மனதோடு ஊஞ்சல் ஆடுதே 3

ன்னைக்கு என்ன எழுதலாம்னு நினச்சு கண்ண மூடினதும் இவன் முகம் தான் கண்ணுல வந்தது….. இப்படி மனதோடு ஊஞ்சலாடுதேன்னு நிஜ லைஃப் இன்சிடென்ட்ஸை எழுதுறேன்னு  தெரிஞ்சா யாருக்கு கழுத்து நரம்பு புடைக்க கன்னா பின்னானு கோபம் வருமோ….. (அவனுக்கு வீட்டு விஷயம் எதை வெளிய பேசுறதும், அடுத்தவங்களைப் பத்தி அரை வார்த்தை கூட குறையா பேசுறதும் சுத்தமா பிடிக்காது…. ) அதே நேரம் அதுக்காக கத்தாம… சத்தம் போடாம….நம்ம மனசு வலிக்க ஒரு வார்த்தை பேசாம….

கண்டிப்பா நீ இத செய்யனுமா….னு ஆரம்பிச்சு…அவன் நாலு லைன் பேசுறதுக்குள்ள…..ஆமான்ன இதை நாம செஞ்சுருக்க வேண்டாமோ…என நினைக்க வைக்க முடிந்த ஒரு நபர்…… என்  தம்பி. அவனை பத்தியே எழுதிடலாம்னு நினச்சுட்டேன்…. ஹா ஹா….ஒரு நாள் இத படிச்சுட்டு  என்ன ரியாக்க்ஷன் கொடுப்பானோ…?

என் மனதோடு ஊஞ்சலாடுதேன்னு நான் சொல்லிக் கொள்ள தக்க எக்கசக்க நிகழ்வுகளுக்கு சொந்தக்காரன் இவன்தான்…எதிர்காலத்துல எண்ணிக்கையில் என் ஹஸ்பண்டோ, என்  குழந்தையோ இவனை ஓவர்  டேக் செய்வாங்களோ???

தம்பி உள்ள அக்காக்கள் எல்லோரும் இதை உணர்ந்திருப்பாங்க…. நம்ம தம்பி  பிறந்தப்ப ஒரு வகையில நாம அவங்களை நம்ம குழந்தையாதான் அப்ரோச் செய்துறுப்போம்……

என் தம்பி முதல் முதல்ல அவனா யாரும் கை பிடிக்காம படி இறங்கி வீட்டு முற்றம் வந்து என் கூட விளையாட வந்தத இன்னும் கூட அப்டியே என்னால பார்க்க முடியுது….  9 அல்லது 10 மாத குழந்தையா இருந்திருப்பான்…. லைட் ப்ளூ ஷெர்ட்…. அதுல அல்மோஸ்ட் வைட்னு சொல்ற ஹால்ஃப் வைட் கலர்ல stripes….

மொத்தமே நாலு பல்லுதான் இருந்திருக்கும்….அத்தனையும் தெரிய ஒரு  ஈஈஈ சிரிப்பு…..தலை நிறைய பிறந்த முடி …..கொஞ்சம் நீளமா வளர்ந்து காது பக்கத்தில் சுருள ஆரம்பிச்சிறுந்தது..….

எதையும் பிடிக்காம படி இறங்க முதல்ல காலை நீட்டிப் பார்த்தவன்….அப்றம் கான்ஃபிடென்ட்டா ஃபீல் பண்ணாம…. திரும்பி….தரையில் ஒரு கையை ஊணி…படி இறங்கி வந்தான்….

அம்மாட்ட இப்ப பேசுறப்ப அத சொன்னா கூட…..ஆமாண்டி அவனுக்கு அப்படி ஒரு ஷர்ட் உண்டு……இன்னும் இப்டி நியாபகம் வச்சுறுக்கியே…எனக்கு கூட  அவ்ளவா நியாபகம் இல்லனு சொல்லுவாங்க….

என்னமோ அவனைப் பத்தி நிறைய சீன்ஃஸ் மனசுல இருக்கும்……இந்த அக்கேஷன்ல அவன் இந்த இடத்துல இந்த எக்ஸ்‌ப்ரஷனோட இப்டி நின்னான்மா…. அப்டின்னு என் அம்மாட்ட அவனோட குழந்தை காலத்தை என்னால நிறையவே சொல்ல முடியும்….அந்த வயதில் அவனோட அப்போதைய ஒவ்வொரு செயல் மீதும் எனக்கு ஒரு தீவிர ஆராதனையும் அக்கறையும் இருந்திருக்கும்….

அந்த அக்கறையில் ஒரு டைம் அவனுக்கு மேக்கெப் செய்து விடுறேன்னு….ஹி ஹி…அம்மா எனக்கு மட்டும் செய்றாங்க…. நம்ம தம்பிக்கு யாரும் செய்யலையே….நாமளே  நம்ம தம்பிக்கு செய்துடுவோம்னு ஒரு பாசம் தான்…….அவனுக்கு இருந்த ரெண்டு இஞ்ச் குட்டை முடில கஷ்டபட்டு ஒரு ஒத்த தென்ன மர போனி போட்டு…. கூடவே கண்மை பவ்டர்லாம் கவனமா போட்டு……

அம்மா அளவுதான் நாம செய்யனுமா…..அதுக்கு மேலயும் செய்வோமேன்னு……..எப்டியோ கைல கிடச்ச ஒரு காலியான சாந்து பொட்டு டப்பால தண்ணி விட்டு…..அப்போலாம் ஒல்லியா ஒரு  விரல் அளவு அகல உயரத்துல அது கிடைக்கும்…..அதோட மூடிய கழட்டினா…மூடிலயே ஒரு குச்சி மாதிரி நீட்டிட்டு இருக்கும்….அத வச்சுதான் பொட்டு வைப்பாங்க….இப்ப அது கிடைக்குதா இல்லையான்னு எனக்கு தெரியலை……

அத வச்சு அவன் முகத்துல எனக்கு நல்லா இருக்குன்னு பட்ட எல்லா இடத்துலயும் பொட்டு வச்சு….. என்னை நம்பி அவன் முகத்தை  ஒப்படைக்கிறப்ப அதுல குறை வைக்க கூடாதுல…..அதான் புருவத்துக்கு மேல எல்லாம் வரிசையா வச்சுட்டே வந்தனா…..கடைசில காது தெரிஞ்சுது… அதுலயும் வைக்க ட்ரைப் பண்ணேன் ஜஸ்ட் மிஸ்….காதுக்குள்ள ஒரு குத்து….காதுல இருந்து ரத்தம் வந்து…………

அடுத்து என்ன நடந்ததுன்னு நான் சொல்ல தேவை இல்லை…..அம்மா இம்மீடியட்டா என்னை கவனிக்காம அவன கவனிச்சதாலயும்….அப்பாவ எமெர்ஜன்ஸின்னு அரை நாள் லீவ்ல வீட்டுக்கு வர வச்சதுலயும்….. அவன் காதும்…. அம்மாட்ட இருந்து எனக்கு கிடைக்க வேண்டிய டின்னில இருந்து நானும் தப்பிச்சோம்….

இப்டி அவனோட அடுத்த அம்மாவா……இல்லைனா அவன் என்னோட அடுத்த டாயா….  அதுவரைக்கும் நம்ம டாய்க்குதான இதெல்லம் செய்து பார்த்திருப்போம்…. இப்டியா ஆரம்பிச்ச அந்த ஜர்னி….

அவன என் ஃஸ்கூல்ல தான் சேர்த்தாங்க…….முதல் நாள் முழுக்க என் பக்கம் கூட பார்க்காம….அங்க இருந்த க்ரவ்ண்ட்ல இருந்த ஒரு மர நிழல்ல இருந்து அழு அழுன்னு அழுதான்…..

நானும் என் க்ஃளாஸயே கவனிக்காம முழுக்க ஜன்னல் வழியே அவனைத்தான் பார்த்துட்டு இருந்தேன்…..

அப்பலாம் எனக்கு யார் முன்னால அழவும் ரொம்ப ஷையா இருக்கும்….  யூ கே ஜி படிக்கிற பிக் கேர்ள் இப்டி அழலாமா shame shameனு சொல்லிட்டாங்களோ ரொம்ப ரொம்ப அவமானமா வேற இருக்கும்…..

அந்த ஒரு காரணத்துக்காக நானும் முடிஞ்ச வரை அன்னைக்கு அழாம இருக்க ட்ரைப் பண்ணிட்டே இருந்தேன் அம்மா ஈவ்னிங் அவனை வந்து கூப்ட வர்ற வரைக்குமே…..

அடுத்தும் எப்பவும் அவன் என் கூடதான் ஸ்கூல்க்கு வருவான்..….ஸ்கூல் பக்கத்துல வர்ற வரைக்கும் செம ஜாலியா பேசிட்டு வருவான்….. ஸ்கூல் கேட் கண்ல தெரியவும் சட்டுனு சைலண்டாவான்…..திரும்பி அவன் முகத்தைப் பார்த்தா சத்தமில்லாம கண்ணுல இருந்து தண்ணி வடிஞ்சுட்டு இருக்கும்….

பொதுவா டீச்சர்ஸ்ட்ட பேசுறதுன்னா எனக்கு எப்பவுமே பயம்…..  எவ்ளவு பெய்ன் ஃபீவர் தாகம்னு என்ன ப்ரச்சனையானாலும் எதுக்கும் அவங்கட்ட போய் நிக்க மாட்டேன்…. ஆனா அவன்ட்ட ஏன்டா அழுறன்னு கேட்டா……மிஸ் அடிப்பாங்களோன்னு பயமா இருக்குன்னு ஒரு பதில் சொல்லுவான்….. அழாதடா…நான் வந்து உங்க மிஸ்ட்ட சொல்றேன்னு சொல்லி அவன க்ளாஸ்ல போய் விடுவேன்….அப்போ அவன் க்ளாஸ் டீச்சரை பார்த்து தினமும்…மிஸ் என் தம்பிய அடிக்காதீங்க மிஸ்னு வேற சொல்லிட்டு வருவேன்….

ஹா ஹா நான் பண்ண அலப்பறைக்கு அந்த டீச்சர் எப்டி என்னை நாலு சாத்து சாத்தாம விட்டாங்கன்னு இப்போ நினச்சு பார்க்றேன்….. ஏன்னா அவங்க ஒரு நாள் கூட என் தம்பிய அடிச்சதே கிடையாது……இருந்தாலும் தினமும் காலைலயும்…மதியம் லன்ச்லயும் போய் நான் தவறாம மிஸ் என் தம்பிய அடிச்சுடாதீங்கன்னு சொல்லிட்டு, க்ளாஸ்ல அவன் ப்ளேஸ்ல உட்கார்ந்திருக்க அவன்ட்ட போய் நான் சொல்லிட்டேன்டான்னு ஒரு அக்நாலெட்ஜ்மென்ட் வேற கொடுத்துட்டு வருவேன்….

இப்டி இந்த ரேஞ்ச்க்கு தம்பிய பார்த்துக்கிறது டெவலப் ஆகி…..அடுத்து எப்போ எப்டின்னே தெரியாம…..நான் தேர்ட் ஃபோர்த்லாம் வந்த பிறகு…

அவன் strategical ஆ என்னை பின்னால இருந்து ஓடி வந்து ஒரு தள்ளு….. நான் தொபுகடீர்னு ஆல் எஃப்ஃபெக்டோட குப்ற விழவும்….முதுகுல ஏறி உட்கார்ந்து…..அந்த வயசிலேயே  முதுகு முழுக்க மறைக்கிற அளவுக்கு நீளமா அம்மா ஆசை ஆசையா வளர்த்து வச்சிறுந்த என் முடிய பிடிச்சு இழுத்து….ஆட்டு ஆட்டுன்னு ஆட்டி….நான் கத்த கூடாதுன்னு ஒரு கைய முன்னால நீட்டி என் வாய மூடுறேன்னு என் மூக்கையும் பாதி நாள் மூடி…..போச்சு நாம செத்துட்டோம்னு நான் டென்ஷனாகி… என் ரெண்டு கையவும் என் முதுகு பக்கமா டரைப் பண்ணி நீட்டி…கைல கிடைக்கிற அவன் முகம் மூக்குன்னு எதுலயாவது நான் கிள்ள….

அவன் அம்மானு அழுதுட்டு ஓட…..ஆப்டா அப்பதான் என்ட்ரி கொடுக்ற அம்மா…அவன் முகத்துல மட்டும் இருக்ற கிள்ன தடமும்……முழுசா முறச்சுட்டு நிக்ற என் முகத்தையும் மட்டுமா பார்த்து….

இப்டியா கிள்ளுவ நீ….அப்டின்னு எனக்கு மட்டுமா டின் கட்டிட்டு போற ஒரு phase க்கு போய்…

“அவன் சின்னவன்டி அதான்” என அம்மா சொல்ற எந்த சமாதானத்தையும் ஒத்துக்காம….அவன் எப்பவும் எனக்கு சின்னவனாதான் இருப்பான் அது என் தப்பா….? அதென்ன அவனுக்குதான் எப்பவும் முதல் தோசை….நீங்க பையன்னு பார்ஷியாலிட்டு காமிக்றீங்க…எனக்கு தோசையே வேணாம்….அப்டின்னு மூஞ்ச தூக்கிட்டு போய் ரூம் ஓரத்துல உட்கார்ந்து….அம்மா கைல இருந்த தோசைக் கரண்டியாலயே ரெண்டு அடி வாங்குற வரைக்கும் சாப்டாம அழுற அளவுக்கு டெவலப் ஆகி…. அவன் எப்போ என்  சக போட்டியாளரா பதவி உயர்வு வாங்கினான்னே தெரியாம ஒரு காலத்துக்கு வந்து சேர்ந்தோம்….

அடுத்து அவன் 6த் வர்ற வரைக்குமே இந்த து து மே மே தான்….சும்மா எல்லாத்துக்கும் போட்டிதான்……ஆனாலும் அத்தனை அடிச்சுகிட்டாலும் எனக்கு சைக்கிள் பழகி கொடுத்தது அவன் தான்…. எனக்கு முன்னாலே அவன் முதல்ல சைக்கிள் பழகிட்டான்…உர்ர்ர்ர்ர்ர்….

நானும் நாங்க மார்ற எல்லா ஸ்கூல்லயும் அவனோட அத்தனை டீச்சர்ஸ்ட்டயும் என் தம்பிய அடிக்காதீங்க தான்…. இத்தனைக்கும் அவன் அதை கண்டுகிடவே செய்யலைனாலும்…….மதியம் அவன் க்ளாஸ்ல இருக்ற அவனை ஜன்னல் வழியாவாது எட்டிப் பார்த்துட்டு வருவேன்….

ஷேம்புன்னா முடி கொட்டும்டா…அந்த ஒரு சீயக்காய்தான்டா எனக்கு ஒத்துக்குது…… இது வார வாரம் எல்லா சனிகிழமைகளிலும் நடக்கும் ஒரு மணி நேர பேச்சு வார்த்தையின் என் பக்க சாரம்சம்…. கேட்டல், அதட்டல்…ஆர்க்யூ செய்தல்…ஆப்டாய் அனாலிசிஸ் கொடுத்தல் கடைசியாய் கெஞ்சல்…கண்ணீர் விடுதல் எல்லா மோடும் இதில் இருக்கும்….

போ எனக்கு இன்னைக்கு மட்டும்தான் க்ரிகெட் விளையாட ஆள் இருக்கு….. கண்டிப்பா இன்னைக்கு நான் வாங்க போக மாட்டேன்…. என்ற ஒரே பதில் தான் அவன் பக்கம் இருக்கும்……. என் கண்ல தண்ணி வர்ற வரைக்கும் மாறாம சொல்வான், ஆனாலும் அந்த பர்டிகுலர் ப்ராண்ட தேடிப் போய் கண்டு பிடிச்சு வாங்கி கொடுத்துட்டுதான் விளையாட போவான்…..

அப்றம் சில வருடங்களுக்கு நாங்க சண்டை போடுறதுக்காக கூட பேசிக்கிட்டதா ஞாபகம் இல்ல….செம பிஸி ரெண்டு பேரும்…. Studies ஒரு மேஜர் போர்ஷன் ஆஃப் டேய எடுத்துடும்னா….

அதோட அவனுக்கு அதெலெடிக் கோச்சிங் காலைல….. எனக்கு ஈவ்னிங்…..இதுல நாங்க வேற வேற ஸ்கூல்ஸ்…..நான் ஒரு லைப்ரரி அடிக்டும் கூட…. அவனுக்கு க்ரிகெட் விளையாட டைம் கிடைக்கிறதே பெரிய விஷயம்…..

இப்டி ரெண்டு பேரும் you are from Uranus  I’m from Antarticaனு சம்பந்தம் சம்பந்தம் இல்லாத டைரக்க்ஷன்ல ட்ராவல் செய்துட்டு இருந்தாலும்….

9த் ல அல்மோஸ்ட் 5.6 ஃபீட் உயரம் இருந்த நான் அடுத்து 5.7  தொட மூனு வருஷத்துக்கு மேல ஆச்சுதுன்னா….. நான் 5.6 ல இருந்தப்ப 5 ஃபீட் உயரம் இருந்த அவன்….திடீர்னு தினம் தினம் வளர்ந்து ….. டக்குனு 5.6 க்கு வந்துட்டான்……

அப்போலாம் தினம் தினம் அவன் ஹைட் மெஷர் பண்ணுவேன் நான்….. நிஜமாவே வாரம் ஒரு இஞ்ச் வளர்ந்து சில வாரங்களில் 6 அடிக்கு போய்…. என்னை  அண்ணாந்து பார்க்க வச்சப்ப இல்ல…..கண்டிப்பா அப்ப இல்ல….

ஆனா எப்பனு தெரியலை….

நான் எப்ப என்ன ஹெல்ப் கேட்டாலும் you know basicஆ நான் ஒரு சோம்பேறின்னு சொல்லி என்னை வெறுப்பேத்தி அழவிடுறவன்…..9.20 க்கு வர்ற காலேஜ் பஸ்ஸை பிடிக்க 9 மணிக்கு எழும்பி கிளம்புற பெரிய மனுஷன்….

9.30 எக்ஸாமுக்கு 7 மணிக்கே கிளம்பி போற என்னை ட்ராப் பண்ண மட்டும்……நானே வர்றேன்னு அவசரமா கிளம்பி வர ஆரம்பிச்சப்பவா….

7 மணினதும் என்னமோன்னு நினச்சுடாதீங்கங்க……ஹாஸ்டல்ல போய் என் ஃப்ரெண்ட் கூட குட்டியா டிஸ்கஸ் செய்துட்டு எக்‌ஸாம் போவேன்….அதான்…

காலேஜ் ஒரு காட்டுகுள்ள இருக்கும்……செர்டன் கிலோமீட்டர்ஸ் சுத்தமா ஆள் அரவம் இல்லாத காடு….அது வழியா நான் தனியா  போறது சேஃப் இல்லைனு  வாய திறந்து சொல்லலைனாலும்..…அதுக்காகவே என்னை ட்ராப் பண்ற வேலைய அவனே எடுத்துப்பான்….. அப்பவா…..???!!!

அடுத்தும் நான் ஜாப் போன பிறகும் எப்ப இருட்டோட இயர்லி மார்னிங் கிளம்ப வேண்டி இருந்தாலும்…. அவனும் அப்ப வர்க் பண்ணிட்டு இருந்தான் இருந்தாலும் நான் உன்னை ட்ராப் பண்றேன்னு ஒவ்வொரு டைமும் ஓடி ஓடி வந்தப்பவா….

உனக்கு யூஎஸ்ல  பி எச் டி செய்றதுதான் பிடிச்சுறுக்குன்னா அதை செய்…அப்பா முடியாதுன்னு சொன்னா சொல்லிட்டு இருக்காங்க…… எனக்கு தேவை நீ சந்தோஷமா இருக்றது தான்….. நான் லோன் போட்டு உன்னை படிக்க வைக்கேன் மத்த யாரு என்ன சொன்னாலும் யோசிக்காதன்னு செம தீவிரமா நின்னப்பவா….

என் பி எச் டி  ப்ளான் ட்ராப் ஆனப்ப நான் ஒரே சோக கீதம்…. அப்போ என்னைவிட எனக்கு அதிகமா சப்போர்ட் செய்தது அவன்தான்… எதுக்காகவும் அப்பாவ எதிர்த்துப் பேச மாட்டான்…. இதுல அப்டி சண்டை போட்டான் அவன்..…அப்பவா….???!!!

வீட்ல மாப்ள பார்க்கனும்னு பேச்சு ஆரம்பிக்கவும் என் அம்மாட்ட போய்….கூட பிறந்த பொண்ணு இருக்ற பையனதான் மாப்ளையா பார்க்கனும்மா…. பொண்ணு கூட வளந்த பையனுக்குத்தான் பொண்ணுட்ட எப்டி நடந்துக்கனும்னு தெரியும்மானு சொன்னப்பவா…..

அடுத்தும் எல்லாம் ப்ரொசீட் ஆகி……

மறுநாள் என்னை பெண்பார்க்க  வர்றாங்கன்னதும் …. அப்போ அவன் உள்ளூர்ல கிடையாது….. ஃபோன் செய்து….  இங்க பாரு முதல் தடவை பார்க்க வர்றவங்களே அமஞ்சுட்டா நல்லதுதான்….ஆனா அவங்க சைடு கன்ஃபார்மா சரின்னு சொல்ற வரைக்கும் நீ எதையும் கண்டுகாத…. இந்த இடம் விசாரிச்ச வரை எல்லாம் நல்லாத்தான் இருக்குது….இருந்தாலும் அவங்க ஓகே பண்ண பிறகுதான் நீ மனசுகுள்ள கூட ஓகே பண்ணனும் என்ன…  என செம டென்ஷனும் அதை கொஞ்சமும் காமிச்சுக்க கூடாதுன்னு ஒரு அமுக்குனி டோன்லயும் அவன் சொன்னப்பவா…..

அடுத்தும் என் மேரேஜுக்கு பிறகும்…. அவன் ஒரு நாட்லயும் நான் ஒரு நாட்லயும்னு லைஃப் போனாலும்…. என் வீட்ல என்ன ஒரு சின்ன விஷயம்னாலும் அவன் தான் முதல்ல வந்து எல்லாத்தையும் செய்வான்…. அவனால வர முடியலைனா என் அம்மாவுக்கு ஆயிரம் இன்ஸ்ட்ரெக்க்ஷன் எனக்கு அதுவே அறுபதாயிரம் கிடைக்கும்…

மேரேஜுக்கு பிறகு முதல் டைம் நான் வீடு ஷிஃப்ட் செய்றதுக்கு கூட கிளம்பி வந்தான்…..

இப்டி எப்ப அவன் எனக்கு அண்ணானா மாற ஆரம்பிச்சான்னு தெரியலை……

இதுல இப்போலாம் அடுத்த ஸ்டேஜ்….

கிட்ஸ் ரூம்ல கம்ப்யூட்டர் ப்ரொவிஷன் இருக்க கூடாது….. அந்த ரூம்ல அட்டாச்ட் பாத் கூட  வச்சு கட்டாத….அவங்க டீனேஜ் வர்றப்ப…பொதுவா ரூம்குள்ள மூடிட்டே இருக்க ட்ரைப் பண்ணுவாங்க….இதுக்காகவாவது வெளிய வரனும்…. அவனோட அட்வைஸ் தான்….

பொதுவா  எல்லோரையும் போல எதுவும் ப்ராப்ளம்னா நானும் என் ஹஸ்பண்டுமேதான் பேசிப்போம்…..ரெண்டு பேர் வீட்டுக்குமே சொல்லிக்கிறது கிடையாது…. இருந்தாலும் இவனுக்கு மட்டும் எப்டி தோணும்னே தெரியலை….எதோ ஒரு விஷயம் கொஞ்சம் பெருசா ப்ராப்ளம் ஆகுற ஃபீல் எனக்கு வந்து நான் கொஞ்சம் டல்லா  உட்கார்ந்தா அந்த நிமிஷன் டான்னு கால் பண்ணுவான்…

ஆமா அந்த ப்ராஜக்ட் பத்தி சொல்லிட்டு இருந்தல்ல……எல்லாம் சரியா போகுதா…..என்னமோ தோணிகிட்டே இருக்குன்னு சரியா அந்த ப்ராப்ளமான விஷயத்துலயே ஆரம்பிப்பான்…..

இதுல இவன் என் அப்பாவ ஓவர் ரைட் பண்ணிடுவான் போல…..

குழந்தையாகதான் பார்க்க துவங்குறோம்…..சில நேரங்களில் தம்பிகள் இப்டி அப்பாவாகவும் ஆகிடுவாங்க போல……

 

3 comments

  1. Wow…..Really grt brotherhood…
    Ippadila uravugal kidaikarathu kooda varam than….so lucky mam u r!
    Feeling proud about ur bro….

  2. Such a emotional one…neenga Athai fun tone LA sonmalum kuda உள்ளார்ன்த அன்பை உணர முடியுதுகா…blessed to have such person as a brother…ungala admire panrathu polave antha uncle aiyum admire panren…..

Leave a Reply