மனதோடு ஊஞ்சல் ஆடுதே 7

என்னோட ஒரு ஃப்ரெண்ட்……ஃப்ரெண்ட்னா என் ஏஜ்னு நினச்சுடாதீங்க…பொண்னு இப்பதான் UG படிசுட்டு இருக்குது…..அவங்க அடிக்கடி சொல்ற விஷயம்….அக்கா சந்தோஷம்னா என்ன தெரியுமா……..லாங்க் ரைடு போகனும்….. நைட் ஃபாரஸ்ட் மாதிரி இடத்துல தங்கனும்……..லேட் நைட் வீட்டு ரூஃப்ல உட்கார்ந்து கதை பேசனும்….  அப்டின்னு சொல்லிட்டு இருப்பாங்க…..

இதை கேட்கிறப்ப எனக்கு நியாபகம் வர்ற சில இன்சிடென்ட்ஸதான் இங்க ஷேர் செய்றேன்…

குழந்தையா இருந்தப்பல இருந்து இப்பவரைக்கும் மாறாம  நான் எதுக்கு ஃபேனா இருக்கிறேன்னா அது வானத்துக்குத்தான்….. ஆனா அப்ப 8 மணியே எனக்கு  லேட் நைட்  ..8.30 நான் ஆஃப்…. இதில லேட் நைட் வானத்தை எங்க இருந்து பார்க்க?

ஆக நான் முதல் முதல்ல லேட் நைட் வானத்தைப் பார்த்ததுன்னா அது 9த் படிக்கிறப்ப தான்…..

அப்போ என் கசின் ஒருத்தங்களுக்கு மேரேஜ்…..மேரேஜ் நடக்கிற இடம் நாங்க இருந்த ஊரிலிருந்து ஒரு 50 கிமீட்டர் டிஸ்டன்ஸ்குள்ளதான்… ஆனா மேரேஜ் அன்னைக்கு எனக்கு எக்‌ஸாம்.

என் கசின் சைடு மேரேஜெஸ்ல்ல காதல் பின்னது உலகில் சொல்லி இருந்த மாதிரி வெட்டிங்கை விட முந்தின நாள் நைட் ஃபங்க்ஷன்தான் எல்லோரும் கண்டிப்பா அட்டென் செய்ற ஒன்னு…..

அதனால நாங்க எல்லோரும் முந்தின நாள் ஈவ்னிங் அங்க போய்டனும்….அடுத்து ஃபங்ஷன் முடியவும் நைட்டே நானும் அப்பாவும் மட்டுமா எங்க வீட்டுக்கு வந்துடனும்….. காலையில் நான் ஸ்கூல்க்கு போய்டனும்….. அப்பா அடுத்து கிளம்பி வெட்டிங் போவாங்க….ஸ்கூல் முடிஞ்சு நான் வர்றதுக்குள்ள அம்மா அப்பா வீட்டுக்கு வந்துடுவாங்க அப்டின்னு ப்ளான்….

இதுல என்ன ஆச்சுன்னா நைட் பங்க்ஷன் முடிஞ்சு  எல்லோர்ட்டயும் ரீசன் சொல்லி கிளம்ப ரொம்பவும்  லேட் ஆகிட்டு….

அப்பாவை பொறுத்தவரை அவங்க இல்லாத இடத்துக்கு….அது அவங்க அப்பா வீடுன்னா கூட சின்ன குழந்தையா இருந்தப்பவே எங்களை அனுப்ப யோசிப்பாங்க…..

அப்பாவுக்கு பொண்ணோ பையனோ அவங்க பிள்ளைங்க எப்பவும் அவங்க ஐ சைட்டுகுள்ளயே இருக்கனும்னு ஒரு ஃபீல் இருக்கும்…..

அதுவும் எந்த காரணம் கொண்டும் 7.30 க்கு பிறகு நைட் எங்கயும்  கூட்டமா சேர்ந்து வெளிய போறதை கூட அலவ் செய்ய மட்டாங்க…..

ஆனா அவங்க கூட இருக்கிறப்ப இடம் பொருள் ஏவல்னு எதைப் பத்தியும் கவலைப் படமாட்டாங்க…..என்ன மீறி என்ன வந்துடும்னு ஒரு அலாதி தைரியம் இருக்கும் அவங்களுக்கு…. சோ அன்னைக்கு நைட் ரொம்ப கேஷுவலா கூட்டிட்டு வந்துட்டாங்க…

இதுல இன்னொரு விஷயம்….எனக்கும் என் அப்பா பக்கதில இருந்தா எந்த சிச்சுவேஷன்லயும் பயம் தோனாது…. (ஹி ஹி இத கண்டிப்பா என் ஹஸ்பண்ட் படிக்கனும்…)

அப்பாவோட ஃபேவரிட் மோட் ஆஃப் ட்ரான்ஸ்பொட்டேஷன் டூவீலர் தான்….. த புல்லட் மேன்….

நான் அன்னைக்குதான் ஃபர்ஸ்ட் டைம் ஹால்ஃப் சேரி போட்டு வெளிய போய்ருந்தேன்…..இதில் டூவீலர் ride….

என் ஃபர்ஸ்ட் night ride அது….

பொதுவாவே எப்பவும் பைக் ரைட்ல வெகிகிள்ள இருக்கிற ஹோல்டரை தான் பிடிப்பேன்…..ரைட் செய்றவங்களை பிடிக்க மாட்டேன்….

சோ அன்னைக்கும் அப்படி ஒரு சைடா உட்கார்ந்து பைக்கோட் ஹோல்டரையும் பிடிச்சா எதோ அந்தரத்தில் உட்கார்ந்த எஃபெக்ட்…. ட்ரெஸ்ஸை வேற கண்ட்ரோல் செய்தாகனும்….. முதல்ல கொஞ்ச தூரம் விழுந்து புதையல் எடுத்துடுவமோன்னு ஒரு சின்ன டென்ஷன்….. பட் ஊரை தாண்டியதும் அதெல்லாம் நியாபகத்திலயே இல்ல…..

மொத்த டிஸ்டன்ஸும் அப்போலாம் வயல்தான்……(இப்ப அங்க போனா வயல் தேடினாலும் கிடைக்காது ஹை) வயல்னா அந்த டைம் சோளம் போட்றுந்தாங்க…. நிறைய இடம் எதுவுமில்லாம சும்மா கிடந்தது….. அங்கங்க பெரிய பெரிய மரம் நிக்கும் வயலுக்குள்…

பெரும்பாலும் புளிய மரம்…..நிறைய  பனை மரமும்………ரோட்டோரம் இலையும் கிளையும் சிலது விழுதோடன்னு குண்டு குண்டா எனக்கு பேர் தெரியாத ட்ரீஸ்……

பாலாய் பொழிந்தது நிலவுன்னு சொன்னா என்ன  சீன் நியாபகம் வரனும்னு காமிச்சுகிட்டுருந்துது  தலைக்கு மேல நிலா….

கண்ணுக்கெட்டிய தூரம் வரை எங்க வெகிகிள் தவிர எதுவும் கிடையாது….. காதில் பைக் சவ்ண்ட் தாண்டி விழும் க்ரிகெட் பூச்சி சவ்ண்ட் தவிர வேற எதுவும் கேட்கலை…..

என்ன மாதம்னு நியாபகம் இல்ல வெதர் வேற சின்ன சில்னெஸோட….

முகம் சுத்தி சுத்தி போகுது தலையிலிருந்த பிச்சிப்பூ வாசம்…

பொதுவா அப்பாவும் நானும் சேர்ந்தா உலகத்தில் பேச எதெல்லாம் டாபிக் இருக்கோ எல்லாத்தையும் பேசுவோம்…. பைக் ரைடுனா கண்டிப்பா  அரட்டை செமயா நடக்கும்….

ஆனா அன்னைக்கு அந்த சூழ்நிலையோட செரினிட்டில நான் வாய திறக்கவே இல்ல….. வானத்தையும் வயலையும் மாறி மாறி பார்த்துட்டே வந்தேன்…..

இதுல  ஒரு பர்டிகுலர் இடத்தை க்ராஸ் செய்யனும்…. அது ரோட்டை ஒட்டி இருக்கிற சின்ன water body….. ஆக்சுவலி நம்ம கை தடிமன் அளவுல நேர் கோடா ஒரு பாறையில இருந்து oஒரு ஆழ குழிக்குள்ள அங்க தண்ணி விழுந்துட்டு இருக்கும்….

அந்த தண்ணி எங்க இருந்து வருதுன்னும் தெரியாது….குழி நிரம்பி தண்ணி வெளிய வரதும் கிடையாது…..

எந்த கோடையிலும் அது வத்தாது….எவ்ளவு மழையிலும் அது அதிகமாகவும் ஆகாது….. (இப்போ போயிருந்தப்ப கூட அது மட்டும் இன்னும் இருக்குது) அந்த இடத்தில் ரோடு வேற வினோதமா பெண்ட் ஆகும்…..

பொதுவா அந்த இடத்தில் ஆக்சிடெண்ட் அதிகமா நடக்கும்…… நாலு ஜெனரேஷனுக்கு முன்னமே அங்க பேய் இருக்கிறதா நம்பிக்கை உண்டு போல….. அம்மாவோட அப்பா அம்மாட்ட அந்த இடத்தைப் பத்தி சொன்ன பேய் கதையெல்லாம் கேள்வி பட்றுக்கேன்…..எதோ பொண்ணு அங்க சூசைட் செய்துட்டுன்னு பேச்சு….

டே டைம்ல கூட அந்த இடத்தைப் பார்த்து பயப்படுவாங்க நிறைய மக்கள்…… என் அப்பாவுக்கு பேய் இருக்குதுன்னே நம்பிக்கை கிடையாது சோ அவங்க இதெல்லாம் கண்டுக்கவே மாட்டாங்க….

எனக்கு பொதுவா அந்த ஏஜ்ல பேய் பத்தி பயம் கிடையாது …க்யூரியாசிட்டிதான் உண்டு…… ஆனா அந்த நைட்ல அந்த ஏரியா பக்கம் வர வர….. சின்ன வயசில் மக்கள் கிண்டலா சொன்ன தலைல பூ வச்சுட்டு வெளிய போனா பேய் பிடிக்கும்ன்றதுல ஆரம்பிச்சி ஆல் பேய் பேச்சும் வரிசையா நியாபகம் வருது….

பட் இன்னுமே பயமா இல்லை…..இப்ப எனக்குள்ள வேற ஒரு க்யூரியாசிட்டி……அந்த இடத்தைப் பார்த்து இப்ப நான் பயப்படுவனா மாட்டனான்னு….. சோ ஒரு எதிர்பார்ப்போட அந்த இடத்தை ரீச் ஆனேன்….

வாஆஆவ்வ்வ்வ்வ்….. இன்னும் கூட அந்த சீன் நியாபகம் இருக்கு….. அப்படி ஒரு அழகா இருந்துது அந்த இடமும் சூழலும்……. நிஜமா பயம்னு ஒன்னு நியாபகம் கூட வரலை….

அந்த மொத்த ரைடும் அப்படியே மனசில பதிஞ்சு போச்சு…..அந்த செரினிட்டி…..அந்த த்ரில்…..அந்த ப்யூட்டினு….

அதுல இருந்து என் டீனேஜ் முழுக்க என் ஃப்யூசர் பத்தின கனவு என்னனா….. பெரியாளனதும் நானே இயர்ன் செய்து டூ வீலர் வாங்கனும்…. அதுல இப்டி நைட் ரைட் ஜாலியா போகனும்…. எங்கயாவது அப்டி காடு மாதிரி இடத்துல தங்கனும்ன்றதுதான்…..

அதைப் பத்தி ரொம்ப ரொம்ப டே ட்ரீம் வேற செய்வேன்…..

ஆனா என்ன கனவு கண்டு என்ன எந்த வயசிலும் அப்படி   ஒரு ride அடுத்து கிடைக்கவே இல்லை… நைட் நம்ம  வீட்டு மொட்டை மாடிக்கு போறதுக்கே நோ பெர்மிஷன்…..அப்றம் இதெல்லாம் எங்க…??? கொஞ்சம் கொஞ்சமா அதை மறந்தே போய்ட்டேன்….

இதுல ஒரு ஸ்டேஜ்ல மேரேஜ் வேற ஆகிப் போச்சு….…..

ஜஸ்ட் ஆஃப்டர் மேரேஜ் நானும் என் ஹஸ்பண்டும் என்டயர்லி வேற ஒரு புது இடம் போய் செட்டில் ஆகுற மாதிரி சிச்சுவேஷன்….. சோ அவங்களும் வீடு ஷிஃப்ட் செய்ய வேண்டி இருந்துது…….

இங்க உள்ள வெகிகிள் எதையும் அங்க எடுத்துட்டு வரலை….. இதில் ஒருநாள் நைட் ரெண்டு மணிக்கு, கீழ வா ஒன்னு காமிக்கனும் உனக்கு  அப்படின்னு கூப்டுட்டு போனாங்க…

இத்தனை மணிக்கான்னு நான் பே பேன்னு முழிச்சுட்டே இறங்கிப் போனேன்…….. அன்னைக்குத்தான் எங்க கார் டெலிவெரி ஆகி இருந்துது….அதை போய் எடுத்து என் முன்னால ஒரு சின்ன ரவ்ண்ட்…

தென் நம்பி வருவியா….ஒரு ride போய்ட்டு வரலாம்னு கேட்டாங்க பாருங்க….

அவங்களுக்கு எங்க இதுக்கு நான் ஒத்துப்பனோ இல்லையோன்னு  ஒரு டவ்ட்….

அது வரைக்குமே நான் இப்டி நைட் ரைட் பிடிக்கும்னு அவங்கட்ட சொன்னதே கிடையாது…..இன்ஃபேக்ட் எனக்கு ஒரு காலத்துல ஆசைப் பட்டேன்னு நியாபகம் கூட இல்ல…..

அது தான் எங்க ஃபர்ஸ்ட் 2am ரைட்…..மொத்த சிட்டியையும் சுத்தினோம்…..

இப்ப எத்தனையோ டைம் வெரைட்டியா சுத்தியாச்சுனாலும்…… அப்பா கூட்டிட்டுப் போன அந்த ரைடும்….. என் husband நம்பி வருவியான்னு கேட்ட அந்த மொமன்டும்…..எனக்கு எப்பவும் மனதோடு ஊஞ்சல் ஆடும் மொமன்ட்….

சில ஆசைகள் நாமே மறந்து போய்ட்டா கூட  தேடி வந்து கிடைக்கத்தான் செய்யுது…