மனதோடு ஊஞ்சல் ஆடுதே 8

இந்த எப்பி என்னோட ஒரு கனவு ஃப்ரெண்ட்ஷிப் பத்தி….

நான் ஸ்கூல் படிச்சுட்டு இருக்கப்ப 12த் முடிக்கிறதுக்குள்ள 12 ஸ்கூல்ஸ் மாறிடுவேன்னு நினைக்கிற அளவுக்கு அத்தனை ட்ரான்ஸ்பர்ஸ்…. சோ முதல்ல 2ண்ட் தேர்ட்லலாம் ரொம்ப கஷ்டமா இருந்தாலும்  7த் 8த் வர்றப்பல்லாம்  ஃப்ரெண்டஸை பிரியிறதுன்றது பார்ட் ஆஃப் லைஃப்னு பழகிட்டு…..

அப்போ எனக்கு அறிமுகமான ஃப்ரெண்ட்தான் அவள். நான் NNK எழுதி இருக்கேனே அந்த ஸ்கூல்ல இருந்து  ட்ரான்ஸ்ஃபர் ஆகி இங்க வந்திருந்தேன்…. அங்க நான்  முடிச்ச வருஷம் என் க்ளாஸோட எல்லா செக்க்ஷன்லயும் சேர்த்து ஸ்கூல் டாப்பர்…..இங்க வர்றப்ப இவள் அதே போல் இந்த ஸ்கூல் லாஸ்ட் இயர் டாப்பர்.

எங்க ரெண்டு பேருக்கும் இது விஷயமா படலை. நாங்க முதல்ல அப்படியே சட்டுன்னு ஒட்டிகிட்டோம்னு இல்ல…..முறச்சுகிட்டது கிடையவே கிடையாது….….அதே க்ளாஸ்ல என் அப்பாவோட ஃப்ரெண்ட்டோட டாட்டர்  படிச்சுட்டு இருந்தா…. எங்க வீடு பக்கம்தான் அவளோட வீடும்…சோ நான் அவட்ட தான் ஃபர்ஸ்ட் டேலயே க்ளோஸ்….வேற யார் மேலயும் கவனமே இல்ல…

ஆனா எங்க இந்த க்ளாஸ் டீச்சர்க்கு  எங்க ட்ராக் ரெகார்ட் ரொம்ப உறுத்தி இருக்கு…. இன்ஃபேக்ட் அவங்க எங்களை கம்பேர் செய்து திட்றப்பதான் எங்களுக்கு ஒருத்தரை ஒருத்தர் தெரியவே செய்யும்….

டீச்சரைப் பொறுத்தவரைக்கும் ஒரே பாலிசி தான்….நம்ம ஸ்கூல்ல முதல்ல இருந்து படிக்கப் பொண்ண விட வெளிய இருந்து வந்து ஒருத்தங்க அதிகமா ஸ்கோர் செய்றதா? அது நம்ம ஸ்கூல்க்கு அவமானம்…

சோ அவ சின்னதா எதையாவது மிஸ் செய்தாலும்….பனிஷ்மென்ட் ரொம்ப ஹெவியா இருக்கும்….. நம்மளாலதான் இவ்ளவுமான்னு எனக்கு மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும்….

எனக்கான டீச்சரோட டீலிங்கே வேற….. நான் நின்னா…உனக்கு நிக்க கூட உங்க ஸ்கூல்ல சொல்லி தரலையா… உட்கார்ந்தா…. ஒழுங்கா உட்கார கூட சொல்லிகொடுக்காத ஒழுங்கீன ஸ்கூல் உன்னோடது….நான் என்ன செய்தாலும் எப்படி செய்தாலும் எல்லாமே தப்பு….ஆல் பிகஸ் ஆஃப் மை ப்ரிவியஸ் ஸ்கூல்…..

.நம்பினால் நம்புங்கள் அப்போ நானும் சரி அவளும் சரி ரெண்டு பேருமே வாயில்லா பூச்சி…..அப்பாவீஸ்…. அடி வாங்கினா கூட வீட்ல போய் இப்படி இஷ்யூ ஆகுதுன்னு சொல்ல வராது…

இதில் சப்ஜெக்ட்ல அப்பப்ப சடன் க்விஸ் வைப்பாங்க டீச்சர்…. அப்படி ஒரு டைம் அதில் அவட்ட கேட்ட கேள்விக்கு அவ இன்னும் அந்த லெசன் படிக்கலைனு பதில் சொல்லி நான் படிச்சிறுக்கேன்னு அன்ஸ் செய்துட்டேன்….

உடனே டீச்சர் அவளை க்ளாஸ்க்கு வெளிய  நீல் டவ்ன் செய்ய சொல்லி…. க்ளாஸ் பக்கத்துல இருந்த மரத்திலிருந்து கம்பை உடச்சு எடுத்து செம அடி…..ஒவ்வொரு கம்பும் உடையவும் அடுத்து அடுத்து  மரத்திலிருந்து முறிச்சு முறிச்சு எடுத்து பிச்சுட்டாங்க பிச்சி அவளை…..பார்த்துட்டு இருந்த நான் ரொம்பவும் அப்செட்……

க்ளாஸ் முடிஞ்சு டீச்சர் போனதும் அவ என்ட்ட வந்து இட்ஸ் ஓகே….நான் இன்னும் அந்த லெசன் படிக்கல…..அது என் தப்புதான்….நீ ஏன் ஃபீல் பண்றன்னு வந்து பேசினா..… அதுல ஆரம்பிச்சது எங்க ப்ரெண்ட்ஷிப்…. அப்றம் அது டாப் கியர் ஸ்பீட்தான்…

அதிசயமா அடுத்து நான் ஸ்கூலிங் முடிக்கிற வரையுமே அதே ஸ்கூல்ல படிக்கிற மாதிரி அமஞ்சுது…. ஓவர் இயர்ஸ் நாங்க செம திக் ஃப்ரெண்ட்ஸ்…..நாங்க ரெண்டு பேரும்னு இல்ல…..மொத்தம் 6 பேர்….

அந்த பீரியட்டை நினச்சுப் பார்க்கிறப்ப wow what a years we had!!னு  இருக்குது….

அந்த டைம்ல பேசிக்கிட்ட எங்க ஃப்யூசர் ப்ளான்ல…..என் ஒரு ஃப்ரெண்ட் தவிர…. மத்த 5 பேரும் ஸ்டடீஸ் முடிச்சு ஜாபுக்கு போன பிறகு ஒரே அப்பார்ட்மென்ட்ல செட்டில் ஆகனும்னு நிறைய நீள நீள ப்ளான் எல்லாம் போடுவோம்…. டீனேஜ் ட்ரீம்ஸ்….

எனக்கு தெரிஞ்சு எல்லோரும் இப்படி ஃபார் எவர் ஃப்ரெண்ட்ஸ்னு யோசிச்சு அப்றம் பார்க்காமலே போன ஃப்ரெண்ட்னு ஒரு லிஸ்ட் வச்சுறுப்போம்…..எங்க பீரியட்ல நோ இ மெயில்….நோ மொபைல்…..இப்படி நிறைய நோஸ் வேற…

சோ அப்படியே நாங்களும் அனைத்து விதிகளின்படியும் பிரிந்தோம்…… காலேஜ் வெவ்வேற ஊர் போய்ட்டோம்…… அதில் எங்க வீட்ல வீடையும் வேற  ஷிஃப்ட் செய்துட்டாங்க….. சோ நோ காண்டாக்ட்ஸ்…

அப்றம் அப்படியே போய்…..ஒரு 15 இயர்ஸ் ஓடிப் போச்சு…. இதுல என்ன ப்யூட்டின்னா……அந்த அடி வாங்கி ஃப்ரெண்ட்டானனே  அவளை  மிஸ் செய்ற ஃபீல் இருந்துட்டே இருக்கும்…..அது எவ்ளவு வருஷம் போனாலும் போகவே இல்லை….

இதில் அப்பப்ப…. அவளை பார்க்கிற மாதிரி ட்ரீம் வரும்….. ஒரு ட்ரீம்ல அவளுக்கு மேரேஜ்……ஒரு ட்ரீம்ல அவளுக்கு ஃபர்ஸ்ட் சைல்ட்……இன்னொனுல செகண்ட் சைல்ட்னு ஒரு கன்டின்யூஷன் வேற இருக்கும்….

அப்றம் எனக்கு மேரேஜ் ஆகிட்டு….

நான் அவள ரொம்ப மிஸ் செய்றேன்…அவள பார்க்கனும்னு ரொம்ப லாங்கிங்னெஸ் அதான் இப்படி ட்ரீமா வருதுன்னு என் ஹப்பிட்ட நான் சொல்ல….

என் ஹப்பி ஃப்ரெண்ட்ஷிப் மெயின்டெய்ன் செய்றதுல அல்மோஸ்ட் பெர்ஃபெக்க்ஷன்ல இருக்கிற ஆள்….எல்லா கால ஃப்ரெண்ட்ஸ்ட்டயும் டச்ல இருப்பாங்க….

அவங்கட்ட இந்த கதைய நான் சொல்லவும்…. என் மண்டைல கொட்டாத குறையா என்னைய என் பழைய ஃப்ரெண்ட்ஸ்ஸல்லாம் தேட சொல்ல…… இவள தேடின ப்ராசஸ்ல… அல்மோஸ்ட் எங்க கேங்கயே ட்ரேஸ் செய்துட்டேன்…..

கடைசியா இவள FB லதான் கான்டாக்ட் செய்தேன் …… அவ ஃபோட்டோவப் பார்க்கவே அப்படி ஒரு சந்தோஷமா இருந்துது….. அடுத்த வெக்கேஷன்ல எங்க வீட்டுக்கு ஃபேமிலியா வந்தா…..

அப்படி ஒரு ஹேப்பி மொமன்ட் அது….

அதில் இன்னும் இன்ட்ரெஃஸ்டிங்கா  மேரேஜாகி நிஜமாவே அவளுக்கு டூ கிட்ஸ்….. என் குழந்தையும் அவ கிட்ஃஸும் விளையாடியதைப் பார்க்க…..வாவ்…..காலம் எதையெல்லாம் செய்து விடுகிறது???

அதுக்கும் மேல பெரிய ட்விஸ்ட்டா…..

அவ ஹஸ்பண்டும் என் ஹஸ்பண்டும்….

இந்த நேம்ல இந்த அண்ணா கூட இப்படி சுத்துவனே….அப்படின்னு ரெண்டு பேரும் அவங்கவங்கள வீட்ல கூப்டுற நேமை சொல்லி அவங்க அண்ணாவா ஒரே சீனியர் அண்ணாவ சொல்ல….

வாவ் நீ தானா அது…..அப்படின்னு அவங்க ரியூனியன்…

காலேஜ் டைம்ல…. ஒரே ஃப்ரெண்ட்ஸ் க்ரூப் அவங்க ரெண்டு பேரும்….

கடைசி பார்த்தா நாங்க ஃப்ரெண்ட்ஸ் ரெண்டு பேரும் ஃப்ரெண்ட்ஸ மேரேஜ் செய்துறுக்கோம்….

அப்பார்ட்மென்ட் ப்ளான் போட்டப்ப…..எங்களுக்கு லாஜிகலா இடிச்ச பார்ட் இதுதான்….நாம சேர்ந்து இருக்க வர்றவங்க எப்படி ஒத்துப்பாங்கன்னு??

ஹா ஹா….அதுக்கு ஹெவன் செம க்யூட்டா ரிப்ளை கொடுத்துறுக்குது…..

இப்ப நாங்க ஒரே அப்பார்ட்மென்ட்ல இல்லைனாலும்…… தூரத்தில இருக்ற ஃபீல் நிச்சயமா இல்ல…..

நினைவு கூட விதைதான் போலும்…..விளைச்சலை கொண்டு வருகிறதே…..

One comment

  1. Last line mass Ka…we too have this kind of teenage dreamzz athellam inum vera level ah irukum Ka…keta thalai suthi podium ungaluku….

Leave a Reply