பேரைச் சொல்லவா? அது நியாயம் ஆகுமா??

ன்று  நான் கிளம்றப்பவே கொஞ்சம் லேட். அடுத்தும் ஸ்ட்ரெய்ட் பஸ் கிடைக்காம  ரெண்டு பஸ் மாறி மாறி போய் அந்த பஸ் ஸ்டாப்ல இறங்கிறப்ப ரொம்பவே லேட். எனக்கு முதல் ஜாப் அது. அதுவும் முதல் நாள். நான் இப்ப படு டென்ஷனாகிட்டேன்.

எதிர்ல இருக்ற சிக்னலை தாண்டி இன்னும் 500 மீட்டர் வேற போகனும் ஆஃபீஸுக்கு…. சுற்று முற்றும் கவனித்தபடி சிக்னலில் இறங்கி ஓடினேன்…. க்ரீச் க்ர்க் இஷ்க்…. சுத்தி கேட்ட சில சத்தங்கள்… அதோடு இடுப்பில் சின்னதாய் விழுந்த இடியில் நான் மிரண்டு போய், கீழே விழும் போது படு பயங்கரமாய் பயந்து போய்….

பின்ன அடுத்த நொடி எத்தனை வண்டி என் மேல ஏறும்னு யாருக்கு தெரியும்….??? இதற்குள் அருகில் நின்ற அந்த வெள்ளைக் கார் கதவை திறந்து கொண்டு வந்தவன் என்னை கை பிடித்து தூக்கினான்…. “ஆர் யூ ஆல் ரைட்…?”

கையில் உண்டாகியிருந்த சிராய்ப்பை மட்டும் தடவிக் கொண்டு எழுந்துவிட்டேன்… “ஒன்னுமில்ல சார்…தேங்க் யூ” சொல்லிவிட்டேனே தவிர பயத்தில் இன்னுமாய் நடுங்கிக் கொண்டிருக்கிறது உடல்.

ஆனால் அதுவரை அத்தனை அக்கறையாய் கேட்ட அவன் இப்போது “அறிவிருக்கா உனக்கு….கிறுக்கா நீ…இப்டிதான் ரோடை கிராஸ் பண்ணுவியா…? ” என ஏகத்துக்கு ஏற தொடங்கி இருந்தான்….

என்ட்ட எப்பயாவது வீட்ல யாரவது கோபப் பட்டது உண்டு…..ஆனா இவ்ளவு கோபம் அதுவும் ஒரு ஆணோட கோபம்  இப்போதைக்கு நான் பார்த்ததே இல்ல…. அதுவும் முன்ன பின்ன தெரியாத இவனோட கோபம் என்னை ஏனோ எப்போதையும் விட அதிகமாகவே பாதித்தது….

“ஒரு செகண்ட்ல நீ இப்ப சட்னி ஆகி இருப்ப…. அடுத்து நான் அலையனும் கோர்ட்டு கேஸுன்னு…” அவன் நிறுத்துவதாக இல்லை….

என்னதான் என் பக்கம்தான் தப்பு என்றாலும்… என் நடுங்கும் உடலும் அவனுடைய கோபமும் என் சாப்பிடாத வயிறும்…. எல்லாமுமாக சேர்ந்து இப்போது நான் அவனை முறைத்தேன் “போடா லூசு” முகம் நோக்கி சொல்லிவிட்டு கட கடவென கிளம்பி வந்துவிட்டேன்….

ஹேய்…. அவன் ஏதோ சொல்ல தொடங்கியதை நான் கண்டு கொள்ளவே இல்லை.

கால் சென்ட்டர் அது…..அங்க யூகேலயும் யூஎஸ்லயும் எப்ப ஹாலிடேவோ அப்ப மட்டும்தான் லீவு இருக்குமாம்…. ட்ரெய்னிங் ஹாலில் என் பக்கத்தில் இருந்த பெண் அதைத்தான் சொல்லிக்கொண்டு இருந்தாள்…. அவ பேரு சுஜிதா

எனக்கெல்லாம் பேசாமல் இருந்தால் தான் வாய் வலிக்கும். அப்டி பார்டி நான். ஆனாலும் முதல் வேலை, முதல் நாள் வேலைனதும் கொஞ்சம் கபகபன்னு டென்ஷனா இருந்தது…அதுக்கு என்னை மாதிரியே இப்டி ஒரு வாய் பார்டி வாகா பக்கத்தில் உட்கார்ந்தது ரொம்பவே உதவியா இருந்துச்சு.

சுஜியும் நானும்  நல்லா மொக்கை போட்டு நட்புல முன்னேறிகிட்டு இருந்தப்ப

ஹாய் ஐ’ம்….. அப்டின்னு ஆரம்பிச்சு அவன் பேரை சொல்லிகிட்டே வந்தான். எங்களுக்கு லேங்குவேஜ் ஃபெசிலிடேடராம். அவன் குரலை கேட்கவும் தூக்கி வாரிப் போட்டது எனக்கு….. அவன்ன்ன்ன்ன்ன்…. அந்த கார்காரன்.

போச்சு….வேலை போச்சு…..நான் மிரண்டு போய் முழிக்க….

ஆனால் அவனோ என்னை அடையாளம் கண்டு கொள்ளவே இல்லை…. நிஜமாவா?????

அடுத்து அவன் பேச பேச இது எல்லாத்தையும் மறந்துட்டு நான் பே….ன்னு பார்த்துட்டு இருந்தேன். ஏன்னா அவன் இங்க்லீஷ் அப்டி…. அடுத்து ஒரு குட்டி ப்ரேக். என்னையும் அவனையும் தவிர எல்லோரும் வெளிய போய்ட்டாங்க….

கிடச்ச டைம்ம நாம வேஸ்ட்டாக்க கூடாது…..காலத்த ப்ரயோஜனப் படுத்தனும்னு…. ப்ரேக்க  சரியா யூஸ் செய்யனும்னு முடிவு செய்து….

சரி நாம இன்னையோட பேப்பரை போட்ற வேண்டியதான்…..அதுக்கு என்ன ப்ரொசீசர்னு யோசிச்சுகிட்டு இருந்தேன் நல்ல பிள்ளையா….. பின்னே அவன மாதிரி நான் என்னைக்கு பேசவாம்….?.வெளிநாட்டுகாரங்களுக்கு நான் பேசுறது இங்க்லீஷ்னு எப்ப புரியவாம்…?’

வேலைய விடனும்னு நினச்சாலும் வீட்டை நினச்சு டென்ஷனாவும் இருக்கு….எல்லோரும் கிண்டல் செய்வாங்கல்ல…போன அன்னைக்கே பயந்து ஓடி வந்துட்டன்னு….நம்மளால நாலு பேருக்கு நட்டமாக கூடாதுன்னு நினைக்கிற  நல்ல மனச அவங்களுக்கு எப்டி புரியும்….?

அப்படி ஆறு பக்கத்தையும் அலசி ஆராஞ்சு யோசிச்சுட்டு இருக்கப்ப….. அவன் என்னைக் கூப்பிட்டான். சரி தனியா வச்சு சங்கு ஊதப் போறான் போலறுக்கு….இட்ஸ் ஓகேமா….நாம எப்டியும் பேப்பர் போடத்தான போறோம்னு நான் கெத்தாவே அவன்ட்ட போனேன்…

நான் அருகில் போனதும்

“என் பேர் என்ன?” என ஆரம்பித்தான் அவன். நான் லூசுன்னு சொன்னத அவன் இன்னும் மறக்கலைனு சொல்றானாம். நான் பாதி சமரசமும் மீதி சடசடபுமாக பார்த்துக் கொண்டு நின்றேன். பதில் ஏதும் சொல்லவில்லை.

அவன் என்னை திட்டுற அளவைப் பொறுத்து முழு சமரசமா இல்லை முழு சடசடப்பா என முடித்துக் கொள்ளலாம் என்பது என் ப்ளான்.

அவன் என்னை திட்டி இருந்தா கூட எவ்ளவோ நல்லாறுந்திருக்கும்….. ஆனா அடுத்த கேள்வியா அவன்

“சாப்டியா?” என்றான். எனக்கு அப்பவே எதோ தப்பா போகப் போகுதுன்னு தெரிஞ்சிட்டு… உள்ளுக்குள் எனை மீறிய அந்த உதறல்…..

அதற்குள் அவன் “கேன்டீண்ல போய் சாப்டுட்டு வா…” என்றபடி ஒரு 100 ரூபாய் நோட்டை எடுத்து என் முன் வைத்தே இருந்தான். நான் செத்தே போயிருந்தேன்…..என் கண் சிவந்து….அழக் கூடாது என்ற நினைவையும் தாண்டி கண்ணில் இருந்து கொட்டுகிறது நீர்……

“போடா லூசு…” இப்பொழுது அழுத்தம் திருத்தமாய் அவனைப் பார்த்து சொல்லிவிட்டு என் இடத்தில் வந்து அமர்ந்து கொண்டேன்…..இன்னும் கூட என்னால் மூச்சுவிட முடியவில்லை…. நான் வேலைய விடப் போறது இல்ல…எனக்கு வேலை வேணும் கொதிக்குது உள்ளே..

என்னால் அடுத்து அவன் முன்னிலையில் இயல்பாய் இருக்க முடியவில்லை. திரும்பவும் ட்ரெய்னிங்…. அவன் பேசுவதை கேட்டு அவன் சொல்வதை செய்து என எல்லாம் அச்சு பிசகாமல் நான் பின்பற்றினாலும் என் மனம் இறுகிப் போய் இருந்தது.

திடீரென என்னை சுட்டிக் காட்டி எழும்ப சொன்னவன் “எல்லோரும் இன்ட்ரடக்க்ஷன் கொடுத்தாங்கல்ல….அதை கவனிச்சல்ல…..இங்க இருக்க எல்லோரோட நேம்…..அவங்க தங்களைப் பத்தி என்ன சொன்னாங்க….இதையெல்லாம் சொல்லு..” என்றான்.

அதாவது 20 பேரைப் பத்தி…இதுதான் எங்களுக்கு முதல் நாள்….யாரையும் பெர்சனால தெரியாது…. ‘எனக்கு இவன் என்னை படுத்தி எடுக்கனும்னு முடிவு செய்துட்டான்னு மட்டும் தான் புரிஞ்சுது’

வந்த கோபம், கொஞ்சமான அழுகை எல்லாத்தையும் அடக்கிக் கொண்டு அவன் கேட்ட கேள்விக்கு பதில்சொல்ல தொடங்கினேன்….கடகடவென எல்லோரைப் பத்தியும் சொல்லி முடித்துவிட்டேன்….

ஒரு ஸ்பெல்பாண்ட் சைலன்ஸ்….அடுத்து எல்லோரும் க்ளாப் பண்ணிட்டாங்க…. ஏன்னா நேம் மட்டுமில்ல…யார் யார் எங்க படிச்சாங்க…அவங்க வர்க் எக்‌ஸ்பீரியன்ஸ்னு எல்லாத்தையுமே பெர்ஃபெக்ட்டா சொல்லி இருக்கேன் போல…

அவனோ பதில் ஏதும் சொல்லாமல் செஷன் ஓவர்னு சொல்லிவிட்டு போய்விட்டான்.

டுத்து வந்த நாட்களும் இப்படித்தான் கழிந்தன. எல்லோரிடமும் அவன் கலகல. கூடவே எதோ ஒரு வகை அக்கறை வேறு…. இது எல்லாமுமாக சேர்ந்து மொத்த டீமும் அவனுக்கு ஃபேன் கிளப்பாகிட்டுது.

ஆனால் என்னிடம் மட்டும் எப்பவும் வித்யாசமாய்தான். என்னை சட்டை செய்யவே மாட்டான். நானும் அவன் முகம் கூட நேருக்கு நேராய் பார்க்க மாட்டேன்.

இதில் எல்லோருக்கும் வெறும் லாங்குவேஜ் ட்ரெய்னிங் என்றால் எனக்கு மட்டும் இன்னுமாய் வேலை….. கஸ்டமரோடு எம்ளாயி பேசிய வாய்ஸ் ரெக்கார்டை கவனிக்க சொல்வான்…..

எல்லோருக்கும் டிஸ்கஷன் டைம்….மூவி பார்க்ற டைம் என  சில இலகுவான நேரங்கள் உண்டு….அது எதுவும் எனக்கு கிடையாது…அப்பல்லாம் நான் இந்த கால்ஸை கவனிக்க போக வேண்டும்.

அவன் தன் கோபத்தை இப்படி காண்பிக்கிறான் என புரிந்தது எனக்கு.

ன்று எங்கள் டீம் சுரேஷுக்கு வீட்டிலிருந்து கால்….. அவனோட அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக்காம்…..ஹாஸ்பிடலைஸ்டு   ….. எங்களுக்கு வேலை நேரத்துல மொபைல் ஆஃப்ல இருக்கனும்னு ரூல்….அதனால சுரேஷ் வீட்ல இருந்து ஆஃபீஸ் நம்பர் வழியா தகவல் சொல்லி இருந்தாங்க…..அதுல எங்க எல்லோருக்கும் விஷயம் தெரிஞ்சிட்டு…

சுரேஷ்க்கு டென்ஷன்ல என்ன செய்யன்னு கூட தெரியலை…. ஆனால் இவர்தான் முதல்ல தன் முழு சம்பளத்தையும் வித்ட்ரா செய்து கொடுத்தார்….

சுரேஷே “சார் உங்களுக்கு இந்த மாசத்துக்கு என்ன செய்வீங்க”ன்னு பதறிட்டான்…. “இல்ல கொஞ்சம் சேவிங்க்ஸ் இருக்கு சமாளிச்சுப்பேன்” னு சொல்லிட்டு எங்க எல்லாரையும் நிமிர்ந்து பார்த்தார்,,,, அன்னைக்கு தான் சம்பள நாள்…எல்லோரும் என்ன முடியுமோ அதை கொடுத்தாங்க…. எனக்கு ஃபர்ஸ்ட் சம்பளம்…முதல் முதலா நான் அடுத்தவங்களுக்குன்னு அன்னைக்கு கொடுத்தேன்…….

சாயந்தரம் நாங்க ஹாஸ்பிட்டல் போனோம்…..இவர் சுரேஷ் கூட காலைலயே போய்ட்டார்….அங்க தான் இருந்தார்…. நாங்க போறப்ப சுரேஷ் அம்மா இவர்ட்ட ஏதோ பேசிட்டு இருந்தாங்க…..சுரேஷ் அப்பாக்கு ஆஞ்சியோ ப்ளாஸ்டி முடிஞ்சு…..அதுலயே சரியாகிட்டாம்…..ஸ்டேபிளா இருக்காங்கன்னு சொன்னாங்க…. என்னமோ எல்லாமே நிம்மதியா பட்டுது…

அன்னைக்கு எனக்கு அவர் சாப்ட பணம் கொடுத்தது கூட இப்டித்தான் இருக்குமோன்னு சின்னதே சின்னதா ஒரு தாட்…. ஆனாலும்….

அடுத்தும் அவன் என்னிடம் பாரா முகம்தான்…. எனக்கு ரெட்டை வேலைதான்……நானும் முறைத்துக் கொண்டுதான் இருந்தேன்….ஆனால் உள்ளுக்குள் அவனோடு எனது அறிமுகம் நல்லபடியாய் இருந்திருக்க கூடாதா என ஏங்கத் தொடங்கி இருந்தேன்….. அப்டின்னா இப்டி ப்ரச்சனையே வந்திருக்காதே……

என்னை காலை  கவனிக்க சொல்லிவிட்டு சில நேரங்களில் அவன் எனக்கு அடுத்து ஒரு சேரில் அமர்ந்து தன் லாப்டாபை குடைந்து கொண்டு உட்கார்ந்திருப்பான்….முன்பெல்லாம் மகா கோபமாய் வரும் எனக்கு இதில், ஆனால் இப்போதோ  ஏனோ பாதுகாப்பாக உணர தொடங்கினேன்….

எந்த வகையிலேயோ அந்த தருணங்களை ஆசிக்க தொடங்கினேன்.

தில் அன்று ஒரு சனிக் கிழமை.

“நெக்‌ஸ்ட் வீக் ப்ரெசென்டேஷன் வச்சுதான் உங்க ஜாப் கன்ஃபர்மேஷன்…..இல்லனா டெலிஷன்…..அதனால ப்ரெசென்டேஷன்ல என்ன ஹெல்ப் வேணும்னாலும்…என்ன டவ்ட் இருந்தாலும் டீம் மெம்பர்ஸை நாளைக்கு இங்க வந்து என்னை மீட் செய்ய சொல்லு….” நான் கால்ஸ் கேட்டுகிட்டு இருந்தப்ப பக்கத்தில் இருந்து எதோ வேலை செய்து கொண்டிருந்த அவன் சொல்லிவிட்டு கிளம்பிப் போனான்.

நாளைக்கா?? என்றனர் நான் போய் விஷயத்தை சொன்ன போது எங்க டீம் மக்கள்.

பின்னே சண்டேவாச்சே….எல்லோரும் எதேதோ சொல்லி யாரும் வர போறதில்லைனு முடிஞ்சுட்டு……எனக்கு இப்ப பக் பக்…..நான்  இந்த இன்ஃபர்மேஷன டீம்க்கு பாஸ் பண்ணவே இல்லைனு நாளைக்கு வந்து வெயிட் பண்ற அவன் நினைப்பான் தானே… அதுக்காகவாவது நான் வரணும் என முடிவு செய்து கொண்டேன்… கூடவே அவனை நாளையும் பார்க்க வாய்ப்பு என்றது மனது.

மறுநாள் காலை 10 மணிக்கு வந்து மதியம் 1 மணி வரை காத்திருந்தேன். மொத்த ஃப்ளோரிலும் நானும் செக்யூரிடியும் மட்டும்…. அவன் தான் வரவில்லை…. பொறுமை இழந்து அவன் நம்பர்க்கு நான் கால் செய்தும் பார்த்துட்டேன்…..நோ ரிப்ளை…

மெல்லத்தான் எனினும் அப்போதுதான் புரிந்தது , என்னை இழுத்தடிக்கத்தான் அவன் இன்னைக்கு வர சொன்னதே….. அவன் இப்பல்லாம் எனக்கு கொடுக்ற எக்‌ஸ்ட்ரா வேலையால கூட நான் வருத்தப்படலைனு தெரிஞ்சு அடுத்த டார்ச்சர்க்கு போறான் போல…..எனக்கு தாங்கவே முடியவில்லை….

போனவாரம் அவன் வீட்டில் போய் கூத்தடித்துவிட்டு வந்த என் டீம் பாய்ஸ் கதை அடிச்சது காதில் விழுந்ததை வச்சு அவன் வீட்டு அட்ரெஸை புரிந்து வைத்திருந்தேன்….. இருந்த எரிச்சலில் ஆட்டோ பிடித்து அந்த அப்பார்ட்மென்ட்  சென்று காலிங் பெல்லை கட கடவென 20 முறை அடித்தபின் மெல்ல கதவைத் திறந்தவன்… கண்கள் தக்காளியாய் சிவந்திருக்க….

என்னைப் பார்த்ததும் “நீயா…இங்க….என்ன…?” என கேட்டும் முடிக்கும் முன் எனக்கு தெளிவாக புரிந்துவிட்டது அவனுக்கு உடம்பு முடியவில்லை…..அவன் வீட்டில் அவன் தவிர வேறு யாரும் கிடையாது என ஏற்கனவே கேள்விப் பட்டிருந்தேன்…

“ ஹேய்….இங்க வராத….நீ முதல்ல கிளம்பு…..இது சரி கிடையாது…..நான் தனியா இருக்கப்ப..அதுவும் எனக்கு ரொம்ப முடியவும் இல்ல…. நீ கிளம்பு….” அவன் சொல்லிக் கொண்டிருக்க நான் அவனை தாண்டி உள்ளே சென்றிருந்தேன்…..

வீட்டை பார்வையால் ஒரு சுற்று சுற்றினேன்….. நான் நினைத்து வைத்தபடிதான் இருந்தது…..

ஹாலில் பெரிதாய் ஒரு பெயின்டிங்….’ஏழைக்கு இறங்குகிறவன் கர்த்தருக்கு கடன் கொடுக்கிறான், அவர் அதை திருப்பிக் கொடுப்பார்’ என்று கொட்டை எழுத்தில் வாசகம் அதில்….

ஏதோ புரிவது போல் இருந்தது எனக்கு…. அவன் குணமே இதுதானோ? ஆனாலும்…..

கிட்செனை நோக்கி நான் போக…. தொண தொண என அவன் என் பின்னால்… “ப்ளீஸ் போய்டு… இங்க எதுக்கு வந்த…..இது சரி இல்ல….” என.

அவனை ஒரு பார்வை பார்த்த நான் அவன் கையைப் பற்றி கொண்டு போய் படுக்கையில் உட்கார வைத்தேன்…. அதன் பின் அவன் எதுவும் பேசவில்லை….. என்னை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்….

நான் போய் அவனுக்கு சாப்பாடு செய்து, சாப்பிட கொடுத்து…..போட்டுக்கொள்ள மாத்திரைகளையும் கொடுத்துவிட்டு கிளம்பினேன்…..

கிளம்பும் நேரம் நேரடியாக கேட்டுவிட்டான்…..ஏனோ எனக்கு இதை கேட்பான் என்றும் தெரிந்திருக்கிறது…அதற்கு பதிலுமே தெரிந்திருக்கிறது….

“ என் மேல இவ்ளவு அக்கறை இருக்குல….என்னை இவ்ளவு பிடிச்சிறுக்குல…..அப்றம் ஏன் விலகி விலகி போற….என் மனசு புரியலையா இல்ல உன் மனசு புரியலையா ” என்றான்……

“இது அன்னைக்கு பசின்னு எனக்கு சாப்ட பணம் தந்தீங்கள்ல….அதே மாதிரி இரக்கம்… ” சொல்லிவிட்டு வந்துவிட்டேன்.

‘இன்ஸ்டென்ட் காஃபி மாதிரி இவனுக்கு என்ன இன்ஸ்டென்ட் காதாலா’ என்றது மனது…ஆனாலும் ஏனோ அவன் மீது கோபம் வரவில்லை …

மறு நாள் கால் செய்து அவன் உடல் நிலை விசாரித்தேன்…. “ஆஃபீஸ் வந்துட்டு இருக்கேன்மா” என்றான்.

சரி இனி என் அக்கறை அவனுக்கு தேவை இல்லை எனப் பட்டது எனக்கு. ஆக அடுத்து நேரில் பார்த்து சின்ன புன்னகையுடன் அவன் விஷ் செய்யும் போது நான் பதில் ஏதும் சொல்லவில்லை….

அன்று முழுவதும் என்னை அவன் அவ்வப்போது பார்த்தாலும் அடுத்து எதுவுமே இருவரும் பேசிக் கொள்ளவில்லை…. மறுநாள் எங்கள் டீம் மொத்தமும் ஏதோ ஒரு மஞ்சரிக்கு மாற்றப் பட்டிருந்தது….

ஆக இனி நான் அவனை தினமும் பார்க்க கூட முடியாது…அவன் எந்த ஃப்ளோரில் இருப்பானோ….?

ரொம்பவுமே பிசைந்தது என்றாலும்…. ஒரு வகையில் தாங்கிக் கொண்டேன்…. இதுவும் கடந்து போகும் என தேற்றிக் கொண்டேன்…. இதில் விஷயம் என்ன வென்றால் இந்த மஞ்சரியும் என்னை காலை கேட்க சொன்னார்….

இப்போதுதான் இதற்கு காரணம் வேறாக இருக்கும்…என்னை பழி வாங்கும் எண்ணம் இல்லை என புரிய தொடங்கியது….

விசாரித்தேன்…. எனக்கு லிசனிங் ஸ்கில் ப்ரமாதமாய் இருக்கிறதாம்…..இன்டர்வியூலயே டிசைட் செய்தாங்களாம்..ட்ரெய்னிங்ல நல்லா ஃபெர்ஃபார்ம் செய்தா  க்வாலிட்டி செக் எக்சிக்யூடிவ் போஸ்ட் எனக்கு நேரடியாக தரலாம்னு….பொதுவா அதுக்கு இரண்டு வருட அனுபவம் வேண்டும்…. அதோட இது டே ஷிஃப்ட் வேறு….

அவன் என்னை முன்பு எல்லோரை பத்தியும் சொல்ல சொன்னது ஞாபகம் வருகிறது…ஓ இததான் ஸ்டடி செய்தான் போல… அப்படினா பழி வாங்கனும்னு அவன் எதையும் செய்யவில்லையோ?…. எது எப்படியோ…..என் மனசோட இப்போதைய உணர்ச்சிக்குப் பின்னால நான் போறதா இல்ல….. அவன் வேண்டாம் எனக்கு…

அடுத்து இரண்டு தினங்கள் சென்றிருக்கும்…..மதியம் ஒரு 2 மணி இருக்கும்…. எங்கள் ட்ரெய்னிங் அறை கதவை திறந்து எட்டிப் பார்த்தவன்…. என் புறம் திரும்பாமல் அந்த மஞ்சரியைப் பார்த்து “கிளம்புறேன் மஞ்சுரி…. பை” என்றான்…

இப்போது அந்த மஞ்சரி சிரித்துக் கொண்டே எதோ சொல்லி வாழ்த்த எனக்கு வயிறு வாய் என மாறி மாறி துடிக்கிறது இதயம்…… அவனுக்கு அம்மா அப்பா ரெண்டு பேருமே அப்ராட்ல இருக்காங்கன்னு சொல்லிகிட்டாங்க…ஒருத்தர் யூஎஸ்ல…ஒருத்தர் மலேசியால….. இவன் அங்க எங்கயாவது போய் செட்லாக போறானோ….????

அங்கல்லாம்விட்டுட்டு இவன் முதல்ல எதுக்கு இங்க வந்தான்? எப்டி இங்க இருப்பான்? கண்டிப்பா திரும்பி வரமாட்டான்தான்…..எனக்கு உயிர் உடைந்து கொண்டு போகிறது….

இப்போது என் முகம் பார்த்தானோ……”கிறிஸ்மஸ் வெகேஷன் முடிஞ்சு வந்துடுவேன்….” பொதுவாக சொல்லிவிட்டுப் போனான்….. எனக்குள்  நிம்மதி எப்படி இருந்தது என சொல்ல தேவை இல்லை….

அவன் கிளம்பிப் போனதும் யாரோ மஞ்சரியிடம் ஏதோ கேட்க…”அவர் மலேசியாக்கு அவரோட அப்பாவ பார்க்கப் போறாராம்…” என பதில் சொல்லிக் கொண்டிருந்தாள் அவள்.

அடுத்து நிறமற்ற சில தினங்களின் பின் எங்களுக்கும் கிறிஸ்துமஸ் ஹாலிடேஸ்…. அன்னைக்கு டிசம்பர் 26….காலைல நியூஸ்…..சுனாமி…..சென்னை மலேசியா எல்லா இடத்திலும் டெத் டோல்….

எனக்கு மூளையில் முதல் அலாரம் அவன்தான்…..பீச்னா அவனுக்கு ரொம்ப இஷ்டமாச்சே……. அவசர அவசரமா என்ட்ட இருந்த அவன் நம்பரை கூப்பிட்டேன்…..அது எங்க வேலை செய்ய….ஸ்விட்ச்ட் ஆஃப்…..

அடுத்து என்னவெல்லாமோ முயன்று…அவன் இ மெயில் ஐடி வாங்கி அதற்கு மெயில் செய்தேன்…. “உங்க ரிப்ளை வர்ற வரைக்கும் எனக்கு ஒழுங்கா மூச்சு கூட விட முடியாதுன்னு சொல்லி இருந்தேன்…..”ஏன்னா அது தான் உண்மை… எனக்கு நெஞ்சடைத்துக் கொண்டு வந்தது…அவன பத்தி எந்த தகவலும் இல்ல…..கண்டிப்பா என் மெயிலைப் பார்த்தா பதில் அனுப்பாம இருக்க அவனால முடியாது…..கிளம்புறதை சொன்னதுக்கு என் முகம் போன போக்கிற்கே திரும்பி வருவேன்னு சொல்லிட்டு போனானே….

நாள்கள் கரைந்து கழிய….இரண்டு நாள்….நான்கு நாள்…..ஏழு நாள்…..அவனிடமிருந்து எந்த தகவலும் இல்லை…..அவன் இல்லாத உலகத்தில் நான் இருக்கிறேன் என நான் நம்பித்தான் ஆக வேண்டுமோ??????

ஐயோ தெய்வமே….ஏன் விலகிப் போறன்னு கேட்டானே…..இல்ல விலகி போகலைனு நான் சொல்லி இருந்தா…..இன்னைக்கு அவன் என் கூட இங்க இருந்திருப்பானே….. நான்தான் அவனைக் கொன்றுவிட்டதாக எனக்கு பூதகரமாக புரியத் தொடங்கியது…..இனி எனக்கு இந்த பூமியில் வாழ முடியும் எனக் கூட தோன்றவில்லை……

ஆயிரத்தில் ஒரு வாய்ப்பாக அவன் இருந்துவிட மாட்டானா…? தெய்வமே திருப்பித் தந்துவிடேன் அவனை…. விழுந்து கிடந்தேன் உண்ணாமல் உறங்காமல்…

இன்று ஆஃபீஸ் போக வேண்டும்….அவன் இல்லாத ஆஃபீஸை எப்படிப் பார்ப்பேன்….. ?ஆனா அவன் ஆஃபீஸைப் பார்க்காமல் மட்டும் எப்படி வாழ்ந்துவிடுவேன்….? கிளம்பி ஆஃபீஸ் போனேன்….

நான் உள்ளே நுழையும் போது படிகளில் நின்றிருந்த  சுஜி….” ஒரு நிமிஷம்பா….3ர்ட் ஃப்ளோர் போய் நியூ இயர் விஷ் பண்ணிட்டு வந்துடுறேன்” என்றாள்.… எனக்கு புரிந்துவிட்டது…  3ர்ட் ஃப்ளோர்ல இவ யாருக்கு விஷ் பண்ண போவான்னு தெரியுமே….. அவசர அவசரமா விழுந்தடித்து அவன் கேபினுக்கு ஓடினேன்….அவன் கேபினுக்கு அருகில் வெளியே நின்றிருந்தான்….

அவனுக்கு நியூ இயர் விஷ் சொல்ல ஒரு கூட்டம் சுத்தி நின்று பேசி சிரித்துக் கொண்டிருந்தது….

அது யார் எவர் என எதையும் நான் யோசிக்கும் நிலையில்  இல்லை…..என்னைப் பார்க்கவும் அவனுக்கும் புரிந்துவிட்டதோ…..

துடிக்க துடிக்க அவனை நோக்கி ஓடி அணைத்த என்னை, தன் இரு கைகளில் வாங்கினான்….

“ஹேய்….என்னமா…என்னாச்சுடா….?” அவன் அக்கறையாய் பதற…..நான் இன்னுமாய் அழுதபடி அவன் இறுகிய மார்பில் புதைந்தேன்….

என் சின்ன வயதில் என் அம்மாவும் அப்பாவும் இறந்து போன அந்த நிகழ்வு…. அதன் பின் நான் தெருவில் பிச்சை எடுத்த காலங்கள்….அதன் வலிகள் எல்லாம் ஏனோ இன்று என்னை விட்டு கழன்று விழுவதாய் ஒரு உணர்வு…..

“ஏன் என் மெயில்க்கு ரிப்ளை பண்ணலை நீங்க…” கேவினேன்…

“எந்த மெயில்மா…..?சாரி நான் வெக்கேஷன்ல மெயில் பார்க்கமாட்டேன்…அப்டி மிஸ் செய்துட்டேன் போல….”

அப்றமென்ன அவசர அவசரமாய்…. அழகாய் நடந்தது எங்க கல்யாணம்.

அதுக்கு முன்னமே அவன்ட்ட சொல்லிட்டேன்….

“அன்னைக்கு சாப்ட காசு கொடுத்தீங்கல்ல….என் பாஸ்ட்ட குத்திக் காமிக்க பிச்ச போடுறீங்கன்னு நினச்சுட்டேன்….என் ரெசியூம் பார்க்கவும் என் அட்ரெஸை வச்சு  நான் எங்க ஹோம் சைல்டுன்னு உங்களுக்கு புரிஞ்சிருக்கும்….அங்க எல்லாருமே இப்டி தெருல பெக் பண்ணிட்டு இருந்த குழந்தைங்கதான்னு உங்களுக்கு தெரிஞ்சிருக்கும்னு நினச்சேன்…

அப்றமா நீங்க பொதுவா எல்லோருக்கும் ஹெல்ப் பண்ற டைப்…அந்த வகையிலதான் எனக்கும் செஞ்சுறுப்பீங்கன்னு எனக்கு புரிஞ்சாலுமே முழுசா அந்த நிகழ்ச்சியவிட்டு எனக்கு வர தெரியலை….”

“ சாரிமா… அன்னைக்கு அந்த மார்னிங் இன்சிடென்ட்ல நீ சாப்டலன்னு ஏனோ தோணிச்சா….இங்க வரவும் உன் ரெஸ்யூம் பார்க்கப்ப ஹோம் நேம் இருந்துச்சு…..அதான் சாப்ட பணம் எடுத்துட்டு வந்திருக்க மாட்டன்னு நினச்சு கொடுத்துட்டேன்….மத்தபடி எதுவும் எனக்கு தெரியாது…. பைதவே….பணத்துக்கு பெக் பண்றவங்க மட்டும் தான் பெக்கர்ஸா…? காசு இல்லாதவங்க மட்டும்தான் ஏழையா…? என் அம்மா அப்பா ரெண்டு பேரும் என்னோட மூனு வயசுல டிவோர்ஸ்…..ரெண்டு பேருக்குமே வேற மேரேஜ் ஆகிட்டு….. நான் அப்ப இருந்து எப்பவும் ஹாஸ்டல்….. ஆரம்பத்துல அன்புக்கு பிச்சை தான் எடுத்தேன்….பட் பின்னால கொடுக்க கத்துகிட்டேன்….சோ என் பாஸ்ட்டும் உன் பாஸ்ட்டும் ஒன்னேதான்…” என்று பதில் வந்தது அவனிடமிருந்து.

மேரேஜ் அன்னைக்கு நைட் திரும்பவும் கேட்டான்.

“ஏய் வாலு என் பேர் என்ன?” என்னை எப்போதும் அடி முடியற்ற பள்ளத்தில் அழகாய் விழத்தள்ளும் அவனது ட்ரேட் மார்க் சிரிப்போடும்….அந்த சிரிப்பை சுமந்து சுருங்கிய கண்களில் குறும்போடும் அவன் கேட்க

அவை அனைத்தையும் முழு விழியிலுமாக ஆசையாக பார்த்தேன்…..

“ஏய் பதில் சொல்லிட்டு சைட் அடிடி”

“போடா…. யாராவது புருஷன் பேர சொல்லுவாங்களா…?…… நான் மாட்டேன்பா….” கண் சிமிட்டினேன்… அதற்கு என்ன பதில் கிடைத்தது அவனிடமிருந்தென நான் சொல்வதற்கில்லை….

11 comments

 1. Hi Mistyma, Sweet story. How many times i will read still it is fresh Sweet and cute. With luv, Niranjana.

 2. Awesome mam. Hero Peru ennanu kadaisi varai sollave ellainalam the story is so good mam. Heroine background is also different mam.liked it very much mam

 3. Hi sweety, என்ன சொல்ல உங்க ஒவ்வொரு storiesம் supebbbbbbda. சில நேரங்களில் mood abseta இருக்கும் போது உங்க shortstories read பன்னினா mood clear. Its trueda.

 4. Hai sweety
  I don’t know how I’m feeling but after reading so many times also the stories are making me to feel that I’m reading a new one
  All are so nice
  KrishnaVeni

 5. மனதைக் கவ்வும் நளினம் அருமை அருமை அருமை வாழ்த்துக்கள்

Leave a Reply