பால் வண்ணம் பருவம் கண்டு…இறுதிப் பகுதி

லி மட்டுமல்ல எந்த உணர்வுவையுமே அவளால் உணரமுடியவில்லை….தனக்கு பைத்தியம் பிடிக்கிறதோ என்ற சந்தேகம் கூட வருகிறது ரேயுவுக்கு….அல்லது தான் ஏற்கனவே செத்துவிட்டேனோ….?சர்வமும் மரணத்திருந்தது அவள் உலகில். மரம் அதுதான் அவள் இந்நேரம்.

“மாப்ள எப்டி…? இந்த கல்யாணதுக்கு பிறகு அப்பாவுக்கே எதாவது ஆயுட்டுன்னா கூட நான் பயப்பட மாட்டேன் தெரியுமா….அவ்ளவு நல்ல பையன்…பொறுப்பா உன்னையையும் செட்டில் செய்துடுவான்….” அப்பா உச்ச கட்ட சந்தோஷத்தில்  இருக்கிறார், இல்லையெனில் இப்படி பேச அவருக்கு வராது.

“ஆதிக் விரும்பி செய்றாங்களாப்பா…?” கஷ்டபட்டு இதழை இழுத்துப் பிடித்து சிரிப்பு என பெயர் செய்து கேட்டே விட்டாள். நெஞ்சில் வலி அலை அலையாய்….மூச்சுத் திணறல்…..ஓ இன்னும் ஏதோ நம்பிக்கை இது நிஜமல்ல என்று….நம்பிக்கை உணர்வுகளை திருப்பித் தருகிறதோ…

“ஏன்மா பையனுக்கு சம்மதமான்னு கேட்காம இவ்ளவு சொல்வேனா….” என்றவர் “இரு” என்றுவிட்டு தன் மொபைலில் சில எண்களை அழுத்திவிட்டு எதிர் புறம் இணைப்பை ஏற்கவும் “மாப்ள என் சின்ன பொண்ணு உங்கட்ட பேசனுமாம்…..உங்களுக்கு சம்மதமான்னு கேட்கிறா பெரிய மனுஷி…” இவளிடம் நீட்டினார்.

தன் மொத்த உயிரையும் திரட்டி அதை கையில் வாங்கினாள். காதில் கொண்டு போய் வைக்கும் முன் இதயம் வாய் வழியாய் வெளியில் வந்து விழப் போவது போல் உணர்வு…

“ஹாய்…வாலு….ஒருவழியா உன்ட்ட பேச முடிஞ்சுட்டு….எப்டி இருக்க? உன்னப் பார்க்கனும் பார்க்கனும்னு ப்ளான் செய்து கடைசியா என் கல்யாணத்துலதான் பார்க்க முடியும் போல….” ஆதிக் தான். அவன் குரல்தான். எத்தனை நாள் இந்த குரல் காதில் விழாதா என ஏங்கி இருப்பாள். எத்தனை முறை காற்றில் இக் குரலை மட்டும் கேட்டு கரைந்திருப்பாள்.

“ம்”

“எப்டி இருக்கா உன் அக்கா….இப்பவாவது என்ட்ட பேச விடுவாங்களா…? “ மூச்சுவிட முடியாமல் ஒரு திணறல்…. நெஞ்சில் வலி இவளுக்கு.

“அவட்ட பேசனுமே…கூப்டுறியா…?” உதடுகளை இறுக்கி கடித்து தன் உணர்வுகளை கட்டுப் படுத்த முயல்கிறாள். கீழ் உதடில் ரத்தம்.

“அப்பா பக்கத்துல இருக்காங்களா?” ரகசியம் பேசும் குரலில் அவன்.

“ம்…”

“பிரவாயில்ல….உன் பயந்தாங் கொள்ளி அக்காவ நான் கண்டிப்பா பேசச் சொன்னேன்னு சொல்லு….” சிரிப்பு வந்திருந்தது அவன் குரலில்.

இதற்கு மேல் தாங்காது. இணைப்பை துண்டித்து மொபைலை அப்பாவிடம் கொடுத்துவிட்டு தன் அறைக்கு சென்று கதவை உட்தாழிட்டாள் ரேயா.

அதிர்ச்சியை உள்வாங்கவே அவளுக்கு தனிமை வேண்டும்…..அதைவிட்டு எப்பொழுது வெளியேறவோ..??

மனம் நடந்தவைகளையும் நடப்பவைகளையும் பொருத்திப் பார்த்து விளக்கம் தேடுகிறது….

இப்பொழுது பேசிய அவன் குரலே காண்பிக்கிறது அவனுக்கு இந்த திருமணத்தில் எத்தனை சம்மதமும் ஆசையும் என. ஆனாலும்…..

“உன் ரூமுக்கு நான் எதுக்கு வரப் போறேன்…..”ஷாலு ரூமுக்குள் நின்று கொண்டு அன்று அவன் கேட்டானே…..

மொபைல் முழுக்க போட்டோஃஸால நிரப்புற பழக்கம் இருக்ற அவன் இவளை ஒரு ஃபோட்டோ கூட எடுத்து வச்சுருக்கலையே….ரூம்ல இவளும் ஷாலுவும் இருக்ற போட்டோவை மட்டும்தானே போட்டோ எடுத்து வச்சிருந்தான்….

“ஷாலு மேரேஜுக்கு நான் பொறுப்பு….” அவன் சொன்னானே

சிமி இவள அண்ணினும் இவ அப்பாவ ஆதிக்கின் மாமனர்னும் சொன்னாளே….அதுக்கு பதிலா . “இவளப் போய் அண்ணினு சொல்லிகிட்டு……” கத்தினானே……“ப்ரபோஸ் செய்றதாவது நானா இருக்கடும்….”  அப்டின்னு ஒரு விளக்கமும் சொன்னான்தானே…..

ஷாலுவ ஆதிக் மேரேஜ் செய்தாலும் சிமிக்கு இவ அண்ணி முறைதான வரும்…அதனால சிமி இவள அண்ணின்னு சொல்லி இருக்கனும்….

ஆனா இவட்ட இவ அப்பாதான் ஆதிக்கின் மாமனார்னு சொல்லிவச்சா ஷாலுவுக்கு இவ வழியாவே விஷயம் போயிடும்னு நினைச்சிருப்பான்….அவனுக்கு அவனே ப்ரபோஸ் செய்ய ஆசை… மூத்த பொண்ணுக்குதான முதல்ல மாப்ளை பேசுவாங்க….அதனால இவ ஷாலுவ தான் நினைப்பாள் என அவனுக்கு தோணியிருக்கும். அவன் மனதில் ஷாலு மட்டுமே இருந்திருக்க எல்லாவற்றையும் குழப்பியது இவள்தானோ?

“மருமகனும் மகன் மாதிரிதான்…..” ஷாலு ஹஸ்பண்ட் கூட இப்படி இவ அப்பாவுக்காக சொல்லலாமே…

அவனது என் மாமா அவளுக்கு சித்தப்பா….. ஷாலுவின் ஹஸ்பண்டின் மாமாவும் இவளுக்கு சித்தப்பாவாகத்தானே வரும்…

இவ பெர்த் டேக்கு ஒரு கார்ட் கூட தரலை அவன்…… இவ்ளவு நாளா இவட்ட பேசுனதும் கிடையாது….

இவளை ஒரு குழந்தை மாதிரி ட்ரீட் செய்தானே ஒவ்வொரு டைமும்..,,தனக்கு வரப்போறவளின் தங்கை என்ற கோணத்தில் அவன் மனம் சுத்தமாகத்தான் இருந்திருக்கிறது…

ஆனால் அன்னைக்கு பெங்களூர்ல காப்பாத்த வந்தப்ப கார் பக்கத்துல வச்சு இவள தன்னோட சேர்த்து பிடித்தானே….அந்த நேரத்துல அவன் கூடவே சேர்ந்து இவ மூவ் ஆகனும்ன்றதுக்காக இருந்திருக்கலாம்….இல்லனா ரெண்டு பேரும் அந்த கும்பல்ட்ட மாட்டி இருப்பாங்களே…

இவ செலக்க்ஷன்ல வெட்டிங்க் கிஃப்ட் வாங்கினானே….அந்த ஃபேமிலிக்கு உன் டேஸ்ட்தான் சரின்னு தான சொன்னான்…. ஷாலு டேஸ்ட் இவளுக்கு தெரிஞ்சிருக்கும்னு எதிர்பார்த்திருப்பான்….

இப்பவே சொல்லனுமான்னு எமோஷனலா கேட்டானே….அதுகூட அவன் காதல பத்தி, ஷாலுவ பத்தி மீன் சொன்னதா இருக்கலாம்…

எப்டி யோசித்தாலும் எல்லாவற்றிற்கும் இந்த ஷாலு விஷயமும் பொருந்தி தானே போகிறது.?

ஆனால்….ஆனால் கோவால வச்சு சொன்னானே “எதையோ இழக்கப் போற மாதிரி இருக்குதுன்னு…” அது இவள பிரியுறதுக்காகன்னு தானே நினைச்சா….அதுக்கு இல்லைனா எதுக்காம்? புரியவில்லை…ஆனால் அதை மட்டும் வைத்து இவள் என்ன நினைக்க வேண்டும்…?

மற்றதெல்லாம் இவள் மரமண்டைக்கு  முன்பு தவறாக புரிந்தது போல் இப்பொழுது இது புரியவில்லை போலும்….

சுருண்டு போய் விழுந்துவிட்டாள் ரேயா..…..ஆனால் நேரம் செல்ல செல்ல முடிவை ஏற்க மனம் திமிறியதே தவிர ஒத்துக் கொள்ளத்தான் உடன்படுவதாய் இல்லை.

எது எப்டியானாலும் அவனிடம் நேரில் அழைத்து பேசிவிட வேண்டும்….உண்டோ இல்லையோ அவன் குரலில் கேட்டால் தான் இந்த மனம் நம்பும்….

வள் மொபைலில் அவனது எண்ணை அழைத்தாள்.  இணைப்பை ஏற்றான் அவன்.

“ஹலோ நான்…”

“முயல் குட்டி பேசுறேன்…”  அவளை முழுதாக சொல்ல கூட விடவில்லை….அவளைப் போலவே பேசினான். குரலில்தான் எத்தனை குதுகுலம்…

“ஏய் கேடி உன்ன தெரியாதா எனக்கு? “ அவன்தான். அதற்கு மேல் கட்டுப் படுத்த முடியவில்லை அவளால். வெடித்து வந்தது அழுகை. தன் கையால் தன் வாயைப் பொத்தியும் மீறி கசிந்தது அவள் அழுகுரல் மொபைலுக்குள்.

முதலில் சிறிது நேரம் அவன் புறமிருந்து ஒரு பதிலும் இல்லை. பின்பு அழைத்தான். ரேயு… உயிர் வருடும் அதே அழைப்பு….அவ்வளவுதான் இன்னுமாய் கூடிக் கொண்டு போனது இவளது அழுகை.

தெய்வமே இந்த அழைப்பெல்லாம் பொய்யா….பொய்யா போயிருந்தால் கூட பிரவாயில்லையே…இப்டி அக்கா ஹஸ்பண்டா வரப்போறனே…..

அண்ணன் ஸ்தானதுக்கு வரப் போறவன் மேல நான் என்ன மாதிரி ஆசைய வளத்து வச்சிருந்திருக்கேன்….நெஞ்சடைக்கிறது.  இப்பொழுது வாயை திறந்து திறந்து பார்த்தால் கூட மூச்சுக் காற்றுதான் கிடைக்கவே இல்லை….

“ரேயுமா….என்னமா….என்னாச்சுடா…ப்ளீஸ் பேசு  ரேயு…..”

இந்த கொடுமையில் இருந்து தப்பிக்க என்ன வழி? எங்க ஓடிப் போகனும்?

“ரேயு இருக்கியா இல்லையா ரேயு….?.”

“உங்களுக்கு இந்த மேரேஜில சம்மதமா ஆதிக் ?” அத்தனை அழுகையையும் அப்போதைக்கு அடக்கி, இழுவிய குரலை இழுத்துப் பிடித்து தெளிவாக கேட்டேவிட்டாள். அதற்குத் தானே இப்பொழுது இவனை அழைத்ததே.

“இதென்ன கேள்வி? “ என் ஆரம்பித்தவன்….”நான் நேர்ல சொல்லனும்னு இருந்தேன் ரேயு….. ஸ்டடீஸ் முடியட்டுமேன்னுதான் இவ்ளவு நாளா வெயிட் பண்ணது….பட் இப்டி” அவன் ஷாலுவிடம் நேரில் சொல்ல நினைப்பதை இவள் அவன் வாயிலிருந்து பிடுங்கி எடுக்க  முயல்கிறாளோ?

“ஒகே அப்ப நீங்க நேர்லயே பேசிக்கோங்க…..பை..”

“ஏய் கேடி எனக்கு இந்த மேரேஜ்ல ரொம்பவும் இஷ்டம்…மிச்சதை நேர்ல பார்த்து சொல்லிக்கிறேன்….இன்னைக்கு ஈவ்னிங் நான் வரக் கூடாதாம்….நேரே எங்கேஜ்மென்டுக்குத்தான் வருவேன்…அப்ப பார்க்கலாம்…அதுவரைக்கும் உனக்கு ஒரு ஹோம்வொர்க்…ஷாலுட்ட என்னபத்தி கொஞ்சம் சொல்லி வை….அப்பயாவது ஷாலு என்ட்ட ஒழுங்கா பேசுறாளான்னு பார்ப்போம்…..”

கொன்று குழியில் இறக்கி மண் அள்ளிப் போட்டு மூடியும் விட்டான் இவள் காதலையும் அதோடு சேர்ந்த எதிர்பார்ப்புகளையும். இப்பொழுது இவள் என்ன செய்ய வேண்டும்?????

கதவு தட்டப் படும் சத்தம். “அன்றில் என்ன செய்ற நீ…” அப்பாதான். அழுது கதற கூட வாய்ப்பில்லை. “இந்தா வர்றேன்பா…” அவசரமாக முகம் கழுவிவிட்டு எழுந்து ஓடினாள் ரேயா.

“இது சின்ன ஃபங்க்ஷன்தான் வெளியூர்ல இருந்தெல்லாம் யாரையும் கூப்ட வேண்டாம்னு சொல்றாங்க….சோ அதுக்கு ஏத்தமாதிரி என்ன ஜ்வல் வேணும்னு சொல்லு….நான் லாக்கர்ல இருந்து எடுத்துட்டு வர்றேன்…சாப்பாடுக்கு சொல்லிட்டேன்… வீட்ல என்ன செய்யனும்னு  பானுட்ட சொல்லிருக்கேன்…எல்லாத்லயும் நீ ஒரு கண்ணு வச்சுக்கோ….அப்பா இப்ப பேங்க் போய்ட்டு வர்றேன்…அதோட உன் அக்காட்ட அவளுக்கு என்ன வேணும், எப்படி செய்யனும்னு நினைக்கான்னு மேரேஜ் பங்க்ஷன் பத்தி கேட்டு வை…..அவ மனசுல உள்ளத டக்குனு பேசிக்கிட மாட்டா…..ஆனா ஒன்னு ஒன்னா சேத்துவச்சுகிட்டு பிறகு ஒரு நாள்ல பெருசா ஆர்பாட்டம் பண்ணுவா..…சோ பார்த்துக்கோ….”

அப்பா கேட்டதை செய்து கொடுத்து அப்பா விடை பெறவும், தனியாக தரையில் விழுந்து அழ நினைத்த மனதை ஷாலுவுக்கு இந்த நேரத்தில் இவள் செய்யாமல் யார் செய்வதாம் என்ற நினைவினால் கட்டி இழுத்து, அவளிடம் ஓடினாள். அதோடு என்றாவது ஒருநாள் ஆதிக்கிற்கோ அல்லது இவளது அக்காவிற்கோ இவளது கண்ணுக்கு தெரியாத காதல் தெரியவந்தால் எவ்வளவு மோசமாகிப் போகும்? இயல்பாய் இருந்தே ஆக வேண்டும் இவள்.

ஷாலு அறையை உள்ளே பூட்டி இருந்தாள். “நேத்து நைட் ட்ராவல்….பாவம்… தூங்றா போல இன்னும் டைம் இருக்கு, ஈவ்னிங் தான ஃபங்க்ஷன்…” .பானுக்காவைத் தேடி ஓடினாள். ஓய்ந்து ஒரு இடத்தில் உட்கார்ந்தால் கொன்று தின்று விடும் குருதி கொட்டும் இதயம்.

சற்று நேரம் இப்படியும் அப்படியுமாய் ஒவ்வொரு வேலைக்காய் ஓடிக் கொண்டிருந்தவள் மீண்டும் ஷாலுவின் அறை வாசலில் போய் நின்றாள். இப்பொழுதும் அது பூட்டியே இருந்தது

மீதிப் பகுதியை கீழ் காணும் லிங்கில் படிக்கலாம்…

பால் வண்ணம் இறுதிப் பகுதி

Leave a Reply