பால் நதிக் கனவுகள்…

ந்த கல்யாணப் பத்திரிக்கையை பார்க்கவும் தேவநதிக்கு கண்ணை மறைத்து கட்டிக் கொண்டு வந்தது கண்ணீர். முட்டிக் கொண்டு வந்தது நெஞ்சம். தேவநதி வெட்ஸ் ப்ரபல்யன்…..இவள் கனவுகளை காலி செய்ய வந்த கல்யாணம் இது.

டை ஃபாக்டரி கழிவுநீரை சுத்தகரிக்கும் ஜெனிடிக் இஞ்சினியர்ட் மைக்ரோ ஆர்கனிசத்தை டிசைன் செய்ய வேண்டும் என்பது 14 வயதிலிருந்து அவள் கனவு.

இந்த ஒரே நோக்குடன் +2 க்குப் பின் பி இ பயோடெக்கில் சேர்ந்தாள். யூஜி சென்னையில் முடித்துவிட்டு பின்பு பி எச் டி வரை யூஎஸ்ஸில் படித்துவிட்டு அப்படியே ரிசர்ச்சில் நுழையப் போகிறேன் என தெள்ளத் தெளிவாக சொல்லி தன் தந்தையிடம்  சம்மதம் வாங்கிவிட்டே கல்லூரிக்குள் நுழைந்தாள் தேவநதி.

ஆனால் எல்லாம் நாம் நினைத்தது போலவா நடக்கிறது? பி இ மூன்றாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கும் போது அப்பாவிற்கு பிஸினஸில் ஹெவி லாஸ்…. கவர்மென்ட் கட்டிடம் ஒன்றை கான்ட்ராக்ட் எடுத்து பல கோடி முதலீடு செய்து கட்டிக் கொண்டு இருந்தார் அப்பா. திடீரென சி எம் இறந்து போக…ஆட்சி மாற்றம் வர….முந்தைய கட்சியின் திட்டங்கள் கைவிடப் பட…இவள் அப்பா செலவு செய்திருந்த இவர்கள் பணம் கூட திரும்பி வராமல் போனது.

ஃபைனல் இயர் படித்துக் கொண்டிருக்கும்போது சட்டென சரிய தொடங்கிய ஷேர் மார்கெட் இவளது அப்பாவின் மிச்ச மீதி இருந்த முதலீடுகளை இழப்பென்று மாற்ற….

ஜி ஆர் இ எழுதிவிட்டு வீடு வந்த  இவளிடம் அப்பா கையெடுத்து கும்பிட்டுவிட்டார்.

“கண்ணுபிள்ள அப்பா நீ கேட்டு இது வரைக்கும் எதுக்கும் இல்லைனு சொன்னதில்ல….இப்ப அப்பா ஒன்னு கேட்பேன் செய்வியாடா….? என்னை மன்னிச்சுடுடா…..மத்தவங்க மாதிரி வயசு வரவும் பொண்ணை அடுத்த வீட்டுக்கு அனுப்பிவிட்டு கடமை முடிஞ்சிதுன்னு இருக்ககூடாது, நீ ஆசைப் படுற அளவுக்கும் படிக்க வைக்கனும்னுதான் நினச்சிருந்தேன்…..இப்ப உன்னை படிக்க வைக்க இதுக்கு மேல என்ட்ட வசதி இல்லைடா…..அப்பா என்ன செய்யனே தெரியலையே தேவிமா ….”

அதோடு முடிந்து போனது தேவநதியின் பயோடெக் ட்ரீம். டிகிரி முடியவும் கிடைத்த வேலையில் சேர்ந்தாள். ப்ரைவேட் பேங்கில் வேலை. 3 வருடம் கடந்திருந்தது. இப்பொழுது தேவ நதி கவர்மென்ட் பேங்க் எக்‌ஸாமிற்காக தயாராகிக் கொண்டிருந்தாள். அதுவும் நபார்டின் குறிப்பிட்ட அந்த வேலை மேல் ஆசை. அந்த பயோடெக் பிரிவு ஸ்பெஷல் ஆஃபீஸருக்கான ஜாப் ஃப்ரொஃபைல் பிடித்திருந்ததே காரணம்.

இந்த நேரத்தில் அப்பா “என் பிஸினஸை நம்பி இதுக்கு மேலும் காத்துகிட்டு இருக்க முடியாதுடா கண்ணுபிள்ள…. என் உடம்பு போற போக்குக்கு உன்னை பத்ரமான இடத்துல தூக்கி வச்சாதான் எனக்கு நிம்மதியா இருக்கும்” என்றார். அவருக்கு மகள் வாழ்க்கை செட்டிலாக வேண்டுமே என்ற கவலை. அவர் தவிப்பு  புரிய “உங்க இஷ்டம்…..யாரை காமிச்சாலும் கழுத்த நீட்றேன் “ என முடித்துவிட்டாள். இதோ கல்யாணப் பத்திரிக்கை ரெடி.

மாப்பிள்ளை ப்ரபல்யன் ஏதோ ப்ரபலமான டெக்‌ஸ்டைல் ஷோரூம் நடந்திக் கொண்டிருந்தான். நிச்சயத்தின் போது “பொண்ணுங்களை வேலைக்கு அனுப்பித்தான் ஆகனும்கிற நிலை எங்க குடும்பத்துல கிடையாது… “ என்றார் அந்த ப்ரபல்யனின் அம்மா. நிச்சயம் அதில்  அலட்டல் குத்தல் எல்லாம் இருந்தது. மெல்ல அந்த ப்ரபல்யனை முதல் முறையாக நிமிர்ந்து பார்த்தாள் தேவநதி. அவன் மௌனமாய் இருந்தான்.

அந்த மௌனமே அவன் எத்தகைய மனைவியை எதிர்பார்க்கிறான் என இவளுக்கு புரிவிக்க….அவ்வப்போது அவன் மொபைலில் அழைக்கும் போதும் சரி…. நிச்சயத்திற்குப் பின்னான இந்த இரண்டு மாதத்தில் நான்கு முறை போல் இவள் வீட்டிற்கு வந்த போதும் சரி..எப்பொழுதும் அவன் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்வதோடு சரி….இவளாக எதுவும் பேசியதே இல்லை.

“எங்க வீட்டு பொண்ணுங்க இப்டில்லாம் கல்யாணத்துக்கு முன்னால பேசுனதே இல்லை” னு சர்டிஃபிகேட் எப்ப யார்ட்ட இருந்து வருமோ? எதுக்கு வம்பு?

ன்று திருமணம்.

அவன் அம்மா அண்ட் ரெண்டு சிஸ்டர்ஸ் என எல்லோரும் இவளுக்கு பிடிக்காத மாதிரி மட்டுமே பேச அதன் மத்தியில் நடந்தேறியது இவர்கள் திருமணம்.

இந்த நொடி வரை அவனை தவிர்ப்பது எளிதான விஷயமாக இருந்திருக்கிறது என இவளோடு அந்த அறைக்குள் நுழைந்து அவன் தாழிடும் போதுதான் அப்பட்டமாக புரிகிறது தேவநதிக்கு. இனி இவனை இவள் எப்படி தவிர்க்க?

அருகில் வந்தவன் அவள் கையை மென்மையாக பற்றினான். தன் தலையை சற்று குனிந்து கண்களை தரை தாழ்த்தி இருந்தாலும், இவள் முகத்தில் பரவி இருக்கிறது அவனது பார்வை என புரிகிறது இவளுக்கு.

“ந…” அவன் ஏதோ சொல்ல தொடங்கவும்

“ப்ளீஸ் எனக்கு சாரில தூங்கி பழக்கம் இல்லை….ட்ரெஸ் மாத்திகிறனே….ப்ளீஸ்” என்றபடி மெல்ல கையை உருவினாள்.

“சரிமா…ஆனா ஒரு ஃபைவ் மினிட்ஸ் வெயிட் பண்ணேன் “என்றபடி இவளுக்கு நேர் எதிரில் சற்று விலகி சென்று நின்றவன் “இன்னைக்கு உன்னை முழுசா பார்க்க கூட முடியலை….இந்த சாரில ரொம்ப அழகா இருக்க நீ…” என்றபடி தன் மொபைலில் இவளை போட்டோ எடுக்க முயன்றான்.

“இப்பவாச்சும் நிமிர்ந்து பாரேன்…ஃபோட்டோல எனக்கு உன் ஃபேஸ் வேணும்….இப்டி எடுத்தா உச்சந்தலைதான் தெரியும்…” சொல்லியபடி இன்னும் குனிந்தபடி நின்றிருந்தவள் தலையை நாடியில் கை வைத்து உயர்த்தியவன், காமிராவில் அவள் முகத்தைப் பார்க்கும் போது நேருக்கு நேராக பார்த்திருந்த அவள் கண்களிலிருந்து கண்ணீர் வடிந்து கொண்டிருந்தது.

ஒரு நொடி  அதிர்ச்சியாகப் பார்த்தவன் “இவ்ளவு நாளும் நீ கொஞ்சம் ஆர்த்தடாக்‌ஸ்…ஷை டைப்னு நினச்சேன்….உனக்கு என்னைப் பிடிக்கலைனு இப்பதான் தெரியுது…இதை கொஞ்சம் முன்னாலயே சொல்லிருக்கலாம்…. சரி இப்ப சொல்லு செய்றதுக்கு எதாவது இருக்குதான்னு பார்ப்போம்…” என்றபடி பெட்டில் சென்று அமர்ந்தான். ஏமாற்றத்தை விழுங்கும் குரல் அவனிடம்.

நேத்துதான் அந்த நபார்ட் எக்ஸாம் இவள் எழுதாமலே முடிந்திருந்தது. இன்னொரு முறை எப்ப பயோடெக்கில் இந்த ஜாப் ப்ரோஃபைலில் ஓபனிங் வர????? கலைந்து போன அடுத்த கனவு லிஸ்டில் அது பெர்மனென்ட்டாக சேர்ந்திருந்தது.

இப்பொழுது என்ன சொல்லி என்ன செய்துவிட முடியுமாம்…? சந்தையில் நிற்கும் மாடு போல் தனக்கு என்ன காத்திருக்கிறது என்ற ப்ரஞ்சையே இன்றி அசைபோட வேண்டிய நிலையில் இவள்…. இதில் பேசி ஆகப் போவது என்ன? கண்ணிலிருந்து கழன்று விழும் கண்ணீரோடு மௌனமாய் அவள்.

“உன் திங்க்ஸ் அந்த வாட்ரோப்ல இருக்குது” என்பதோடு பேச்சை முடித்துக் கொண்டான் அவன்.

ரண்டு நாளில் வீட்டில் இவளும் அவனும் வேலையாட்களும் என்ற லைஃப்ஸ்டைல் வந்திருந்தது. செய்வதற்கு சாப்பிடுவது என்பதை தவிர வேறு வேலை இவளுக்கு இல்லை. மௌனமாய் அந்த நிசப்த நரகத்தை அனுபவித்தாள்.

அவன் காலையில் கிளம்பிப் போனானாகில் இரவு வெகு தாமதமாக வருவான். திருமணமாகி ஒரு வாரம் கடந்திருந்தது.

அன்று இரவும் வழக்கம் போல் இரவு படுக்கையில் படுக்க தொடங்கினான் அவன். ஏற்கனவே படுத்திருந்தவளிடமிருந்து விம்மல் ஒலிகள்.

இவள் புறமாய் திரும்பி ஒரு நொடி பார்த்தவன் “நதிமா “ இவன் அழைக்கவும் வெடித்துவிட்டாள் அவள்.

“ஃபைவ் டேஸா இந்த வீட்ல நான் நிசப்தத்தை தவிர எதையும் கேட்கலை…..பயித்தியம் பிடிச்சிரும் போல இருக்கு எனக்கு….” 5 நாளா அவட்ட யாருமே ஒரு வார்த்தை பேசலைனா பாவம் அவ என்ன செய்வா?

“நான் உன்ட்ட பேசமாட்டேன்னு சொல்லவே இல்லையேமா….” அவன் சொல்ல சட்டென மதியம் இவள் பார்த்த காட்சி மனதிற்குள் விரிகிறது.

மதியம் ஏதோ சத்தம் கேட்கிறது என வீட்டின் வரவேற்பறைக்குள் வந்திருந்தாள் தேவநதி. அங்கு எப்படியோ உள்ளே வந்திருந்த ஒரு சிறு குருவி வெளியே செல்ல அலைமோதிக் கொண்டிருந்தது. சுழலும் ஃபேனுக்கு பயந்து பதறிப் பதறி ஒவ்வொரு ஜன்னலாய் தாவி மோதிப் பார்த்தபடி அது….ஜன்னாலின் கண்ணாடியை இனம் புரியாமல் ஊடுருவும் வெளிச்சத்தை மட்டும் காரணமாய் கொண்டு அதை வழி என எண்ணி அங்குமிங்குமாக பறந்து கொண்டிருந்தது……திறந்திருந்த கதவை அது கண்டு கொள்ளவே இல்லை…

இவளும் அப்படித்தானோ திறந்திருக்கிற கதவை பார்க்காமல் மூடிய கதவையே பார்த்து கொண்டு இருக்கிறாளோ? இவளுக்கான திறந்த கதவு இவன்தானோ? உண்மையில் இவளுக்கு இவனோடு என்னதான் ப்ரச்சனை? இவளுக்கு வாழ்க்கை கொடுத்த ஏமாற்றங்களை இவனின் மேல் ஏன் திணிக்கிறாள்? அவனென்ன இவளை கடத்திக்கொண்டு வந்தா கல்யாணம் செய்தான்…?

“எனக்கு வேலைக்கு போகனும்….இப்படி வீட்லயே அடஞ்சு கிடக்கனும்னு நினச்சு நான் வளரலை….அதனால எனக்கு இதை தாங்க முடியலை…” மனதின் இருந்த ப்ரச்சனையின் சம்மரி சொன்னாள் அவனிடம்.

அவளைப் பரிவாய்ப் பார்த்தான். “உனக்கு ஓகேனா நாளைல இருந்து என் கூட ஆஃபீஸ் வர்றியா நதிமா?” அவன் கண்களில் ஒரு ஆனந்த ஒளி கீற்று.

பயோடெக் எங்கே….டெக்‌ஸ்டைல் ஷோரூம் எங்கே….பால் நதியும் பாலை வனமும்  மாதிரி….இருந்தாலும் இந்த சத்தமில்லா ஜெயில் வாழ்க்கைக்கு அது எவ்வளவோ மேல் என்றுதான் இப்போது தோன்றுகிறது….

மறுநாள் காலை “நான் ஷோரூம் வர்றப்ப சல்வார் போடவா இல்லை சாரி கட்டவா? எது கரெக்ட்டா இருக்கும்?” அவனிடம் போய் நின்றாள். அப்படித்தான் தொடங்கியது அவனோடு பேச்சு வார்த்தை.

“உனக்கு எது பிடிக்குதோ அது….சாரி ஃபார்மலா இருக்கும்…சல்வார் கம்ஃபர்டபிளா இருக்கும்….ஆஃபீஸுக்கு சல்வார் நல்ல சாய்ஸ்….சேல்ஸ் செக்க்ஷனுக்கு சாரி…பட் நோ ஹார்ட் அண்ட் ஃபாஸ்ட் ரூல்ஸ்” என்ற அவன் பதில் பிடித்திருந்தது.

பின் ஒவ்வொன்றிற்கும் அவனிடம் பேச வேண்டிய நிலை நாள் முழுவதும். அதற்கான அவனது அத்தனை பதில்களும் பிடித்திருக்கிறது இவளுக்கு. காரணம் அதில் அவளுக்காய் காணப்பட்ட சுதந்திரம். அவன் ஒன்றும் இவளை அடைத்து ஒடுக்க வரவில்லை. ஆனால் ஏன் வீட்டுப் பொண்ணுங்க வேலைக்கு போக கூடாதுன்னு நினைக்கிறான்? அவன் அம்மா அப்படித்தானே சொன்னாங்க…

எது எப்படியோ அவனோடு ஷோரூம் செல்வது நிச்சயம் அவள் மனதுக்கு நல்லமாற்றம் தான்.

அந்த பிஸினஸ் ஒன்றும் அவளுக்கு பிடித்துவிடவில்லை என்ற போதும், லேபின் அமைதியை கனவுகண்டிருந்த மனதிற்கு இந்த கச கச கூட்டம் சங்கடம் சேர்த்த போதும்,. பேங்கில் கூட  பேக் என்ட் வேலை என்றவகையில் கம்ப்யூட்டரும் அவளுமான அந்த வொர்க்கிங் என்விரோன்மென்டில் கிடைத்த அமைதி இப்போது கிடைகாத போதும்

சட்டென முடிந்து போனது போல் தோன்றிய அந்த நாளின் வேகம், மாலை இவளுக்கு பிடித்த சாட் ஐட்டம் அவனோடு சென்று சாப்பிட்டது….பீச்சில் போய் காரிலிருந்தபடி பாட்டு கேட்டது…. என எல்லாம் பிடித்திருக்கிறது. மொட்டைமாடியில் இரவில் இப்பொழுது அவனோடு பௌர்ணமி பார்த்துக் கொண்டு நிற்பது ரொம்பவும் பிடித்திருக்கிறது.

“பனி பெய்யுது நதிமா…பழக்கம் இல்லாதவங்களுக்கு ஒத்துக்காது…வா உள்ள போகலாம்…” அவன் தான் அழைக்கிறான்.

“நீங்க அடிக்கடி இங்க வருவீங்களா ?” நிலவிலிருந்து கண்ணை எடுக்க முடியாமல் ஏதோ கேட்டு வைத்தாள்.

“ம்….ஆமா….சின்ன வயசிலிருந்தே டியூஷன் முடிஞ்சு வீட்டுக்கு வரவும் இங்கதான் வந்துடுவேன்….தூங்க மட்டும் தான் திரும்ப ரூம்க்கு போவேன்….”

“அப்ப ஆரம்பத்துல உங்களுக்கு சளி பிடிக்கலியாமா?” நாள் நீள பழக்கத்தில் வந்திருந்த இலகுத் தன்மையில் கேட்டு வைத்தாள்.

“எல்லா நாளும் டிசம்பரா என்ன பனி பெய்றதுக்கு….? அதோட அப்பா செகண்ட் மேரேஜ் செய்தது மே மாசம்…..இருந்த சூடுக்கு அப்ப நான் இப்படி வந்து நிக்க ஆரம்பிச்சப்ப பெட்டராத்தான் ஃபீல் ஆச்சுது…அப்றம் அப்படியே பழகிட்டுது” படு கேஷுவலாய் அவன் சொல்லிக் கொண்டு போக தூக்கிவாரிப் போட்டது அவளுக்கு.

அது அவனது அம்மா இல்லை என்ற விஷயத்தை கூட இவள் தெரிந்து வைத்திருக்கவில்லை….இதில் இவள் கனவுகளை அவன் புரிந்து வைத்திருக்கவில்லை என்று எப்படி நொந்தாள்….?

“கிட்டதட்ட 20 வருஷமா தினம் மொட்டை மாடி தான்…என் 6 வயசுல அம்மா இறந்துட்டாங்க….அப்பாவுக்கு ரெண்டாவது மேரேஜ்…சித்தி குணத்துக்கு என் நிலமை மோசமாகிடக் கூடாதுன்னு சித்தியவிட்டு என்னை விலக்கியே வச்சுறுப்பாங்க அப்பா….ஆக என் அப்பா கூட ஒரே வீட்ல இருந்தாலும் அவங்கல்லாம் கீழ, நான் மாடின்ற மாதிரிதான் வளந்தேன்….”

அவன் சுயபட்சாதாபத்தில் பேசவில்லை….

“தங்கை ரெண்டு பேருக்கும் படிப்பிலயோ வேலை செய்றதுலயோ பிஸினஸிலயோ இஷ்டம் இல்லை…..+2 க்ளியர் செய்யவே படாதபாடுபட்டாங்க…. அவங்க  பொண்ணுங்க படிக்கலை… ஆனால் நீ படிச்சிறுக்க…வேலைக்கெல்லாம் போயிருக்கன்னதும் சித்தி  பொண்ணுங்க வேலைக்கு போறதை அப்படி மட்டமா பேசிட்டாங்க…..நான் அப்ப எல்லோர் முன்னாலையும் அவங்கள மறுத்து பேசி இருக்கலாம்…பட் அதுல சித்தி ஈகோ ப்ரவோக்காகி நம்ம வெட்டிங்கை நிறுத்த என்னலாம் உண்டோ அதெல்லாம் செய்வாங்க….

சோ அவன் க்ரவ்ண்ட் ரியாலிட்டியை சொல்லிக் கொண்டு இருக்கிறான்.

“எந்த காரணத்தைக் கொண்டும் உன்னை இழக்க எனக்கு மனசில்லை….அரேஞ்ச்ட் மேரேஜ்தான்னாலும் உன் ஃபோட்டோவைப் பார்த்ததும் வைஃப்னுதான் உன் நம்பரை சேவ் செய்தேன்….என் ஃபர்ஸ்ட் லவ் அண்ட் ஒன்லி லவ் நீதான்…..அதான் அப்ப அமைதியா இருந்துட்டு தனியா உன்ட்ட பேசிக்கலாம்னு நினச்சேன்….அடுத்து உன்ட்ட பேச ட்ரைப் பண்றப்பல்லாம் ஃபார்மல் பேச்சை தாண்டி கான்வெர்ஷேஷனை நீ நகரவிட்டதே இல்லை…..சரி வெட்டிங்கு பிறகு நம்ம வீட்டு சிச்சுவேஷனை விளக்கமா பேசலாம்னு இருந்துட்டேன்…”

இதை அவள் கண்களைப் பார்த்தோ கைகளைப் பிடித்தோ சொல்லி இருந்தானானால் கூட அவளுக்கு இப்படி இருந்திருக்குமா என்று தெரியவில்லை. அவன் முந்திய விஷயங்களை பேசியது போல் நிலா மீதே கண் வைத்து சொல்லிக் கொண்டு போக….ஏதோ எனக்கு உன் மேல் காதலிருப்பதால் நீயும் என்னை காதலித்தாக வேண்டும் என அவள் மீது காதலை கூட திணிக்காதது போல் ஒரு உணர்வு அவளிடம்.

“அவங்க பேசுன எல்லாத்துக்காகவும் சாரி….வெட்டிங் டைம்ல அவங்க உள்ள வராம தவிர்க்க முடியாது…உறவு முறை அப்படி….மத்தபடி நம்ம இடத்துக்கு அவங்க எதுக்காகவும் வரமாட்டாங்க….அப்பா இறக்கவும் எல்லாவகையிலும் அவங்களுக்கு எல்லா செட்டில்மென்டும் செய்தாச்சு… நீ விரும்புற மாதிரி இருக்கலாம்….”

இதை இவளைப் பார்த்துதான் சொன்னான்.

கேட்டிருந்தவளுக்கு அப்படியே அவனை அணைத்துக் கொள்ள வேண்டும் என்றெல்லாம் இல்லைதான் ஆனால் அதன் பின் அவனை விலக்கி நிறுத்தவும் தோன்றவில்லை.

இரண்டு மாதங்கள் கடந்திருந்தது. அன்று வழக்கம் போல் ப்ரபல்யனோடு ஷோரூமிலிருந்து இரவு வீடு திரும்பிய தேவநதி, இரவு உணவுக்குப் பின் அவன் படுக்க சென்ற போது, பெட்டில் அருகில் அமர்ந்து இவள் புற நைட் லேம்பை ஆன் செய்து கையிலிருந்த எப்படி சொல்வேன் வெண்ணிலவே புத்தகத்தை வாய்விட்டு வாசிக்க தொடங்கினாள்.

“ஷாலு சரித்ரன்

சரித்ரன் ஷாலு வீட்டில்….” தேவநதி ஆரம்பிக்க

“என்ன நதிமா புதுப் பழக்கம்…? வழக்கமா புக்கை மைன்ட்ல தான ரீட் பண்ணுவ…? இன்னைக்கு என்னாச்சு?”

“”இல்ல இப்படி வாய்விட்டு படிச்சா எஃபெக்ட் நல்லாருக்கும்னு தோணிச்சு அதான்….ட்ரை பண்ணி பார்க்கனே…”

“ஓகே உன் இஷ்டம்…..அப்டியே நீ என்ன தான் படிக்றனு நானும் பார்த்துகிறேன்…வாசி…” ப்ரபல்யன் சொல்ல….மீண்டுமாய் சத்தமாய் வாசிக்க தொடங்கினாள் தேவநதி.

“எப்டியோ ஆதிக் ரேயா ரீச் ஆகுறதுக்குள்ள அவங்க ஃபர்ஸ்ட் நைட் ரூம் டெகரேஷனை முடிச்சாச்சு….” என்றான் சரித்ரன்.

“ஆமா சார்…இதுலெல்லாம் நீங்க படு ஃபாஸ்ட்….” சொல்லியபடி தன்னவன் தோளில் சாய்ந்தாள் ஷாலு. 5 வருடங்கள் முன் நடந்த தங்களது கல்யாண  இரவுகள் இருவர் மனதிலும் காட்சியாய்.

அன்று அவர்கள் வெட்டிங் சென்னையில் நடந்திருந்தது. மறுநாள் காலை அவர்கள் மும்பை கிளம்ப வேண்டும். நாளை மறுநாள் அங்கு ரிஷப்ஷன். இன்று  இரவு ஃபர்ஸ்ட் நைட் சரித்ரனது சென்னை வீட்டில் தான்.  கசின்ஸ் யார் செய்தார்கள் என தெரியவில்லை இவன் அறை பூக்களால் நிரம்பி இருந்தது.

மெல்ல ஷாலுவை தேடிப் போனான்.

ஒரு அறையில் அவளுக்கு அலங்காரம் நடந்து கொண்டிருக்குமாயிருக்கும்.  “தொட்டா கைய ஒடச்சிடுவேன்… “ அவள் தான் யாரிடமோ சொல்லிக் கொண்டிருந்தாள். வெளியிலிருந்து கேட்ட இவனுக்கு திக்.

“என்ன நீ எதையும் புரிஞ்சுகாம சின்ன பிள்ள மாதிரி பேசிட்டு இருக்க….? பொண்ணுனா இதுலெல்லாம் விட்டு கொடுத்துப் போக தெரியனும்…. இனிமே கல்யாணம் ஆயாச்சு….” எதோ ஒரு சித்தி அட்வைஸ் செய்ய அவர்கள் சொல்ல வந்ததை சொல்லி முடிக்கவிடவில்லை இவள்

“கல்யாணம் ஆகிட்டுன்னா…..? நான் என்ன அடிமையாகிட்டேன்னா அர்த்தம்? அதெல்லாம் ஒத்துக்க முடியாது. தொட்டா பிச்சிருவேன் பிச்சி சொல்லி வைங்க….”

அதற்கு மேல் அங்கு நின்று அவள் இன்னுமாய் இவனை எப்படி அடிக்கப் போகிறாள் என கேட்க அவனுக்குத் தெம்பு இல்லை.

சரித்ரனுக்கு யார் இதைப் பற்றி ஷாலுவிடம் பேசினால் அவள் புரிந்து கொள்வாள் என தெரியவில்லை. கல்யாணத்துக்கு முன்னால எதெல்லாம் செய்யக் கூடாதுன்றதுல ஷாலு டபுள் பி எச் டி. அதில நோ டவ்ட்……பட் இப்போ?  ஷாலுவுடன் இன்னொரு ரன்னிங் ரேஸுக்கு நிச்சயமா அவன் தயாரா இல்லை. அதுவும்  இன்னைக்கு நைட்.

ஆக ஆசைகளையெல்லாம் தூக்கி தூரப் போட்டுட்டு தன் குழந்தை மனைவியை வரவேற்க காத்திருந்தான் அவன்.

உள்ளே வரும் போதே ஷாலுவின் முகத்தில் ஒரு வித மிரட்சி வேறு. பார்க்க அள்ளலாம் போல் அவனுக்கு பிடித்த குட்டி ஹிப் செய்னுடன்…ம்…

அவளுடன் சிறிது நேரம் அரட்டை அடித்துவிட்டு படுத்துவிட்டான். “நாளைக்கு கலைல ஃப்ளைட் சீக்கிரம் கிளம்பனும்” என சொல்லிவிட்டு.

மறுநாள் மும்பையில் ரிஷப்ஷன் முடிந்த இரவு ஷாலுவுமே படு டயர்ட். இருவரும் இரவில் தனிமை கிடைக்கவும் இன்ஸ்டென்ட் தூக்கம். அடுத்த அடுத்த நாட்கள் அவனுக்கு பகலில் சொர்க்கமும் இரவில் நரகமும்.

காரணம்,  பழகினால் உணர்வே உணர்த்திவிடும் கணவன் மனைவி உறவை என எண்ணி மனைவியை பகலில் உடன் கூட்டிக் கொண்டு ஊர் சுற்றிக் காமித்தான் சரித்ரன். கை கோர்த்தல்  சமயத்தில் தோள் சாய்தல் சின்ன தீண்டல் செல்ல சீண்டல் எல்லாம் தான்.

ஆனால் இரவில் தனிமையில் இவனைப் பார்த்தவுடன் வரும் அவள் லுக் மாறவே இல்லை. பகல் ஏற்றி வைத்த ஆசைக் கனவுகள் இரவில் இவனைக் கருக்க…..

கதை இப்படியே தொடர சில நாட்களில்  சென்னையில்  தனிக் குடித்தனம் வந்தாகிவிட்டது.

பகல்ல பக்கத்துல இருந்து பார்த்து ஏங்குறது நல்லதுக்கு இல்லை…..நைட் இவனை மீறி இவனே ஏதாவது செய்து வைத்துவிடக் கூடாது என, ப்ளான் செய்திருந்த லீவை கேன்சல் செய்துட்டு ஆஃபீஸ் போக தொடங்கினான் சரன்.

ஆனாலும் இரவில் அவளைப் பார்க்கும் போது ஆசை வராமலா இருக்கிறது? ஆக இன்று நைட்டும் லேட். 1 மணி என்றது கடிகாரம் அவன் வீட்டிற்குள் நுழையும் போது.  மயில் கழுத்து நிற புடவையில் சில சிறு நகைகளுடன் தூக்க கலக்கத்தில் அவள்…

ஓ இவனுக்காக வெயிட் பண்ணிட்டு இருந்திருக்கா…..

பார்க்க மயங்க தொடங்கி இருந்த ரோஜா போல் அவள்.

“சாரிடாமா லேட் ஆகிட்டு… இனிமே எனக்காக வெயிட் பண்ணாத…..தூங்கிடு…என்ட்டதான் கீ இருக்குல்ல…..”

போய் படுக்கையில் விழுந்தவன் கண்களை இறுக மூடிக் கொண்டான்.

இல்லையெனில் அவள் இடையில் கீற்றாய் விலகியிருந்த புடவையிடம் போகிறதே இவன் பார்வை….

றுநாள் ஈவ்னிங் ஆஃபீஸில் முக்கிய மீட்டிங்……இவன் தான் பேசிக் கொண்டிருந்தான். அந்த அறை அனுமதி இன்றி திறக்கப்பட உள்ளே வருவது????

பர்பிள் நிற சாரி…பார்டிக்கு வருவது போல் அலங்காரம்…ஷாலுதான். அவள் கையில் பெரிய கேக்….பெர்த் டே கேக்….. நெற்றியைப் பிடித்துவிட்டான் சரன். இன்று இவனுக்கு பெர்த் டே….நேத்து நைட் விஷ் பண்றதுக்காக காத்துட்டு இருந்திருப்பா….

அவளுடன் நல்ல உறவு வேண்டும் என்ற பயத்தில் உறவை கொன்று கொண்டு இருக்கிறேனோ? இன்று அவளிடம் மனம்விட்டு பேசிவிட வேண்டும்….

இவனை நோக்கி வந்தவள் இவன் முன்னிருந்த டேபிளில் அந்த கேக்கை வைத்துவிட்டு அவனை இழுத்து அணைத்து கன்னத்தில் வைத்தாள் முதல் முத்தம். “ஹேப்பி பெர்த் டே ஹால்ஃப் டே சாமியார்.” இவனுக்கு மட்டும் கேட்கும் படியாய்….

அத்தனை பேர் முன்னிலையில் அவள் செயல் இவனுள் ஒரு பக்கம் வெட்கம் மறு பக்கம் கர்வம், சந்தோஷம். “வீட்டுக்கு வாடி கவனிச்சுகிடுறேன்….”

“கவனிக்கலைனா கொலையே விழும் இன்னைக்கு…..”அவள் புல் ஃபார்மில் இருந்தாள்.

உள்ளுக்குள் சுழற்றும் இன்ப அலை எதையும் காட்டிக் கொள்ளாமல் கேக் கட்டிங் இவன் செயல்…. அதை அங்கிருந்த எல்லோருக்கும் பகிர்ந்தவள்…

“இந்த செஷன் இதோட முடிஞ்சுட்டு….கேச் யூ லேட்டர்” என அறிவித்து எல்லோரையும் ஏறத்தாழ துரத்தி விட்டு இவனை கடத்தாத குறையாக காருக்கு…..அவள் செயல்.

அன்று பீச்சில் அவனுக்கு வந்த ஆசையை இன்று நிறைவேற்றினான் காரில். கணவன் செயல். தன்னவன் தோளில் சுருண்டாள் பெண்ணவள்.

வீட்டில் நுழைந்தால் முழு அலங்காரத்தில் படுக்கை அறை. அவன் மனைவியின் வேலைதான்.

வாசலிலிருந்து படுக்கைக்கு அவளை அள்ளி வந்தவன் ஆசையாய் தன்னவள் முகம் பார்க்க இப்பொழுதும் அதே லுக். எல்லாவற்றையும் செய்துவிட்டு இப்படி முழித்தாள் எப்படியாம்?

மெல்ல படுக்கையில் வைத்தான் அவளை. “ ஸ்ரீ குட்டி என்னாச்சுடா?”

“என்ன?” என்றாள் அவள்.

“உன் முகம் சரியில்லையே…”

“அது கொஞ்சம் டென்ஷனா இருக்குப்பா அவ்ளவுதான்…” அவனுக்குள் முகம் புதைத்தாள். இதுக்கு பயந்து தான் இவ்ளவு நாளை இவன் மிஸ் செய்தாச்சா?

தலைவன் தலைவி சரணுறு காவியம். பூங்காற்றாய்  ஒரு உறவுறு வைபவம். கணவன் மனைவி காதல் சம்பவம் . செயலாக்கம்.

பின்னிரவில் அவன் மார்பில் சாய்ந்திருந்தவள் கேட்டாள் “ எதை வச்சு  எனக்கு இஷ்டமில்லைனு முடிவுக்கு வந்தீங்க?  என்னை அவாய்ட் பண்றீங்களோன்னு தான் நினைச்சேன்..…அப்றம்தான் யோசிச்சுப் பார்த்தா டே ல ரொமான்டிக் ஹீரோ நைட்ல விரத சாமியார்னு எல்லாம் சேர்ந்து விஷயம் புரிஞ்சுது….அதுவும் நேத்து என்னைப் பார்த்ததும் கண்ணை இறுக மூடிக் கிட்டீங்க…”

அவன் காரணத்தை சொன்னான். வாய்விட்டு சிரித்தாள் அவள். “எனக்கு என் ட்ரெஸ்ஸை யார் கூட ஷேர் செய்றதும் பிடிக்காது…என் கசின் பிங்கி எப்பவும் என் ட்ரெஸ் எதையாவது கேட்டு வம்பிழுப்பா….. புதுசு வாங்கலாம்னு சொன்னாலும் மாட்டேன்னு சொல்லிட்டு என்னோடதை போட்டு அதுல நாலு ஸ்டெய்ன்…ஒரு ஓட்டைனு போட்டு கொண்டு வந்து கொடுப்பா……அன்னைக்கும் நம்ம ரிஷப்ஷன்ல டேன்ஸாட போறேன்னு என் ஃபேவ் காக்ரா செட்டை கேட்டுகிட்டு இருந்தா..….அதான் கத்திகிட்டு இருந்தேன்…”

“ உன் கசின் அந்த பிங்கி என்ன கிறுக்கா ?” கேட்ட பின் தான் அவளது கசினை இவன் திட்டிவிட்டதே இவனுக்கு உறைத்தது. இப்பொழுது இவள் என்ன நினைப்பாள்?

நொடியில் அவன் மனம் உணர்ந்த மனையாளோ

“எனக்கு சிஸ்டர்னா உங்களுக்கும் அவ சிஸ்டர் தான்….தாராளமா திட்டலாம்” என்றபடி இலகுவாய் அவனை திரும்பிப் பார்த்தாள்.

“நம்ம ரெண்டு பேரும் ஒன்னு, நமக்குள்ளது எல்லாமே நம்மோடது….அன்ட் அதுல எதுவும், யாரும் நம்மை விட நமக்கு முக்கியம் கிடையாது….அது எனக்கும் புரிஞ்சிட்டு…” ஷாலு விளக்கினாள்.”

இதுவரை வாசித்த தேவநதி அருகிலிருந்த கணவனை திரும்பிப் பார்த்தாள்.

“நாளைக்கு நம்ம மேனேஜர்ஸ் கூட உங்களுக்கு உள்ள மீட்டிங்க்கு நானும் கேக்கோட வரலாம்னு ப்ளான் இருக்குது….உங்களுக்கு எப்படி வசதி….இல்லைனா ஆள் வச்சு கிட்நாப் எதாவது செய்தால் சரியா இருக்குமா??”

ஏற்கனவே சற்று ஏதோ சரி இல்லை என்ற ரீதியில் பார்த்திருந்த ப்ரபல்யன் முகத்தில் இப்பொழுது ஆனந்த அதிர்வும் குறும்பும்.

“அந்த சரித்ரனாவது ஹாஃப்டே சாமியாராம்…நீங்க ஹோல் டே துறவி…என்னமோ ஃபர்ஸ்ட் லவ் அது இதுன்னு சொன்னதோட சரி….அப்றம் ரெண்டு மாசமாச்சு…..நான் விழுந்து விழுந்து லவ் பண்றேன்….உங்களுக்கு கண்ணுக்கு அது தெரியவே இல்லை…”

“ஹேய்….உனக்கு என்னை பிடிச்சிருக்குன்னு தெரியும் நதிப் பொண்ணு…..நாளைக்கு என் பெர்த் டே ல்ல அப்ப கவனிச்சுகலாம்னு நினச்சுறுந்தேன்….”

மறுநாள் கணவனுடன் ஹனிமூன் கிளம்பிப் போனாள் தேவநதி.

மூன்று வருடங்கள் கடந்திருந்தன. கணவனும் ஆறு மாத குழந்தை அவனியும் தான் தேவநதியின் உலகம் இப்போது. மேலும் இரண்டு நகரங்களில் அவர்களது ஷோரூம் திறக்கப் பட்டு படு சந்தோஷமும் பிஸியுமாய் போய்க் கொண்டிருக்கிறது வாழ்க்கை. நபார்டிலிருந்து மீண்டும் அதே ப்ரொஃபைலுக்கு கால் ஃபார் செய்திருந்தார்கள்…

“அவனி குட்டிய முன்ன பின்ன தெரியாத இன்னொருத்தர்ட்ட விட்டுட்டு நான் வேலைக்கு போகவா?.,,,நோ வே” என மறுத்தது இவளே தான். மனதின் ப்ரயாரிட்டி…விருப்பங்கள் மாறி இருந்தன..

கடையில் மிஞ்சும் பழைய துணிகளை ஆசிரமங்களுக்கு கொடுப்பது ப்ரபல்யனின் பழக்கம். அதில் ஆரம்பித்த அந்த ஆசிரம பணி தேவநதியை இப்போது சில சமூக பணிகளுக்கும் கொண்டு சென்றிருந்தது.

“தேவிக்கா நெட்ல படிச்சேன்கா ஏதோ மைக்ரோ ஆர்கானிசம் கண்டு பிடிச்சுறுக்காங்களாம்….டை ஃபேக்ட்ரி எஃப்லுயண்ட்ல அதை விட்டா போதுமாம்….நாமளே அதை வளத்தா என்னக்கா?” தேவநதி தரும் உதவித் தொகையில் கல்லூரியில் படித்துவரும் மாலதி ஃபோனில் கேட்க இப்பொழுது தேவநதி இதில் படு பிஸி.

அவளது மாவட்டம் முழுவதும் சாய தொழிற்சாலைகள். அதன் கழிவு தன் பூமியையும் அதில் வாழும் மக்களையும்  கொஞ்சம் கொஞ்சமாக அழித்துக் கொண்டு இருக்கிறது என்பதை இவள் கேள்விப்பட்ட போதுதான் அந்த 14 வயதில் ஜெனிடிக் எஞ்சினியர்ட் மைக்ரோ ஆர்கனிச லட்சியம் தோன்றியது முன்பு தேவநதிக்கு..

அன்று இரவு  தன் கணவனிடம் முழு உற்சாகத்தில் சொல்லிக் கொண்டிருந்தாள் தேவநதி “நானே இந்த ஆர்கனிசத்தை டிசைன் செய்துருந்தா கூட இவ்ளவு திருப்தியா இருக்காதுப்பா…..அது நம்ம பீபுள்கு ரீச் ஆகிருக்கும்னு எப்படி சொல்ல முடியும்? பட் இது எனக்கு முழு திருப்தியா இருக்குது……கொஞ்ச வருஷம் முன்னால இது நடக்காம போனப்ப செம அப்செட்டா இருந்துச்சுது…..நம்ம ஷோரூம் வர்ற ஆரம்பிக்கப்ப பால் நதிய விட்டுட்டு பாலை வனத்துக்குப் போறேன்னு கூட நினச்சிறுக்கேன்…..இப்ப பாலை வனத்துல பால் நதி வந்து நிக்குது……நான் 200% ஹேப்பி ”

 

 

 

“Friends தேவநதிக்குப் போல் இதுவரை உங்கள் வாழ்க்கை எந்த டர்ன் ட்விஸ்ட் எடுத்திருந்தாலும் இந்த உதித்து வரும் புது ஆண்டு உங்கள் கனவுகள் தேடி வந்து கை சேரும் ஆண்டாக அமைய என் வாழ்த்துக்களும் ப்ராத்தனைகளும். Happy New Year 2016

 

6 comments

Leave a Reply