பச்ச மிளகா (ஜோனத்)

ஹ ஹா…பச்சை மிளகாய் கொஞ்சம் ரொம்பவும் பெர்சனல்…
 
feeling pampered னு சொல்வாங்களே அதையெல்லாம் நான் அனுபவிச்ச ஒரே இடம் என் ஹஸ்பண்ட்டதான்.
 
எது சாப்பிட வாங்கினாலும், அவங்க சாப்டுறதுக்கு முன்ன நான் என்னோடத முடிச்சுட்டேன்னா, கண்டிப்பா அவங்களோடத எனக்கு கொடுத்துடுவாங்க.
“அதான் உனக்கு ரொம்ப பிடிச்சுருக்குல்ல” அப்படின்னு ஒரு பதில் வரும்.
 
பெரிய விஷயமோ சின்ன விஷயமோ எல்லாத்திலும் அவங்களைப் பொறுத்தவரைக்கும் இதே பாலிசிதான்… எனக்குப் போக மீதிதான் அவங்களுக்குன்னு ஒரு அப்ரோச் இருக்கும். ( ithai naan sarinnu sollala..aanaa avanga appatiththaan)
 
ஆனா அதே அவங்க ரெண்டே ரெண்டு விஷயத்தை மட்டும் ஈசியா விட்டுத் தர மாட்டாங்க. தர மாட்டேன்னு சொல்ல ஆயிரம் ரீசன் கண்டு பிடிப்பாங்க.
 
முதல் விஷயம் அவங்க யூஸ் செய்ற பென்.
 
வேணும்னா இது போல வாங்கி தந்துடுறனே! ப்ளீஸ் இத மட்டும் கேட்காதன்னு😁 இப்படி ஒரு முகத்த வச்சுகிட்டு கேட்பாங்க… கண்டிப்பா தரமாட்டாங்க.
 
அடுத்த விஷயம் பச்ச மிளகாய்.
 
அது எப்படின்னு தெரில எனக்கும் அவங்களுக்கும் பச்சை மிளகாய்னா செம்ம இஷ்டம்.
கூட்ல போட்டது குழம்புல போட்டதன்னு கூட்டை விட்டுட்டு மிளகாயா தேடி சாப்பிடும் ரகம் நான்.
தனி மிளகாயவே சந்தோஷமா சாப்பிடுவேன்.
அவங்களும் அப்படியே.
இதுல விட்டுத்தர சொல்லி எதிர்பார்த்தாலும்..
அதான் இத்தன சாப்டுட்டல்ல போதும்னு எதாவது ஒரு பதில்தான் வரும். மிளகாய் வராது.
 
இதே போல அவங்க தர விரும்பாத இன்னொரு விஷயம் கோபம்.
 
வெளிய ரொம்ப கோபப்படுவாங்கதான், ஆனா
அவ்ளவு ஈசியா ஃபேமிலி மெம்பர்ஸ் யார்ட்டயும் கோபபட மாட்டாங்க.
 
அதுவும் என்ட்ட ரேரஸ்ட்.
 
அப்படியே என்ட்ட கோபம் வந்தாலும்,
எப்பவும் செம்ம கலகலன்னு இருக்கவங்க அப்ப அமைதியா இருப்பாங்க. அத வச்சு அவங்க கோபத்துல இருக்காங்கன்னு நான் புரிஞ்சுக்கணும்.
 
இது எனக்கு மட்டுமான ஸ்பெஷல் grace.
 
ஆனா என்ட்டன்னு மட்டும் இல்ல..வெளியவும் யார்ட்டயுமே எவ்வளவு கோபத்திலும்…இன்னும் அவங்க தராதரம் இல்லாம ஒரு வார்த்தை பேசி நான் பார்த்தது இல்ல.
 
அது மன சுத்தம் மற்றும் சுயகட்டுப்பாடின் அடையாளமா மட்டும்தான் எனக்குப் படும்.
 
சோ அவங்க என்ட்ட கோபபடுறது எனக்கு கஷ்டமா இருந்தாலும் கூட, அவங்க ஆங்கர் மேனேஜ்மென்டோட பிக் ஃபேன்ற வகையில் எனக்கு அவங்க கோபமும் பிடிக்கும்.
அதனால நான் அவங்க கோபத்துக்கு வச்ச பேர் பச்ச மிளகாய். என் வினோத பேவ்.
 
எங்க வீட்ல நிக் நேம் வைக்கிறதெல்லாம் அவங்க வேலைதான். நானா வச்சுருப்பேன்னா இந்த பச்சை மிளகாய் பார்ட்டின்றதுதான்.
 
NNK ல ஜோனத்தோட கோபம் லியாவுக்கு ஒரு வகையில் கஷ்டமா இருக்கும், அதே நேரம் ஒரு வகையில் பிடிக்கும்னு இருக்கும் கதை அமைப்பு…
 
அப்ப எழுதுறப்ப எனக்கு இந்த பச்ச மிளகாதான் நியாபகம் வந்துச்சு..சோ வச்சுட்டேன்.
 
( btw பச்சை மிளகாய் சாப்டுறது நல்ல பழக்கம் இல்ல makkaley…ரொம்பவும் ட்ரை பண்ணி ரெண்டு பேருமே இப்ப ரொம்ப ரொம்பவும் குறச்சுட்டோம்..)