாத அவ பாசிடிவ் அட்டிட்டியூட், தன்னால யாருக்கும் எந்த கஷ்டமும் வந்துட கூடாதுன்னு நினைக்கிற தன்ம, எதுலயும் ஒரு ஒழுங்கு கடைபிடிக்கிற பாங்கு,  எல்லாத்துக்கும் மேல அவ சரியான கெட்வெயிட்னு அவ காதுபட முனுமுனுக்குரவங்க முன்னால, எந்த கர்வமோ பந்தாவோ அலட்டலோ இல்லாம, வளைய வர்ற அவ பலம் எல்லாம் எனக்கு இப்போ மனசுல ஓடுது.

முத முதல்ல அவள ரஅக் பண்ண அந்த குண்டன், லேப்ல எதையோ லிக்கர்னு நினச்சு மாத்தி குடிச்சு இழுத்துகிட்டு கிடக்கிறப்ப முன்ன நின்னு அவனுக்கு ஹெல்ப் பண்ணது இவளும் தான். இன்ஃபஅக்ட் அவன் வசதி இல்லாத வீட்டு பையனு ட்ரீட்மெண்ட் செலவு செய்தது இவ அப்பா.

சௌமிய வெளிய கூட்டிட்டு போனானே அந்த கோண மூக்கு செந்தில் அவன் இத்தனை பேரோட வந்து இவள இத்தனயா படுத்தினதுக்கு, அவன் மேல போலிஸ் கேஸ் ஃபைல் பண்ணலனாலும் கொறஞ்சது டிசி யாவது குடுத்துருக்கனுமில்ல….ம்கூம்….அவன் அப்பா இல்லாத பையன்…படிப்பயும் காலி பண்ணிட்டோம்னா….சமுதாயத்துக்கு இன்னொரு குற்றவாளிய நாம உண்டாக்கி குடுக்குறோம்னு அர்த்தம்….உன்னால என்ன செய்ய முடியும்னு கேட்டான்ல ….என்னால மன்னிக்கமுடியும்னு அவன்ட்ட சொல்லிட்டு வந்துட்டேன்னு இவ சொன்னப்ப எனக்கு வந்த எரிச்சல் இன்னும் ஞாபகம் இருக்குது….ஆனால் அதுக்குள்ள உள்ள நல்ல மனம் எத்தன பேருக்கு வரும்…

 

அவள உடச்சுட்டுதே இந்த காதல் கண்றாவி.

 

“என்ன ஆக்சு…?” கேட்கலாமா வேண்டாமான்னு ரொம்ப யோசிச்சு கேட்கிறேன்.

“தினமும் அவன்ட்ட பேசிட்டு இருந்தப்ப ஒரு நாள் திடீர்னு பேச்சை நிப்பாட்டிடான். மூனு நாளா நான் எவ்ளவு ட்ரை செய்தும் லைன்ல வரவே இல்ல. ஒவ்வொரு நொடியும் நரகமா இருந்துச்சு. திடீர்னு சொல்றான் எப்படியும் நெக்ஸ்ட் இயர் நீ வேற ஊர் போயிடுவ…அப்புறம் உன்னை பார்க்க முடியாம நான் தான கஷ்ட படனும்….அதனால இப்பவே அதுக்கு பழகிகிறேன்னு…. அடுத்து அவன் பேசவே இல்ல. அவன பார்க்கவும் முடியல….எனக்கு அப்படி ஒரு வெறுமை….மனசு தாங்கவே முடியலை….ஒவ்வொரு நொடியையும் பிடிச்சு தள்ளினேன்….மூச்சே விட முடியாதபடி மூச்ச அடைச்சுகிட்டு வருது…என்னால அந்த நாட்கள தாங்க முடியல…அவன் இல்லாம ஒரு நாள் கூட என்னால பூமியில இருக்க முடியும்னு தோணல……..ரொம்ப ட்ரை பண்ணி அவன மீட் பண்ணேன்…அவன கல்யாணம் செய்ய ஆசைனு சொன்னேன்…..அப்புறம் அவன் தினமும் பழைய மாதிரி பேச ஆரம்பிச்சான்”

ஆனா கொஞ்ச நாள்தான். அப்புறம் ஒரு நாள் சொல்றான்…உங்க வீடு எங்க வீட்ட விட  வசதி…என்னதான் முற இருந்தாலும் அவ்ளவு ஈசியா நம்ம கல்யாணத்துக்கு சம்மதிக்க மாட்டாங்க அதனால நாம நெருக்கமா பழகனும்…அது உங்கப்பாவுக்கு தெரிஞ்சா கல்யாணம் செஞ்சு வச்சிடுவாங்கன்னு….இதுக்கு நீ  சம்மதிக்கலைனா…நம்ம கல்யாணம் எப்படியும் நடக்காது அதனால இப்பவே பிரிஞ்சிடுவோம்னு…கிட்டதட்ட மிரட்டல்….சொல்லிட்டு கை நீட்டி என்ன  தொ…தொட்டான்

எனக்கு இத கேட்டதுமே குமட்டிட்டு வந்துட்டு…தரைய காலால உணர முடியல…அவன் கை பட்டதும் என்னால எதையும் யோசிக்க கூட முடியல…எப்ப எடுத்தேன்னு தெரியல…வீட்ல என் ரூம்லதான் நின்னுகிட்டு இருந்தோம்…பக்கத்தில இருந்த டென்னிஸ் ராக்கெட் தான் என் கைல கிடச்சிருக்கு, திருப்பி பிடிச்சு அவன ஓங்கி ஒரு அடி…

அவ்ளவுதான் இப்ப பேசினானே அந்த வார்த்தைமாதிரி பலதையும் சொல்லிட்டு போய்ட்டான். எனக்கு அவன பார்த்தா அழுகின பிண்டமா பிணமா தெரியுது….அவன் ஞாபகம் வர்றதகூட தாங்க முடியல.

எல்லாம் வெறும் பணத்துக்காக….”

சொல்லிகிட்டே என் மடியில படுத்துட்டா பொன்மதி. எனக்கு மனம் வலிச்சுது. ப்ரச்சனைக்கு மூல காரணம் அவ தனிமைனு தெளிவா புரியுது… அவ தலைய தடவிட்டே இருந்தேன். அவ உடம்பு இன்னும் கூட நடுங்கிகிட்டுதான் இருக்குது.

“அவன் எனக்கு வேண்டாம்…..அவன் கூட என்னால ஒரு நொடி இருக்க முடியாது…”

“ம்ம்ம்”

“அந்த கவரை பிரிச்சு படியேன்….பிரிக்கவே பயமா இருக்குது….இன்னும் என்ன குண்டு விழுமோன்னு….”

கொஞ்சம் தயங்கிட்டு பிரிச்சு படிச்சேன்…..

அவள கன்னாபின்னானு திட்டிட்டு…..குடும்ப வாழ்க்கைக்கு ஒத்துவராத ஒரு மரகட்டய கல்யாணம் பண்ணி என் வாழ்க்கைய நாசம் செய்ய நான் தயாரா இல்லனு முடிஞ்சிருந்தது அது.

அடுத்து ஆறு மாசம் காலேஜ். லன்ச் ப்ரேக்கிலும் படிக்க மட்டும்தான் செய்வா அவ. ரொம்பவும் இறுகி போயிருந்தா. அப்புறம் சென்னை அண்ணா யுனிவர்சிட்டியில அவ மெரிட் சீட்ல பி.ஜி ஜாய்ன் செய்த வரை எனக்கு தகவல் உண்டு.

 

டுத்து அவள இப்போ கொஞ்சம் முன்னால தான் பார்த்தேன்.

கோயம்புத்தூர்ல உள்ள ஒரு பெரிய டெக்ஸ்டைல் ஷாப்ல லிஃப்ட்க்காக வெயிட் செய்துகிட்டு இருந்தேன்….அப்ப கீழ இறங்கி வந்த லிஃப்ட்டின் கண்ணாடி கதவுக்கு பின்னால ப்ளூ சாரில கொடி பறக்குது அமலா மாதிரியே ஒரு பொண்ணு….மூக்குல சின்ன மூக்குத்தி வேற ….செமயா இருக்குது பார்க்க…சில நொடி கழிச்சுதான் புரியுது அது பொன்மதின்னு…

சந்தோஷம்தான் அவ மொத்த உருவமுமே……அவட்ட பேசனும்னு ஒரு ஆசை உள்ள துள்ளுது…அப்பதான் அவ பக்கத்தில பார்த்தேன்….தங்கநிலாவ தாங்க தகுதியான வானம் மாதிரி  அவளோட அவர். அவர் கைல குட்டி நிலா துண்டு.

பொன்மதிக்கு எப்பவும் பெண்குழந்தைனா ஸ்பெஷல். எனக்கு மனசுக்கு நிறைவா இருக்குது…ஆனா அதே நேரம் அவட்ட பேச வேண்டாம்னு தோணிட்டு. திரும்பி படிகட்டை நோக்கி நடந்துட்டேன். எதுக்கு தேவையில்லாம பழச கிளறனும்.

ரெண்டு நாள் கழிச்சு அம்மா ஃபோன் பண்ணாங்க. லேண்ட் லைனை அட்டென் செய்றேன்.

“ஜெயா உன் பழைய ஃப்ரெண்டு பொன்மதி கூப்பிட்டாமா…உன் நம்பர் கேட்டா குடுத்தேன்…” அம்மா சொல்லிகிட்டு இருக்கிறப்பவே இங்க என் மொபைல் சிணுங்குது. அவதான்.

“என்ன மதி…மூக்குத்தி எல்லாம்….செமயா இருக்குது…”

“…..குத்தல்லாம் செய்யலை….சும்மா.. அவங்களுக்கு பிடிக்கும்னு….நல்லா இருந்துதா..? தேங்க்ஸ்…” குரல்ல அத்தனை பரவசம், பெருமிதம். அவளோட அவர் மேல அவளுக்கு இருக்கிற ஈடுபாடு காதல் அப்படியே புரியுது எனக்கு.

“அண்ணா பேரென்ன?”

“பூர்விகன். பொன்மதி பூர்விகன் சூப்பரா இருக்குல்ல…”

குழந்தையின் குதுகுலம் அவ குரல்ல.

“அட்டகாசமா இருக்குது….”

“உங்க வீட்டு நம்பர அவங்க தான் ட்ரேஸ் செய்து தந்தாங்க…”

“……….”

ஏன்டி பார்த்தும் பாக்காத மாதிரி வந்துட்ட…” குறை பட்டாள்.

“இல்லப்பா….சும்மா..”

“பழச ஏன் ஞாபக படுத்தனும்னு யோசிச்சிட்டியோ…?”

“…………..”

“நடந்த எல்லாம் என் ஹப்பிக்கு தெரியும்…சொல்லிட்டேன்…”

“ஓ…ஏதும் ப்ரச்சனை ஆகலையா….?”

“இல்லையே….அவங்களுக்கு அதுல என் மேல மரியாதைதான்னு சொல்வாங்க…இப்பவும் எல்லா விஷயத்திலயும் எப்பவும் என்னை நம்புவாங்க…நிஜமாவே ரொம்ப சந்தோஷமா இருக்கேன்…”

“கேட்க சந்தோஷமா இருக்குடி..”

“நடந்த எதை நினச்சும் இப்போ எனக்கு வருத்தம் இல்ல.  இன்னைக்கு ஒரு விஷயம் இல்லாம என்னால இருக்கவே முடியாதுன்னு அழுற மனசு….நாளைக்கே அது இருந்தா என்னால தாங்கவே முடியாதுன்னும் மாறும்….அதனால இந்த மனசோட உணர்ச்சிகள அடிப்படையா வச்சு எந்த முடிவும் எடுக்க கூடாதுங்கிற முக்கியமான பாடத்தை படிச்சிகிட்டேன். இப்போதான் என் மனசு நான் சொன்னபடி கேட்டுகிட்டு எனக்கு சொந்தமா இருக்குது….”

“நீ எப்பவும் இப்படித்தான் மதி…எல்லா கெட்டதிலயும் நல்லத தேடுறவ…..”

“அதவிடு… பழச நினச்சு எனக்கு வருத்தம் இல்ல….நீ அப்பப்ப பேசு..”

“இல்ல வேண்டாம்…”

ஏன்பா?

“தனிப்பட்டவகையில  உன் குணம் எனக்கு ரொம்ப பிடிச்சாலும்,  அடி மனசுல எனக்கு உன்  மேல ஒரு பொறாமை இருந்திருக்குன்னு அப்புறமா தான் புரிஞ்சிது… உன் அழகு, பணம், மார்க்ஸ் இதெல்லாம் எனக்கு கஷ்டமா தெரியல…ஆனா வினோ உனக்கு சொந்தம்னதும்….

ஏன் பெஸ்ட் எல்லாம் உனக்கே கிடைக்குதுன்னு ….ஒரு இனம் புரியாத வலி. எனக்கு மனசுக்குள்ள அந்த வயசில அவன் மேல ஒரு ஈர்ப்பு…. அதனால தான் விலக ஆரம்பிச்சிருக்கேன்…அந்த நாட்கள்ல உன்ட்ட பேசி பழகி இருந்தேன்னா …நீ தேவை இல்லாம கஷ்ட பட்டிருக்க மாட்டியோன்னு தோணுது…சாரி. “

“ஓ… ஒரு நொடி மௌனம். இட்ஸ் ஓகே மலர்….அதான் எல்லாம் முடிஞ்சாச்சே….ஐ’ம் ஹஅப்பி…. நீ இத முகத்துக்கு நேர சொன்னதுல எனக்கு ரொம்ப சந்தோஷம்….அப்பப்ப பேசு….”

“இல்ல மதி…என் மனசு நீ நல்லா இருக்கனும்னு வாழ்த்திகிட்டே தான் இருக்கும்….நீ நல்லா இருந்தா சந்தோஷபடும்….உனக்கு ஒரு கஷ்டம்னா கஷ்ட படும்…..ஆனா…

ஆனா திரும்ப உன்னோட எதையாவது பார்த்து எனக்கு பொறாம வந்துட கூடாது…”

“ஓ…..ஓகே….பை”

உள் மனசில ஒரு சோர்வு. என்னமோ இந்த நொடிதான் எங்க நட்பு செத்துபோனதா ஒரு ஃபீல்.

மதி என்ன மன்னிச்சிருந்தான்னா, மலர் பொறாம எலும்புருக்கியாம்…எலும்புல ப்ராப்ளம் வந்துடும்…அதவிட்டுறுப்பான்னு சொல்லாம ஃபோன வச்சிருக்க மாட்டா…..

மனசு தவிக்குது.

மொபைலில் பீப் சவுண்ட்.

மலர் பொறாம எலும்புருக்கியாம்…எலும்புல ப்ராப்ளம் வந்துடும்…அதவிட்டுறுப்பா… வித் லவ் அண்ட் ப்ரேயர்ஸ்….எஸ்எம்எஸ் வந்திருக்கு.

மனசு லேசாயிட்டு. இனி நாங்க பாக்கவே போறதில்லனாலும் எங்க அன்பு உயிரோட தான் இருக்கும்னு தெரிஞ்சிட்டு.

9 comments

  1. Wow… Super… Semma character madhi… Unarvugalai jeyikara character ippadi dhan irukanum pengal… N nalladhu ninacha Kadavul nalladhea tharuvar… Super super

Leave a Reply