மனதோடு ஊஞ்சல் ஆடுதே 10

இந்த வீக் எங்க வீட்ல தேங்க்ஸ் கிவ்விங் வீக்….லைஃபில் நடந்த எல்லா நல்லதுக்காகவும் நம்ம பார்வைக்கு கெட்டதா தெரியுற  விஷயத்துக்காகவும் கூட கடவுளை தேங்க் பண்ற டைம்…. இந்த மூட்ல இருக்றதாலயோ என்னவோ இன்னைக்கு எழுத இந்த இன்சிடென்ட் தான் நியாபகம் வருது….

அப்போ நான் காலேஜ் படிச்சுட்டு இருந்தேன்…..ஃபைனல் செமஸ்டருக்கு முந்தின செமஸ்டர் வரை எனக்கு எப்பவும் க்ளாஸ்ல செகண்ட் இல்ல தேர்ட் மார்க்தான் வரும்….

டாப்பர்ஸ் மத்த ரெண்டு பேர்ல ஒருத்தி என்னோட க்ளோஸ் ஃப்ரெண்ட்… நாங்க ரெண்டு பேரும் சேர்ந்துதான் எல்லாமே படிப்போம்…

எல்லா பேப்பர்ஸுக்கும் நோட்ஸ் ப்ரிபேர் செய்றது என்னோட வேலை….ரெண்டு பேர் ரெக்கார்ட் வொர்க்குக்கும் அவ பொறுப்பு…..

ஸ்டடி ஹாலிடேஸ்ல பாதி நாள் நாங்க என் வீட்ல இருப்போம்….மீதி நாள் அவ வீட்ல…. அப்ப படிக்றப்பவும் டைம் மேனேஜ்மென்ட்க்காக சிலபஸை பாதியா பிரிச்சு ஒரு பாதிய அவளும் அடுத்த பாதிய நானும் படிச்சு…..தென் அவ என்ன படிச்சான்னு ஓரலி எனக்கு சொல்ல, அதே போல நான் அவளுக்கு சொல்ல…. அதை மட்டுமே வச்சு நாங்க பரீட்சை எழுதுன அனுபவம் கூட உண்டு….

அதுபோல அடுத்த பொண்ணு எனக்கு ரிலடிவ்….. இப்டி எல்லாவற்றின் வழியாவும் எனக்கு அவங்க யார் கூடயும் எப்பவுமே காம்படிடிவ் ஃபீலே கிடையாது…..ஆனாலும் இரண்டு ஆசை இருந்துது…….ஃபர்ஸ்ட் மார்க் வரனும்னு ஒன்னு…. ஒரு பேப்பர்லயாவது 90% வாங்கனும்னு அடுத்தது…

ஆனா க்ளாஸ் டெஸ்ட் எல்லாத்திலும் ஃபர்ஸ்ட் மார்க் வந்தாலும் செமஸ்டர்ல எப்பவும் எனக்கு ஏன்னே புரியமா மார்க் குறையும்…. எப்பவும் 80 டு 85 % தான் ஒவ்வொரு பேப்பரிலும் வரும்…

நானும் ஒவ்வொரு டைமும் இதுக்காக ஹார்ட் வொர்க்கும் செய்வேன்…ப்ரேயரும் செய்வேன்…. எவ்ளவுதான் நல்லா எழுதின ஃபீல் இருந்தாலும்  ரிசல்ட் மாறுனதே இல்ல….

நாள் போக போக எனக்கு ஃப்ரெஸ்ட்ரேட் ஆக ஆரம்பிச்சுது…. அந்த பர்ட்டிகுலர் செமஸ்ட்டர் வர்ற்ப்ப நான் ப்ரேய்ர்ல லிட்ரலி புலம்பிட்டு இருந்தேன்….

திடீர்னு எனக்குள்ள ஒரு சாஃப்ட் வாய்ஸ்…… உனக்கு ஏன் அன்னா ஃபர்ஸ்ட் மார்க் வேணும்? அப்டின்னு….

நிஜமா அந்த கேள்விக்கு என்ட்ட அப்ப பதில் இல்ல….. ஸ்தம்பித்து போய்ட்டேன்….நானும் ஒவ்வொர் ஆங்கிள்ளயும் யோசிச்சுப் பார்க்கிறேன்… என் அப்போதையே பெர்சென்டேஜே அந்த பீரியட்ல ஹையர் ஸ்டடீஸுக்கு போதும்…..அதோட டாப்பர்ஸ்ட்ட இருந்து நான் ஃப்யூ மார்க்‌ஸ்லதான் பின்னால இருந்தேனே தவிர பெர்சென்டேஜ்ல பெருசா வித்யாசம் எதுவும் கிடையாது….

இப்டி எல்லாத்தையும் சுத்தி வளச்சு யோசிச்சதில் புரிஞ்ச விஷயம் ஒன்னே ஒன்னுதான்….. நான் பர்ஸ்ட் ரேங்குன்னு எல்லோர்ட்டயும் சொல்லிக்க மட்டும்தான் என்ட்ட வழி இல்ல….மத்த எல்லாத்துக்கும் என்ட்ட இருக்ற மார்க்ஸ்‌ போதும்….

அதாவது பெருமை அடிக்க வழி இல்ல….

Boasting கடவுள்க்கு பிடிக்காதுன்னு பைபிள்ள ரொம்பவே தெளிவா இருக்கும்…..அதை நான் நிறைய டைம் படிச்சுறுப்பேன்…அப்றம் எத வச்சுகிட்டு அவர்ட்ட help me so that I can boastனு ப்ரே பண்ண…?

ஐம் சாரி….இவ்ளவு நாள் என் நோக்கம் என்னதா இருந்திருக்குன்னு எனக்கு புரியுது….சோ நான் இனி என் ரேங்க் பத்தி எதுவும் கேட்கலை….உங்க இஷ்டபட்ட ரேங்க் கொடுங்க…..ஆனா எனக்கு 90% ஒரு பேப்பர்லயாவது ஸ்கோர் செய்யனும்னு ஒரு ஆசை இருக்குது….நிச்சயமா போஸ்டிங் எய்ம் கிடையாது….. நான் இதுவரை தொடாத உயரத்தை தொட்டுப் பார்க்கிறது எப்டி ஃபீலாகும்னு I just want to taste it…… அப்டின்னு ப்ரே செய்து அந்த டாபிக்கை அதோட விட்டுட்டேன்….ரேங்க் பத்தி அடுத்து நான் எதையும் கண்டுக்கவே இல்ல….

அந்த செமஸ்ட்டர்லும் அடுத்த செமஸ்ட்டர்லயும்…ஒரே ஒரு பேப்பர் தவிர ஒவ்வொரு பேப்பரிலும் எனக்கு above 90%.  அதிலும் ஒரு பேப்பரில் எங்க யுனிவர்சிட்டில எங்க டிபார்ட்மென்ட் ஆரம்பிச்சதுல இருந்து யாருமே ஸ்கோர் செய்யாத பெர்சென்டேஜ்னுலாம் சொன்னாங்க…. இதுல இன்னொரு விஷயம் என்னன்னா எனக்கு ஃபர்ஸ்ட் ரேங்க் வந்துட்டு….

உண்மையில் என் லைஃப்ல இன்னைக்கு இடத்துல நின்னு யோசிச்சுப் பார்த்தா…..அந்த மார்க்‌ஸ் எனக்கு வேற எதுக்கும் யூஸ் ஆச்சுதுன்னு இல்ல…..ஏன்னா நான் இப்ப அந்த ஃபீல்ட்லயே இல்ல….. ஆனாலும் என் வாழ்க்கையோட ரொம்பவும் முக்கியமான டர்னிங்க் பாய்ண்ட்னா இந்த நிகழ்ச்சிதான்….

கடவுளோட அன்புன்றது நாம கேட்கிற எல்லாத்தையும் கொடுக்றதுல இல்ல….  ஆனாலும் நம்மை நேர்மையாக்கி அடுத்து  அவர் கொடுக்ற ஸ்டைலே அலாதிதான்னு நான் ரியலைஸ் செய்த மொமன்ட் அது…

விஷயம் அதோட நிக்கல….. ரிசல்ட்டெல்லாம் வந்து நான் மார்க்ஷீட்டெல்லாம் வாங்கின பின்…என் காலேஜ்க்கு லாஸ்ட்டா எதோ விஷயமா போயிருந்தேன்….அப்ப என்ட்ட எங்க டிபார்ட்மென்ட் லெக்சரர் ஒருத்தங்க வந்து பேசினாங்க….

அவங்க எனக்கு தியரி மட்டுமில்லாம ப்ராக்டிகல்ஸ் பேப்பரும் ஹேண்டில் செய்தது உண்டு…. பொதுவா ப்ராக்டிகல்ஸ் க்ளாஸ்ல எனக்கு எப்பவும் ரிசல்ட் வந்துடும்…. ஆனா அவங்க கேஷுவலா எங்க செமஸ்டர் ஸ்கோர்ஸை எல்லாம் பார்த்துட்டு இருந்தப்ப எனக்கு எல்லா எக்ஸாமிலும்  ப்ராக்டிகல்ஸ்ல ஸ்கோர் அரவ்ன்ட் 60% யே இருக்றதை நோட் செய்துறுக்காங்க….

.எப்டி எக்‌ஸாமில் மட்டும் இந்த பொண்ணுக்கு மார்க் போகுதுன்னு அவங்களுக்கு ரொம்ப ஆச்சர்யமா இருந்துதாம்….சோ அடுத்து வந்த ரெண்டு செமஸ்டர்கான ப்ராக்டிகல் எக்‌ஸாம்ஸில் நான் என் ப்ராக்டிகல்ஸ் பேப்பரை சமிட் செய்யவும் இவங்க போய் ஒரு க்யூரியாசிட்டில எடுத்துகிட்டாங்களாம்….

அவங்களும் இன்னொரு ஸ்டாஃபும்தான் எப்பவும் ப்ராக்டிகல்ஸ் இன்விஜிலேட்டர்…. இவங்க என் பேப்பரை பார்த்து அதில் எல்லாம் சரியா இருக்கவும் 98% மார்க் கொடுத்துறுக்காங்க…. பொதுவா பெர்ஃபெக்டா இருந்தா அந்த ஸ்கோர் கொடுப்பாங்கதான்….

உடனே கூட இருந்த அடுத்த ஸ்டாஃப் வந்து அவளுக்கு அவ்ளவு மார்க் எல்லாம் கொடுக்க கூடாது குறைங்கன்னு சொன்னாங்களாம்…..இவங்களுக்கு என்ன சொல்லன்னு தெரியாமல்…சரின்னு 2 மார்க் கொறச்சாங்களாம்…..

இல்ல இப்டில்லாம் குறச்சா எனக்கு போதாது….ரொம்ப குறைக்கனும்னு சொன்னாங்க போல….. இவங்க உடனே அப்டில்லாம் என்னால செய்ய முடியாது …நீங்க சொன்னதுக்காக இவ்ளவு செய்துட்டேன்..அதோட விடுங்கன்னுட்டாங்க போல…

அதிலிருந்து அடுத்து ஒவ்வொரு ப்ராக்டிகல் எக்சாமுக்கும்…. உன் பேப்பரை ஓடிப் போய்தான் எடுப்பேன் நீ எப்ப சப்மிட் செய்றன்னு பார்த்துன்னு சொன்னாங்க அந்த மேம்…..

I’m grateful to her from the bottom of my heart…..

எனக்கு மார்க் போடக் கூடாதுன்னு சொன்ன லெக்சரர்க்கு என் மேல இப்டி ஒரு குரோதம் இருக்குதுன்னே எனக்கு அப்பதான் தெரியும்….  ஆனா எனக்கு அதெல்லாம் அப்ப விஷயமா தெரியல…..

என் நோக்கம் சரியாகிறவரை கதவுகளை அடைத்து வைப்பதும்..…அது சரியான பிறகு  எனக்காக அவரோட ஸ்டைல்ல இறங்கி வருவதும் கடவுளோட நேச்சர்னு  நான் உணர்ந்த முதல் தருணம் அது….

இன்னைக்கு வரை என்  நிம்மதிக்கும் இந்த புரிதலுக்கும் ரொம்பவே நெருக்கமான தொடர்பு உண்டு…

என் வாழ்க்கை என் கைலதான் இருக்குது…..

In all things GOD work for the Good of those who loves Him….

2 comments

  1. So beautiful anna. I so needed this at this point in life. En nokkam seriyagiravarai kadhavugalai adaithu veipadhum seriyanapiragu enakkaga irangi varuvadhum kadavuloda nature. What a beautiful beautiful thinking. So profound so brilliant so touching. Hats off to ur writing.

  2. Last line papaku very helpful …hehe I am that papa…❤️ithu Pol Sariyana visasyatha Sariyana time la tharadhu kuda kadavul than….

Leave a Reply