புதினம் 2020 – The Contest முடிவுகள்

நட்புகள் அனைவருக்கும் வணக்கம்!!!!

புதினம் 2020 போட்டியில் கலந்து கொண்ட எழுத்தாளர்களுக்கும், வாசித்து மகிழ்ந்த வாசகர்களுக்கும் இதயம் நிறைந்த வாழ்த்துக்களும், நன்றிகளும் தெரிவித்துக் கொள்கிறோம்.

வழக்கமான கதையாய் இல்லாமல் புதுவித கதையமைப்பு, சஸ்பென்ஸோ குடும்ப நாவல் வகையோ பக்கத்திற்கு பக்கம் சுவாரஸ்யமாய் பொழுது போக்கு நாவல்,  ஆனால் அதற்காக பொழுது போக்கு என்ற பெயரில் தரம் தாழ்ந்துவிடாத காதல் காட்சிகள், பொழுதுபோக்கு கதையில் நல்ல கருத்து சொல்ல வேண்டும் என்று அவசியமில்லை, ஆனால்  போகிற போக்கில் சமூகத்திற்கு ஊறு விளைவிக்கும் எந்த கருத்தையும் விதைத்துவிடாமை, கையில் தூக்கி படிக்கும் அளவிலான புத்தகங்கள் என்ற நோக்கங்களுடன் புதினம் 2020 போட்டி அறிவிக்கப்பட்டது.

இதில் பங்கு பெற்ற ஒவ்வொருவருமே வெற்றியாளர்தான் என இங்கு அழுத்தமாய் பதிந்து கொள்கிறோம்!

தோன்றியதை எழுதலாம் என்பதில் அளப்பறிய திறமை கட்டாயம் என்று சொல்வதற்கில்லை, ஆனால் நிபந்தனைகள் மீறாமல் சாதித்துக் காட்டுவதோ பெரும் திறமை மற்றும் தன்னம்பிக்கை! அதை நீங்கள் ஒவ்வொருவருமே செய்துள்ளீர்கள்!

அதற்கு வாசகர்கள், செங்கோபுரம் பதிப்பகம்,மற்றும் அன்னா ஸ்வீட்டி தமிழ் நாவல்கள் தளம் சார்பாக முழு மனதோடு உங்களை பாராட்டுகிறோம்!!!

இந்த வெற்றியாளர்களின் படைப்புகளில் எவை நாங்கள் முற்குறிப்பிட்ட தேடலுடன் பெரிதும் ஒத்துப் போனதோ, அதாவது வழக்கத்தில் இல்லாத புதுவித கதையமைப்புள்ள சிறந்த பொழுது போக்கு நாவல்கள் அவைகளை நடுவர்குழு வெற்றி பெற்ற நாவல்களாக தெரிந்தெடுத்து உள்ளனர்.

அவைகள் பின் வருமாறு!!

முதல் பரிசு:

ஆடுகளம் – திருமதி. ரியா மூர்த்தி   மற்றும்    அன்பெனும் ஊஞ்சலிலே – திருமதி. சித்ரா வெங்கடேசன்

(இரண்டும் ஒன்றோடு ஒன்று ஒப்பிடவே முடியாத இரண்டு விதமான நாவல்கள், ஆடுகளம் ஆக்க்ஷன், சஸ்பென்ஸ்  என பக்கத்திற்கு பக்கம் எல்லோரையும் தனக்குள் இழுத்துக் கொண்ட புயல் என்றால், அன்பெனும் ஊஞ்சலிலே குடும்ப வகை கதையில் புதுவிதமாய் சஸ்பென்ஸ் வைத்து, பெண்ணின் மெல்லிய உணர்வுகளை, நட்பை, காதலை,  மன உறுதியை யதார்த்தமாய் தழுவி தென்றலாக தனக்குள் இழுத்துக் கொண்ட படைப்பு. ஆக இரண்டுக்கும் முதலிடம் என்பது நடுவர்களின் முடிவு. மூன்று வாரங்கள் முன்பு முடிவெடுக்கப்பட்டு புத்தகங்களும் தயாராகிவிட்ட நிலையில், நேற்று முடிவுற்ற வாசகர் வாக்கெடுப்பிலும் இதே முடிவு எதிரொலித்தது எங்களுக்கு ஏக மகிழ்ச்சி)

ஆக முதல் பரிசு ரூ20,000ஐ திருமதி. ரியா மூர்த்தியின் ஆடுகளம் நாவலும் திருமதி. சித்ரா வெங்கடேசனின்   அன்பெனும் ஊஞ்சலிலே   நாவலும் பகிர்ந்து கொள்கின்றன.

மூன்றாம் பரிசு:

அன்பின் ராகம் – திருமதி. கவி சௌமி

இரண்டு நாவல்கள் முதலிடம் பெறுவதால் இரண்டாம் இடம் இல்லாது ஆகி மூன்றாம் இடம் என்பதுதான் கணித முறை. அந்த  அடிப்படையில் அன்பெனும் ஊஞ்சலிலேவுக்கும், ஆடுகளத்துக்கும் அடுத்த இடம் பெறும்  அன்பின் ராகம் நாவல் மூன்றாம் பரிசு ரூ5000ஐ பெறுகிறது!

(குடும்ப நாவல் என்ற பதத்திற்கு இலக்கணம் அமைப்பது போன்ற கதைக்களம், தமிழகத்தில் சில பகுதிகளில் சற்று இயல்பானதும் மற்ற பகுதிகளில் அத்தனையாய் இன்னும் இயல்பாக பார்க்கப்படாததுமான இளம் விதவை மறுமணத்தை யதார்த்தம் கெடாமல் அதே சமயம் ரசிக்கத் தக்க வைகையில் கையாண்டு திரும்பிப் பார்க்க வைக்கிறது.)

Cute Entertainers:

கீழ்காணும் நாவல்கள் Cute Entertainers என தெரிவு செய்யப்பட்டு தலா ரூ2500 பரிசு பெறுகின்றன.

1.தள்ளிப் போகாதே! எனையும் தள்ளிப்போகச் சொல்லாதேதிருமதி.      பிரேமா சுப்பையா – வாசிக்க இனிமை

  1. நீயே நினைவாய் திருமதி. பூகா – புதுமையான கதைகளத்தில் இதமாய் ஒரு காதல் கதை
  2. கர்வம் அழிந்ததடிதிருமதி. கௌரி – கதை வாசிப்போர் இதயத்தில் கதைக்களம் கதாநாயத் தன்மை பெறும் வகை எழுத்தும், உறவுகளைக் கொண்டாடும் கதையமைப்பும்

Special Jury award:

  1. தினம் உனைத் தேடி செல்வி. நித்யா பத்மநாதன் – முதல் இரண்டாம் பரிசுக்கே பரிசீலிக்கப்பட தக்க கதையமைப்பு, ஆனால் 40,000 வார்த்தைகளுக்குள் கதைகள் இருக்க வேண்டும் என்ற அடிப்படை நிபந்தனைக்குள் இல்லாமல் 60,000 வார்த்தைகள் அதாவது ஒன்றரை மடங்காய் நீண்டு போனதால் போட்டியில் பங்குபெற இயலவில்லை.

அதே சமயம் ஒரு சிறந்தகதை அதற்கான பாராட்டை அங்கீகாரத்தை இழந்து விடக் கூடாதென ஸ்பெஷல் ஜூரி அவார்டுக்கு தினம் உனைத் தேடி தெரிந்தெடுக்கப்பட்டிருக்கிறது. பரிசுத் தொகை ரூ2000

  1. நிலவு மட்டும் துணையாகதிருமதி. அருணா கதிர் – முதல் இரண்டாம் பரிசுக்கே பரீசீலிக்கப்பட தக்க கதையமைப்பு. ஆனால் போட்டியின் கால அவகாசத்துக்குள் கதை முடித்துத் தரப் படவில்லை என்பதால் போட்டியில் பங்கு பெற இயலவில்லை. அதே சமயம் ஒரு சிறந்த கதை அதற்கான பாராட்டை அங்கீகாரத்தை இழந்துவிடக் கூடாதென ஸ்பெஷல் ஜூரி அவார்டுக்கு நிலவு மட்டும் துணையாக தெரிந்தெடுக்கப்பட்டிருக்கிறது. பரிசுத் தொகை ரூ2000.

வெற்றி பெற்ற அனைத்து கதைகளின் ஆசிரியர்களுக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்!!!

ஆடுகளம் – ரியா மூர்த்தி,

அன்பெனும் ஊஞ்சலிலே – சித்ரா வெங்கடேசன்,

அன்பின் ராகம் – கவி சௌமி

ஆகிய நாவல்கள் இன்று செங்கோபுரம் பதிப்பகம் வாயிலாக புத்தக திருவிழாவில் வெளியாகி இருக்கின்றன.

தள்ளிப் போகாதே! எனையும் தள்ளிப் போகச் சொல்லாதே பிரேமா சுப்பையா நாவல் வெண்ணிலா உறவுகள் எனும் பெயரில் இன்னும் ஓரிரு தினங்களில் வெளியாக இருக்கின்றது என்பதனையும் இங்கு மகிழ்வோடு பகிர்ந்து கொள்கிறோம்!!

பரிசு பெற்ற மற்ற நாவல்கள் ஏற்ற நேரத்தில் செங்கோபுரம் பதிப்பகம் மூலம் புத்தகமாக வெளியாகும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

பங்கு பெற்ற அனைவருக்கும் மீண்டுமாய் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

அனைவருக்கும் தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்!!!

புதினம் 2020 – குழு

 

வாழ்த்த, பகிர, கீழ்கண்ட இணைப்பை நாடுங்கள்

Results – Thread