மனதோடு ஊஞ்சல் ஆடுதே 4

மழை…..அதுதான் இந்த ஊஞ்சலாட்டத்தின் துவக்கம்….ஒவ்வொருத்தர்க்கும் மழையோட ஒவ்வொரு விதமான எக்‌ஸ்பீரியன்ஸ் இருக்கும்…..சில்லுன்னு ஒரு பாண்டிங் இருக்கும்….. இப்ப நினச்சாலும் சிலீர்னு இருக்கும்……

எனக்கும் அப்டி சில நிகழ்சிகள் இருக்குது…….அதுல முதல் இன்சிடென்ட் …. இது  எனக்கு  என் அம்மா சொல்லித்தான் தெரியும்…..ஏன்னா அன்னைக்கு நான் மிக முக்கிய வேலைல பிஸியோ பிஸி…….. ஆமாங்க அன்னைக்குள்ள நான் இந்த பூமிய எட்டிப் பார்த்திடனும் எப்டியும் பிறந்திடும்னு  அதுலயே கவனமா இருந்துட்டேன்….சோ இது சரியா ஞாபகம் இல்ல போல…. 😉

ஹி ஹி திட்டாதீங்க மக்களே நான் அன்னைக்குத்தான் பிறந்தேன்றததான் அப்டி சொல்லிட்டு இருக்கேன்….

என் அம்மா வைழிப் பாட்டி அப்பா வழிப் பாட்டி யாருமே என் அம்மா அப்பா மேரேஜ் அப்பவே கிடையாது…..சோ நான் செகண்ட் பேபின்னா கூட  என் அம்மா ப்ரசவத்துக்காக தன் அண்ணாக்கள் வீட்டுக்குத்தான் போயிருந்தாங்க போல..….

முக்கிய காரணம் என் அம்மாவோட எல்லா அண்ணிகளும் என் அம்மாட்ட ரொம்ப நல்லா இருப்பாங்க…..நானும் அக்காவும் பார்த்துகிடும் அளவு பெரிய பொண்னுங்களா வர்ற வரைக்குமே அம்மாவுக்கு எதாவது ஹெல்த் இஷ்யூன்னா அவங்க அண்ணி தான் ஒருத்தர் மாத்தி ஒருத்தர் தங்களோட பிள்ளைங்களகூட வீட்ல விட்டுட்டு நாங்க எந்த ஊர்ல இருந்தாலும் வந்து தங்கி இருந்து அம்மாவ பார்த்துப்பாங்க……அப்டி ஒரு பயங்கர பாண்டிங் இருக்கும் அவங்களுக்குள்ள….

இதுல ஒரு காமடியான இன்சிடெண்ட் உண்டு….. என் அப்பா 26 வயசு வரை மேரேஜே வேண்டாம்னு இருந்த ஆள்…..ஆமா அப்போலாம் 18இல்லனா 19 வயசில் அவங்க ஊர்ல பையங்களுக்கே மேரேஜ் முடிஞ்சுடுமாம்……சோ 26ன்றது செம லேட் ஏஜ் போல….அதுவும் அப்பா வீட்டுக்கு மூத்த பையன்வேற…..

சோ தாத்தா எமோஷனாகி எப்டியாவது தன் மகனுக்கு கல்யாணம் செய்துடனும்னு நடையா நடை….. அப்போதான் அம்மாவை பத்தி கேள்விப் பட்டு அப்பாட்ட சொல்லி இருக்காங்க தாத்தா….

பொண்ணுக்கு பேரண்ட்ஸ் இல்ல…..அண்ணன்ங்கள் அண்ணிகள் பொறுப்புலதான் இருக்குதுன்னு கேள்விபட்டதும்…….. என் அப்பா அவங்க பார்த்த சினிமாவல்லாம் வச்சு…..பொண்ண வீட்ல எல்லா அண்ணியும் சேந்து கொடுமை செய்துட்டு இருப்பாங்க…..பாவம் நாம போய் காப்பாத்துவோம்னு சட்டுன்னு இரக்கப்பட்டு பட்டுன்னு தாத்தாட்ட இந்த பொண்ண பேசி முடிங்கன்னுடாங்க…..

கல்யாணத்துக்குப் பிறகு பார்த்தா இங்க எல்லோரும் பாச மலர் காவியம்…..செம பல்ப்பு என் அப்பாவுக்கு……இப்டி வந்து நான் மாட்டிகிடனும்னு இருக்குதுன்னு என் அம்மாவும் அப்பாவும் சொல்லிகிடுறப்ப செம காமடியா இருக்கும்…..கூடவே கண்டிப்பா அப்பாவ நினச்சு பெருமிதமாவும் இருக்கும்….

சரி நான்  இப்ப மழைக்கு வர்றேன்….

அப்போ அம்மாக்கு 9 மந்த்ஸ் முடிஞ்சுட்டு….ட்யூ டேட்னு சொல்லி இருந்த தேதியில இருந்து 11 நாள் போய்ட்டாம்…… ஆனா நான் அசஞ்சு கூட கொடுக்கலை போல….இப்பல்லாம் அப்பவே சிசேரியன் செய்துறுப்பாங்க…..அப்போ வெயிட் செய்துறுக்காங்க….

அதுவும் ஹாஸ்பிட்டல்ல கூட இல்ல…..வீட்ல…… இந்த டைம்லதான் நம்ம முக்கிய ப்ரமுகர் அதாங்க நம்ம மழையார் என்ட்ரி….. சும்மா சாதாரண என்ட்ரில்லாம் கிடையாது…..செம மழை….

இதுல ரொம்ப முக்கியமா கவனிக்க வேண்டிய விஷயம்….அதுக்கு முன்ன 4 வருஷத்துக்கும் மேல சுத்தமா மழை கிடையாதாம்…….எனக்கு விவரம் தெரிஞ்சு நான் அப்படி ஒரு பஞ்சத்தை  அதுக்கு முன்னும் பின்னும் பார்த்ததில்லைனு அம்மா அப்பா சொல்லி இருக்காங்க…..

அப்போ தான் இந்த மழை….

இதில் அதுவரை  அசையாத நான் மழைய பார்க்கிற ஆர்வத்துலயான்னு தெரியலை…..என் ஜர்னிய தொடங்கிட்டேன் போல…..

ஆக்சுவலி  அம்மா அப்போ இருந்த அண்ணாக்கள் வீடுதான் அவங்க பிறந்து வளந்த  பூர்வீக வீடும்…… அத ஒரு வீடுன்னு சொல்ல முடியாது…. எப்டி சொல்லன்னு எனக்கு தெரியலை….. அங்க அவங்க எல்லா அண்ணாக்கும்  தனி தனி வீடு இருக்கும்…..அவங்க விருப்பபட்ட மாதிரி கட்டி இருப்பாங்க……ஆனா ப்ரேயர் ஹால்…..கல்யாணம் மத்த ஃபங்க்ஷன்லாம் வைக்கிறதுக்கான ஹால்….லேபர் ரூம் இப்டில்லாம் சிலது காமனா இருக்கும்…. ஒரு வீட்ல இருந்து சத்தமா கூப்டா எல்லா வீட்டுக்கும் கேட்றும்னு தான் நினைக்கிறேன்….. அப்டி எல்லாம் அடுத்துடுத்து ஒன்னுக்குள்ள ஒன்னுனு இருக்கும்…..

இப்டி எல்லாம் பக்கத்துல இருக்றதால அவங்க இருப்பாங்கன்னு இவங்க இவங்க இருப்பாங்கன்னு அவங்கன்னு வீட்ல எல்லா பெரியவங்களும் அந்த டைம்பார்த்து வெளிய போய்ருந்துருப்பாங்க போல…. மழை வேற வரவும் ஆளாளுக்கு ஸ்ட்ரக் ஆகிட்டாங்க போல

ஆக அம்மா பக்கத்துல உள்ள அவங்களோட மத்த ரிலட்டிவ்ஸ்ட்ட சொல்லிட்டு வீட்ல இருந்த லேபர் ரூம்க்கே போய்ட்டாங்க…..ஹாஸ்பிட்டல் போக முடியலை….

இந்த லேபர்  ரூம்க்கு ஒரு கதை உண்டு…..அங்கல்லாம் முதல் டெலிவரி மட்டும்தான் பொண்னோட பிறந்த வீட்ல நடக்குமாம்…..அடுத்து எல்லா ப்ரசவமும் மாமியார் வீட்லதானாம்……

என் அம்மாக்கு அண்ணாக்கள் எண்ணிக்கை அதிகம்….சோ அத்தனை மருமகள்கள் என் அம்மம்மாவுக்கு……அப்போல்லாம் பொதுவாக ப்ரசவம் வீடுகள்ளதான் நடக்குமாம்….அதனால வரிசையா நிறைய குட்டீஸ் வரும்னு வீட்லயே ஒரு லேபர் ரூம் கட்டிடாங்க அம்மம்மா……

ஆனா பின்னால எல்லோரும் ஹாஸ்பிட்டல் போக ஆரம்பிச்சப் பிறகு அது அவ்ளவா யூஸ்ல இல்லை போல…. இதுல இப்போ அம்மா……அந்த மழையில உடனே டாக்டர் வேற வரலை…..வந்தது ஒரு நர்ஸ்……அவங்க தான் என்னை பூமிக்கு கொண்டு வந்து சேர்த்த கை……

எல்லாம் முடிஞ்சு என்னை அம்மா பக்கத்துல படுக்க வச்சுட்டு எல்லோரும் போய்ருக்காங்க……இங்க மழை அளவு ஏறிக் கிட்டே போனதில்….. இது பழைய ரூம் இல்லையா….உள்ள தண்ணி சொட்ட ஆரம்பிச்சுதாம்……

டைரக்டா என் மேல…..

அம்மா குண்டு குண்டு பாப்பாவான என்னை தூக்கி அடுத்த இடம் படுக்க வைக்றதுக்குள்ள நான் முழுக்க ஒரு மழை குளியல்…..

அப்டித்தான் ஆரம்பிச்சுது மழையோட என் பயணம்….. அதிலிருந்து இப்ப வரைக்கும் என் வாழ்க்கையோட அத்தனை முக்கியமான ஈவன்ட்லயும் கண்டிப்பா பங்கெடுத்துடுவார் இந்த மழையார்…..

சின்னதுல முதல் தடவை இதை கேள்விப் படுறப்ப  அப்சட் நான்…… ஆனா அடுத்து எப்பவுமே இது எனக்கு ஸ்பெஷல் தான்…..என்னை அப்டி ஸ்பெஷலா ஃபீல் பண்ண வச்சது சாட்சாத் மழையே தான்….

ஏன்னா அப்பன்னு இல்ல அடுத்து எப்பவுமே என் லைஃபோட அவ்ளவு முக்கிய ஈவென்ட்லயும்….அதுவரைக்கும் பெய்யாம இருந்த மழை அப்ப பெய்ய ஆரம்பிச்சு அந்த வருஷம் செழிப்புன்னு சொல்ல வச்சுடும்……

மூட நம்பிக்கை மாதிரி இதை நம்ப எனக்கு பிடிக்கலை…… ஆனா வீட்ல ஸ்வீட்டிக்கு மேரேஜ் பிக்ஸாகி இருக்கா அப்ப கண்டிப்பா இந்த வருஷம் குளம் நிரம்பிடும்,  நெல் விளஞ்சிடும்னு பேசினப்ப…. கண்டிப்பா சந்தோஷப் படுறதை அவாய்ட் செய்ய முடியலை…….

மழை வானோடு ஒரு வினோத பிணைப்பு…..

Leave a Reply