பின்னூட்டம்

இது எனது தொடர்கதைகள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் கட்டுரைகள் பற்றிய உங்களது கருத்துக்கள் , பார்வைகள், மற்றும் ரிவ்யூஃஸிற்கான ஸ்தலம். பதிந்து பகிர உங்கள் ஒவ்வொருவரையும் வரவேற்கிறேன்.

 

Advertisements

42 comments

 1. சிஸ் என்ன சொல்றது எப்படி சொல்றது எதுவும் புரியல. ஆனா இப்படி ஒரு ஃஸ்டோரி நீங்க மட்டும்தான் எழுத முடியும். Startingல இருந்து end வரைக்கும் ஒரு க்யூரியாசிட்டி க்ரியேட் பண்ணி எழுதி இருக்கீங்க. Very interesting and lovely flow.

  ஆரம்பத்தில் மீரட் கிருபா மீட்டிங், கிருபா வீட்டுக்கு வர்றது அடுத்து கிருபா மீரட் குடும்பத்தை சந்திக்கிறது, விஷிக்காக மீரட் வாணிய பார்க்க வர்றது, கிருபா கிட்ட மீரட் அவனைப் பத்தி சொல்ற பீச் சீன், அதை சரியா புரிஞ்சுக்கிற கிருபா, வாணி விஷி காட்சிகள், அவங்க காதல், விஷியோட குடிப் பழக்கம், அதை விடுறது, விஷி குடும்பம் வாணிக்கு செய்த விஷயங்கள், ஜாதி பற்றிய ப்ரச்சனைகள், ஒவ்வொரு சீன்லயும் அப்படியே மெய் மறந்து படிக்க வச்சீங்க.

  வாணி விஷி பிரிவு, பிரிஞ்சவங்கள சேர்த்து வைக்கிற மீரட் கிருபா, மீரட்டோட கிருபா மீதான காதல், கிருபாவுக்கு காதல் இருந்தும் திருமணம் வேண்டாம் என்று சொல்றதும், கடைசியில் திருமணத்துக்கு ஒத்துகிட்டு மீரட்டை முழுசா புரிஞ்சிக்கிறதும், very very superb.

  மீரட்டோட first kiss பத்தின thought very nice.

  விஷி வாணி (இதுதான் காதல், நான் நீயாகிறதும், நீ நானாகிறதும்) I’m speechless mam. Superb superb supeb well narrated perfect story.

  Awesome sweety sis.

  இது போல நிறைய கதைகள் நீங்க எழுதணும்.

  Thanks for the wonderful treat
  -Anamika

   1. காதலாம் பைங்கிளி ன்ற நாவல். இப்போ சைட்ல துளி தீ நீயாவாய் ன்ற என் நாவல் போய்ட்டு இருக்கு. thanks

 2. காதலாம் பைங்கிளி ரிவ்யூ

  ———–

  பொதுவா உணர்வுபூர்வமா மனதை தொடும் கதைகள் தான் எனக்கு ரொம்ப பிடிக்கும்… அப்படி மனதிற்கு நெருக்கமான ஓர் உணர்வை தந்த கதை இது…

  மீரட் – வச்சக்குறி தப்பாது.. இப்படி தான் நம் நாயகன் அறிமுகமாகிறார்….குறி வச்சி நம்ம நாயகி கிருபா வீட்டிற்குள் நுழைக்கிறார் மீரட்… எதுக்காக குறி வைக்கிறார்.. அதற்கான காரணம் என்னனு ப்ளாஷ்பேக் போகும் போது வராங்க அதிரடியாய் எண்ட்ரி கொடுக்கறாங்க நம்ம அடுத்த நாயகன் விசாகன்… விசாகனுக்கு மட்டுமே அதிரடியாய் மூணு எண்ட்ரி இருக்கு கதையில்… வாணி விசாகனுக்கும் என்ன பிரச்சனை… விசாகனுக்கு மீரட்க்கும் என்ன தொடர்பு… எதனால மீரட் விசாகனுக்கு உதவி செய்றார்… இப்படி பலப்பல ட்விஸ்ட் வைத்து காதலால் நம்மை திக்குமுக்காட வைத்து சிரிக்க வைத்து அழ வைத்து ரசிக்க வைத்துனு நம்மளை நிறைய ரியாக்ட் செய்ய வச்சிருக்காங்க இந்த கதையின் மூலமாக ஸ்வீட்டி சிஸ்…

  நான் மட்டுமே காதலிச்சா காதல் ஆயிடுமானு ஒரு தலை காதலின் வலி… காதலை விட முடியாமல் தவிக்கும் தவிப்பு… இரு மணம் இணைந்ததில் வரும் சந்தோஷம்.. பூரிப்பு… இன்பமான வாழ்வு…. மனதாங்கலால் தவறான புரிதலால் ஏற்படும் பிரிவு.. பிரிவின் துயரம்… அப்பிரிவு உணர்த்தும் காதலின் வலி… எல்லாம் சரியானதும் ஓருயிராய் இருவரும் ரசித்துணர்ந்து வாழும் வாழ்வு….

  இப்படி காதலின் பல பரிணாமங்கள் இந்த கதைல கொடுத்து எங்களை நெகிழ வச்சிட்டீங்க சிஸ்…

  காதல் மட்டுமா… அதைச் சார்ந்த சமூக அவலங்களும் இந்த கதை பேசுகிறது..

  தாழ்த்தப்பட்ட மக்கள்னு யாரும் இல்லை.. எல்லாரும் சம உரிமை இருக்குனு மீரட் அம்மா மூலமா சொல்றது… அவ்ளோ நேர்மையான நேர்மறையான எண்ணங்கள் குணங்கள் கொண்ட வாணியின் அப்பா ஜாதினு வரும் போது காட்டுமிராண்டியா மாறுவது… இன்னும் வட இந்தியாவில் நடக்கும் பெண்களுக்கு எதிரான அவலங்களை வாணியின் நிலையில் சொன்னது…

  இப்படி பல சமூகம் சார்ந்த விஷயங்களையும் இந்த கதைல அழகா காதலினிடையில் புகுத்து எங்க மனசுக்குள்ளும் புகுத்திருக்கீங்க ஸ்வீட்டி சிஸ்….

  வாணி விசாகனின் காதலில் நாங்களும் மூழ்கி கரைந்து… மீரட் கிருபாவின் துறுதுறு காதலில் சிரித்து சிந்தித்துனு… இது ஒரு அருமையான பயணமா மன நிறைவை தந்தது….

  மொத்தமாய் ஒரு ஆல்ரவுணடர் கமர்சியல் மூவி பார்த்த உணர்வை இந்த கதை கொடுத்தது ஸ்வீட்டி சிஸ்…

  Thanks a lot for such a wonderful mesmerising love story sweety sis…
  Narmadha .S

Leave a Reply