பூந்தோட்டத்தில்….(3)

றுநாள் நவீனை சந்தித்தவள் முடிவாக சொல்லிவிட்டாள் “ நான் கோர்ஸ் முடிச்சதும் பொண்ணு கேட்டு வாங்க…. நான் காத்துகிட்டு இருப்பேன்…. பட் அதுவரைக்கும் நமக்குள்ள எந்த கம்யூனிகேஷனும் வேண்டாம்…. திரும்ப சென்னைக்கே போயிடுங்க…”

அவனுடைய எந்த கெஞ்சலுக்கும் இளகவில்லை அவள்.

“இனி நான் கோர்ஸ் முடிக்க முன்ன நீங்க என்ன பார்க்க ட்ரை பண்ணுணீங்கன்னா உங்க இன்டென்ஷன் காதல் இல்ல….”

திரும்பி வருவேன் என்று சத்தியம் செய்துவிட்டு சென்றான் நவீன்.

அதுதான் அவள் அவனை கடைசியாக சந்தித்ததும். அவளுக்கு நவீன் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வந்திருந்தது.

ரண்டு நாள் கடந்திருந்தது. தொலை காட்சியில் சுவாரஸ்யமின்றி நியூஸ் பார்த்துக் கொண்டிருந்தாள் மஹிமா.

பல பெண்களிடம் பல்வேறு நாடகமாடி கடத்தி சென்று விபசாரத்திற்கு விற்ற ஒருவனை கைது செய்திருந்தது காவல் துறை. காட்சி தொகுப்பில் அந்த கயவனை காண்பித்தார்கள். அவன் நவீன்.

எந்த தழும்பும் இல்லை அவன் முகத்தில். அப்படியானால்…?????

இவளது பணத்திற்காக குறிவைத்தானா? அல்லது இந்த ஈனத்திற்கா? கோயம்புத்தூர் என்றவன் பின் சென்னை என்றானே….. எந்த அலுவலகத்தில் தினம் மாலை 3.30க்கு வீட்டுக்கு செல்ல அனுமதிக்கிறார்கள்? தினமும் அந்நேரம் முதல் இவள் கல்லூரி வாசலில் தவம் கிடந்தானே… எத்தனையோ புரிந்தது மஹிமாவிற்கு.

சில மாதங்கள் தேவைப்பட்டது மஹிமாவிற்கு. அந்த அதிர்ச்சி, பயம், குழப்பம், ஏமாற்றம் எல்லாவற்றிலுமிருந்து மீண்டு சற்று இயல்புக்கு வர.

படிப்பு முடிய வீட்டில் திருமண பேச்சு. ஆசிட் வார்ப்புகளாய் உணர்ந்தாள் அவைகளை. முதலில் தவிர்த்துப் பார்த்தவள் மெல்ல சம்மதித்தாள்.

 

தோ திருமணம் முடிந்து முதலிரவு அறை. சில மணி நேரம் முன்பு கணவன் என கைபிடித்து உறுதி மொழி எடுத்த அந்த வினோத்.

மென்புன்னகை இவளது பார்வைக்கு பதிலாக. உள்ளே நுழைந்த இவளிடமாக வந்தான் அவன். சில நொடி இவளுக்கு என்ன செய்ய வேண்டும் எப்படி உணர வேண்டும் என்றே புரியவில்லை.

கைபிடித்து அழைத்து சென்று படுக்கையில் அமர்த்தி அருகில் அமர்ந்தான்.

“நீ ரொம்ப கலகல டைப்னு முன்னால நினைப்பேன்….ஆனா நம்ம கல்யாணம் ஃபிக்ஸ் ஆனப்பிறகு பேச டிரை பண்ணப்பல்லாம் நீ சரியா பேசுன மாதிரியே இல்ல… எப்படியும் தூரத்துல இருந்து பார்கிறதுக்கும் நிஜத்துக்கும் வித்யாசம் இருக்கும்தானே…”

“ஏதோ எங்கோ நெருடியது. அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

“என்ன சொன்னீங்க…? உங்களுக்கு முன்னமே என்னை தெரியுமா…?”

மென்மையாக புன்னகைத்தான்.

“ம்….உன்னை ஃபர்ஸ்ட் டைம் அல்லி குளத்துல ஒரு மேரேஜ்ல தான் பார்த்தேன்.”

கொதி அமிலம் கொட்டியது அவளுள். அவள் மொத்தத்தில் அல்லிகுளத்தில் கலந்துகொண்ட கல்யாணம் அந்த ஒரே கல்யாணம் தான். அங்கு இவனும்….

“பார்த்ததும் உன்னை ரொம்ப பிடித்தது. பரிச்ச வச்ச ரோஜாப்பூ மாதிரி…..ஒரு இன்னொசன்ஸ்சோட…. மண் தொடாத மழை தூரல் போல…”

“ஸ்டாப் இட்……ஸ்டாப் திஸ் நான்சென்ஸ்….!!!”

அலறினாள் மஹிமா.

“ஹேய்…என்னடா…என்னாச்சு…எதுனாலும்…மெதுவா மெதுவா….வெளிய ஆள் இருக்காங்கடா….”

“ஷட் அப்…என்ன டா…டீன்னு கொஞ்சல் வேண்டி கிடக்கு….”

“என்னமா….சாரி என்ன மஹிமா….என்ன ப்ரச்சனைனு சொல்லு….சொன்னாதான புரியும்”

உள்ளிருந்த உட்காயமும், ஏமாற்றமும், மீண்டும் ஏமாந்துவிட்டோம் என்ற பயமும் பரிதவிப்பும் சேர்ந்து நடந்த அனைத்தையும் அவனிடம் சொல்ல வைத்தது.

அந்த கல்யாணத்தில் அந்த கயவனை கண்டதிலிருந்து, கல்லூரிக்கு அவன் படையெடுத்தது, காயம் செய்ததாக சொன்னது, காதலை இவள் சொல்ல இருந்த சமயத்தில் இவள் காதில் விழுந்த தயாளன் சித்தப்பா கதை, அப்பா சொன்ன விளக்கம், அடுத்து அந்த கயவனை இனம் கண்ட விதம் எல்லாம் கொட்டி தீர்த்தாள் மஹிமா.

“ஹன்டிங் இன்ஸ்டிங்க்டில் துரத்துற ஒருத்தன்ட மாட்டிகிட கூடாதுன்னுதான் அன்னைக்கு அவன்ட்ட படிப்பு முடிஞ்சதும்னு சொன்னேன்….அது எப்படியும் என்னைய காப்பாத்தி இருக்குதுனாலும்….இப்போ திரும்ப இன்னொரு ஹண்டர்ட்ட மாட்டிகிட்டேந்தான… கொஞ்ச நாள் கழிச்சு காதல் கலர் போய்ட்டுன்னு சொல்லிட்டு… அப்போ உங்களுக்கு என்ன தோணுதோ அத்தன குறை சொல்வீங்க…..

அப்பா சொன்னாங்க….நீங்க முன்ன நார்மல் மிடில் கிளாஸ்தான் உங்க சுய முயற்சியில் தான் க்ரோ ஆகி இருக்கீங்கன்னு…..அப்பாவுக்கு உங்களோட அந்த குவாலிட்டி பிடிச்சிருந்தது…..ஆனா அதெல்லாம் எனக்காகன்னு இப்பதான் புரியுது….அந்த ஹண்டிங் இன்ஸ்டிங்க்ட்டோட வெறி….ஐ ஹேட் திஸ்…..ஐ ஹேட் திஸ் மேரேஜ்….” வாய்விட்டு அழ ஆரம்பித்தாள் மஹிமா.

அழுது முடியும் வரை அமைதியாக பார்த்திருந்தவன், அருகில் ஜாரிலிருந்த தண்ணீரை கிளாஸில் ஊற்றி நீட்டினான். அவன் நீட்டிய கிளஃஸை வாங்காமல் மேஜையிலிருந்த ஜாரை எடுத்து கட கடவென தண்ணீர் குடித்தவள் மெத்தையின் ஒரு ஓரமாக குப்புற படுத்தாள்.

அவளையே பார்த்திருந்தான் வினோத். நேரம் செல்ல அவளிடம் எந்த அசைவுமில்லை என்பதை உணர்ந்து அவள் பின் தலையில் கை வத்தவன்

“செல்ல குட்டி இதெல்லாம் பேச கூட ஆள் இல்லாம எவ்ளவு கஷ்டபட்டியோ…. அந்த நவீன் மேல உள்ள கோபத்தை கூட காட்ட வழி இல்லாம……இப்ப…எல்லாத்தையும் பேசிட்டல்ல…சீக்கிரம் மனசு ஹீல் ஆயிடும்….ஐ’ல் ஆல்வேஸ் ப்ரே ஃபார் யூ”

மென்மையாக அவள் தலையில் முத்தமிட்டான்.

சட்டென திரும்பி முறைத்தாள் “இப்டி தூங்கிறப்ப கிஸ் பண்ற வேலைய இதோட விட்றுங்க…”

“சரி கே.கே…இனி விழிச்சிருக்கபவே கிஸ் பண்றேன்…குட் நைட்…” லைட்டை அணைத்துவிட்டு படுத்துக்கொண்டான்.

இரவு முழுவதும் தூங்காமல் கழிந்தது அவளுக்கு. அவனோ ஆழ்ந்த உறக்கத்திற்குள் அடைக்கலம்.

மறுநாள் அவன் விழிக்கவும் கேட்டாள் “கேகேன்னா என்னது..?”

வாய்விட்டு சிரித்தான். “இது தெரியாம தான் தூக்கம் வரலையா….?கேட்டிருந்தா சொல்லி இருப்பேன்ல…”

“இன்னும் நீங்க சொல்லலை…”

“அதெல்லாம் காதல் சம்பந்தபட்டது….காதலோட கேட்டா மட்டும்தான் கிடைக்கும்…கிவ் லவ் டேக் லவ்…” கண்சிமிட்டினான்.

எழுந்து போய்விட்டாள்.

 

சென்னைக்கு தனிக்குடித்தனம் சென்றனர்.

ஏறத்தாழ இருமாதம் சென்றது. சில நேரங்களில் சீண்டினாலும் பல நேரங்களில் பாகாய் உருகினான். மொத்தத்தில் அவளை பத்திரமாய் பார்த்துக்கொண்டான் வினோத்.

அன்று இரவு சாப்பிட்டு முடித்து படுக்க வந்தவனிடம் கேட்டாள் மஹிமா

“ உங்க லைஃப் கலர் போன மாதிரி இருக்குதா….?”

“இல்லையே….முன்னவிட ரொம்ப கலர்ஃபுல்லா இருக்குது……தினமும் நீ எனக்கு கதவ திறக்கிறப்ப தெரியுற உன் கன்னம் என் லைஃப்க்கு பிங்க் நிறம் தந்திருக்கு….பாசமா நீ என் அம்மாட்டயும் தங்கைட்டயும் பேசுறது பச்சை நிறம் தருது….ம்…. அப்பப்ப என்ட்ட கோப படுறப்ப  சிவப்பு நிறம்….பக்கத்துவீட்டு வாண்ட கிஃஸ் பண்றப்ப…கொஞ்சமா எனக்குள்ள வர்ற பொறாமை மஞ்சள் நிறம்…அத நான் மாத்தனும்…அப்புறம் எல்லாத்துக்கும் நீ பார்க்கிற நியாயம்….வெள்ளை நிறம்….நீ சுட்டு பழகின கரிஞ்ச தோசை கறுப்பு நிறம்…அங்கங்க நீ மறந்து போய் கழற்றி வச்சுட்டு போற உன் இயர் ரிங்ஸ்…மல்டி கலர்…இப்டி சொல்லிகிட்டே போகலாம்….இப்ப என்ன இந்த புது ஆராய்ச்சி….”

“அது…”

“ஒருவேள இவன் நிஜமாவே லவ் பண்றானோன்னு தோண ஆரம்பிச்சுட்டு…அப்டிதான..?”

“ம்..”

“முதல்ல உன்னை பார்த்தப்ப உன்னை எனக்கு ரொம்பவே பிடிச்சுது கே.கே….ஆனால் அப்போதைய எங்க வீட்டு நிலைக்கு உன் வீட்ல கண்டிப்பா பொண்ணு தர மாட்டாங்கன்னு தெரியும்…அதனால அந்த அர்த்தமில்லாத கனவ நான் தொடர விரும்பலை…பிறகு நான் கான்ட்ராக்ட் பேஸில் இந்த விண்ட் மில் அச்செம்பிள் செய்து கொடுக்கிற பிஸினஸை ஆரம்பிச்சது வளரனும்னு எல்லோருக்கும் இயல்பில இருக்கிற அந்த பஷனுக்காகதான்… மத்தபடி இத வச்சு நாலு நாள்ள நான் கொழுத்த பணக்காரனாயிடுவேன்…நீ அதுவரைக்கும் யாரையும் கல்யாணம் செய்யாம காத்துகிட்டு இருப்பன்னுலாம் நான் கனவு காணலை…..பட் நான் எதிர் பார்த்ததவிடவே நல்ல க்ரோத்…

அந்த நேரம் அம்மா பொண்ணு பாக்கலாம்னு ஆரம்பிச்சாங்க….அப்ப உன் முகம் தான் ஞாபகம் வந்தது…இல்லனு சொல்ல மாட்டேன்…இப்பவும் நாம உன் அப்பாவீடு அளவுக்கு வசதின்னு சொல்ல முடியாது…அதோட ஜமீன் வம்சம்னு ஒரு டைட்டில் வேற…. உங்கப்பா பொண்ணு தர சம்மதிப்பாங்களான்னு ரொம்பவே சந்தேகமாதான் இருந்துது…இருந்தாலும் கேட்டு பார்த்துடலாம்னு அம்மாட்ட கேட்க சொன்னேன்….உங்க அப்பாவும் சம்மதிச்சு….நீயும் ஓகே செய்து….இப்ப நீ என் வைப்….ஐம் வெரி ப்லெச்செட்னு தோணும்…”

“அப்பா தர மாட்டேன்னு சொல்லி இருந்தா என்ன செய்திருப்பீங்க…?”

“என்ன செய்ய ரெண்டு நாள் கஷ்டமா இருந்திருக்கும்…..பாவம் அவர் பொண்னு….அது  கொடுத்து வச்சது அவ்ளவுதான்னு ….எங்க அம்மா பார்க்கிற வேற பொண்ண கல்யாணம் செய்து…இன்நேரம்….ஜாலியா ஹனிமூன் போய்ட்டு வந்து இருப்பேன்….”

படுக்கையில் படுத்தபடி அவன் பேச அருகில் அமர்ந்தபடி கதை கேட்டுகொண்டிருந்தவள் கோபமாக எழுந்து நின்றாள். முடிந்த அளவு முறைத்தாள்.. காதிலிருந்து புகை வராத குறைதான்.

“ எவ்ளவு தைரியம் இருந்தா என்ட்டயே….வேற பொண்ணு கூட ஹனிமூன் போய்ருப்பேன்னு சொல்லுவீங்க….”

“ஹேய்….பொண்டாட்டி இத உன்ட்ட மட்டும்தான்டி சொல்ல முடியும்….நீயே யோசிச்சு பாரு…இந்த கதைய வேற யார்ட்ட பேசமுடியும்….?”

அவன் சீண்டுகிறான் என தெரிந்தாலும் ஏனோ அழுகை வந்தது. வரவேற்பறையில் இருந்த ஸோஃபாவில் சென்று அமர்ந்து கொண்டாள். கண்கள் சிவந்து கொட்டியது.  அவளருகில் வந்து அமர்ந்தான் வினோத். அவள் நெற்றியை தலைவலிக்கு மசாஜ் செய்வது போல் மசாஜ் செய்தான்.

“சாரி…”

அவன் சொல்ல,  சரிந்து அவன் மடியில் படுத்தவள் தூங்கிப்போனாள்.

 

றுநாள் மதியம் மஹிமாவிடமிருந்து அலுவலகத்திலிருந்த வினோத்திற்கு கால்.

“வெரி அர்ஜென்ட்…எமர்ஜென்ஸி….உடனே கிளம்பி வாங்க….”

வேக வேகமாக வீட்டிற்கு வந்தான் வினோத்.

அவளோ எந்த பதற்றமுமில்லாமல் அவள் உடைகளை பேக் செய்து கொண்டிருந்தாள்… “ஈவ்னிங் ஃப்ளைட்ல டிக்கெட் புக் செய்து இருக்கேன்…..பாரீஸ் போறோம்….அங்க இருந்து….”

விதமாய் விழித்தான் வினோத்.

“இதென்ன முழி…ஹனிமூன் சூட்லாம் புக் செய்தாச்சு…..2 வீக்ஸ்..ட்ரிப்….”

வாரி எடுத்தான் அவளை

“ஹேய் …என்ன செய்றீங்க….எல்லாம் பேக் செய்யனு…..”

“அவ்ளவும் பேக் பண்னி அங்க எதுக்கு போகுதாம்…..? டைம் வேஸ்ட்……!!”

அந்த ஃப்ளைட்டில் அன்று அவர்கள் போர்ட் ஆகவில்லை.

 

“போ….கே எம்… அவ்ளவு ப்ளானும் சொதப்பிட்டு….ஃப்ளைட் இன்நேரம் துபாய க்ராஸ் செய்திருக்கும்…..”

“அதுக்கென்ன நாளைக்கும் அந்த ஃப்ளைட் பாரீஸ் போகும்….அதை நாளைக்கும் நாம மிஃஸ் செய்வோம்…”

“போடா…புத்திசாலி..”

“அது…”

“ஆமா மேடம் எப்படி திடீர்னு இது காதல்னு டிசைட் செய்துட்டீங்க… கண்டுபிடித்த விதத்தை சொன்னீங்கன்னா ஹேய் என் பொண்டாட்டி புத்திசாலின்னு நாங்களும் சொல்லிப்போம்ல…..”

“லவ் இஸ் பேஷண்ட்னு பைபிள்ல சொல்லி இருக்குது இல்லையா அது ஞாபகம் வந்தது. அப்ப இருந்து நீங்க என்னை விரும்பி இருந்தாலும் இல்லைனாலும் இப்பவரை எவ்வளவு  பொறுமையா இருந்திருக்கீங்க……உங்க முடிவு எதுவும் உணர்ச்சி வேகத்துல எடுத்தது இல்லையே….”

“குட் பாய்ண்ட்..ஹப்பி டு நோ…”

“அடுத்து நான் கிடைக்கலைனாலும்னு நீங்க சொன்னப்ப எனக்கு கஷ்டமா இருந்துது…ஐ ரியலைஸ்ட் வாட் யூ மீன் டு மீ…”

“வாட் ஐ மீன் டு யூ?..”

“ம்…ஹஸ்பண்ட்….வைல்டஸ்ட் இமஜினேஷன்ல கூட உங்கள என்னால விட்டு குடுக்க முடியாது…”

“மீ டு கண்ணம்மா..” அணைத்துக்கொண்டான் கணவன்.

“ம்…அப்ப அந்த கேகேல ஒரு கே கண்ணம்மாவா….?”

“காதல் கண்ணம்மா தான் கே கே… அதென்ன கே எம்?”

“காட்டுமிராண்டி…”

“அடி புண்யவதியே….”

“ஹி…ஹி..”

“ஆனா ஒன்னு மட்டும்தான் எனக்கு புரியவே இல்லடி….நாலுவருஷமா லவ் பண்றேன்…உனக்காக பணக்காரன் ஆனேன்னு ஒருத்தன் சொன்னா அத்தன பொண்ணுங்களும் அப்படியே உருகி போய்டுவாங்க…. நீ மட்டும் ஏன்டி… காதலிச்சியா… அப்பனா நீ ஹஸ்பண்டா இருக்க லாயக்கு இல்லனுட்டு…”

“ஹலோ…நாங்க காதலிச்சவன் வேண்டாம்னு சொல்லலை….வெறும் உணர்ச்சி வேகத்தை காதலே இல்லைனுதான் சொல்றேன்…”

 

ன்று தன் டைரியில் எழுதி வைத்தாள் மஹிமா.

வாழ்க்கை ஒரு பூந்தோட்டம். பூந்தோட்டத்துக்குள் போகும்போது பூவை மட்டுமே நாம் சந்திப்பது இல்லை….வழியில் கல், முள், பாம்பு, பலவகை பூச்சி எல்லாம் இருக்கும்…. அதையெல்லாம் கவனமாக பார்த்து விலகி நடந்தால்தான் பூச்செடியிடம் போகமுடியும்… செடியிலும் முள்ளும், வண்டும், ஏன் பாம்பு கூட இருக்கலாம். ஆனால் கவனமாக பறித்தால் பூ நமக்கு கிடைக்கும்….உண்மையில் பூவை விட பூந்தோட்டத்தில் மற்றவை தான் அதிகம். ஆனால் நல்ல செய்தி என்னவென்றால், அங்கு பூக்களும் இருக்கத்தான் செய்கிறது.

உலகில் இன்னும் நன்மை மிச்சமிருக்கிறது.

11 comments

  1. Nice story sweety, அதேவேளை கொஞ்சம் சமூக விழிப்புணர்வையும் சேர்த்துத் தந்தது அருமை, us u wishda.

  2. பெண்கள் தம் உள்ளுணர்வை எப்போதும் அறிந்துவைத்திதல் வேண்டும் என்பதை மிக அழகாக உணர்துநீர்கள்.
    Super

  3. That last line enaku epavum kathula kekrapla feel agum Ka. But forgot this story nu ….Avaloo thelivu this is very good for youngsters like me.. 🙏🤗💕try to publish this is some magazine ka. .so that it reach great audience…vinoth 💕so practical avar pesinathu 100%crt… Meendum vasikarapovum athe good feel…..ethanai Murali mugarndhalum pogatha poo Vasanai pol♥️loves and kisses 😘😘😘😘😘😘😘😘💕🤗🤗

Leave a Reply