மனதோடு ஊஞ்சல் ஆடுதே 5

நான் ரொம்பவும் enjoy செய்த ஒரு மொமன்ட் இது….. உங்க கூட ஷேர் செய்துகலாம்னு ஒரு தாட்….

பொதுவா எனக்கு என் கசின்ஸ் வெட்டிங்க் அட்டென் செய்றதுன்னா ரொம்ப இஷ்டம்…..அதுலயும் கசின் சிஸ்டர் கல்யாணம்னா கட்டாயம் அட்டென் செய்ய நினைப்பேன்….

முக்கிய ரீசன் அவங்கெல்லாம் எனக்கு க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ்…..அதுவும் எப்பவும் நாடோடி மாதிரி இடம் பெயர்ந்துட்டே இருந்த என் சைல்ட்கூட் லைஃப்ல என் கான்ஸ்டென்ட் ஃப்ரெண்ட்ஸ் இவங்க மட்டும் தான்….. வருஷம் ஒருதடவைதான் முன்னெல்லாம் மீட் பண்ண முடியும்னாலும் எப்பவும் மனசுக்கு ரொம்பவும் நெருக்கமானவங்க…..

இடையில் எவ்ளவு நாள் பார்க்காம பேசாம இருந்திருந்தாலும்…அடுத்து மீட் பண்றப்ப அந்த உறவோட ஆழம் ஈரம் மாறாம காயாம அப்படியே இருக்கும்…… அதுதான் எனக்கு அந்த ரிலேஷன்ஷிப்போட ஸ்பெஷாலிட்டியா படும்….

நீ அவட்ட பேசுன..…இவ்ளவு நாள் என்ட்ட பேசலை… அந்த வீட்டுக்கு ஏன் வந்த….. எங்க வீட்டுக்கு ஏன் வரலைனு…..எதுவும் இருக்காது…. என்னை என்னையாகவே அப்டியே அக்சப்ட் செய்துக்கிற ஃபீல் இருக்கும்….

அது மாதிரி எவ்ளவு பெர்சனல் மேட்டரையும் அவங்கட்ட பேச முடியும்….வைஸ் வெர்சா….அவங்களும் பேசுவாங்க….சோ கசின்ஸ் அண்ட் அவங்க மேரேஜ் ரொம்பவே ஸ்பெஷல்….

அப்படி நான் அட்டென் செய்த ஒரு மேரேஜ் என் கசின் சிஸ்டர் ஒருத்தியோட மேரேஜ்…. எங்க ரெண்டு பேருக்கும் ஒரே வயசும் கூட….அதனால நாங்க ப்ரெட்டி க்ளோஸ்……

அவ கல்யாணம் அவளோட பூர்வீக வீட்லயே ஏற்பாடு செய்துறுந்தாங்க……அதாவது எங்க அம்மா ஊர்ல….. காலைல 6 மணிக்கு மேரேஜ்….பொதுவா எங்க வீட்ல அப்படி வைக்க மாட்டாங்க…..மேரேஜ்னா காலைல 9 மணி பக்கத்துல வைப்பாங்க…எல்லோர்க்கும் அப்போதான் வசதியா இருக்கும்னு நினைப்பாங்க…..

நாங்க கசின்ஸ்லாம் ஒரு கேங்க்…..எங்கள்ள யாருக்கு மேரேஜ்னாலும் முந்தின நாள் நைட்டே போய் எல்லோருமா உட்கார்ந்து அரட்டை அடிச்சுதான் வெட்டிங் செலிப்ரேஷனை ஆரம்பிப்போம்…..

ஆனா இந்த கல்யாண டைம்க்கு நைட் முழுக்க விழிச்சுறுந்து அரட்டை அடிச்சுட்டு அடுத்து கிளம்புறது சரி வராதுன்னு எல்லோரும் நைட் ஒரு மணி பக்கத்துல சபைய கலச்சுட்டாங்க….

மீதி இருந்தது நானும் கல்யாணப் பொண்ணும்  மட்டும்தான்…. யார் மேரேஜ்லயுமே தூங்காத நாங்க ரெண்டு பேரும் எப்டி அவ மேரேஜ்ல மட்டும் தூங்குறதாம்…??

சோ முதல்ல நாங்க பேசுனோம்….தென் பேசிகிட்டே அவளுக்கு கொஞ்சம் ஃபேசியல் செய்தோம்…..ஏன்னா அது என் ஃபேவ் வேலை….அப்டியே இப்டி ஹேர்ஸ்டைல் செய்யலாமா அப்படியான்னு எதோ பேச ஆரம்பிச்சு ….நைட் ரெண்டு மணிக்கு பார்க்கிறப்ப அவளுக்கு நான் ஃபுல் மேக்கப் செய்து முடிச்சுறுந்தேன்….ஹி ஹி..

அடுத்து நேரம் போகனுமே….வீட்டோட காம்பவ்ண்ட்குள்ள இருந்த காலி க்ரவ்ண்ட்ல தான் கல்யாண ஸ்டேஜ் . அங்க போய் அதோட டெக்கரேஷனை கொஞ்சம் குடஞ்சோம்…. ரெண்டரை மணி ஆகியிருந்துது…..அடுத்து செய்றதுக்கு ஒன்னும் இல்லை…..காம்பவ்ண்டை விட்டு வெளிய எட்டிப் பார்த்தா ஜில்லுனு ஒரு சூப்பர் காத்து மெல்லிசா வீசிட்டு இருந்துது…..வானத்துல எக்கசக்க நட்சத்திரம் வேற..…

எனக்கு பொதுவா நைட் வானத்தைப் பார்க்க பிடிக்கும்….அதுவும் அந்த லேட் நைட் அவ்ளவு சிலீர்னு ஒரு ஃபீல்……ஸ்பைனல் கார்ட் சிலிர்க்கிற மாதிரி அவ்ளவு ரம்யமா இருந்துது …..சிட்டில அத்தனை மணிக்கு வீட்ல ஜன்னல் பக்கம் கூட நிக்க விடமாட்டாங்க….

என் முகத்த பார்த்த அவ….சரி வா ஒரு வாக் போகலாம்னு கூப்டா…… எனக்கு வாவ்வ்வ்வ்வ் அப்டின்னும் இருந்துச்சு…..பட்ட்ட்ட்ட்ட் அப்டின்னும் ஒரு ஃபீல்….

ஏன்னா கல்யாணத்துக்கு முந்தின நைட் கல்யாணப் பொண்ணை வெட்டிங் ஜ்வெல்ஸ் போட சொல்லுவாங்க அங்கல்லாம்….. வெட்டிங் அட்டென் செய்ய போயிறுக்கோம்னு நமக்கு வேற மாட்டிவிட்றுப்பாங்க…..அப்டி போட்ட நகைய கழட்டி கைலதான் வச்சுறுந்தோம்….. அத எங்க வச்சுட்டு இப்போ வாக்கிங் போகவாம்….?

மேடை பக்கம் இருந்த ஒரு ரூமை மட்டும் எங்களுக்கு கொடுத்துட்டு ஆளாளுக்கு அவங்க அவங்க போர்ஷனை பூட்டி தூங்கிட்டு இருந்தாங்க….. இந்த திறந்திருந்த ரூம் சாவிய  காணோம்னு எங்களுக்கு தெரியும்……

அதுக்கும் அடுத்து ஒரு வழி கண்டு பிடிச்சோம்….அதை யாருமில்லாத திறந்த ரூம்ல வச்சுட்டு போறதுதானே ப்ராப்ளம்……சோ அதை கழுத்துலயே போட்டுப்போம்னு…..ஹ ஹா… என்ன ஒரு ஐடியா…

முடிவு செய்த பிறகு என்ன செகண்ட் தாட்…..அவ ஹால்ஃப் சாரி போட்டு முழு கல்யாண பொண்ணு மேக்கப்ல…..கூட நானும் அதுக்கு பாதியளவு கெட்டப்ல…. நைட் ரெண்டரை மணிக்கு……சின்ன வாக்னு ஆரம்பிச்சு… பாதி ஊரை மெல்லமா சுத்தி முடிச்சு நாங்க திரும்பி வந்த நேரம் மணி கிட்டதட்ட நாலு……

ஊர்ல ஆட்கள் நடமாட்டம் ஆரம்பிச்சுட்டு அடுத்து அவங்க நம்மள பார்த்து மிரண்டுறக் கூடாதுன்னு வந்துட்டோம்….அதோட மாப்ள வர்ற நேரம் அவ கிளம்பி இருக்கனுமே…..

ஒரு வகையில் பார்த்தா இத புத்திசாலித்தனத்துக்கு பக்கத்துல கூட கொண்டு போக முடியாது….. ஆனா ஒவ்வொரு செகண்டையும் மொமன்ட்டையும் நான் ரொம்பவும் ரசிச்சு அனுபவிச்ச ஒரு நிகழ்ச்சி இது…

சொந்த ஊர்….. அங்க இருக்க அத்தனை பேரையும் தெரியும்…. அவ்ளவு பேரும் சொந்தக்காரங்க…..அதனாலயான்னு தெரியலை…. ஒரு துளி கூட பயமா தோணலை……

யாரும் பார்த்தா கிண்டல் செய்வாங்களா இருக்கும்…..ஆனா கண்டிப்பா யாரும் ஹார்ம் பண்ண முடியாது….….ஒரு சின்ன சத்தத்துக்கும் சட்டுன்னு ஹெல்ப்க்கு ஆள் வந்துடுவாங்களே….. அப்டின்னு ஒரு நம்பிக்கை……அந்த நினைவுக்கு என்ன பெயர்?

சொந்த ஊர்ல இருக்றவங்களோட சுதந்திரத்தின் அளவு அதிகமோ…?? தெரியலை……. ஆனா தைரியமும் நிம்மதியும் அதிகம்னுதான் படுது.

One comment

  1. Its true Ka…sorgame endralum nammorai pola varuma…sontha oor ponale namaku oru confidence thaniya vandhudhum… But neenga senjathelam படுபயங்கரம் கா…ha ha ha

Leave a Reply