மனதோடு ஊஞ்சல் ஆடுதே 2

ர்காவல்… இந்த வார்த்தைய கேட்டாலே எதோ ஹிஸ்டாரிகல் காலத்துல இருந்த ஒரு பழக்கமாதான் எனக்கு ஞாபகம் வரும்…. என்னதான் கூர்கா, செக்யூரிட்டி கார்ட்ஸ்…CCTV, police romingனு இப்ப நிறைய அரேஞ்ச்மென்ட்ஸ் இருந்தாலும் இந்த ஊர்காவல்ன்ற வார்த்தைக்கு அது பொருந்துறதா பட மாட்டேங்குது…..

ஆனால் நான் டீனேஜரா இருந்தப்ப பார்த்த ஒரு இன்சிடென்ட் இந்த வார்த்தைக்கு பக்காவா பொருந்துற மாதிரி தோணும்.

அப்போ அப்பாவோட க்ளப் மெம்பர்ஸ் எல்லோரும் சேர்ந்து மொத்தமா ஊருக்கு அவ்ட்டர்ல ஒரு லேஅவ்ட்டை வாங்கி அதில் அவங்கவங்க வீடு கட்டி குடி போயிருந்தோம்…..க்ளப்னா சிட்டி க்ளப்ஸ் மாதிரின்னு யோசிச்சுடாதீங்க…..

நாங்க எல்லோரும் பக்கத்து பக்கத்து ஊர்காரங்க……இவங்க எல்லோரும் சேர்ந்து ஒரு சங்கம் வச்சு…..அதில் வருஷம் ஒரு டைம் எல்லோரும் குடும்பத்தோட வந்து மீட் பண்ணிப்பாங்க……அவ்ளவுதான் க்ளப் ஆக்டிவிடி…. நாங்க அங்க இருந்த ஃப்யூ இயர்ஸ்ல  ஒருடைம் கூட நான் அதுக்கு போனது இல்லைன்றது வேற விஷயம். .

இதில் நாங்க குடி போய் சில மாசத்தில் அங்க சில அடெம்ட் ஆஃப் தெஃப்ட்……லே அவ்ட்க்கு வெளியதான்னாலும்  பட் பக்கத்திலயே இன்னும் மோசமான சில க்ரைம்ஸ்……எங்க லே அவ்ட்லயே ரெண்டு போலீஸ் பீபுள் வீடு உண்டு……என்னாதான் கேர்ஃபுல்லா இருந்தும் கடைசில ஒரு  வீட்ல  திருட்டு போய்ட்டு……

அதுவும் எப்டி….அந்த வீட்டு ஆன்டி நைட் சாப்பாடு முடிஞ்சதும் தினமும்  ப்ளேட்ஸை அலசி தண்ணியை அவங்க வீட்டு செடிக்கு ஊத்துவாங்களாம்…..

அதை கவனிச்சு இந்த தீஃப்…..அவங்க தோட்டத்தில் மறஞ்சு இருந்து அவங்க தண்ணி  ஊத்த  வெளிய வந்த டைம்……அவங்க திறந்து வச்சுறுந்த பின் கதவு வழியா  உள்ள போய் மறஞ்சு இருந்துகிட்டு…..இவங்க கதவை லாக் செய்யவும்…வீட்ல உள்ள எல்லோரையும் அடிச்சு கட்டி போட்டுட்டு திருடிட்டுப் போய்ட்டான்….

அதுக்கு பிறகு எங்க சொசைடி ரெட் அலர்ட்க்கு வந்துட்டுது….. ரொம்பவும் ப்ளான் செய்து உள்ள வந்து வெயிட் செய்து திருட முடியுதுன்னா நம்ம சேஃப்டி எந்த ரேஞ்ச்ல இருக்குதுன்னு இவங்களுக்கெல்லாம் ஒரு கேள்வி….

அப்ப எல்லோரும்  பேசி ஒரு முடிவுக்கு வந்தாங்க…..வீட்டுக்கு ஒருத்தர்னு தினமும் எல்லோர் வீட்ல இருந்தும் ஜென்ட்ஸ் நைட் வாட்ச்க்கு போகனும்னு முடிவு…. பெரிய லேஅவ்ட்ன்றதால சும்மா ஒன்னு ரெண்டு பேரா வாட்ச் செய்தா ஒன்னும் செய்ய முடியாதுன்றதால  இப்டி ஒரு ப்ளான்….

ரெண்டு பேட்ச்சா போவாங்க….. நைட் 1 மணி வரை ஒரு பேட்ச்…..அதிலிருந்து காலை வரை அடுத்த பேட்ச்னு நியாபகம்….

அப்பா அப்ப early forties ல இருந்துறுப்பாங்கன்னு நினைக்கிறேன்…. இந்த க்ரூப்ல காலேஜ் ஸ்டூடண்ட்ஸ்ல இருந்து அப்பா ஏஜ் க்ரூப் வரைக்கும் உள்ளவங்க இருந்தாங்க…… ஒவ்வொரு நாளும் ஒரு வீட்ல இருந்து இவங்களுக்கு நைட் டீ அனுப்பி வைப்பாங்க…..

எனக்கு அப்போலாம் அப்பா கிளம்புறப்ப த்ரில்லா இருக்கும்…..நான் எல்லோரையும் பார்த்தது கிடையாது…..ஆனா சில நேரம் நைட் வின்டோ வழியா பார்த்தா….அப்பா கூட இன்னும் சில பேர் ஒரு வீட்டு காம்பவ்ண்ட் வால் வெளிப்பக்கம் உள்ள ப்ரொஜக்ஷன்ல  உட்கார்ந்து பேசிட்டு இருப்பாங்க……இல்லைனா தெருவில் அங்கயும் இங்கயுமா குட்டி க்ரூப்பா நடந்துட்டு இருப்பாங்க…… ‘ஆ’ ன்னு இருக்கும் பார்க்க….

அடுத்து திருட்டு முயற்சி கூட அங்க எதுவும் நடக்கலை…….. அப்றமும் ரொம்ப நாள் எல்லோரும் இதை கன்டின்யூ செய்தாங்க…

மொத்ததுல இந்த அரேஞ்ச்மென்ட்க்கு பிறகு எங்க லேஅவ்ட்லன்னு மட்டும் இல்ல…..அதுக்கு சுத்தி பக்கத்துல இருக்ற ஏரியாலயுமே க்ரைம் ரேட் குறஞ்சுட்டு…….

இன்னொரு அட்வான்டேஜா…..இதுக்கு பிறகு எங்க சொசைடில வீடு இருக்குதுன்னு தெரிஞ்சா பொதுவா  யாரும் எங்க பொண்ணுங்கட்டயோ குழந்தைங்கட்டயோ வம்பு செய்ய மாட்டாங்க……

இத்தனைக்கும் இந்த ஊர்காவல் மிஷன்ல யாரும் எந்த வயலன்ஸ்லயும் ஈடுபட்டது கிடையாது……. எல்லோரும் ஹைலி எஜுகேட்டட்….. ரோட்ல இறங்கி சத்தமா பேசகூட மாட்டாங்க……

அப்பாவோட க்ளோஸ் ஃப்ரெண்ட் ஒரு டாக்டர்…..இன்னொருத்தங்க யூஎஸ்ல இருந்து ரிடையர்மென்ட் லைஃப்காக இங்க வந்தவங்க….இப்டித்தான் இருக்கும் எல்லோருடைய பேக்ரவ்ண்டும்…. இவங்க அரட்டைய கேட்க ஒரு யூத் கேங்…..ஜஸ்ட் க்ரூப்பா சுத்துவாங்க….. அவ்ளவு தான்……. நான் ஒற்றுமையோட பலத்த பார்த்த இன்சிடென்ட் இது….

இதுக்கு பிறகு சேஃப்டி விஷயத்துலன்னு மட்டும் இல்ல மத்தபடியும் சொசைடியில் நிறைய மாற்றங்கள்…..

பொதுவா யாருமே கட்டாயத்துக்காக இதுக்கு போனது இல்ல……எல்லோருக்கும் இதோட அடுத்த side effect ஆன அரட்டை அடிக்கிறது……வாக்கிங் போறது….ரெண்டு ஜெனரேஷன் மக்களும் கருத்து ஷேர் பண்ணிக்கிறதுன்ற இந்த பக்கம் ரொம்ப பிடிச்சு போச்சு…..

அதோட தொடர்ச்சியா சொசைடிகுள்ள நிறைய நிகழ்சிகள் கொண்டு வந்தாங்க….. விளையாட்டு போட்டி, கோலப்போட்டின்னு என்னவெல்லாமோ நடக்கும்…..யார் வீட்ல என்ன விஷேஷம்னாலும் இவங்க எல்லோரும் சேர்ந்துடுவாங்க……

ஒரு வகையில் அது ஒரு பெரிய குடும்பம்ன்ற மாதிரி டெவலப் ஆச்சுது….. கிறிஸ்துமஸ், தீபாவளினா நூத்துகணக்கான வீட்டுக்கும்  ஸ்வீட் பலகாரம்னு ஒருத்தர் வீட்ல இருந்து இன்னொரு வீட்டுக்கு பறக்கும்…..குழந்தைங்கதான் கொண்டுட்டு அங்கயும் இங்கயும்  லிட்ரலி ஓடுவாங்க….. அதைப் பார்க்கவே திருவிழா ஃபீல் இருக்கும்….. வின்டோ வழியா ரோடை வேடிக்கை பார்க்கிறது தான் அன்னைக்கு முக்கிய வேலையா இருக்கும் எனக்கு….

என்ன இருந்தாலும் தெரிஞ்சவங்களா சேர்ந்து வாழ்றது அருமைதான்….. அதையும்விட பக்கத்துல இருக்றவங்களை தெரிஞ்சவங்களாக்கிகிறது அலாதிதான்.

இப்பவும் நான் வின்டோ வழியா வேடிக்கை பார்த்துட்டு இருக்கப்ப குட்டீஸ் யாராவது புது ட்ரெஸ் போட்டுட்டு ஓடிட்டு இருந்தாங்கன்னா அந்த ஊர்காவல் டேஸும் அந்த ஃபெஸ்டிவல் செலிப்ரேஷன்ஸும்  ஞாபகம் வந்துடும்….

கூடவே எங்க சேஃப்டிகாக நைட்டெல்லாம் விழிச்சிறுந்த என் அப்பாவும்….

மனதிலயும் முகத்திலயும் அதா ஒரு பூ பூக்கும்.

Leave a Reply