மனதோடு ஊஞ்சல் ஆடுதே…. அதோ அவன்

ணக்கம் ஃப்ரெண்ட்ஸ்….இது மாதிரி ஒரு சீரிஸ்ல உங்களை எல்லாம் சந்திக்கனும்னு ரொம்ப நாளாவே ஆசை….அதான் இப்ப களமிறங்கிட்டேன்……

‘மனதோடு ஊஞ்சல் ஆடுதே’…. டைட்டிலை கேட்டதும் உங்களுக்கு ஓரளவு இது எதைப் பத்தின்னு புரிஞ்சிருக்கும்…..

நாம பொதுவா எல்லோருமே நம் வாழ்க்கைய தலை கீழா மாத்தி வச்ச சந்தோஷ நிகழ்ச்சியையோ இல்ல துக்க இழப்பையோ….அந்த நேரம் ரொம்பவும் ஆழமா அனுபவிச்சாலும் ..….கால ஓட்டத்தில அதை விட்டு வெளிய வந்துடுவோம்……அடுத்து எப்பவாவது ஒரு மூட்ல அதை நாமளா யோசிச்சு பார்த்தால் தான் உண்டு.

ஆனா அப்படி பெரிய மாற்றம் எதையும் கொண்டு வராத  குட்டி குட்டி நிகழ்ச்சிகள்  நிறைய நமக்கு இருக்கும்….அது நம்ம லைஃப்ல நடந்ததா இருக்கலாம்….இல்லை நம்ம சுத்தி இருக்கவங்க அனுபவிச்ச விஷயமா இருக்கலாம்….அது மாதிரி விஷயங்கள நாம உட்கார்ந்து யோசிச்சுப் பார்க்கனும்னுலாம் இல்ல…..அப்பப்ப நம்ம மனசுல அதா வந்துட்டு போகும்…..

அப்படி என் மனதில் தானாக வந்து ஆடிப் போகும் விஷயங்களை தான் இந்த மனதோடு ஊஞ்சல் ஆடுதேல உங்க கூட பகிர்ந்துகிடலாம்னு நினைக்கிறேன்…. இதைப் படிக்கிறப்ப உங்களுக்கு என்ன ஞாபகம் வருதோ அதை நீங்களும் ஷேர் பண்ணுங்க…. ஆனா இதுல வர்றதெல்லாம் ஒரு வகையில உண்மை நிகழ்ச்சின்றதால அளவா கலாய்ங்க மக்களே…..

ப்ப நான் 9த் படிச்சுட்டு இருந்தேன்….. எங்க ஸ்கூல்ல இருந்து ஒரு  கேம்ப்க்கு என்னோட சேர்த்து ஒரு மூனு பேரை  அனுப்பி இருந்தாங்க…..

கேம்ப் நடந்த ஊர் (ஊர்னா வில்லேஜ்னு இல்ல….வில்லேஜ் /டவ்ண்/சிட்டி எல்லாம் ஊர்தான்) எனக்கு முன்ன பின்ன தெரியாத இடம்….. புது இடத்தைப் பார்க்கப்போற எக்‌சைட்மென்ட்ல நான் ரொம்ப ஹேப்பியாவே போனேன்….

கேம்ப்ல வெளியூர்ல இருந்து வந்திருந்தவங்கள்ல பாய்ஸ் தான் அதிகம்……நூத்து கணக்குல இருந்தாங்கன்னு நினைக்கிறேன்….ஆனா வெளியூர்ல இருந்து வந்த பொண்ணுங்க மொத்தம் 5 பேர் தான்னு நியாபகம். மத்தபடி எல்லா கேர்ள்ஸும் உள்ளூர் பொண்ணுங்க….. ஆக நாங்க 5 பேரும் ஒரு gang ஆ மாறி இருந்தோம் கேம்ப் முடியுறதுக்குள்ள….

அன்னைக்கு  ஃபைனல் டே…..

எங்க எல்லோரையும் காலையில இருந்து அந்த ஊருக்கு பக்கத்தில் இருந்த சில இடத்துக்கு பஸ்ல கூட்டிட்டுப் போனாங்க…..சைட் சீயிங் ஜாலியா இருந்துச்சுதான்………. ஆனா போன இடம் எங்கயும் ரெஸ்ட் ரூம் கிடையாது……

இதில் நேர சைட் சீயிங்ல இருந்து,  சாயங்காலம் ஒரு மூனு மணிக்கு எங்க எல்லோரையும் அந்த ஊர்ல இருந்த ஒரு ஸ்கூல்ல வந்து இறக்கிவிட்டாங்க…… ஒரு சோஷியல் காஸ்காக, அங்க இருந்து ஒரு சைலண்ட் ரேலியா கேம்ப் வந்திருந்த நாங்க எல்லோரும் ஒரு சில கிலோ மீட்டர் நடந்து போகனும்ன்றது ப்ரோகிராம்.…..

அப்படி ரேலி ஆரம்பிக்கிறதுக்குள்ள எப்டியாவது ரெஸ்ட் ரூம் போய்ட்டு போகனும்னு அந்த ஸ்கூல்ல அதை நாங்க 5 பேரும் தேட ஆரம்பிச்சோம்…..

அந்த ஸ்கூல் ஒரு மெகா சைஸ் கேம்பஸ்…. அங்க திசைக்கு திசை ரெஸ்ட் ரூம்ஸ் இருந்துச்சுதான்……ஆனா எல்லாம் boys ரெஸ்ட் ரூம்…

அப்றம் மெல்லதான் புரிஞ்சுது அது பாய்ஸ் ஸ்கூல்னு…. என்ன செய்யன்னு தெரியாம நாங்க  முழிச்சுட்டு இருக்கப்ப, எங்கள தவிர யாரும் இல்லாத அந்த பக்கமா ஒரு ரெண்டு பெரிய boys  வந்தாங்க….

11த் இல்லனா 12த் படிப்பாங்கன்னு சொல்லலாம்….ஏதோ ஸ்கூல் யூனிஃபார்ம்ல இருந்தாங்க…..அது வீக் என்ட்….அந்த ஸ்கூல்க்கு லீவு….எங்க கேம்ப் மக்களெல்லாம் வைட் அண்ட் வைட்ல இருந்தோம்….. சோ பார்க்கவும் இவங்க கேம்ப்க்கு வந்தவங்க இல்லைனு தெரிஞ்சுது….

நான் அப்போ  படிச்சுட்டு இருந்த ஊர்ல ஈவ் டீசிங் அதிகம்…..ஆக எப்பவுமே நான் பாய்ஸ பார்த்தா அடிதடிக்கு ரெடி ஆகுற மாதிரி அலர்ட் ஆகி நிப்பேன்…..இதுல இப்டி ஆள் வேற இல்லாத இடம்…..சம்பந்தமே இல்லாம ரெண்டு பேர்னதும் ரெடி டூ ஃபைட் modeக்கு நான் இம்மிடீயட்டா மாற….

எங்க கூட இருந்த ஒரு அக்காதான் அவங்கட்ட பேசுனதா நியாபகம்.  நடந்த கான்வர்ஷேஷன் வேர்ட் பை வேர்ட்டாலாம் நியாபகம் இல்ல….

நாங்க ரெஸ்ட் ரூம் தேடி அலையுறோம்னு தெரிஞ்சதும்…..அங்க இருந்த அந்த ரெஸ்ட் ரூம யூஸ் செய்துக்க சொன்னாங்க அந்த பாய்ஸ்……

அடுத்தும் எங்க கோஷ்டி தயங்கி நிக்கவும்…. பின்ன  இவங்க ரெண்டு பேர் சொல்லிட்டாங்கன்னு நாங்க எப்டி boys ரூம்குள்ள போறதாம்?

அதுக்கு அந்த Boys,  அவங்க ரெண்டு பேர்ல ஒருத்தங்க அந்த ஸ்கூல் SPL இன்னொருத்தங்க ASPL…..…..இவங்கள இந்த ரேலிக்கு எதாவது ஹெல்ப் தேவைப் பட்டா செய்யனும்னுதான் வர சொல்லி இருக்காங்க…… ஆக அரேஞ்ச் செய்து கொடுக்க வேண்டியது எங்க ரெஸ்பான்சிபிலிட்டி ஒரு ப்ராப்ளமும் வராதுன்னு சொன்னதா நியாபகம்……….

அந்த அக்கா இப்போ  இத முதல்லயே செய்து வச்சுறுக்கனும்லன்ற மாதிரி எதோ சொன்னாங்க….

 

அதுக்கு அவங்க ரெண்டு பேரும், எங்களுக்கு கேர்ள்ஸ் வருவாங்கன்னு தெரியாது….அதனால கேர்ள்ஸுக்குன்னு எந்த அரேஞ்ச்மென்டும் செய்யலைனு பதில் சொன்னாங்கன்னு நினைக்கிறேன்..…..

அடுத்தும் அங்க இருந்து ரொம்ப தூரம் தள்ளிப் போய் அந்த ஏரியாகுள்ள நுழையுற இடத்துல நின்னு, நாங்க கிளம்புற வரைக்கும்,  அந்த பக்கம் வந்த பாய்ஸை எல்லாம் வேற இடத்துல இருக்ற ரெஸ்ட் ரூமுக்கு வழி சொல்லி அனுப்பிட்டு இருந்தாங்க அந்த ரெண்டு பேரும்.

மொத்த இன்சிடென்ட்லயும் அந்த பாய்ஸ்  ரெண்டு பேரும் ரொம்ப டீசண்டா பிகேவ் செய்தாங்க…. நல்ல மக்கள்னு நினச்சுகிட்டோம்….

து நடந்து முடிஞ்சு அடுத்து நான் UG. PG லாம் முடிச்சு…. அப்பா எனக்கு மேரேஜ்லாம் செய்து வச்ச பிறகு என் husband ட்ட பேசிட்டு இருக்கப்ப அது அவங்க படிச்ச ஸ்கூல்னும்…..அங்க அவங்களும் SPL ஆ இருந்திருக்காங்கன்னும் தெரிய வந்துச்சு….. சும்மா விளையாட்டா இயர் கால்குலேட் செய்தா நான் கேம்ப் போன வருஷம் அங்க SPL இவங்க தான்…..

அதாவது அன்னைக்கு ஹெல்ப் செய்த ரெண்டு பேர்ல ஒருத்தங்க இவங்க……

எங்க ரெண்டு பேருக்கும் அந்த  இன்சிடென்ட் ரொம்ப vague ஆ நியாபகம் இருந்தாலும் ஒருத்தர் முகம் ஒருத்தர்க்கு கொஞ்சமும் நியாபகம் இல்ல…..

எங்களோடது  100% அரேஞ்ச்ட் மேரேஜ்……நாங்க வளர்ந்ததெல்லாம் ஒருத்தர்க்கு ஒருத்தர் சம்பந்தமே இல்லாத இடம்….கல்யாண ப்ரபோசல் வர்ற வரையுமே ஒருத்தர்க்கு ஒருத்தர் தெரியாது…..

சோ இந்த இன்சிடென்ட் எனக்கு ரொம்ப பெக்யூலியராவும் கூடவே ஸ்வீட்டாவும் தோணும்….சம்பந்தமில்லாம அப்பப்ப அதா நியாபகம் வந்து முகத்தில சின்னதா ஒரு சிரிப்பை தந்துட்டு போகும்….

இப்ப கொஞ்சம் முன்னால என்னை இவங்க அந்த ஸ்கூல்க்கு கூட்டிட்டு போனாங்க…..பெயிண்ட்டிங் கலர் மட்டும் மாறி இருந்தாலும் மத்தபடி ஸ்கூல்  அப்படியேதான் இருக்கு…..அங்க எங்க குழந்தையோட சேர்த்து ஃபோட்டோ எடுக்கப்ப ரொம்ப  க்யூட்டான ஒரு ஃபீல்….

லைஃப் அங்கங்க நமக்கு சாக்லேட்ட ஒழிச்சு வச்சுட்டுதான் இருக்கு போல….டைம் வர்றப்ப  wrapperஐ பிரிச்சு நம்ம கைல கொடுக்கும் போல……அப்டின்னு தோணும் இது நியாபகம் வர்றப்பலாம்…

நினைச்சு பார்க்க சந்தோஷமா இருக்கும்…

6 comments

  1. Haha . அதோ அவன் னு டைட்டில் இருக்கவும் வேற கண்டெண்ட்ன்னு நினைச்சிட்டேன். பார்த்தாதா அதே ஆட்டோ தான். படிக்க செம்மயா இருக்கு.

    • oi…athey auto va….ha ha vera enna seyya…12 pottu mudichutu venaa vera ethaachum puthusaa serthupom….. intha vacation la avangalai oda oda vittatha eluthanumnu oru idea iruku 😉
      semmaya iruka…eeeeee nandri hei

  2. Wow really it’s great Sis….
    Adithadi ku alert anatha sonnapa unga hubby yeppadi feel pannanga…terror ponnu neganna???

  3. WOW superb mam. Enna oru unexpected twist. Though the entire thing is soo sweet I love the way u have written that life often gives the chocolate 🍫 in our hand at unexpected time is simply fantastic mam.Eagerly waiting for your next post mam.

Leave a Reply