மனதோடு ஊஞ்சல் ஆடுதே 11

அதில் நாயகன் பேர் எழுது கதையில் ஒரு எப்பிசோட்க்கு வந்த கமென்ட் பார்க்கவும் நியாபகம் வந்த இன்சிடென்ட் இது….. சரி இங்க ஷேர் செய்யலாம்னு தோணிச்சு…..

ANPE கதையோட ஹீரோ விவன் ஸ்கூல் டேஸ்ல ஹோம்வொர்க்கே செய்யாத பார்ட்டி…. பட் ரிசல்ட்ல அவர் ஸ்கூல் ஃபர்ஸ்ட் வந்திருப்பார்னு போகும் கதை…. அந்த மேஜிக்கு காரணமான பேக்ரவ்ண்ட்  இது தான்..….

ANPE கதைல வர்ற ஸ்கூல்  நான் 5த் ம் 6த்ம் படிச்ச ஸ்கூல்…. 5த் ஆரம்பத்துல இருந்து கூட அங்க படிக்கலை…….கரெக்ட்டா பொங்கல் அன்னைக்கு அந்த ஊருக்கு நாங்க ஷிஃப்ட் ஆனது இன்னும் நியாபகம் இருக்கு…..பொங்கல் முடியவும் ஜனவரி 17 இல்ல 18 ல ஜாய்ன் செய்துறுப்பேன்னு நினைக்கிறேன்…..

அப்படி பாதியில… பாதின்னு கூட சொல்ல முடியாது….முடிய போற டைம் அட்மிஷன் கொடுக்றது ஸ்கூலைப் பொறுத்தவரை பொதுவா ரொம்ப கஷ்டம்….. அதனால என் ட்ராக் ரெக்கார்டை எல்லாம் அனலைஸ் செய்துட்டுதான் அந்த ப்ரின்ஸிபால் எனக்கு அட்மிஷன் கொடுத்தாங்க…. அதுலயா இல்ல அடுத்து க்ளாஸ்ல கொஞ்ச நாள் கொடுத்த ஓரல் டெஸ்ட்லயான்னு தெரியலை….எப்டியோ எங்க ப்ரின்ஸிக்கு அப்டி ஒரு ஐடியா வந்திருக்குது….. என்ன ஐடியான்னா…..

அந்த ஸ்கூல்ல  12த் வரை க்ளாஸ் உண்டுனாலும்…. 5த் வரை ஒரு ப்ரின்ஸிபால்….6த் ல இருந்து 12த் வரை வேற ஒருத்தங்கன்னு ரெண்டு ப்ரின்ஸிபால் மூலமா ரன் ஆகும் ஸ்கூல்….

அந்த வகையில இந்த 5த் ப்ரின்ஸிபால்க்கு… elementary section chief ன்ற முறையில் ஆஃபீஸ் வொர்க்கே அதிகமா இருக்கும்….. சேம் டைம் அவங்களுக்குன்னு ஒரு தனி செக்க்ஷனும் 5th E ன்னு உண்டு….  என்னை அந்த செக்க்ஷன்ல தான் சேர்த்திருந்தாங்க….

எல்லா க்ளாஸுக்கும் ஈவ்னிங் ஸ்டடின்னு ஒரு லாஸ்ட் பீரியட் உண்டு….. பீரியட்னா அது 1 ஹவர் 45 மினிட்ஸ் ட்யூரேஷன் உள்ள ரொம்ப லா……..ங்க் பீரியட்…

அந்த பீரியடோட பர்பஸ் என்னதுன்னா….. அன்னைக்கு எந்த சப்ஜெக்ட்லலாம் க்ளாஸ் வொர்க் எழுதினமோ….அதை அப்ப படிச்சு நம்ம டீச்சர்ட்ட சொல்லனும்…….சொல்லி முடிச்சாதான் வீட்டுக்கு போகலாம்…..

எல்லா செக்க்ஷனையும் அந்தந்த க்ளாஸ் டீச்சர் பார்பாங்கன்னா…. எங்க செக்க்ஷனை என்னைய பார்க்க சொல்லிட்டாங்க ப்ரின்ஸி….

எனக்கு அது நியூ ஸ்கூல்…..எல்லோரும் புதுசு……கூடவே நான் எல்லா சப்ஜெக்டுக்கும் ஃபர்ஸ்ட் லெசன்ல இருந்து க்ளாஸ் வொர்க் எழுதனும்….. ஸ்கூல் மாறி வந்துறுக்கனே…. சேம் சிலபஸ்னா கூட பழைய நோட்டை அக்செப்ட் செய்ய மாட்டேன்னு சொல்லிட்டாங்க….இதில் இது வேற…..

முதல்ல ஃப்யூ டேஸ் திணறிட்டேன்….. அப்றம் க்ளாஸை 11 க்ரூப்பா பிரிச்சதா நியாபகம்….மொத்தம் 54 பேர்னு நினைக்கிறேன் எங்க க்ளாஸ் ஸ்ட்ரென்த்… சோ 5 பேர் ஒரு க்ரூப்…..

எல்லோரையும் வச்சுட்டு  ஒரு டைம் படிக்க வேண்டிய லெசனை நான் எக்‌ஸ்ப்ளெயின் செய்வேன்…. அடுத்து எல்லோரும் படிச்சு…அவங்க அவங்க க்ரூப் லீடர்ட்ட சொல்லனும்….. அந்த லீடர்ஸ் மட்டும் என்ட்ட சொல்லுவாங்க…… சொல்ல கஷ்டபடுறவங்க எந்த க்ரூப்பா இருந்தாலும் என்ட்ட வரனும்….நான் திரும்ப லெசனை அவங்களுக்கு சொல்லி கொடுப்பேன்….இது தான் strategy

ஹி ஹி இதுல அட்வான்டேஜ் என்னதுன்னா நான் யார்ட்டயுமே சொல்ல வேண்டாம்….. அதுதான் நான் ஹோம்வொர்க்ல இருந்து எஸ்கேப் ஆக ஆரம்பிச்ச முதல் இன்சிடென்ட்….;)

ஜோக்‌ஸ் அபார்ட்….இது எனக்கு நிஜமாவே ரொம்ப ஹெல்ப்ஃபுல்லா இருந்துது….  எப்பவுமே படிக்கிறதை விட  டீச் பண்றது தான் எனக்கு ஈசியா படிக்ற மெத்தடா தோணும்….. அதோட 11 டைம்ஸ் ஒவ்வொரு விஷயத்தையும் நான் கேட்டாகனும்…..

அந்த இயர் ஃபைனல் எக்‌ஸாமில் நான் ஸ்கூல் டாப்பர்….. 5த் தான்…. பெரிய க்ளாஸ் எல்லாம் இல்ல….. இருந்தாலும் எங்க ப்ரின்ஸிக்கு பயங்கர சந்தோஷம்…. மொத்த க்ளாஸுமே நல்ல score….

இது எப்டி எங்க 6த் டீச்சர்க்கு போச்சுதுன்ன்னு எனக்கு தெரியாது….. நான் 6த் போகவும் க்ளாஸோட எல்லா பொறுப்பையும் தூக்கி என் கைல கொடுத்துட்டாங்க…..

எங்களுக்கு அப்ப இங்க் பென்னால மட்டும்தான் க்ளாஸ் வொர்க் எழுதனும்னு ரூல்….அதனால காலைல வரவும்  எங்க க்ளாஸுக்குன்னு வாங்கி வச்சுறுக்க இங்க் பாட்டில்ல இருந்து எல்லோருக்கும் இங்க் சேல் பண்றதுல ஆரம்பிக்கும் என் நாள்….

ஆமாம் அங்க அப்படி ஒரு பழக்கம் உண்டு…. கண்டிப்பா அங்க தான் ஃபில் பண்ணனும்னு எதுவும் கட்டாயம் கிடையாது…. ஆனா மறந்துட்டு வர்ற மக்களுக்கு இது வசதியா இருக்குமேன்னு அப்படி ஒரு ஏற்பாடு……அப்படி வர்ற காசு க்ளாஸின் பொது பணம்…. தினமும் டீச்சர்ட்ட கணக்கு கொடுக்கனும்….

அடுத்த வேலை…… 72 பேர்னு நினைக்கிறேன் 6த் ல என் க்ளாஸ்மேட்ஸ்….எல்லோருக்கும் ஹோம் வொர்க் செக் செய்யனும்……. அதுவும் மேத்ஸ் ஹோம்வொர்க் எல்லாம் ஒவ்வொருதருக்கும் ஒவ்வொரு சம்மும் பார்த்து கரெக்ட் செய்து வைக்கனும்…. இதெல்லாம் அசெம்ப்ளிக்கு போறதுக்கு முன்னால…..

அசெம்ப்ளிக்கு அடுத்து டீச் செய்றதெல்லாம் எங்க டீச்சரோட வேலை…. .. சோசியல் சைன்ஸ் தவிர மத்த எல்லா சப்ஜெக்டுக்கும்….. புக்ல ஆன்ஸ்வர் மார்க் செய்து என்ட்ட கொடுத்துடுவாங்க மேம்….அதை போடில் எழுதி போட்டு  எல்லோரையும் காபி செய்ய வைக்க வேண்டியது என் வேலை…

க்ளாஸ் எடுக்காத நேரம் தவிர….எப்பல்லாம் டைம் கிடைக்கும்னு பார்த்து பார்த்து இந்த க்ளாஸ் வொர்க் வேலை செய்வோம்…..

12 டு 2 எங்க லன்ச் ப்ரேக்…..ஆனா நாங்க 12. 20க்கு எல்லோரும் க்ளாஸ்க்கு வந்துடுவோம்…. நான் ஒரு பெஞ்சை போர்ட் பக்கம் தூக்கி போட்டு அதில் ஏறி நின்னு ஒவ்வொரு லெசனா எழுதிப் போடுவேன்….. மத்தவங்கல்லாம் காபி பண்ணுவாங்க…..அன்னைக்கு சாயந்தரம் ஸ்டடில அதை படிச்சுடுவோம்….

6த் ல டீச்சர் ட்யூஷன் எடுப்பாங்க….  எங்க ஈவ்னிங் ஸ்டடி ஹவர் தான்  ட்யூஷன் டைம்…..என் க்ளாஸ்மேட்ஸ் ஒரு 20 பேர் ட்யூஷன் போவாங்க….மீதி 50 பேர் என் பொறுப்பு…..அதே 5த் மெத்தட்…. 5 பேர் ஒரு க்ரூப்….அதுல ஒருத்தர் அந்த க்ரூப் லீடர்…. அவங்க தன் டீமை பார்த்துப்பாங்க….நான் அவங்களை…

இதுல எல்லாத்திலும் கவனிச்சீங்கன்னா….என்னை செக் பண்ண யாருமே கிடையாது…..  என் க்ளாஸ் வொர்க் கூட நான் போட்ல எழுதுறப்பவே, ஒவ்வொரு சப்ஜெக்டுக்கும் ஒருத்தர்னு  ஸ்பீடா எழுதுற ஒவ்வொரு கேர்ள், அவங்க நோட்டையும் என் நோட்டையும் சேர்த்தே எழுதிடுவாங்க….

மேத்ஸ்ல ஒவ்வொரு சம்மும் 70 தடவ செக் செய்துறுப்பேன்….   மத்த சப்ஜெக்ட் க்ளாஸ் கவனிச்சது….எழுதி போட்டது தவிர 10 தடவையாவது காதுல வாங்கி இருப்பேன்…. உண்மையில் புக்கோட எந்த பேஜ்ல எது இருக்குன்னு பேஜ் நம்பர் வாரியா தெரிஞ்சுடும்…

வீட்ல வந்து திரும்ப ஹோம்வொர்க் எழுதனும்னா செம போரா ஃபீலாகும்….கொஞ்ச நாள் பொறுத்து பார்த்துட்டு….மேம்ட்ட போய் என்னால ஹோம் வொர்க் செய்ய முடியலைனு சொல்லிட்டேன்…. மேமும் ஒரு மாதிரி சிரிச்சுட்டே சரின்னு தலைய ஆட்டிட்டாங்க….

அந்த இயர் ஒவ்வொரு எக்‌ஸாமிலும் அங்க நான் ஸ்கூல் டாப்பர்தான்…. ஆனா அந்த வருஷம் முழுக்கவே நான் ஹோம்வொர்க் செய்யலை….. க்ரேட் எஸ்கேப் ஹெய்…

க்சுவலி இவ்ளவுதான் நான் share செய்ய நினச்சது….. ஆனா எழுதிட்டு இப்ப வாசிச்சுப் பார்க்கப்ப read செய்றவங்களுக்கு என்னை என் டீச்சர்ஸ் அந்த வயதில் ஓவரா வேலை வாங்கின ஃபீல் வந்திடுமோன்னு ஒரு ஆங்கிளும் தோணுது….

உண்மையில் நான் வீட்டுக்கு வந்து ஹோம்வெர்க செய்ய போரா ஃபீல் செய்தனே தவிர….எப்பவுமே school ல ஓவர் லோடடா….அதிக வர்க்கா ஃபீல் பண்ணதே இல்ல….எவ்ரி மொமன்ட் ஹேப்பியதான் போச்சுது…..இப்ப திரும்பி பார்க்கிறப்ப கூட திருப்தியாத்தான் இருக்குது….

அந்த ஏஜ்ல ஆரம்பித்த இந்த பழக்கம் அடுத்து நான் காலேஜ் படிக்கிற வரைக்கும் கன்டின்யூ ஆகி இருக்குது…..And always yielded good results…….to me as well as to my peers…

அபவ் ஆல்….இதால வந்த மார்க்‌ஸ் எனக்கு இப்ப யூஸ் ஆகுதுன்னு சொல்ல முடியாது….ஆனா இந்த அப்ரோச் அண்ட் மேனேஜ்மென்ட் என் ஸ்கூல் லைஃப்ல இருந்து இப்ப வரை என்னை சந்தோஷமா வச்சுகிறதுல ரொம்ப ரொம்ப முக்கிய ரோல் ப்ளே செய்துருக்குது…..

திரும்பி பார்க்கிறப்ப வாழ்க்கை ரொம்பவும் திருப்தியாவே இருக்குது.

Leave a Reply