மனதோடு ஊஞ்சல் ஆடுதே 6

நான் மூவி பார்க்கிறது கிடையாதுன்னு உங்கட்ட முன்னமே சொல்லி இருப்பேன்….ஆனா எனக்கு பயோக்ராஃபின்னா ரொம்ப இஷ்டம்….அதுவும் ஸ்போர்ட்ஸ் பீபுள் பயகிரோபி கிடச்சா கண்டிப்பா படிக்க ஆசைப்படுவேன்…..அதனால இப்ப வந்த M.S.Dhoni மூவி பத்தி தெரிஞ்சுக்க ரொம்ப டெம்டேஷன்….

ஆக அதைப் பத்தி படிக்க ட்ரைப் பண்ணிட்டு  இருக்றப்ப எனக்கு ஒரு க்ளிப்பிங் கிடச்சுது…. ஜப் தக்னு ஒரு சாங்….. அதப் பார்த்துட்டு எனக்கு அதைவிட்டு வெளிய வர தெரியலை…. அது அழகா இருக்கு அமேசிங்கா இருக்கு அப்டின்னுலாம் எனக்கு சொல்ல தெரியலை…. ஏன்னா அதெல்லாம் எனக்கு கவனிக்க கூட தோணலை…..

அந்த அளவு நான் அதுல அப்டியே sink ஆகிடுறேன்….. காரணம்  அதுல உள்ள நிறைய சீன்ஸ் என் பெர்சனல் லைஃப்ல அப்டியே நடந்திருக்கும்…..அப்டியே இந்த சாங்க் வழியா மனசு அங்க போய்டுது…. அந்த ஊஞ்சலாட்டத்தை இங்க ஷேர் செய்துகலாம்னு நினைக்கிறேன்….

அதுல லீட் பேர் ரெண்டு பேரும் ஒரு லயன் கூட ஃபாரஸ்ட்ல ஸ்னாப்ஸ் எடுக்கிற மாதிரி ஒரு சீன் இருக்குது….

இது மாதிரி எங்களுக்கும் ஒரு இன்சிடென்ட் உண்டு…..

என் hubby ஒரு அனிமல் லவ்வர்…..அவங்க பூர்வீகம்னு சொல்ற ஊர் ஒரு ஹில்லி ரீஜன்…..எக்கசக்க டைகர்ஸ் உண்டு அங்க….. அது ஒரு சாதாரண விஷயம்னு பழகிட்டதாலயோ என்னவோ அவங்களுக்கு டைகரும் dogஉம் ஒன்னா தோணுற மாதிரியே எனக்கு ஃபீல் ஆகும்….. டைகர்க்கும் dog க்கும் அவங்களோட ஒரே டயலாக் “அது என்ன செய்யும் உன்ன…? “ ங்கிறதுதான்.

கொஞ்சம் முன்னால அவங்க ஊர்ல உள்ள ஒரு ஏஜ்ட் லேடிட்ட பேசிட்டு இருந்தேன்…. புலிய பார்த்தா உங்களுக்கு பயமா இருக்காதான்னு நான் அப்பாவியா கேட்டேன்….. அதுக்கு அவங்க பதில்….இல்லமா பயமாதான் இருக்கும்னு ஆரம்பிச்சாங்க… நானும் நல்ல வேளை நாமலாம் நார்மல்தான், நம்ம ஆத்துகாரர் ரசனைதான் கொஞ்சம் சரி இல்லன்னு நினச்சுகிட்டே கெத்தா அந்த லேடி சொல்றத கவனிக்க ஆரம்பிச்சேன்…..

அவங்க கன்டின்யூ செய்தாங்க….ஒரு டைம் இப்டித்தான் கொஞ்ச நாள் முன்ன வயலுக்கு போயிருக்கப்ப….நான் குடிக்கிற தண்ணி காலி ஆகிட்டுன்னு பக்கத்துல உள்ள ஆத்துல தண்ணி எடுக்கப் போனேன்……

இத்தனைக்கும் ஆறு ஒன்னும் ரொம்ப தூரம் இல்லைமா…… .எங்க ஆடு மாடெல்லாம் இருந்துச்சே அதுல இருந்து ரொம்ப பக்கம்தான்……. ஆனாலும் நான் அங்க போறத கவனிச்சுட்டே இருந்திருக்கும்போல…… ஒரு புலி சட்டுன்னு இறங்கி வந்து என் ஆடுல ஒரு குட்டிய தூக்கிட்டுமா…..

அது இறங்குறத தூரத்துல இருந்து என் வீட்டுகாரரும் பார்த்திறுக்கார் போல…..அவரும் தட தடன்னு ஓடிதான் வர்றாரு…. நானும் தண்ணி எடுத்துட்டு இருக்கப்பவே பார்த்துட்டேன்…. அதனால பாதில வாளிய அங்கயே போட்டுட்டு ஓடி வர்றேன்……

இருந்தாலும் அந்த ஆட அதுட்ட இருந்து காப்பாத்த முடியலை….தூக்கிட்டு ஓடிட்டுமா….புலிய பார்த்தா ஆடை தூக்கிடுமோன்னு பயமாதான்மா இருக்கும்னு சொன்னாங்க பாருங்க…… அவங்க பய டெஃப்னிஷன்ல நான் அப்டியே மிரண்டுட்டேன்….

….புலிய பார்த்தா பயந்து போய் வீட்டைப் பார்த்து ஓடுனா அது பயம்….இது புலிய பார்த்து பயந்து அதைப் பார்த்து ஓடுவாங்களாம்…..இதுல இன்னொரு விஷயம் இந்த லேடிக்கு வயசு 60 க்கு மேல…..

இப்டி ஒரு ஊர பேக்ரவ்ண்டா வச்சு வந்த ஒரு நபருக்கும்….. என்னை போல அனைத்து அனிமல்ஸ்க்கும் செம மரியாதை செய்யும் ஒரு நபருக்கும்…..

மரியதைன்னா எப்டி ஒரு மரியாதை தெரியுமா…..என்னை சின்ன வயசில் பக்கத்து வீட்டு dog ஒன்னு கடச்சிட்டு….. அதனால ரோட்ல நான் நடந்து போறேன்னா….கண்ணுக்கெட்டிய தூரத்துல எங்க dog தெரிஞ்சாலும்….டேக் லெஃப்ட் தென் ரைட்னு…..பக்கதுல தெரியுற சந்து பொந்துகுள்ள நுழஞ்சு திரும்பி பார்க்காம ஓடிப் போய்டுவேன்…..

காணாம கூட போவனே தவிர……நேருக்கு நேரா ஒரு dog அ நாம ஃபேஸ் செய்துடாவே கூடாதுன்னு அப்டி ஒரு மரியாதை வாச்சு வளந்த எனக்கும் எப்படி My heavenly Father முடிச்சு போடலாம்னு நினச்சார்னு தெரியலை….

இல்ல அப்பதான் மேலருந்து பார்க்க பயங்கர fun ஆ இருக்கும்னு நினச்சாரோன்னும் தெரியலை…..ஒருத்தர ஒருத்தர்  இதுங்க ரெண்டும்தான் சமாளிச்சுக்க முடியும்னு முடிவு செய்துட்டார் போல…..சேர்த்து வச்சுட்டார்…

ஆக கல்யாணத்துக்கு பிறகு நாங்க சில பாரஸ்ட் சாஃபாரி போய்ருப்போம்….. எனக்கு ட்ரெக்கிங் சஃபாரிலாம் பிடிக்கும் ஆனா அனிமல்ஸ்தான் அங்க இருக்க கூடாதுன்னு சொல்வேன்…..பட் அனிமல்ஸ் அதை கேட்டுகிறதே இல்ல….

அப்டி போன ஒரு ட்ரிப்லதான் இந்த லயன் கூட ஃபோட்டோ எடுக்கும் படலம்…… முழுக்கவும் லீகலி பெர்மிடட் ட்ரிப்…….சேஃப்டி கார்ட்ஸ் எல்லாம் இருந்தும்….. சில அடி தூரத்துல ஒரு முழு சைஸ் சிங்கம் முழிச்சுகிட்டு நிக்றப்ப எடுத்த அந்த ஃபோட்டோ…….அப்ப முதுகில் கூசியதை இன்னும் கூட ஃபீல் பண்ண முடியுது…..

சுத்தி இருக்கவங்க நிமித்தம் நான் வாய திறந்து எதுவும் சொல்ல மாட்டேன்னு தெரிஞ்சு என்னைப் பார்த்து சிரிச்சுகிட்டே என் ஹப்பி போய் எடுத்துக்கிட்ட  ஃபோட்டோஸ்…. ஃபோட்டோ எடுத்தது யாரா….? நானே தான்…..கண்ணால அங்க போகாதீங்கன்னு முறச்சுகிட்டே…..எடுத்த அந்த ஃபோட்டோஸ்….

அப்ப பயமா இருந்தாலும் இப்ப யோசிக்கிறப்ப……எனக்கு ரொம்ப பிடிச்ச ஒன் ஆஃப் த ஃபேவ் மொமன்ட்ஸ்….

இது நியாபகம் வர்றப்ப எனக்கு கூடவே இன்னொரு இன்சிடென்டும் நியாபகம் வரும்….

எங்க வெட்டிங் முடிஞ்சு டூ டேஸ்ல போன ட்ரிப் இது…. என் ஹஸ்பண்டுக்கு ரொம்ப தெரிஞ்ச இடம் அது…. எனக்கு சுத்தமா தெரியாத ஒரு ஏலியன் ப்ளேஸ்…..வா உனக்கு ரிவர் காமிக்கிறேன்னு அங்க ஒரு ஆற்றுக்கு கூட்டிட்டுப் போனாங்க….

மலையிலிருந்து ஆறு தரையில இறங்குற இடம்…..பார்க்கவே அவ்ளவு அழகு…… ப்ளூவும் க்ரீனும் மட்டும் தன் கண்ணுக்கெட்டிய தூரம் வரைக்கும்….. நில்லாம ஓடுற ஆறு…..ஜில்லுனு ஒரு வெதர்…..சுத்தி எங்கயும் மனித சஞ்சாரத்துக்கான தடயமே கிடையாது…..

அந்த ரிவர்ல ஒரு சுவர் வேற இருந்துது…..

நான் பிறந்ததுல இருந்து ஒரு சூப்பர்  காஷியஸ் பெர்சென்…..அதனால தண்ணில இறங்கி ஸ்விம்மிங் பழகிறது எவ்ளவு ரிஸ்க்னு யோசிச்சு…..முன்னெச்சரிக்கையா சின்னதுல ஸ்விம்மிங்கே பழக மாட்டேன்னு பிடிவாதம் பிடிச்சுட்டேன்….. அப்பாவும் கொஞ்ச நாள் ட்ரைப் பண்ணி பார்த்துட்டு போன்னு என்னை விட்டுடாங்க…..

ஆக இங்க ஆறை நான் பார்க்க ரெடி…..ஆனா உள்ள இறங்குறதா….???? அப்டின்னு முழிச்சுட்டு நின்னேன்…..என் husband முதல்ல கூப்டு பார்த்தவங்க….என் பேயறைந்த பாவ முகத்தைப் பார்த்துட்டு…..சரி வேண்டாம்னு விட்டுட்டு அவங்க மட்டும் தண்ணில இறங்கி விளையாடிட்டு இருந்தாங்க…..

ஆனா கொஞ்ச நேரம் கழிச்சு நான் மெதுவா தண்ணில கால் வச்சு பார்த்தனா….அது ஒரு ஜில் ஃபீல் கொடுத்துச்சுப் பாருங்க…..எனக்கு இறங்க ஆசை வந்துட்டு….. இதுக்குள்ள நான் இன்னொன்னும் கவனிச்சிறுந்தேன்……அதாவது என் husbandக்கு ரொம்பவே நல்லா ஸ்விம்மிங் வருதும்றதுதான் அது…..சோ எப்டியும் நம்ம  காப்பாத்த ஆள் இருக்குதுன்னு ஒரு முடிவோட இறங்கிட்டேன்…..

அதுவும் அந்த  சுவர் பக்கம் தான் இறங்குவேன் அப்பதான் பிடிக்க அந்த சுவர் இருக்கும்…..தண்ணியும் சுவரை தாண்டி இழுத்துட்டு போய்டாதுன்னு என் முன்னெச்செரிக்கை மைன்டோட கைடன்ஸ் படி அவங்கட்ட சொல்லி, உள்ள இறங்க ஹெல்ப் வாங்கி இறங்கினேன்….

கொஞ்ச நேரம் போகவும் ….தண்ணிக்கு பழகிட்டதான….பயம் போய்ட்டுதான…..இந்த பக்கம் வான்னு அவங்க இருந்த சைடுக்கு கூப்ட்டு பார்த்தாங்க…..நான் அதெல்லாம் சுவர் இல்லாத இடத்துக்கு வரமாட்டேன்னு சொல்லிட்டேன்….

தென் அவங்க ரிவர்ல இன்னும் உள்ள போய் ஸ்விம் செய்ய போய்ட்டங்க……நானும் நின்ன இடத்தில் பக்கதில் இருந்த சுவரை பிடிச்சுட்டு ஆகா நாமளும் வீராதி வீராங்கனைதான்…. ஆத்துக்குள்ள இறங்கிட்டமேன்னு ஒரு சூப்பர் வுமன் ஃபீலோட நின்னுட்டு இருந்தேன்.……

ஒரு ஸ்டேஜ்ல அவங்க ஆறைவிட்டு வெளிய போய்ட்டாங்க…. எனக்குதான் வெளிய வர மனசே இல்லை……அடுத்து ஒரு வழியா நான் சம்மதிச்சு  கிளம்பின பிறகு….

கேஷுவலா இவ்ளவு அழகான இடமா இருக்கு யாருமே வரலையேன்னு கேட்கிறேன்…..அதுக்கு  படு கேக்ஷுவலா பதில் வருது….

பொதுவா இங்க மார்னிங் மட்டும் தான் ஆட்கள் வருவாங்க……மத்த நேரம் வைல்ட் அனிமல்ஸ் தண்ணி குடிக்க இறங்கும்…..அதுவும் நீ நின்னியே அந்த சுவர் பக்கம் தான் பொதுவா அது குடிக்கும்….எதிர் கரைக்கு வராதுனு…..!!!!!!!!!!!

அந்த இடமும் எனக்கு இன்னைக்கு வரை பயம்தான் ஆனாலும் ரொம்பவே பிடிக்கும்….. புளிப்பு மிட்டாய் மாதிரி ஒரு ஃப்ளேவர் இந்த இடத்தை நினைச்சா… ஆனா அங்க போன அந்த மொமன்ட் முழு சாக்லேட்தான்…..

இப்பவரை அந்த ஸ்னாப்ஸ் பார்க்க ஒரு ஸ்பெஷல் மொம்ன்ட்டா தான் ஃபீல் ஆகும்…

பயம் கூட சில நேரம் திரும்பி பார்க்கிறப்ப ஸ்பெஷலா தோணும் போல….. (தப்பிச்சு வந்திருந்தோம்னா… 😉 )

Leave a Reply